Friday, October 21, 2016

இராணுவக் குற்றங்களுக்கு விசாரணை உண்டு! தண்டனை இல்லை –


கோத்தா, மஹிந்த தரப்பு இராணுவப் புரட்சி வரை செல்லலாம்! இராணுவக் குற்றங்களுக்கு விசாரணை உண்டு! தண்டனை இல்லை – ராஜித



rajithaநல்லாட்சியை பலப்படுத்த அரசு தடுக்கும் முயற்சிகளில் கோபமடையும் கோத்தாபய மற்றும் மஹிந்த தரப்பினர் சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்த இராணுவப்புரட்சி வரையில் செல்லலாம் என அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் அவருக்கு விசுவாசமான இராணுவத்தினர் இன்றும் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரித்து பாதயாதிரைகளையும் பிரச்சாரங்களை செய்துகொண்டு உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவத்தினருக்கு எதிராக நாம் செயற்படுகின்றோம், இராணுவத்தை நாம் தண்டிக்க முயற்சித்து வருகின்றோம். இராணுவத்தினரை சிறைகளில் அடைக்கப்போகின்றோம், சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்போகின்றோம் என்ற தவறான கருத்துகளை மஹிந்த ராஜபக் ஷவும் கோத்தபாய ராஜபக் ஷவும் நாட்டில் பரப்பி வருவதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோல் குற்றம் செய்த பௌத்த பிக்குவை சிறையில் அடைத்தால் நாம் பௌத்த மதத்தையும் சிங்கள இனத்தையும் அழிக்க முயற்சிப்பதாக மஹிந்த தரப்பு பொய்யான கதைகளை பரப்பி வருவதாகவும் தெரிவித்தார்.
தமது அரசியல் நலனுக்காக இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதாகவும் எனினும் இராணுவம் செய்த குற்றங்களுக்கு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் அவர்களை தண்டிக்க இடமளிக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசு உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Monday, October 17, 2016

தயாராகி விட்டது இலங்கையின் கடுமையான பயபகரவாத எதிர்ப்பு சட்டம். -- இலங்கை அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துவிட்டது.

தயாராகி விட்டது இலங்கையின் கடுமையான பயபகரவாத எதிர்ப்பு சட்டம்.
---------------------------------------------------------------------------------------------------------------------
   இலங்கை அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துவிட்டது.
   ---------------------------------------------------------------------------------
     ஒரு சட்ட முன்வரைவை உருவாக்கி இலங்கை அரசு அதை அவர்களுக்குள் "ரகசிய விவாதத்திற்கு" என்று சுற்றுக்கு விட்டுள்ளது. அந்த சட்ட முன்வரைவை, இந்தியாவிற்கு சமீபத்தில் வந்த இலங்கை  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் , இலங்கை ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேனவும் கொண்டுவந்து காட்டி தங்களது இந்திய அரசு ஆளும் நண்பர்களிடம் ஒப்புதல் வாங்கியுள்ளனர். அந்த விரைவு நகல் மிகவும் கொடூரமான பிரிவுகளைக் கொண்டதாக இருக்கிறது. இந்திய அரசு கொண்டுவந்த "தேசிய பாதுகாப்பு சட்டம், உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் என்ற மிசா, பயங்கரவாதம்  மற்றும் கைதுக்கான சட்டம் என்ற தடா,,அராஜகங்களை தடுக்கும் சட்டம் என்ற பொடா", ஆகியவற்றின் "ஒட்டுமொத்த " வடிவமாக இருக்கிறது. 

"இலங்கையின் முன்வைக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் சட்ட 
----------------------------------------------------------------------------------------------------------------வடிவமும், கொள்கையும்", என்று தலைப்பிடப்பட்டு,, அது எழுதப்பட்டுளள்து.
--------------------------------------------
      1] பயங்கரவாததிலிருந்து  தேசிய பாதுகாப்பிற்கும், மக்கள் பாதுகாப்பிற்குமான சட்டம்.
      2] பயங்கரவாதத்தை தடுப்பதும்,, அது சம்பந்தப்பட்ட நடவடிக்களை தடுப்பதற்கான சட்டம்.
       3] பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்தும், அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளிலிருந்து தடுப்பதற்கான சட்டம்.
        4] இலங்கையின் நிலத்திலிருந்து,பயங்கரவாத  தாக்குதகளை  மற்ற நாடுகளின் பகுதிகள் மீது நடத்த திட்டமிடலை தடுப்பது,
         6] பயங்கரவாத செயல்களில் மற்றும் சம்பந்தப்பட்ட செயல்களில்  ஈடுபடுவோரை, அடையாளம் காணவும்,கைது செய்யவும்,காவலில் வைக்கவம்,புலனாய்வு செய்யவும்,விசாரணை நடத்தவும், தணடனை வழங்கவும்,இந்த சட்டம் வழி வகை செய்கிறது. 
        7] சம்பந்தப்பட்ட செயல்களை செய்ப்பவர்கள் , 
            முழுமையாகவோ, பகுதியாகவோ ஈடுபட்டாலும்,
             இலங்கைக்கு உள்ளேயோ, கடல்நீரிலோ,ஈடுபட்டாலும்,
             இலங்கையின் வான்வெளியில் ஈடுபட்டாலும்,
              இலங்கையில் பதிவு செய்யப்பட அல்லது இலங்கைக்கு சொந்தமான     அல்லது இலங்கை பயன்படுத்தும்   விமானத்திற்குள்ளோ, கப்பலுக்குள்ளோ, 
              நடந்தாலும் இந்த சட்டம் பயன்படும்.
         இலங்கையின் தூதரகத்திலோ, தூதர்களின் இல்லத்திலோ, தூதரகத் தலைவரின் இருப்பிடத்திலோ,நடந்தாலும் இந்தச் சட்டம் பாயும்.

       இப்படி ஒரு சட்ட வரைவு  நகலை தயார் செய்திருப்பது, எழுகின்ற தமிழீழ கோரிக்கைகளின் "அரசியல் போராட்டங்களை" ஒடுக்கவே என்பதை மனித  உரிமை அமைப்புகளும், ஆர்வலர்களும், அரசியல் செயல்பாட்டாளர்களும்,ஊடகவியலாளர்களும்  கணிக்கிறார்கள். இத்தகைய ஏற்பாட்டிற்கு இந்திய நடுவண் அரசு முழு ஒத்துழைப்பாக இருக்கிறது எனபதுதான் வேதனையான செய்தி.




இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்!


இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்!

செவ்வாய், 18 அக் 2016

ஒரு சட்ட முன்வரைவை உருவாக்கி இலங்கை அரசு அதை அவர்களுக்குள் ரகசிய விவாதத்துக்கு என்று சுற்றுக்கு விட்டுள்ளது. அந்த சட்ட முன்வரைவை, இந்தியாவுக்கு சமீபத்தில் வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும், இலங்கை ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேனாவும் கொண்டு வந்து காட்டி, தங்களது இந்திய அரசு ஆளும் நண்பர்களிடம் ஒப்புதல் வாங்கியுள்ளனர். அந்த வரைவு நகல் மிகவும் கொடூரமான பிரிவுகளைக் கொண்டதாக இருக்கிறது. இந்திய அரசு கொண்டு வந்த, தேசிய பாதுகாப்பு சட்டம், உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் என்ற மிசா, பயங்கரவாதம் மற்றும் கைதுக்கான சட்டம் என்ற தடா, அராஜகங்களை தடுக்கும் சட்டம் என்ற பொடா ஆகியவற்றின் ‘ஒட்டுமொத்த’ வடிவமாக இருக்கிறது.
‘இலங்கையின் முன்வைக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் சட்ட வடிவமும், கொள்கையும்’ என்று தலைப்பிடப்பட்டு அது எழுதப்பட்டுள்ளது.
1. பயங்கரவாதத்திலிருந்து தேசிய பாதுகாப்புக்கும் மக்கள் பாதுகாப்புக்குமான சட்டம்.
2. பயங்கரவாதத்தை தடுப்பதும் அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை தடுப்பதற்கான சட்டம்.
3. பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்தும், அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளிலிருந்தும் தடுப்பதற்கான சட்டம்.
4. இலங்கையின் நிலத்திலிருந்து, பயங்கரவாதத் தாக்குதல்களை மற்ற நாடுகளின் பகுதிகள் மீது நடத்த திட்டமிடலை தடுப்பது...
பயங்கரவாத செயல்களில் மற்றும் சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காணவும், கைது செய்யவும், காவலில் வைக்கவும், புலனாய்வு செய்யவும், விசாரணை நடத்தவும், தண்டனை வழங்கவும் இந்த சட்டம் வழி வகை செய்கிறது.
சம்பந்தப்பட்ட செயல்களை செய்பவர்கள், முழுமையாகவோ, பகுதியாகவோ ஈடுபட்டாலும், இலங்கைக்கு உள்ளேயோ, கடல்நீரிலோ ஈடுபட்டாலும், இலங்கையின் வான்வெளியில் ஈடுபட்டாலும், இலங்கையில் பதிவு செய்யப்பட அல்லது இலங்கைக்குச் சொந்தமான அல்லது இலங்கை பயன்படுத்தும் விமானத்துக்குள்ளோ, கப்பலுக்குள்ளோ நடந்தாலும் இந்த சட்டம் பயன்படும்.
இலங்கையின் தூதரகத்திலோ, தூதர்களின் இல்லத்திலோ, தூதரகத் தலைவரின் இருப்பிடத்திலோ நடந்தாலும் இந்தச் சட்டம் பாயும்.
இப்படி ஒரு சட்ட வரைவு நகலை தயார் செய்திருப்பது, எழுகின்ற தமிழீழ கோரிக்கைகளின் ‘அரசியல் போராட்டங்களை’ ஒடுக்கவே என்பதை மனித உரிமை அமைப்புகளும், ஆர்வலர்களும், அரசியல் செயல்பாட்டாளர்களும், ஊடகவியலாளர்களும் கணிக்கிறார்கள். இத்தகைய ஏற்பாட்டுக்கு இந்திய நடுவண் அரசு முழு ஒத்துழைப்பாக இருக்கிறது என்பதுதான் வேதனையான செய்தி.

Friday, October 14, 2016

Shiva sena in Sri Lanka???? New constitution for Sri Lanka?

இலங்கை புதிய சட்டத்தில் பவுத்தம் உயர்ந்ததா? சிவசேனா அங்கும் உதயம்!

வெள்ளி, 14 அக் 2016

இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக-வுடன் கூட்டணியில் இருந்ததும் வெளியே வந்ததும், தேர்தல் அரசியல் என்றால் இந்து மத உணர்வுகளை எழுப்பி முஸ்லிம்களுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் பிரச்னைகளைக் கிளப்புவது சிவசேனா கட்சியினர்தான் என்பது ஊரறிந்த விஷயம். அப்படிப்பட்ட சிவசேனா கட்சியை, இலங்கையில் யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் தமிழர் வாழும் பகுதிகளிலும் நிறுத்துவதற்கு ஒரு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது என்பது நல்லதா? கெட்டதா?
சென்னையில் பல ஆண்டுகளாக, ‘காந்தளகம்’ என்ற பதிப்பகத்தை நடத்திவரும் சச்சிதானந்தம் தான் அந்த முயற்சியை செய்கிறார். சைவ சிந்தாந்த சிந்தனையாளரும், சிறந்த தமிழ் ஈழப் பற்றாளருமான, அண்ணா என்று அனைவராலும் அழைக்கப்படும் ‘மறவன்புலவு சச்சி அண்ணன்தான்’ இத்தகைய முயற்சியை செய்கிறார். ஈழத்தமிழர்கள் பெரும்பாலும் இந்துகள் என்ற சூழலில், ‘சைவம்’ தான் அதிகமாக தமிழர்கள் மத்தியில் பின்பற்றப்படுகிறது என்ற உண்மை இருப்பதனால், இந்து மதத்தை பாதுகாக்கத்தான் இந்த அமைப்புக்கு ‘சிவசேனா’ என்று பெயரிட்டதாகக் கூறுகிறார். மத மாற்றத்தை தடுப்பதற்காகப் பாடுபடுவோம் என்கிறார். இவரது முயற்சிக்கு ஆதரவாக மட்டுநகர் எம்.பி. யோகேஸ்வரன் இருப்பதாக கூறப்படுகிறது. யோகேஸ்வரன் எப்போதுமே நெற்றியில் திருநீறு பட்டையுடன் வேட்டி அணிந்து காணப்படுவார். முஸ்லிம்களுக்கு ஈராக், ஈராக் நாடுகளிலிருந்தும், கிறிஸ்துவர்களுக்கு மேற்கத்திய நாடுகளிலிருந்தும் நிதி வருவதாகவும், இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், பாஜக ஆகிய இந்து அமைப்புகள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் சச்சிதானந்தம் கூறியுள்ளார். இது ஈழத்தமிழர்களின் மதங்கள் தாண்டிய ஒற்றுமையை உடைக்காதா? என்ற கேள்வி எழுகிறது. அதேநேரம் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசாங்கம், ஒரு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கும் இயக்கப்போக்கில் இருக்கிறோம் என்று கூறி வருகிறது. அந்த சட்டத்தில், இலங்கை ஒரு ‘பவுத்த நாடாக அறிவிக்கப்படுமா? அல்லது ஒரு மதச் சார்பற்ற நாடாக அறிவிக்கப்படுமா?’ என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. ‘பவுத்தத்துக்கு முதல் இடம் கொடுக்கப்படும்’ என்று பிரதமர் ரணில் கூறியுள்ளார். ஏற்கனவே தமிழர்களின் சைவ அடையாளங்களை அழித்து, சிங்களர்களின் பவுத்த அடையாளங்களை ஏற்படுத்தும் ‘ஆக்கிரமிப்பு’ வேலையை சிங்கள, பவுத்த பேரினவாத அரசும், சிங்கள ராணுவமும் தமிழர் பகுதிகளில் செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இத்தகைய சூழலில், ‘பொது பால சேனா’ என்ற புத்த பிக்குகளின் அமைப்பு, தமிழர்களுக்கு எதிராக குறிப்பாக, சைவத் தமிழர், இஸ்லாமியத் தமிழர், கிறிஸ்துவத் தமிழர் ஆகியோரின் வழிபாட்டுத் தளங்களைச் சிதைக்கும் வேலைகளை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறது. ஈழத்து தமிழர்களை, இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டுக்கு ஓடுங்கள் என்று அந்த பொது பால சேனாவின் புத்த பிக்குகள் சமீபத்தில் கூறிவருகிறார்கள். கூடுதலாக, புதிதாக வருகின்ற அரசியல் சட்டம் ‘பவுத்தத்துக்கு முதலிடம்’ என்று கூறுமானால், அதுவே, ‘சிங்கள மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் என்ற கொள்கை வந்தபோதுதான், ஈழத்து தமிழர்களின் விடுதலைப் போர் தொடங்கியது’ என்ற கருத்தும் பேசப்படுகிறது. அப்படி ஒரு மோதலை புதிய ஆட்சியாளர்கள் ஏற்பாடு செய்கின்றார்களோ? என்ற கேள்வி எழுகிறது. இத்தகைய சூழலில் இந்து தமிழர்கள், கிறிஸ்துவத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் மதமற்ற தமிழர்கள், நாத்திகத் தமிழர்கள் என அனைவரும் ஒரே அணியில் தமிழர்களாக இணைந்து நின்று சிங்கள, பவுத்த பேரினவாதத் தாக்குதலை எதிர்த்து தமிழர்களைப் பாதுகாக்க பணியாற்ற வேண்டுமா? சைவ அடையாளத்தை மட்டுமே காட்டி, இந்து மத ஒற்றுமையை ஏற்படுத்தி, தமிழர்களின் ஒற்றுமையை உடைக்க வேண்டுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இத்தகைய ஒரு வேலையைச் செய்வது, தமிழர்களின் ஒற்றுமையை குலைக்க விரும்பும், வெளிச்சக்திகளான இன அழிப்பு போரை நடத்திய சக்திகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதும், அத்தகைய வெளிச்ச சக்திகள் இதனை ஊக்குவிப்பார்கள் என்பதும் தெளிவாகப் புரிகிறது.