Monday, November 16, 2015

அந்த சாலை ஒப்பந்தக்காரரை விடாதீங்க?

அந்த சாலை ஒப்பந்தக்காரரை  விடாதீங்க?
------------------------------------------------------------------
        நாங்கள் 13-11-2015 வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து கோவை கிளம்பி, சாலை வழி "வாகனத்தில்" பயணமானோம். கோவை சென்று "மக்கள் சிவில் உரிமைக் கழக" மாநிலக் குழு கூட்டம் முடித்துவிட்டு, நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்திலும் பேசிவிட்டு, மேட்டுப்பாளையம் பயணித்தோம். மேட்டுப்பாளையத்தில், நண்பர் ரவிச்சந்திரன் மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு, அவினாசி வழியே சேலம் புறவழிச் சாலை வழியாக வாணியம்பாடிக்கு முன்பே உள்ள வேலூர் மாவட்டத்தை சேர்ந்த "நாற்றாம்பல்லிக்கு" வந்தடைந்தோம். இரவு தங்களுக்கு பிறகு, காலையில், இளம் ஊடகவியலாளர் ஜெகதீஷின் சகோதரி திருமணத்தில் கலந்து கொண்டு  பிறகு 15-11-2015 ஞாயிறு அன்று,காலை சென்னையை நோக்கி பயணித்தோம். ஒட்டுமொத்தமாக நாங்கள் இந்த பயணத்தில், 1200 கிலோமீட்டர் கடந்து வந்துல்ல்ளோம். அதில் எங்களுக்கு "சாலை பற்றிய சர்ச்சை" ஒரே இடத்தில்தான் வந்தது.

       அதுதான் "ராணிப்பேட்டை முதல் ஸ்ரீபெரும்புதூர்" வரையுள்ள சாலை. அந்த சாலை "பகுதி,பக்தியைக் உடைந்து" கிடக்கிறது.ஏன் அப்படி? நாங்கள் செல்லும்போது வழியெல்லாம் "கனமழை" பெய்யத்தான் செய்தது.மற்ற இடங்களில் உள்ள சாலைகள் இப்படி உடையாமல் இருக்கும்போது, இங்கே மட்டும் ஏன் சாலை இப்படி "துண்டு,துண்டாக" உடைந்து கிடக்க வேண்டும்? அப்படியானால் இங்கே ஒப்பந்தம் எடுத்த, "ஒப்பந்தக்காரர்" சரியான அளவில், "கல்லையோ, மண்ணையோ, சிமெண்டையோ",கலந்து சாலையை போடவிழலி என்றுதானே பொருள்? அதற்கு யார் காரணம்? அங்குள்ள நெடுஞ்சாலை அதிகாரிகளா? அங்குள்ள வட்டார அமைச்சர்களா? இந்த கேள்வி எழுகிறது.

        ஏற்கனவே இந்த குறிப்பிட்ட "பகுதி சாலை" பற்றி பல முறை, பலரும், புகார் கொடுத்ததும், எழுதிய புகாரை அனுப்பியும்,எந்த பலனும் இல்லை என்கிறார்கள். ஒருமுறை ஒரு நீதியரசர், இந்த சாலையின் "பழுது" பற்றி நீதிமன்றத்தில் கடுமையாக கூறியும் கூட, எந்த நடவடிக்கையும் இல்லை. இது நடுவணரசுக்கு வேலையா? மாநில அரசின் வேலையா? என்று சர்ச்சை வந்ததாகவும் கூறுகிறார்கள். இந்த சாலையை போட்ட "ஒப்பந்தக்காரரை" பகிரங்கமாக அறிவித்து, அவரை" கருப்பு பட்டியலில்" இட்டு, வீலமபரப்படுதி, அதன்மூலம் பொதுமக்கள் முஇன்னிலையில் "பகிரங்க தண்டனை" வழங்கினால் மட்டுமே சாலை உருப்படும். இரு சக்கரவாகனங்கள் ஐந்தே உடைந்த சாலையில் "விபத்துகளில்" மரணத்தை தழுவுவர் என்பது நிச்சயம்., ,

உலக சகிப்புத்தன்மை நாள்--ஐ.நா.அறிவித்துள்ளது சரிதானா?.

உலக சகிப்புத்தன்மை நாள்--ஐ.நா.அறிவித்துள்ளது சரிதானா?.
--------------------------------------------------------------------------------------------------
        ஐ.நா.சபை, நவம்பர் 16 ஆம் நாளை, "உலக சகிப்புத்தன்மை நாள்" என அறிவித்துள்ளது. "சகிப்புத்தன்மையின்மை " இப்போது நமது நாட்டில் அதிகரித்து விட்டது என்றும், அதனால்தான் "தாத்திரி என்ற இடத்தில உத்திரப்பிரதேசத்தில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வந்த செய்தியை ஒட்டி, ஒரு முசுலிம் பெரியவர்  அடித்து கொல்லப்பட்டார்" என்பதும், கர்நாடகாவில், முற்போக்கு எழுத்தாளர் குல்பர்கி கொலை செய்யப்பட்டார் என்றும், மகாராஷ்ட்ராவில் நடந்த பகுத்தறிவாளர் கொலையும் அதேபோல்தான் என்றும், இவையெல்லாமே "சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் தான்" என்றும், இத்தகைய "சகிப்புதன்மையின்மைக்கு"  சங்க பரிவாரமும், பா.ஜ.க. அரசுமே காரணம் என்றும் கூறி, பல எழுத்தாளர்களும், கலைஞர்களும் நாடு முழுக்க தாங்கள் அரசிடம் பெற்ற " பல்வேறு விருதுகளை" திரும்பக் கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில், உலக சகிப்புத்தன்மை நாள் என்று வருவது "சாலப்பொருத்தமே"  என்றாலும், அது என்ன என்று அலச வேண்டும்.

        அதாவது உங்களுக்கு ஒருவரை அல்லது ஒரு பொருளை அல்லது ஒரு செயலை  "பிடிக்கவில்லை" என்றால், அந்த மனிதரை அல்லது அந்த பொருளை அல்லது அந்த செயலை எதிர்த்து நீங்கள் "வெறுப்பு அரசியலை" கட்டவிழ்த்துவிடுவது என்பதுதான் இங்கே "சகிப்புத்தன்மையின்மை" என்று கூறப்படுகிறது. உங்களுக்கு ஒன்றை பிடிக்காவிட்டால் அது இந்த உலகத்திலேயே இருக்கக் கூடாதா? இது என்ன அய்யா "அநியாயம்?" பல்முனை பண்பாடுகளையும், பல்முனை குணங்களையும், பல்வேறு வகை உணவுகளையும், பல்வேறு வகை பழக்க,வழக்கங்களையும், பலவேறு மொழிகளையும், பல்வேறு வரலாறுகளையும், பல்வேறு பிரிவுகளையும், இன்னமும் சொல்லப்போனால், பல்வேறு சாதிகளையும், பல்வேறு மதங்களையும், பல்வேறு நம்பிக்கைகளையும், பல்வேறு பாலினங்களையும், பல்வேறு தலைமுறைகளையும் கொண்ட ஒரு "சூழலில் தானே" நாமெல்லாம் வாழ்ந்து வ்ருகிறோம்?. இந்த உலகம் உழன்று வருகிறது? அப்புறம் என்ன வெங்காயம்? நான் நினைப்பது மட்டுமே, நான் விரும்புவது மாத்திரமே, எனக்கு பிடித்தது மட்டுமே, இருக்க வேண்டும் என்று எப்படி நினைக்க முடியும்?

      இதுதான் அடிப்படையிலேயே இங்கு "கேள்வி கேட்கப்படுகிறது".  சகிப்புத்தன்மை வேண்டும் என்ற குரல் எழுகிறது  சகிப்புத்தன்மை என்று இதை கூறலாமா? சமூக அவலங்களைக் கண்டு,அநீதிகளை கேள்விப்பட்டு, அக்கிரமங்களை பார்த்து, அநியாயங்களை தட்டிக் கேட்காமல், "சகிப்புத்தன்மையுடன்" இருங்கள் என்று நாம் சொல்ல வருகிறோமா?  நிச்சயமாக இல்லை. அப்[படியானால், "சகிப்புத்தன்மை" என்பது,"தவறுதான்" என்றாலும், "வெறுப்பு வருகிறது" என்றாலும், "பிடிக்கவில்லை" என்றாலும் நீ அதை "சகித்துக் கொள்" என்று கூறுவதாகும். ஆனால் "ரவுத்திரம் பழகு" என்று பாரதியார் கற்றுக் கொடுத்ததை நாம் ஏற்றுக் கொள்கிறோம். தவறுகளைக் கண்டு சகித்துக் கொண்டு இருக்காதே எனபதுதான் நமது உண்மையான் நியாயமாகும்.

       இங்கே கூறவருவது யாதெனில், "மாறுபட்ட, வேறுபட்ட, உனக்கு பழக்கமில்லாத, உனக்கு ஒத்துவராத, நீ விரும்பாத" எதையும் உலகில் யாருமே கைக்கொள்ளக் கூடாது எனபது தவறு என்பதுதான்.அதாவது உன்னிடமிருந்து "வேறுபட்ட" எதுவும், இந்த உலகில் இருக்குமானால் அதை "அங்கீகரித்துக் கொள்ள" கற்றுக் கொள் என்பதுதான். அதாவது, உன்னிடமிருந்து வேறுபட்ட, "நம்பிக்கை, உணவு பழக்கம், பண்பாடு, மொழி, இனம்,பாலினம், தலைமுறை, சாதி, மதம்" எதுவாக இருந்தாலும்,  அதுவும் இந்த உலகில் "இருக்க, வாழ, உயிர்பிழைக்க, நடமாட, செயல்பட, வளர, செழிக்க," உரிமை கொண்டது என்பதே. உண்மை. அதுவே, "ஜனநாயகம்". அதவே, "சமத்துவம்".அதுவே "உரிமை". அதுவே "உலகம்".அதுவே "மனித உரிமை". அத்தகைய உலகத்தை நீ ஏற்காவிட்டால், நீ இந்த பூவுலகில் வாழ "தகுதியற்றவன்".நீ தகுதியற்றவனாக் இருந்துகொண்டு, அடுத்தவனைப் பார்த்து, அவனது "தகுதி" பற்றி பேச உரிமையில்லை".  இப்படி கூறவேண்டுமானால், நாம் "சகிப்புத்தன்மை" என்ற சொல்லை நீக்கிவிட்டு, "வெறுப்பு அரசியலை" எதிர்ப்போம் என்று கூறலாம்.

      இந்த விளக்கம், கடந்த சனிக்கிழமை, கோவையில் நடந்த "பி.யு.சி.எல்." என்ற " மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின்" மாநிலக் குழு கூட்டத்தில் வந்தது. காஞ்சி மாவட்ட பி.யு.சி.எல். தலைவர் தோழர் தமிழினியன் இது பற்றிய சர்ச்சையை கிளப்பியதால் இப்படிப்பட்ட விளக்கத்தை விவாதத்தில் பெற முடிந்தது.   . 

ஒதுக்கப்பட்ட தொகையிலேயே "ஆட்டையப்போடும்" அதிகாரிகள்?

ஒதுக்கப்பட்ட தொகையிலேயே "ஆட்டையப்போடும்" அதிகாரிகள்?
--------------------------------------------------------------------------------------------------
    ஊழல் என்பது ஊறிப்போயிருக்கும் நமது இன்றைய உலகில், "ஊழல் முகமே தேசத்தின் முகம்" என்று பெயர் பெற்ற நமது நாட்டில், வரிசையாக ஊழல் குற்றச்சாட்டுக்களில் மாட்டுகின்ற அரசியல்வாதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில், இப்போது நமக்கு "புதிய கணக்கு" கிடைத்துள்ளது. அதாவது அரசுத் துறைகளுக்குள்ளேயே இப்படி நடக்குமா? ஒரு துறைக்கு ஒதுக்கப்பட்ட "தொகையை" அடுத்த துறை " ஆட்டையப் போட" முடியுமா? அதுவும் முடியும், அதைத் தாண்டியும் முடியும் என்று நமது அதிகாரிகள் நிரூபிக்கிறார்கள்.அது எப்படி என்றா கேட்கிறீர்கள்?

      இருபது ஆண்டுகளுக்கு முன்பு, "எம்.ஜி.ஆர். திரைப்பட நகர்" என்ற தமிழ்நாடு அரசின் "திரைப்பட நகரம்" தரமணியில், சென்னையில், தொடங்கப்பட்டு முதலில் சிறப்பாக செயல்பட்டது. அதன் பின் அதன் நிலங்களில் ஒரு பெரும் பகுதியை, அடுத்து, அடுத்து, "தனியார்  நிறுவனங்களுக்கு"  விற்று விட்டார்கள். இதைக் கேட்பார் கிடையாது என்ற நிலையில், "சென்னை நகருக்குள், "திரைப்பட படப்பிடிப்புக்கு" ஏற்ற இடங்களே இல்லை என்ற நிலை. இந்த அரசு திரைப்பட நகரிலாவது அவ்வாறு வாய்ப்பு இருக்கிறதா? என்றால் கேள்விக்குறியே. திரைப்பட தயாரிப்பார்களின், இயக்குனர்களின், கலைஞர்களின், தொழிலாளர்களின், இந்த நீண்ட கால கோரிக்கையை நிறைவு செய்யும் பாணியில், முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா, இந்த திரைப்பட நகருக்காக, அதன் வளர்ச்சிக்காக, புதிய படப்பிடிப்புகளை நடத்த ஏதுவாக, " ஒரு தியேட்டர்", "ஒரு எலக்ட்ரானிக் கருவிகள் கொண்ட அரங்கம்" என்பதாக பல புதிய ஏற்பாடுகளை, "திரைப்பட நகர நிர்வாகம்" கொடுத்த கோரிக்கையை ஏற்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கிட்டத்தட்ட, ரூ.100 கோடியை ஒதுக்கினார்.அந்த அறிவிப்பை, "திரைப்படத் துறையே" வரவேற்றது,பாராட்டியது.  அந்த தொகையை, "செய்தி,விளம்பரத் துறை" ஒதுக்கி கொடுத்து விட்டது.

    அந்த தொகைக்கு "எலக்ட்ரானிக் கருவிகளும், மற்ற சாதனங்களும்"  வாங்கப்பட்டன. "தியேட்டரும் " கட்டப்பட்டது. அதற்கான "கட்டிடங்களும், சுவர்களும், பாதைகளும்" கட்ட, அதற்கான "பணிகள்" "பொதுப்பணித் துறை" வசம் ஒப்படைக்கப்பட்டது. ஒப்படைக்கப்பட்ட பணிகளை செய்ய "பொதுப்பணித் துறைக்கு" கை வலித்துவிட்டது. அதனால் அவர்கள் "திரைப்பட நகரின்" நிர்வாகத்திடம், "ஒதுக்கப்பட்ட அத்தகைய பங்களுக்கான பணத்தில், 40 விழுக்காட்டை"  தங்கள் துறைக்கு, "தனியாக " ஒதுக்கினால்தான், வேலைகளை செய்யமுடியும் என்று நிபந்தனை விதிக்க, "திரைப்பட நகர நிர்வாகம்" திணறி விட்டது.அப்படி,"லஞ்சம்" கொடுத்தால், செல்வி.ஜெயலலிதாவின் "கனவான" வளர்ச்சி பெற்ற "திரைப்பட நகரம்" எழ முடியாதே என்ற கவலை அவர்களுக்கு. ஆனால் "பொதுப்பணித் துறை" தனது கோரிக்கையில் "கறாராக" இருந்தார்கள். தங்களுக்கான் லஞ்சத் தொகையை "கணிசமாக" கொடுக்காவிட்டால், "திரைப்பட நகரில் மண் சரியில்லை, இடம் சரியில்லை" என்று ஏதாவது "காரணம்" கண்டுபிடித்து அதைக் கூறி, திரைப்பட நகருக்கு ஒதுக்கப்பட்ட நிதியையே "திரும்ப எடுத்துக் கொள்ள செய்துவிடுவோம்" என்ற மிரட்டல் அளவுக்கு சென்ற பின், வேறு வழி இல்லாமல், அவர்களுக்கு "25%" ஒதுக்கப்பட்டது. அதை மாத்திரம் பெற்றுக் கொண்டு விட்டுவிடுவார்களா நமது அதிகாரிகள்? இதே கணக்கை "ஒப்பந்தக்காரர்களிடமும்" வைத்து வெற்றி கண்டுள்ளார்கள்.

          அதன் விளைவு, ஒப்பந்தக்காரர்கள், "ஒப்பேததக்காரர்களாக" மாறி விட்டார்கள். அவர்கள் கட்டிய "சுவர்களும், கட்டிடங்களும், கான்கிரீட்களும்"தான் அந்த கதையை கூறவேண்டும். தேவையான சிமண்டை பயன்படுத்தாமலும் , கற்களை பயன்படுத்தாமலும், கட்டப்பட்ட கட்டிடங்களும், சுவர்களும், இப்போது பெய்துவரும், "கன மழையால்" உடனடியாக "பல்லைக் காட்டத்" தொடக்கி விட்டன.இப்போது பல லட்சம் ரூபாய்க்கு வாங்கிய "எலக்ட்ரானிக் பொருள்களை " வைத்துள்ள "கட்டிட ம்" கீறல் விழுந்து, "கசியத்" தொடக்கி விட்டது. ஏனய்யா, அதிகாரிகளே, சம்பந்தப்பட்ட அமைச்சர்களே, நீங்கள்,"ஒப்பந்தக்காரர்களிடம்"  லஞ்சம் பெறுவீர்கள் என்பது நாடறிந்த செய்தி. அது எப்படி அய்யா, ஒரு அரசுத் துறையே, அடுத்த அரசுத் துறையிடம் "லஞ்சம்" கேட்டு, மிரட்டி, வாங்கி, கொடுமை செய்கிறீர்கள்?  அப்படியானால் முதல்வரின் "கனவுத் திட்டம் " என்னாகும்? நாசமாகக்ப்போகட்டும், எங்களுக்கு "பை நிறிய வேண்டும்" என்கிறீர்களா?  ஓகோ, உங்கள் வீட்டுக்கு, நிலங்களும், கட்டிடங்களும், நல;ல முறையில் கட்டிக் கொள்ள "நிதி" தேவையோ? இப்போ புரியுது.

Tuesday, November 3, 2015

ராமேஸ்வரம் கரையில்,சாலையில் எண்ணை வழிந்தோடி, அய்யய்யோ.....03-11-2015.

ராமேஸ்வரம் கரையில்,சாலையில்  எண்ணை வழிந்தோடி, அய்யய்யோ.....03-11-2015.
---------------------------------------------------------------------------------------------------------------------
      இன்று காலை 10 மணியிலிருந்து ஒரே அக்கப்போர். ராமேஸ்வரத்தில, பக்தர்கள் முதலில் குளிக்க வரும் இடம்" அக்கினி தீர்த்தம்". அங்க குளிக்க முடியல்ல. ஏன்? ஒரே எண்ணையா வழியுது. எங்கிருந்து வந்தது இவ்வளவு எண்ணை? எல்லாம் கடலுக்கு சென்று திரும்பிய படகுகள் பக்கதிலிருந்துன்னு சொன்னாங்க. அது என்ன? படகுகள் பக்கத்தில போயி பார்த்தா, அப்படி ஒரு எண்ணை குளம். ஏன்? இன்னிக்கு கரைக்கு வந்த படகுகள் எண்ணிக்கையில் குறிப்பிட்ட படகுகளிலிருந்து எண்ணை வடியுது. ஏன் அப்படி? அவை எல்லாமே "பிடிச்சிட்டு வந்த மீன்கள்ட்ட" இருந்து வடியுது.ஏன் அப்படி மீன்கள்ட்ட இருந்து எண்ணை வடியணும்?  அது என்ன மீன்? எண்ணை வடியற மீன்? அதுக்கு பேரு "பேச்சாள" மீன். ஒரு படகுல 10 டன்,20 டன் எடையுள்ள பேச்சாள மீனு வந்து இறங்கி இருக்கு.,பேச்சாள மீனுக்கு பேரே "பேச்சாள ஆயில் மீனு". அதாவது "எண்ணை மீன்". அது வழக்கமா ஜனவரி மாதம் முதல்தான் கிடைக்குமாமே? இப்பவே எப்படி இவ்வளவு வந்தது?.

       அதுதான் கதை. இப்பமே கடலுக்குள் சென்று, சிலரால இந்த பேச்சாள ஆயில் மீன "அள்ளிக்கிட்டு" வர முடிஞ்சிருக்கு. அது எப்படி முடியும்? அவங்க "ரெட்டை மடிக்காரங்க". அப்படினா "தடை செய்யப்பட வலையான ரெட்டை மடிய" பயன்படுத்தறவங்க. அந்த வலையத்தானே இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களும் எதிர்க்கறாங்க? ஆமாம்.ஆமாம். அப்படிப்பட்ட "ரெட்டைமடி வலைய "  பயன்படுத்தக் கூடாதுன்னு எல்லா அரசாங்கங்களும், ஊடகங்களும், மீன் வளத் துறையும், சொல்லி வர்றாங்களே? ஆனாலும் கூட, இவர்கள் பயன்படுதறாங்களே ? அது எப்படி?  அரசாங்கத்தையும் ஏமாத்தி, இரண்டு நாட்டிலையும் உள்ள பொதுவான மீனவர்களையும் ஏமாத்தி, சட்ட விரோதமாக, இருக்கும் மீன்களை எல்லாம் ஒரேயடியாக "அள்ளிக்கிட்டு" வரக்கூடிய இந்த ரெட்டை மடி வலையை பயன்படுத்தறவங்க யாரு? அவங்களுக்கு "துணை" நிற்பது யாரு?

     சரி. இந்த முறை எத்தனை படகுகள் இப்படி ரெட்டை மடி வலையோட கடலுக்கு போய் வந்தது? 150 படகுகள் இன்று இந்த வலைய பயன்படுத்தி, "பேச்சாள ஆயில் மீனை" பிடிச்சிட்டு வந்திருக்கு. அதனால தான் இந்த மீனால கரை முழுக்க ஒரே "எண்ணையா" வடியுது. அப்படியானா ஒரு படகுல 20 டன் மீன் பிடிச்சாங்க. 150 படகுல 300 டன் மீன் வந்து இறங்கிருசசு. அதனாலதான், ராமேஸ்வரம் கரை முழுக்க ஒரே "எண்ணையா" ஊததுது.இதை மறைமுகமா "ஆதரிப்பது" அங்க உள்ள "மீன் வளத் துறைதான்". அதன் அதிகாரிகள்தான். அவங்களுக்கு "நல்ல கமிசன்" போயிரும்.அக்கினி தீர்த்தம் குளிக்க முடியாம எண்ணை வடிவதுனால அங்க உள்ள "இந்து மக்கள் கட்சி" புகார் கொடுத்தாங்க. அதனால அதை ஒப்பேத்த, காவல்துறை துணை ஆணையர்,முத்துராமலிங்கம் சமரச பேச்சு மாலைல நடத்தறாரு. அவருக்கும் நல்ல பலன் கிடைக்குமே? 

    இது மட்டுமா? அங்க உள்ள சாலைகளில் இந்த எண்ணை வடிந்து, வாகனங்கள் போக முடியல்ல. இரு சக்கர வாகனங்கள் "சறுக்குதே"?. இந்த அளவு மோசமான நிலைக்கு யாரு பொறுப்பு? மீன்வளத் துறை அமைச்சர்தான். அவருதான் அவரு ஊர்ல, நகாப்பட்டினததுல,"ஹை ஸ்பீடு எஞ்சின" இறக்கி விட்டிருக்காரே? அதுக்கு போட்டி போட ராமேஸ்வரம் மீனவர்கள் இதை செய்ய மாட்டாங்களா? அடப்பாவிகளா ஒட்டுமொத்தமா கடலையே  "காலி" பண்றீங்களே?