Thursday, June 25, 2015

குயிலு எச்சம் இத்தாலி உணவின் சந்தையை வளர்க்குமா?

குயிலு எச்சம் இத்தாலி உணவின் சந்தையை வளர்க்குமா?
-------------------------------------------------------------------------------------
   அந்தப் படைப்பு  எளிதானதுதான். ஆனால் நெம்புகோல் தத்துவம் நல்லா வேலை செஞ்சிருக்கு. கொஞ்சம் காசு, விவரமான புத்தி. எளிமை வடிவம்.சாதாரண பெயரில் "அசாதாரண படைப்பு". எல்லா முற்போக்கும் தமிழ்கூறும் நல்லுலகில், பேச்சையும், எழுத்தையும் பார்த்து வரும் முடிவுகளே. செயலை யாரும் கண்டுகொள்வதில்லை. செயல்பாடுகளை யாரும் கவனிப்பதில்லை. இந்த பொதுப் புத்தி இருக்குமானால்,அதை பயன்படுதுபவனே சிறந்த "வணிகன்". யார் சிறந்த வணிகன் என்பதே இங்கே போட்டி. திறம்பட  விளம்பரமாவதும், திறமையாக காசு அள்ளுவதுமே வெற்றியின் அறிகுறிகள்.

   அந்த தத்துவங்களை அறிந்தவர் மட்டுமே கெட்டிக்காரர்கள். முற்போக்கு என்பது அவசர உலகத்தில் அள்ளித் தெளித்துவிட்டு, அள்ளுவதையே அடிப்படையாகக் கொண்டது. அப்படி அந்த படைப்பும் அள்ளியது. அதனாலேயே அது வெற்றி படைப்பு. குயிலின் எச்சம் அப்படி வந்த படைப்பு. கடைசி வசனம் நம்மூர் எளிய மக்களின் வசதிக் கொப்ப  பேசினால் சரி. அதற்கும் உள்ளே, அதற்கும் மேலே என்று எண்ணிப்பார்ப்போருக்கு அதிகம் விளங்கும்.இத்தாலி சுவையின் "சந்தை" முக்கியமப்பா. அந்த "சந்தையை" இந்த எளிய மக்களிடம் எப்படி எடுத்து செல்வது? மேட்டுக் குடிக்கான உணவு என்று முதலில் விளம்பரம். எடுபடமாட்டேன் என்கிறதே ? மேட்டுக் குடி இந்த நாட்டுலே அதிகம் இல்லையே? மேட்டுக் குடி மட்டுமே அந்த உணவை சுவைக்க முடியும் என்றால் அங்காடிகள் "காலியாக"இருக்குதே? விளம்பரம் மட்டுமே போதும் என்றார்களே? நிறைய விளம்பரமும், அதற்கு பல லட்சம், பல கோடி என்று வீணாக்கியாச்சே?

                         எடுபடலையே எங்கள் "சரக்கு"? ஆகா. இந்த எளிய மக்கள்தான் இனி நமது குறி. எளிய மக்கள்தான் பெரும்பான்மை வாக்காளர்கள். எளிய மக்கள்தான் எந்தக் கதைக்கும் " நாயகர்கள்".  எளிய மக்கள் தங்களுக்கு தெரிந்தும் விலை போவார்கள். தெரியாமலும் விலை போவார்கள். இங்கே நமக்கு "சந்தையில் எங்கள் சரக்கு" போகணும். வேகமா போகணும். விற்பன்னர்களுக்கும் புதிய "அறிவை" கத்துக் கொடுக்கணும்.எளிய மக்களை வெறுக்காதே.எளிய மக்களிடம் ,ஓதினால் "சட்டம்"கூட குறுக்கே வரும். லாபம் பெற நினைத்து "நட்டம்"கூடிவிடும்.மனித உரிமை மீறல் என்று "கூச்சல்"போடுவார்கள்.ஊடகங்களும்,அரசியல்வாதிகளும்,"நியாயம்"பேசி காசு கறப்பார்கள்.

                         அதற்கு உரிய வழி ஒன்றே ஒன்றுதான்.எளிய மக்களின் "வாய்ப்புக்கு" ஒப்ப, "வசதிக்கு" ஒப்ப, அளவைக் குறைத்து "அளந்து  விடு" அய்யா.   இது எப்படி? நல்லா விக்குமே? இந்த புத்திய "எடுத்துக்கோங்க" என்பதுதான் அந்த படைப்பின் "அடிப்படை" உணர்தல் என்பது அந்த மக்களுக்கு விளங்காமல் போனால் அதுதானே "பெரிய வெற்றி"?