Wednesday, January 30, 2013

பொய் சொல்லாதீங்க நடிகரே?


     இன்று காலஹாசன் கொடுத்த ஊடகப் பேட்டியில் தான் இந்த படத்தால் கடும் நட்டத்தை அடைந்திருப்பதாகவும் கூறி, ஐயோ பாவம் என்ற அனுதாபத்தை அள்ளி வாங்க தொடங்கியுள்ளார். அதனால்தான் நாம சில உண்மைகளை சொல்லியாக வேண்டும். அதாவது பொதுவாக திரை துறையில் "காப்பீடு" இல்லை. ஆனால் ஆந்திராவில் தெலுங்கானா போராட்டம் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், ஓடும்படம் தோடர்ந்து ஓட முடியாத நிலை. ஆகவே சிலர் ஏற்பாடு செய்து, ஒரு திரைப்பட காப்பீடு தயாரா செய்தனர். அடஹ்ர்க்கு பெயர்" காட்சிபடுத்தலில், காப்பீடு" { Exibiting  Insurance }  இந்த காப்பீடு திரையிடப்பட்ட படங்களா போராட்டம் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டால், முதல் மூன்று நாட்களுக்கு வந்த "வசூலை" கணக்கெடுத்து, அதன் சராசரியை நான்காம் நல படம் திரையிட முடியாத நாளுக்கு அளிக்க வகை செய்கிறது. இந்த "காட்சிப்படுத்தலில் காப்பீடு" என்ற ஒன்றை இந்த படத்தின் முதல் தயாரிப்பாளரான, " பட்லூரி வெங்கடேஸ்வர பிரசாத் ரெட்டி" ஏற்கனவே "பதிவு" செய்துவிட்டார். ஆகவே படம் எந்த நிலையிலும், "நட்டத்தை" அடையாது என்ற உண்மை கமலஹாசனுக்கு தெரியும்.

                       தெரிந்த இந்த உண்மையை, நடிகர் வெளியே சொல்லமால், தனக்கு நட்டம் என்றும், அதனால் சமூகமே என்னை பார்த்து "இறக்கப்படு" என்றும் குரல் கொடுப்பது எப்படி சரி? கமல் அவர்களே, நாங்கள் எல்லோருமே உங்கள் ரசிகர்கள்தான். உங்கள் படங்களைத்தான் விரும்பி எப்போதும் பார்ப்போம். ஆனால நேநேகள் யாரோ சொன்னதற்காக யாருக்கோ உதவி செய்வதற்காக, ஒரு படத்தின் கதையை, நீங்களே விஜய் டி.வி.யில் சொன்னதுபோல, பொங்கலன்று உங்கள் பேட்டியில் கூறியது போல, அமெரிக்காவிற்கு இந்த படத்தின் கதையை முழுமையாக, வசனங்களுடன் அனுப்பி வைத்து, அவர்களது ஒப்புதல் பெற்ற பிறகே, 2011 இலேயே  தொடங்கிவிட்டேன் என்கிறீர்கள் அதுதான நாங்கள் கேட்பதும். எதற்காக அமெரிக்க நம் நாட்டில் திரைடவேண்டிய படத்தை, அதுவும் முஸ்லிம்கள் பற்றிய படத்தை, ஒப்புதல் கொடுத்து  வேண்டும்? 

                 இதில் ஒரு அரசியல் இருக்கிறது. அதாவது அமெரிக்காவின் நலன் என்ற அரசியல் இருக்கிறது. அதிலும், "ரா" அமைப்பை நியாயப்படுத்தும் அரசியலும் இணைந்தே  இருக்கிறது. அதனால்தான் முஸ்லிம் தமிழர்களை, பிற தமிழர்களிடமிருந்து "பிரிக்கும் வேலையை" இந்த படம் மூலம் அழகாக செய்ய முனைந்துள்ளார்கள். அதில் இனம் புரியாமலும் கமல் ஈடுபட்டிருக்கலாம். ஆனால  இரண்டு அனடுகளுக்கு முன்பு கொழும்பில் நடந்த,"இந்திய சர்வதேச திரைப்பட விழா" என்ற ஐ.எப். எப்.ஐ. என்ற மைப்பின் விழாவிற்கு அனுப்ப ஒப்புக்கொள்ளாதே என்று கமல்  முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது நினைவிருக்கிறதா?   அப்போதே கமல் அவர்களே உங்களது "ஈழத் தமிழர் எதிர்ப்பு நிலையை நாங்கள் சுட்டி காட்டவில்லையா? அதுதான் ஐன்று முஸ்லிம் தமிழர்களையும், முஸ்லிம் அல்லாத தமிழர்களையும் பிரிக்க நினைக்கும்  சிங்களத்திற்கும், இந்திய நடவனரசின் உளவு துறைக்கும் "சேவை" செய்வது போல இந்த படம் அமைந்துள்ளது. அதேபோல அமெரிக்காவின் "பயங்கரவாத எதிர்ப்பு உலகப் போரை" ஆதரிப்பதாக இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்க "தான்" பயங்கரவாதம் செய்து விட்டு, அதை இஸ்லாமியர்கள் மீது பழி போடும் அல்லவா? அந்த வேலையை கமல் அவர்கள் மூலம் செய்ய வைத்துள்ளார்கள். 

             கமல் சொல்வது ஒள இந்த படம் 2011 இலேயே தயாரிக்க தொடக்கி விட்டது. அதாவது ப.சிதம்பரம் உள்துறையில் இருக்கும் போதே அவரது ஆலோசனையின் பேரில் தொடங்கப்பட்டுள்ளது. அதனால்தான் அவரும் இப்போது காங்கிரஸ் காரர்களை அனுப்பியும், களிகரிடம் கூறியும் இந்த படத்திற்கு ஆதரவு கொடுக்கிறார். கலைஞரும்  செய்த "போர் குற்றங்கள்" அம்பலமாக கூடாது என்று இப்போது கமலுக்கு ஆதரவாக அறிக்கை கொடுக்கிறார். ஆகவே இது தமிழின ஒற்றுமையை விரும்பும் அனைவரும் கேள்வி எழுப்ப வேண்டிய படம்.