Saturday, February 2, 2013

கமல் இறங்கி வந்துபேச, இவ்வளவு முயற்சி தேவைப்பட்டதோ?

கமல்  இறங்கி வந்துபேச, இவ்வளவு  முயற்சி தேவைப்பட்டதோ?
        நேற்று கமலுடைய ஆட்கள்  பேச வருகிறோம் என்றனர். அதை  முஸ்லிம் அமைப்புகள்  ஏற்கவில்லை. தாங்கள்  கமலஹாசன் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே  பேசி சுமுகமாக முடிக்க முடியும் என்ற கருத்தை  முஸ்லிம் அமைப்புகள் அழுத்தமாக வைத்தனர். கமல்  தானே எழுதி, தானே இயக்கி, தானே நடித்த படத்தில் வரும் காட்சிகளை பற்றி விவாதித்து முடிவெடுக்க, கமல்தானே வரவேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை வைத்தன. அதனால அதை மறுக்க முடியாமல், மும்பை சென்ற கமல் இன்று மதியம் சென்னை திரும்பினார். மதியத்திற்கு  மேலே , உள்துறை செயலாளர் முன்னிலையில், முஸ்லிம் அமைப்புகளுடன் பேச அமர்ந்தார்.

                         பதினைந்து பிரதிநிதிகள் முஸ்லிம் அமைப்புகள் சார்பாக பேச அமர்ந்தனர். உள்துறை செயலாளர் ராஜகோபால்  அமர்ந்தார்.  முஸ்லிம் அமைப்பினர் பதினைந்து பேரும்  பேசினால் முறைப்படுத்த முடியாது என முடிவுக்கு வந்தனர். பதினைந்து பேரில், ஐந்து பேர் மட்டும் பேசட்டும்  என்றும் மற்றவர்கள் ஏதாவது பேச வேண்டும் என்றால், அந்த ஐந்து பேரிடம் கூறி அவர்களை பேச வையுங்கள் என்றும் பேச்சுவார்த்தைக்கான முறை வகுக்கப்பட்டது  ஐந்து பேராக, மனித நேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ .பேரா.ஜவாஹிருல்லா,  இந்திய தவுகித் ஜமாஅத் முனீர், ஒருங்கிணைப்பாளர் அனீபா, எஸ்.டி.பி.ஐ. பார்கவி, ஜமாஅத் இ இஸ்லாம் [ஹிந்த்] சிக்கந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மற்றவர்கள் பார்வையாளர்களாய் அமர்ந்தனர்.  பேச்சுவார்த்தை மூன்று மணி நேரம் நீண்டது. 

                    
                                      ஒரு கட்டத்தில் தனியாக இருபுறமும் பேச வாய்ப்பாக உள்துறை செயலாளர் ராஜகோபால், எழுந்து வெளியே சென்றார். அப்போது சிறிது காரசாரமான பேச்சு, பிறகு புரிந்த உணர்வில் அமைதியாக ஆனது. கமலின் சில முன்வைப்புகளில் முஸ்லிம் பிரதிநிதிகளும், அனுதாபம் கொண்டனர். ஆனால் தனகளது கோரிக்கைகளில் உறுதியாக நின்றனர் விட்டுக் கொடுக்காமல் பேசினர். சில முக்கிய  தவறான காட்சிகளை  கோரி வலியுறுத்தினர். கமல் எதையுமே மறுக்க வில்லை. ஆனால் தான் படத்தை "ஆரோ-3 டி" என்ற முறையில்  குரல்களை ஆக்கியிருப்பதாகவும், அவற்றை நீக்க மீண்டும் வெளிநாடு சென்று அதிகமாக கடினப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனாலும், முஸ்லிம் பிரதிநிதிகள், தனகளது முக்கிய கொரிககிகளை விடவில்லை. 

                    முல்லா உமர் மதுரையிலும் கோவையிலும் இருந்தேன் என்று கூறுவதை நீக்க கோரினர் சரி என்றார் கமல். தீவிரவாதிகள் குரானை படித்து விட்டு அதை மேற்கோள் காட்டி  தீவிரவாத  செயலுக்கு தயார் ஆவதை நீக்க கோரினர். சரி என்றார் கமல். அதுபோனர் காட்சிகளே படத்தில் ஏழெட்டு முறை வருகிறது. அவற்றை நீக்கும் போது  பிரச்சனை எழாது. அதேபோல கமல் தொழுகின்ற காட்சி வருகிறது. அதில் குர்ஆனில் வரும் நல்ல கருத்துகளை கமல் கூறுகிறார். முஸ்லிம் அல்லாதவர் தொழுவதை எதிர்ப்பார்களோ என்று கமல் எண்ணினார்  ஆனால் அது படம்தானே என்றும், கமல் குரானை மேற்கோள் காட்டுவது, நல்ல கருத்துகளைதான் கூறுகிறார்  என்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் அதை  படத்தில் இருக்கலாம்  என்று கருதினர்  இவ்வாறு சில, பல காட்சிகளை அவற்றின்  குரல்களுடன் நீக்க ஒப்புக் கொண்டார். பிரதிநிதிகளும் திருத்தி அடைந்தனர். உள்துறை செயலாளரும் கமலுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். அவரது செயல்பாடு அனைவராலும் பாராட்டப்பட்டது. 

                                  இத்தகைய காட்சிகளை நெஞ்க்கத்தை முதலிலேயே நீக்க கமல் அமர்ந்து  இத்தனை தூரம்  போயிருக்காது என்று நம்மை நினைக்க தூண்டுகிறது.