Tuesday, November 3, 2015

ராமேஸ்வரம் கரையில்,சாலையில் எண்ணை வழிந்தோடி, அய்யய்யோ.....03-11-2015.

ராமேஸ்வரம் கரையில்,சாலையில்  எண்ணை வழிந்தோடி, அய்யய்யோ.....03-11-2015.
---------------------------------------------------------------------------------------------------------------------
      இன்று காலை 10 மணியிலிருந்து ஒரே அக்கப்போர். ராமேஸ்வரத்தில, பக்தர்கள் முதலில் குளிக்க வரும் இடம்" அக்கினி தீர்த்தம்". அங்க குளிக்க முடியல்ல. ஏன்? ஒரே எண்ணையா வழியுது. எங்கிருந்து வந்தது இவ்வளவு எண்ணை? எல்லாம் கடலுக்கு சென்று திரும்பிய படகுகள் பக்கதிலிருந்துன்னு சொன்னாங்க. அது என்ன? படகுகள் பக்கத்தில போயி பார்த்தா, அப்படி ஒரு எண்ணை குளம். ஏன்? இன்னிக்கு கரைக்கு வந்த படகுகள் எண்ணிக்கையில் குறிப்பிட்ட படகுகளிலிருந்து எண்ணை வடியுது. ஏன் அப்படி? அவை எல்லாமே "பிடிச்சிட்டு வந்த மீன்கள்ட்ட" இருந்து வடியுது.ஏன் அப்படி மீன்கள்ட்ட இருந்து எண்ணை வடியணும்?  அது என்ன மீன்? எண்ணை வடியற மீன்? அதுக்கு பேரு "பேச்சாள" மீன். ஒரு படகுல 10 டன்,20 டன் எடையுள்ள பேச்சாள மீனு வந்து இறங்கி இருக்கு.,பேச்சாள மீனுக்கு பேரே "பேச்சாள ஆயில் மீனு". அதாவது "எண்ணை மீன்". அது வழக்கமா ஜனவரி மாதம் முதல்தான் கிடைக்குமாமே? இப்பவே எப்படி இவ்வளவு வந்தது?.

       அதுதான் கதை. இப்பமே கடலுக்குள் சென்று, சிலரால இந்த பேச்சாள ஆயில் மீன "அள்ளிக்கிட்டு" வர முடிஞ்சிருக்கு. அது எப்படி முடியும்? அவங்க "ரெட்டை மடிக்காரங்க". அப்படினா "தடை செய்யப்பட வலையான ரெட்டை மடிய" பயன்படுத்தறவங்க. அந்த வலையத்தானே இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களும் எதிர்க்கறாங்க? ஆமாம்.ஆமாம். அப்படிப்பட்ட "ரெட்டைமடி வலைய "  பயன்படுத்தக் கூடாதுன்னு எல்லா அரசாங்கங்களும், ஊடகங்களும், மீன் வளத் துறையும், சொல்லி வர்றாங்களே? ஆனாலும் கூட, இவர்கள் பயன்படுதறாங்களே ? அது எப்படி?  அரசாங்கத்தையும் ஏமாத்தி, இரண்டு நாட்டிலையும் உள்ள பொதுவான மீனவர்களையும் ஏமாத்தி, சட்ட விரோதமாக, இருக்கும் மீன்களை எல்லாம் ஒரேயடியாக "அள்ளிக்கிட்டு" வரக்கூடிய இந்த ரெட்டை மடி வலையை பயன்படுத்தறவங்க யாரு? அவங்களுக்கு "துணை" நிற்பது யாரு?

     சரி. இந்த முறை எத்தனை படகுகள் இப்படி ரெட்டை மடி வலையோட கடலுக்கு போய் வந்தது? 150 படகுகள் இன்று இந்த வலைய பயன்படுத்தி, "பேச்சாள ஆயில் மீனை" பிடிச்சிட்டு வந்திருக்கு. அதனால தான் இந்த மீனால கரை முழுக்க ஒரே "எண்ணையா" வடியுது. அப்படியானா ஒரு படகுல 20 டன் மீன் பிடிச்சாங்க. 150 படகுல 300 டன் மீன் வந்து இறங்கிருசசு. அதனாலதான், ராமேஸ்வரம் கரை முழுக்க ஒரே "எண்ணையா" ஊததுது.இதை மறைமுகமா "ஆதரிப்பது" அங்க உள்ள "மீன் வளத் துறைதான்". அதன் அதிகாரிகள்தான். அவங்களுக்கு "நல்ல கமிசன்" போயிரும்.அக்கினி தீர்த்தம் குளிக்க முடியாம எண்ணை வடிவதுனால அங்க உள்ள "இந்து மக்கள் கட்சி" புகார் கொடுத்தாங்க. அதனால அதை ஒப்பேத்த, காவல்துறை துணை ஆணையர்,முத்துராமலிங்கம் சமரச பேச்சு மாலைல நடத்தறாரு. அவருக்கும் நல்ல பலன் கிடைக்குமே? 

    இது மட்டுமா? அங்க உள்ள சாலைகளில் இந்த எண்ணை வடிந்து, வாகனங்கள் போக முடியல்ல. இரு சக்கர வாகனங்கள் "சறுக்குதே"?. இந்த அளவு மோசமான நிலைக்கு யாரு பொறுப்பு? மீன்வளத் துறை அமைச்சர்தான். அவருதான் அவரு ஊர்ல, நகாப்பட்டினததுல,"ஹை ஸ்பீடு எஞ்சின" இறக்கி விட்டிருக்காரே? அதுக்கு போட்டி போட ராமேஸ்வரம் மீனவர்கள் இதை செய்ய மாட்டாங்களா? அடப்பாவிகளா ஒட்டுமொத்தமா கடலையே  "காலி" பண்றீங்களே?