Tuesday, January 29, 2013

கமலஹசனை ஆதரிக்கும் ஆங்கில ஏட்டு தலையங்கம் சரியா?

கமலஹசனை ஆதரிக்கும் ஆங்கில ஏட்டு  தலையங்கம் சரியா?
       இன்றைய ஆங்கில எடு "தி ஹிந்து" கமலாஹசனின் விஸ்வரூபம் படத்திற்கு ஆதரவாகவும், தமிழக அரசின் "தஹ்டைக்கு" எதிராகவும், படம் பார்த்துவிட்டு, கமலஹாசன் சில சமாதன பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்றும் கூறிய நீதியரசர் வார்த்தைகளுக்கு எதிர்ப்பு கொடுத்தும் ஒரு தலையங்கத்தை தீட்டியுள்ளது. அவர்களுக்கு தெரிந்த செய்திகளிலிருந்து அவர்கள் ஒரு" அக்ருத்துரிமை பாதுகாப்பு" நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள். ஐயோ, பாவம். கமல் படத்தை எதிர்க்கும் முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிராக "பொது மக்கள் அபிப்பிராயம்" எழுந்துள்ளது என்பது உணமைதான்.அதில் சிலருக்கு லாபம் உண்டு. என்ன லாபம்?  தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்குள், "முஸ்லிம் தமிழர்களையும், முஸ்லிம் அல்லாத தமிழர்களையும்" பிரித்து நிறுத்துவதில் சில சக்திகளுக்கு லாபம் உண்டு. எப்படிப்பட்ட சக்திகளுக்கு? தமிழின ஒற்றுமை மதங்களை தாண்டி வந்துவிடக்கூடாது என்று விரும்பும் சக்திகளுக்கு அப்படி ஒரு விருப்பம் உண்டுதானே? அவர்கள் யார்?  இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் இருப்பதை ஒப்புக்கொள்ளாதவர்கள்  அதாவது காஷ்மீரிகளின், நாகர்களின்,மிசோக்களின், அச்சாமியர்களின், மணிப்புரிகளின், பஞ்சாபிகளின் தேசிய இன அடையாளங்களை ஏற்றுக் கொள்ளாமல், இருக்கும் சக்திகளுக்கு, தமிழினமும் மதங்களை தாண்டி ஓன்று பட்டு விடக்கூடாதே என்ற எண்ணம் இருக்கத்தானே செய்யும்?

                              யார் அவர்கள்? இப்போதைக்கு நமக்கு அவர்கள் யார் என்ற கேள்விக்கு இந்திகாரர்கள் என்றோ வாடா இந்தியர்கள் என்றோ, கூறத் தோன்றினாலும், அது எப்படி உண்மையாக இருக்கும்? ஏன்  என்றால் அவர்கள் எல்லோரும் மக்கள் ஆயிற்றே? ஒரு  பேசும் மக்கள் எப்படி மடற மொழி பேசும் மக்களுக்கு எதிராக இருப்பார்கள்?  அதனால அது தவறான காரணம். அப்படியானால் அந்த தேசிய இன விரோத, தமிழின விரோத சிந்தனைகள் குடி கொண்டிருப்பது யாரிடம்? எதனிடம்?  யோசித்து பாருங்கள். இத்தனை பெரிய இந்தியாவை கட்டிக் காக்க வேண்டும் என்றால், இந்திய பேரரசு, எத்தனை தந்திரங்களை கையாள வேண்டும்? தேசிய இனனக்ளின் சுய நிர்ணய உரிமையை அன்மதிக்க அதனால முடியுமா? அதேபோல தமிழின ஒற்றுமையை அதனால அங்கீகரிக்க ம் முடியுமா? ஏற்கனவே 
காஷ்மீர் தேசிய இன உரிமையை அடக்க முஸ்லிம், இந்து என்று பிரச்சனையை திசை திருப்பிய அனுபவம் இந்திய  இருக்கிறது அல்லவா? அதுபோல தமிழ்நாட்டிலும் அவர்கள்  என்று  அல்லவா? அதற்கு  என்ன அவசரம்? 

                                    ஈழப்பிரச்சனையை  அடக்க சிங்களர்கள், முஸ்லிம் தமிழர்கள், முஸ்லிம் அல்லாத தமிழர்கள் என்ற பிரிவினையை அகலப்படுததி  டவென்றார்கள்.  அதை புரிந்து  கொண்ட தமிழ்நாட்டு தமிழர்கள்   மதங்களை தாண்டி    தமிழர்களை ஒற்றுமை vபடுத்தி அருகிரர்கள். அது  இலங்கை அரசையும்  அதை    ஆதரிக்கும் இந்திய   அரசையும் பாதிக்கும்  ஆகவே தமிழ்நாட்டில் மத ரீதியாக தமிழர்களை பிளவுபடுதத   அதன்  "உளவு துறை யான் ரா  வும்   முயற்சி   மாட்டார்களா ? அதுதான் இந்த திரைப்படத்தால் நடந்துள்ளது.