Thursday, July 18, 2013

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் இன்று வெற்றியடையாமல் நிற்கும் நிலைக்கு "காரணம்" தேட வேண்டும் என்பது சரிதான்.

ராகவராஜ்  தங்கராஜ் அவர்கள் எழுதியிருக்கும் கூடங்குளம்  அணு உலை எதிர்ப்பு போராட்டம்  இன்று  வெற்றியடையாமல் நிற்கும் நிலைக்கு "காரணம்" தேட வேண்டும் என்பது சரிதான். 25 ஆண்டுகளாக நடந்த போராட்டம் அது. 1987,88,89,90 ஆண்டுகளில் தமிழ்நாடெங்கும் எல்லா மாவட்டங்களிலும்  தனித்தனியே ஆரம்பிக்கப்பட்ட அணு உலை எதிர்ப்பு அமைப்புகள், "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற பெயரில் இயங்கியது. பாண்டிச்சேரி,கேரளா மாநிலங்களையும் அனிச கூட்டமைப்பு உள்ளடக்கியது.வீரமணி தலைமையில் திராவிட கழகம்  தூத்துக்குடி மாவட்ட பா .ஜ ,க., தி.மு.க, மற்றும் எம்.எல்.இயக்கங்கங்கள் அவை தவிர "கட்சி சார்பற்ற மக்கள் இயக்கங்கள்" எல்லாமே இணைந்து அந்த கூட்டமைப்பு உருவானது. ஐகப்  அமைப்பின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது அந்த பரப்புரை மக்களிடையே "விழிப்புணர்வை" ஏற்படுத்தியது என்பதை யாரும் மறக்க முடியாது.மறுக்கவும் முடியாது.. குமாரதாஸ் தலைமையில் 101 பொது கூட்டங்கள் நாகர்கோவில் வட்டாரத்தில் விவாசாயிகள் மத்தியில் நடந்தது. அப்போதுதான் அதில் "அசுரன்" மாணவர் கால இளைஞாக அறிமுகம் ஆனார். கன்யாகுமரியில்  ஒரு லட்சம் மீனவர்கள் ஊர்வலத்தில், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பில் காவல்துறை அத்துமீறல். ஜூனியர் விகடன் மாணவ ஊடகவியலாளர் அருள் செழியனுக்கு காவலர் தடியடியில் காயம். நெல்லையிலும், தூத்துகுடியிலும் மாபெரும் ஊர்வலம்.. பல பத்தாயிரம் மக்கள் கலந்துகொண்டனர். டேவிட் தலைமையிலான "சமத்துவ சமுதாய இயக்கம்" பனைத் தொழிலாளர்களை அந்த ஊர்வாங்களுக்கு திரட்டி வந்தது. அய்யா வழி பால பிரஜாதிபதி அடிகளார் தலைமையில் லட்சம் மக்கள்  அணு உலை எதிர்ப்பில் கலந்து கொண்டனர். வைகோ நாடாளுமன்றத்தில் பேசியதை தினகரன் ஏடு முதல் பக்க செய்தியாக வெளியிட்டது. அந்த வராலற்று அனுபவங்கள் "படிப்பினைகளாக" ஏற்கப்பட்டதா? அடுத்த கட்ட போராட்டத்திற்கு அத்தகைய ஆய்வு அவசியம்தான். 

No comments:

Post a Comment