Tuesday, January 22, 2013

சிறையில் இருந்த அகதிகள் ஒன்பது பெரும் பிணையில் விடுதலை.

சிறையில் இருந்த அகதிகள் ஒன்பது பெரும் பிணையில் விடுதலை.
                  செங்கல்பட்டு  சிறப்பு அகதிகள் முகாமில் துன்பப்பட்ட  36 ஈழத் தமிழர் அகதிகளை விடுதலை செய்ய வேண்டி, அவர்கள் நடத்திய பட்டினிப் போரில், கடைசிவரை பட்டினி கிடந்த ஒன்பது அகதிகளையும் காவல்துறை கைது செய்து, புழல் சிறையில் அடைத்திருந்தார்கள். அவர்களை பிணையில் விடுதலை செய்ய வேண்டி, பி.யு.சி.எல். அமைப்பின் வழக்கறிஞர் சந்தோஷ், நீதிமன்றத்தில் முறையிட்டார். பட்டினிப்போர் நடத்தமாட்டோம் என்றால் விடுவிக்கிறேன் என்ற நீதியரசரின் வேண்டுகோளை, வழக்கறிஞர் ஏற்றுக் கொண்டார். அதையொட்டி, அவர்கள் ஒன்பது போரையும், சொந்த பிணையில் நீதியரசர் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மொழிப்போர் தியாகிகள் நினைவாக ....

மொழிப்போர்  தியாகிகள்  நினைவாக ............
             மொழி உரிமை--மொழி அடையாளம்--தொடர்பியல் கருத்தரங்கு.
             ---------------------------------------------------------------------------------------------------------
  சென்னை பி.யு.சி.எல்., சென்னை பலகலைக்கழக தொடர்பியல் துறை மற்றும் அரசியல் துறையுடன் இணைந்து நடத்தும்  அரங்கம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
  நாள்: 24-01-2013. வியாழக்கிழமை. நேரம்: சரியாக 3 மணிக்கு.
  இடம்: சென்னை பலகலைக் கழகம் மெயின் கட்டிடம் எப்-50 தந்தை பெரியார் அரங்கம்.
       தலைமை : முனைவர்.ஆர். தாண்டவன். துணை வேந்தர், சென்னை பலகலைக் கழகம்
         வரவேற்பு: முனைவர்..ஜி ரவீந்திரன் துறைத் தலைவர், ஊடகம் மற்றும தொடர்பியல்.
              சிறப்புரை: முனைவர்.க ப  அறவாணன் மேனாள் துணை வேந்தர், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழக்கம்.
  முனைவர்.  வேதகிரிசண்முகசுந்தரம்,, மேனாள் துணை வேந்தர், நெல்லை மனோன்மணியம் பலகலைக்கழகம்.
                       எம். பூங்குன்றன், தென்மொழி அவையம்.
                       பேரா.மணிவண்ணன், துறை தலைவர், அரசியல் மற்றும் பொது நிர்வாகம்.
                      பேரா.திருமாவளவன்.மேனாள் முதல்வர், அம்பேத்கர் கலைக் கல்லூரி.
                      டி .எஸ்.எஸ்.மணி, .பி.யு.சி.எல்.-சென்னை-காஞ்சி-திருவள்ளூர் மாவட்டக் குழு.
                    பேரா.சி.ஜி.  ராசேந்திரபாபு ,மேனாள் துறை தலைவர், மலையாளம்.
                     பேரா.ஆர்.ராமலிங்கம், துறை தலைவர், தமிழ் துறை. சென்னை பலகலை.
                   
                        தெலுங்கு, கன்னடம், உருது  மொழி அறிஞர்களும் கலந்து கொள்வார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் சிவில் உரிமைக் கழகம் ---சென்னை--காஞ்சி--திருவள்ளூர் மாவட்டக் குழு.