Thursday, July 25, 2013

முரசொலியில் இன்று ஏன் "தி.ஹிந்து" இதழ் பரி அய்யா புலம்புகிறார்?


      இன்று முரசொலி ஏட்டில், உ.பி.களுக்கு " கொடிகட்டி பறக்கும் குடிநீர் பிரச்சனை" என்ற தலைப்பில், தி.மு.க.தலைவர் கலைஞர் எட்டு கேள்விகளையும், அதற்கான பதில்களையும் எழுதியுள்ளார். வழக்கம் போல, "கேள்வியும் நானே,பதிலும் நானே" பகுதிதான் இது. அதில் எழுதியுள்ள எட்டு கேள்விகளில், ஐந்து கேள்விகளுக்கு, முதல் வரியில் ஒரே பதிலை கூறியுள்ளார். ஏன்  அப்படி கூறியுள்ளார்?  அவர்தான் சிறந்த அறிவாளி ஆயிற்றே? அவர்தான் சிறந்த அரசியல்வாதி ஆயிற்றே? அவருக்கு அப்படி என்ன ஆதங்கம்? அவருக்கு அப்படி என்ன மனக் குழப்பம்? அவர் ஏன்  நிலை குலைந்து போய் அப்படி எழுதுகிறார்? அப்படி என்னதான் அந்த ஐந்து கேள்விகளின் பதிலிலும் "ஒரே முதல் வரியை" எழுதினார்? 

                       அது என்ன முதல் வரி? அறிய ஆவலாக இருக்கிறதா? எட்டு கேள்விகளில், மூன்றாம் கேள்விக்கான  பதிலில், " கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ள "இந்து"விடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம்  கேட்கிறீர்கள்" என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசின் தலைமை செயலாளரை நேரில் வந்து நிற்கும்படி ஊறியது பற்றிய கேள்விக்கு விடை தருகிறார். அதேபோல 4,5,6,8 ஆகிய கேள்விகளுக்கு  எழுதிய பதிலில், " இதுவும் இந்துவிடம் கேட்கவேண்டிய கேள்விதான்"  என்றி கூறுகிறார். அந்த அளவுக்கு அவரை துன்புறுத்தி, நிலை குலைய செய்த "தி ஹிந்து" செய்திதான் என்ன? ஒன்றும் இல்லை அது இந்து ஏட்டின் செய்தியும் அல்ல. சி.என்.என்-ஐ.பி.என். மற்றும் இன்னொரு சமூக ஆய்வு நிறுவனம், ஆகியவற்றுடன் "தி ஹிந்து" ஆங்கில நாளேடும் சேர்ந்து வருகிற 2013 நாடாளுமன்ற தேர்தல் எப்படி இருக்கும் என்று ஒரு ஆய்வை  வாக்காளர்கள் மத்தியில் எடுத்து, வெளியிட்டு வருகிறார்கள்.  அதில் நேற்று, தமிழாண்டு பற்றிய ஆய்வு. அதில் .அ..தி.மு.க.அதிக  வாக்கு விழுக்கடுகளை, அதாவது 23% இலிருந்து 26%  க்கு கூடியுள்ளது என்று மட்டும் போட்டிருந்தால்கூட, தலைவருக்கு அவ்வளவு கோபம் வந்திருக்காது. அதிலும் அ.தி.மு.க.2009இல் இருந்த நிலையிலிருந்து,2013இல் 18-20 வரை தொகுதிகளில் வெற்றிபெறும் என்று போட்டதையும் தாண்டி திமுக பற்றி போட்டது அவரை துன்புறுத்திவிட்டது.அதனுடன்  தி.மு.க. "ஏழு விழுக்காடு" வாக்குகள் குறைந்துவிட்டது என்று போடப்பட்டதுதான் அவருக்கு கோபத்தை வரவழைத்துள்ளது.  அதிலும் 2009இல் பெற்ற 18 இடங்களில் இருந்து தி.முக. 8 முதல் 12 இடத்திற்கு குறையும் என்று போட்டது அதிக கோபத்தை ஏற்படுத்தி விட்டது.     

Wednesday, July 24, 2013

Albright report slams Lanka


Albright report slams Lanka

July 24, 2013
MadelineA report compiled by a committee chaired by former US Secretary of State Madeleine K. Albright has criticised the international reaction to Sri Lanka during the final stages of the conflict despite embracing the Responsibility to Protect (R2P) concept.
R2P focuses on preventing and halting genocide, war crimes, crimes against humanity and ethnic cleansing.
Released by the United States Holocaust Memorial Museum, United States Institute of Peace, and Brookings Institution, the report said that tens of thousands of Tamil civilians died at the end of the Sri Lankan civil war with little international outcry or effective UN response.
Former U.S. secretary of state Madeleine Albright and former presidential special envoy to Sudan Richard Williamson co-chaired the working group which compiled the report.
On Sri Lanka, the report says for over twenty-five years, the conflict in Sri Lanka pitted the army against the separatist insurgency of the Liberation Tigers of Tamil Eelam (LTTE). However, levels of violence escalated rapidly as the government pursued a strategy of military victory and advanced into LTTE-held territory between January and May 2009.
During this period, the civilian population suffered significant casualties and were unable to escape the conflict zone due to LTTE threats and the Sri Lankan military’s prohibitions on movement.
The United Nations estimates that up to forty thousand civilians were killed and hundreds of thousands were displaced during the final phase of the conflict, which ended with the defeat of the LTTE and the deaths of its senior leaders.
“Despite the high number of civilian casualties, the international community did little beyond issuing statements of concern. The UN Security Council, High Commission on Human Rights, and General Assembly held no formal sessions on Sri Lanka during this period. In Sri Lanka, both the government and the rebels can be faulted for failing to protect civilians. However, the international community also neglected its responsibility to take timely action when it was apparent that violations of humanitarian law were taking place,” the report said.
It goes on to say that the case of Sri Lanka exemplifies a challenge for implementing R2P when sovereign governments confront an internal threat from a group that is designated as a terrorist organization.
“Since the end of the conflict, the government has steadfastly denied that the mass killing of civilians and war crimes took place. While launching its own inquiry into the military’s actions, the government has obstructed international efforts to investigate potential war crimes and crimes against humanity. Critics question the independence and balance of the government commission’s report and argue that accountability requires a more credible investigation. If a recurrence of conflict in Sri Lanka is to be prevented, the international community should help the government respond to the needs of all communities in the country, while undertaking a national reconciliation process that addresses wounds inflicted during nearly three decades of conflict,” the report said. (Colombo Gazette)

தமிழண்ணல் கட்டுரைக்கு சுப.வீ.. முரசொலியில் பதில்? சுப.வீ.யிட்ம் கேள்விகள்?


     இன்று முரசொலியில்,   ஒன்பதாம் பக்கம் "  தமிழறிஞர்களின் அடக்கமும் ஆர்ப்பரிப்பும்" என்ற சுப.வீரபாண்டியன் அவர்களின் கட்டுரை வெளிவந்துள்ளது. அதில் "தினமணி"யில் தமிழண்ணல் 20-07-2013இல் " மொழிக் கொள்கையில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் " என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரைக்கு பதில் எழுதியுள்ளார். சு.ப.வீ.அவர்கள் குறிப்பிட்டுள்ள பல செய்திகள், மேற்கோள் காட்டி தமிழண்ண்லிடம்  கேட்கும் பல கேள்விகள் எனக்கு நான் தமிழண்ணலின் கட்டுரையை படிக்கவில்லையே என்ற வருத்தத்தை ஏற்படுத்தினாலும், நான் நேரில் கண்ட சில காட்சிகளும் எழுதப்பட்டிருப்பதால், அதையாவது நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

           சுப.வீ.எழுதுகிறார்," 2006 இல் ஆட்சிக்கு வந்தவுடன், தமிழ்நாட்டு பள்ளிகள் அனைத்திலும் ஐந்தாம் வகுப்புவரை தமிழ்மொழி கட்டாயப்பாடம் என்று கலைஞர் அரசு 
அறிவித்ததே அதனை எங்கேனும் தன கட்டுரையில் பேராசிரியர் குறிப்பிட்டிருக்க வேண்டாமா? அரசு பொறுப்பு ஏற்றவுடன் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அரசு ஆணையே அதுதான் என்கிறார் அன்றைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு".இந்த செய்தியில்தான் என்னைக்குத் தெரிந்த விவரங்களையும் எழுத எண்ணுகிறேன். 2006 இல் கலைஞர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் "தானாக" முன்வந்து அப்படி ஒரு ஆணையை வெளியிட்டாரா? 
தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பாக "நூறு தமிழ் அறிஞர்களின் பட்டினிப் போர்" ஒன்று வள்ளுவர் கோட்டத்தில் அய்யா ஆனா.ரூனா.வால்  ஏற்பாடு செய்யப்பட்டதே? அதன் கோரிக்கைதானே "குறைந்தபட்சம் ஐந்தாவது வகுப்புவரை தமிழ் மொழிப் பாடம்" வேண்டும் என்பது. அந்த போராட்டத்திற்கு தலைமை தாங்க ஏற்பாடாகியிருந்த " சிலம்பொலி செல்லப்பன்" திடீரென தனது வருகையை ரத்து செய்துவிட்டார். ஆனால் கவிஞர் இளவேனிலோ சிலம்பொலி செல்லப்பன் தலைமை என்று போட்டு, புரட்சிகர துண்டறிககை விநியோகம் செய்துவிட்டார்.உடனடியாக் தமிழண்ணல் தான் அந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். இஅரண்டு நாள், தமிழறிஞர்களின் பட்டினிப் போர் தொடர, கலைஞர் அரசோ, செவி சாய்க்கவில்லை. நெடுமாறன் கலந்துகொண்டு ஆதரவு தந்தார். இளைஞர்கள் துடித்தனர். உளவு துறை செய்திகளை அனுப்பிக் கொண்டே இருந்தது. பி.வி.பக்தவச்சலம் வந்தார். அவர் மூலம் மருத்துவர் கிருஷ்ணசாமியின் ஆதரவையும் தொலைபேசி மூலம் பெற முடிந்தது. பல தமிழ் அறிஞர்கள் ஆவேசமாக பங்கு கொண்டனர். கடைசியாக அரசு பணிந்தது.

       ஆகவே கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் "தானாக" தமிழுக்கு இறங்கவில்லை.ஒரு போராட்டம்தான் இறக்கியது. இதுவரைதான் எனக்கு தெரியும். ஆனால் நண்பர் அரணமுறுவல் மேலும் பல செய்திகளை இன்று கூறினார். கலைஞர் அரசின் ஆணை வெளிவந்தவுடன், "தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகளின் சங்கம்" அரசு ஆணைக்கு எதிராக நீதிமன்றம் சென்றது.அதுவும்கூட அரசின் கல்வி இயக்ககம் ஏற்பாடு என்று ஒரு கருத்து உண்டு. கலைஞர் அரசு மோகன் குழு ஆலோசனையை கேட்டது. அந்த ஆலோசனையும் தமிழுக்கு சாதகமாகவே இருந்தது. உயர்நீதிமனர்மும் தமிழுக்கு சாதகமாகவே தீர்ப்பு கூறியது. மேல்முறையீடு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சம் நமது தலையின் உச்சத்தில் "தட்டி அமரச்செய்து" விட்டது.அதற்கு கலைஞர் அரசான தமிழ்நாடு அரசு மேல்முறையீடு "செல்லவில்லையே?" என்று நம்மிடம் அரணமுறுவல் கேள்வி கேட்கிறார். இதை தமிழுக்கு செய்த "பச்சை துரோகம்" என்று எடுத்துக் கொள்ளலாமா? ஜெயலலிதா அரசு தமிழ் மீது ஆகாரை கட்டவில்லை என்றால் நமக்கு அது அதிர்ச்சியாக இருப்பதில்லை ஜெயலலிதாவிற்கு தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை , அதன் பயிற்றுமொழி தேவையை விளங்கிக் கொள்ள முடியுமா? என்பது இன்னமும் நமக்கு தெரியவில்லை. எல்லாமே இந்த அரசில் "இரும்பு திரித்தானே?" ஆனால் கலைஞர் எப்போதும், தமிழ் மொழியின் முக்கியத்துவம் பற்றி பேசுவதால் எழுதுவதால், நடக்கும் நாடகங்கள் "தெரிந்தே" செய்யப்படுகிறதோ? என்ற கேள்வி எழுகிறது. 

அய்யய்யோ, அய்யய்யோ, கடற்கரை காணமல் போகுதே ?


      கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம். ஆகா. எத்தனை அழகான திட்டம். வெங்காயம். எவனயா சொன்னான் அழகான திட்டம்னு?  ஆமாம்.மாநிலமெங்கும் "தண்ணீர்" கிடைக்காதபோது, அது அழகான திட்டம்தானே? யோவ். கடல்னா என்னனு தெரியுமா? கடல் நீர்னா  என்னனு புரியுமா? அதுல இருக்கற உப்பு எப்படிப்பட்டதுணி அறியுமா? அதிலிருந்து "உப்பை நீக்கி குடிநீர்" ஆக்கினா,என்னாகும்னு விளங்குமா? இப்போ "சூளேரி காட்டுகுப்பதுல" ஒரு டிசேலிநேசன் பிளான்ட் இருக்கே? கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நால்லாதானே போய்க்கிட்டு இருக்கு? எவனய்யா சொன்னான்?  முதல்ல மீனவர் சங்கதுகாரங்க, "இது ஆபத்தான திட்டம்னு" சொல்லியும் அந்த ஊர் சனம் கேக்கல்ல.இப்போ அடிச்சிக்கிறாங்க,வயித்துல?  ஏன்? கடலுக்கு மீன் பிடிக்க போன ஒரு மீனவர் இந்த திட்டத்திற்காக கட்டிய "கடலுக்குள் சுவர்" என்பதில் படகு மோதி இறந்தார்.கடல் நீர் ஊருக்குள் வரத்தொடங்கி, ஊரையே :காலி" செய்யும் நிலைமை வந்துவிட்டது. 

                   கடல் நீரை எடுக்கும் "குழாயில்" சிறிய மணல்களும் உள்ளே நுழைந்து, அந்த "ஆலை" பழுதாகி, ஒரு குழாயில் உற்பத்தி பாதிப்பு. அதன்மூலம் கொட்டிவாக்கம் வரை குடிநீர் கொடுத்துவந்த "சென்னை குடிநீர் வாரியம்" ஒரு வாரத்திற்கு மேல் குடிநீர் கொடுக்க முடியவில்லை. அத்தகைய "குடிநீரும்" எப்படி இருக்கும்? மயிலாப்பூர் நொச்சி குப்பத்தில் ஒரு "டிசெலினெசன் பிளான்ட்" "டீம்" என்ற அரசு நிறுவனம் பெயரில் பல ஆண்டுகளாக இருக்கிறது. அதில் முதல் நாள் தண்ணீர் சுவையாக இருக்கும் அய்யா.மூன்றாம் நாள் "புழு நெளியும்" அய்யா. என்கிறார்கள். இதிதான் அனுபவம் என்றால், ஏன் இந்த அதிகாரிகள் இப்படி "தவறான திட்டத்தை" ஆலோசனை கூறி அரசை அசிங்கப் படுத்துகிறார்கள்? அவர்கள் என்ன சொல்கிறார்கள்? துபாயில் இந்த திட்டம் இருக்கிறதே? என்கிறார்கள். அய்யா, அங்கே நிலத்தின் அடியில் நீர் எடுக்க முடியாது. பாலைவனம். நம்ம ஊர்ல "ஒழுங்கா ஏரி, குளம்",என்று மூதாதையர்களால் தோண்டப்பட்டவற்றை  "பராமரித்தாலே" போதுமே?   அதுல போய் "பிளாட் போட்டு விக்கறீங்க". ஏறி,குளம், தூர் வாரி ஆழப்படுத்த "அரசுக்கும், அதிகாரிகளுக்கும் துப்பில்லை". கடல்ல போய்  ஓங்க விளையாட்டை காட்டறீங்க. அது திருப்பி அடிக்குது. 

             நீங்க எடுக்கற கடல் உப்பின் "கழிவு உப்பை" கடலிலேயே கொட்டறீங்களே? அது "மீன் வளத்தை" அடர்த்தியான உப்பு காரணமாக ஆழிக்காதா? என்ன மூளை அய்யா உங்களுக்கு? கடலை பற்றி ஒன்னும் விளங்கலைனா, மீனவரகளை  கூப்பிட்டு கேளுங்கய்யா?  உங்க "நிலம் சார்ந்த உலக சிந்தனையை" கடல் வாழ் பழங்குடிகளான மீனவர்கள் மீது ஏன் "திணிக்கிறீங்க?" கடற்கரை முழுக்க இப்போ "சூளேரி காட்டு  குப்பத்தில்" அரிக்கப்பட்டு விட்டதே? அதை ஈடுகட்ட "பாரங்கல்களை" போடும் அதிகாரிகளே, உங்கள் மூலையில் இருப்பது "பாரங்கல்களா?" துபாயில் மட்டும் எப்படி இந்த திட்டம் வெற்றி அடிக்கிறது? என்று கேட்கிறீர்களே? அங்க "கரையோர மீன்பிடி தொழில்"நம்ம ஊரைப் போல கிடையாது. அங்க "ஆழ்கடல் மீன்பிடி" மட்டும்தான். அதனால் நீங்க கரையோரம் "பாரங்கல்லை" போட்டாலும், போடாவிட்டாலும், அது மீன் பிடி தொழிலை ஒன்றும் செய்யாது. இந்த லட்சணத்தில், தமிழக அரசு, தமிழக கடற்கரையோரம் "நூறு டிசேலிநேசன் பிளான்ட்" கொண்டுவர திட்டமிடுகிறதாம்.அது எப்படி இருக்கு? 

               துபாயில் ஒவ்வொரு கடலோர ஊருக்கும் இடையில் நூற்றுக் கணக்கான மைல் தூரம் இருக்கு. தமிழக கடற்கரை மொத்தம் இருக்கற "ஆயிரம் கிலோமீட்டரில்" பத்து கோழி மீட்டருக்கு ஒரு மீனவர் கிராமம் இருக்கு. அந்த கடலோர கிராமங்கள் என்னாகும்? இதற்க்கு பெயர் "மீனவர் நண்பர் ஆட்சியா?" மீனவர் விர்தோத அடசியா? நிலம்சார்ந்த உலங்கின் அரசியல்வாதிகளே,அதிகாரிகளே, ஆட்சியாளர்களே, நீங்கள் இனி "கடல்சார்ந்த உலகின் " மீனவ மக்களையோ, அவர்களின் கடற்கரையையோ, கடலையோ" தொட்டு அழிக்க முற்பட்டால், இங்கொரு "சோமாலியா" உருவாவதை தஹ்டுக்க முடியாது? சோமாலியாவின் கடல்சார் மீனவ மக்களை ஏகாதிபத்தியம் அழித்ததால்தான் அவர்கள் இன்று," கடல் கொல்லைகாரகளாக" உருவாக்கி உங்களது உலகத்திற்கே சிம்ம சொப்பனமாக மாறி இருக்கிறார்கள். நினைவில் வைத்து கொள்ளுங்கள். இங்கும் அப்படி ஒரு ன் இலையை அரசு தோற்றுவிக்கத்தான்,"சூளேரி காட்டு குப்பங்கள்" உருவாக்க விரும்புகிறதா? 

Thursday, July 18, 2013

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் இன்று வெற்றியடையாமல் நிற்கும் நிலைக்கு "காரணம்" தேட வேண்டும் என்பது சரிதான்.

ராகவராஜ்  தங்கராஜ் அவர்கள் எழுதியிருக்கும் கூடங்குளம்  அணு உலை எதிர்ப்பு போராட்டம்  இன்று  வெற்றியடையாமல் நிற்கும் நிலைக்கு "காரணம்" தேட வேண்டும் என்பது சரிதான். 25 ஆண்டுகளாக நடந்த போராட்டம் அது. 1987,88,89,90 ஆண்டுகளில் தமிழ்நாடெங்கும் எல்லா மாவட்டங்களிலும்  தனித்தனியே ஆரம்பிக்கப்பட்ட அணு உலை எதிர்ப்பு அமைப்புகள், "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற பெயரில் இயங்கியது. பாண்டிச்சேரி,கேரளா மாநிலங்களையும் அனிச கூட்டமைப்பு உள்ளடக்கியது.வீரமணி தலைமையில் திராவிட கழகம்  தூத்துக்குடி மாவட்ட பா .ஜ ,க., தி.மு.க, மற்றும் எம்.எல்.இயக்கங்கங்கள் அவை தவிர "கட்சி சார்பற்ற மக்கள் இயக்கங்கள்" எல்லாமே இணைந்து அந்த கூட்டமைப்பு உருவானது. ஐகப்  அமைப்பின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது அந்த பரப்புரை மக்களிடையே "விழிப்புணர்வை" ஏற்படுத்தியது என்பதை யாரும் மறக்க முடியாது.மறுக்கவும் முடியாது.. குமாரதாஸ் தலைமையில் 101 பொது கூட்டங்கள் நாகர்கோவில் வட்டாரத்தில் விவாசாயிகள் மத்தியில் நடந்தது. அப்போதுதான் அதில் "அசுரன்" மாணவர் கால இளைஞாக அறிமுகம் ஆனார். கன்யாகுமரியில்  ஒரு லட்சம் மீனவர்கள் ஊர்வலத்தில், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பில் காவல்துறை அத்துமீறல். ஜூனியர் விகடன் மாணவ ஊடகவியலாளர் அருள் செழியனுக்கு காவலர் தடியடியில் காயம். நெல்லையிலும், தூத்துகுடியிலும் மாபெரும் ஊர்வலம்.. பல பத்தாயிரம் மக்கள் கலந்துகொண்டனர். டேவிட் தலைமையிலான "சமத்துவ சமுதாய இயக்கம்" பனைத் தொழிலாளர்களை அந்த ஊர்வாங்களுக்கு திரட்டி வந்தது. அய்யா வழி பால பிரஜாதிபதி அடிகளார் தலைமையில் லட்சம் மக்கள்  அணு உலை எதிர்ப்பில் கலந்து கொண்டனர். வைகோ நாடாளுமன்றத்தில் பேசியதை தினகரன் ஏடு முதல் பக்க செய்தியாக வெளியிட்டது. அந்த வராலற்று அனுபவங்கள் "படிப்பினைகளாக" ஏற்கப்பட்டதா? அடுத்த கட்ட போராட்டத்திற்கு அத்தகைய ஆய்வு அவசியம்தான். 

கூடங்குளம் அணுமின்னுற்பத்தி தொடங்கிவிட்டதாமே !



கூடங்குளம் அணுமின்னுற்பத்தி தொடங்கிவிட்டதாமே ! என்னதான் நேர்ந்தது கூடங்குளம் பகுதி மக்களின் அணுவுலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு ? இப்போது கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டம் சுமார் 2 ஆண்டு காலம் நடந்தது. அது தோல்வியடைந்து விட்டதா....எப்படி ? இந்திய அரசின் ஜனநாயக விரோத,மக்கள் விரோத தன்மை மட்டும் தான் உண்மையில் காரணமா ? துல்லியமாகப் பார்த்தால் கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டம் சுமார் 25 ஆண்டு காலமாக நடந்துவருகிறது ! அதுவும் தமிழகம் முழுக்கவும் நடந்தது.எனக்குத் தெரிந்து காஞ்சிபுரத்தில் கூட ”இந்திய மக்கள் முன்னணி” யும் வேறு சில அமைப்புகளும் இணைந்து கூடங்குளம் அணுவுலைக்கு எதிராக சைக்கிள் பரப்புரைப் பயணம் நடத்தினர். இத்தகைய போராட்டம் தோல்வியடைந்து விட்டது போராடிய மக்களுக்கும் அமைப்புகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஒருவகையில் தோல்வி தான். இவ்வாறு தோல்வி என்று கூறலாமா ? வேறு வழியில்லை,அதுதான் யதார்த்தம் ! ஆனால் போராடியவர்கள் அத்துடன் சோர்ந்து போய்விட வேண்டியதில்லை.இந்தத் தோல்விக்கான காரணங்களைத் தேட வேண்டும். இப்போதைய 2 ஆண்டுக்கால போராட்டம் ஒரு சிற்றூருக்குள்ளேயே சுருங்கி விட்டது ஒரு காரணமா ? 25 ஆண்டுகளுக்கு முன்னால் போராடியவர்கள் எங்கே போனார்கள் ? அவர்கள் யாருமே இப்போது கூடங்குளத்தில் களத்தில் இல்லையே....ஏன் ? 25 ஆண்டு காலப் போராட்டத்தை வெறும் 2 ஆண்டு கால போராட்டம் தான் என்று மக்கள் நினைப்பதற்கும் எதிரிகள் குறைகூறுவதற்கும் என்ன காரணம் ? இது 25 ஆண்டு கால போராட்டம் என்பது எந்த ஊடகத்திற்கும் எப்படி தெரியாமல் போனது ?....... மர்மம் தான் ! தொடக்கத்தில் போராடிய சக்திகளும் இணைந்திருந்து, தமிழகம் முழுக்கவும் இன்னும் வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டு நடத்தப்பட்டிருக்குமானால் வெற்றி பெற்றிருக்கலாமோ ?

Wednesday, July 17, 2013

முஸ்லிம் முதல்வரின் இந்து காவல் அதிகாரி ஆய்வு, மும்பையை திணறடிக்கிறது.


       இந்த மாத தொடக்கத்தில் அந்த முஸ்லிம் தொழில் அதிபர், ஜம்மு-காஷ்மீரிலிருந்து,மும்பை வருகிறார். நண்பருடன் சென்று,நான்கு சக்கர வாகன நிறுத்தத்தில், இரங்கி சிகரெட் வாங்க செல்கிறார். ஜூலை 6, ஜூலை 7 ஆளை காணவில்லை. புகார் கொடுத்தால், மும்பை காவல்துறை மதிக்கவே இல்லை முதல் தகவல் அறிக்கை கூட போடவில்லை. ஜூலை 8, அவரது சகோதரர் வந்து செல்வாக்குள்ளவர்களை வைத்ஹ்டு, முதல் தகவல் அறிக்கையை போடா வைத்தனர். ஜூலை 9  இல்,ரயிவே பாதியாய் கடக்கும்போது, இறந்ததாக உடலை கண்டுபிடித்து காவல்துறை கூறியது. சகோதரர் "உடலெல்லாம் உள்ள சித்திரவதை காயங்களை" காட்டுகிறார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள "சுயாட்சி பேசும் சிறிய காட்சிகளில்" தொடக்கி பெரிய கட்சிகள் வரை இதை கண்டிக்கிறார்கள்  முதல்வர் ஓமர் அப்துல்லா, ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளரை அனுப்புகிறார். பாண்டே என்ற அந்த அதிகாரி ஒரு "உண்மையறியும் குழு"வுடன் மும்பை  வந்து விசாரிக்கிறார். எப்படி இருக்கு இந்திய ஒற்றுமை?  

Tuesday, July 16, 2013

இளவல் பாஸ்கர் இறந்துவிட்டான்.......

இளவல் பாஸ்கர் இறந்துவிட்டான்.......
     எங்கள்  தோழர் இளவல் பாஸ்கர் நேற்றைக்கு முந்திய நாள்,மண்டபம் அருகே வாகன விபத்தில், ஓட்டுனராக பயணம் செய்யும்போது, இறந்துவிட்டான். அவனது உடலை இப்போதுதான், இன்றுதான் கல்பாக்கம் அருகே உள்ள "பழைய நடுக் குப்பம்" இடுகாட்டில் மீனவ சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் நண்பர்கள் உடன் இணைந்து "அஞ்சலி கூட்டம் நடத்தி எரித்துவிட்டார்கள்  அதில் கலந்துகொண்டு திரும்பி வந்துள்ளேன்.இந்த பாஸ்கரை "முக நூல்" வாசகர்களுக்கு தெரியாது. அவனுக்கும் முக நூல்  வாசகர்களை தெரியாது. அவன் ஓடி ஓடி வேலை செய்யும் மீனவ்   சமூகத்தின் ஒரு போராளி. ஒரு அடிமட்ட செயற்பாட்டாளன் அவன் இல்லாமல், காஞ்சி மாவட்ட மக்கள் மன்றம் நெருக்கடிகளை கடக்க வில்லை என்று மக்கள் மன்றம் மகேஷ் நினைவு கூறுகிறார். அவன் இல்லாமல் மீனவ சமூக அணிதிரட்டல்களில் பணிகள் நடக்க வில்லை என்று மீனவ சங்க தலைவர் கபடி மாறன் ஆதங்கப்படுகிறார். 

        பாரதியும், மாறனும், பாபு வும் மற்றவர்களும் நடத்திய "மீனவ மாணவர்களுக்கான தேர்வு மதிப்பெண்கள் பெற்றவருக்கு, பரிசுகள் வழங்கும் விழாவில் பாஸ்கர் சூர்,சுறுப்பாக இயங்கினான்.  கன்சி மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க தலைவர் சதீஸ் நடத்திய மீனவ மாணவர்களுக்கான  " அடுத்த கட்ட படிப்பை தேர்வு செய்யும் கலந்துரையாடலில்" பாஸ்கர் வேகமாக இயங்கினான். அதை மீன் வள துறை உதவி இயக்குனர் ஜூலியஸ் உட்பட பாராட்டினார்கள். பேரா.சிவகுமார்,பேரா.திருமாவளவன், உட்பட அனைவரும் பார்த்தார்கள். அதை கண்டு "தம்பி" பெரும் பார்ரட்டுகளில் உள்ளம் பூரிந்த்தேன். அந்த பாஸ்கர் இப்போது இல்லை. 

                  கல்பாக்கம் அருகே கடலில் இருக்கும் "எரிமலையை கண்டோம் என்று  அதன்  பாதிப்பை கண்ட மீனவ  மக்களை பற்றி "த.மு.முக.வின் செயலாளர் அப்துல் சமது"என்னிடம் கூறிய பொது ஒரு திருமணத்தில் அந்த வட்டாரத்தை சேர்ந்த பாஸ்கரிடம் நான் கத்திய உடனேயே, பகுஷிமா நினைவு நாளில், அங்கேயே ஒரு பத்து மீனவ கிராம மக்களை திரட்டி, கூட்டம் நடத்தினானே அதை அடக்க நிகழ்ச்சியில், அப்துல் சமது நினைவு கூறினார்  அன்று, "கூத்தவக்கம், கல்பாக்கம், மாமல்லபுரம் காவல் நிலையங்கள் அந்த கூட்டம் நடத்த விடாமல்" செய்த வேலைகளை பாஸ்கர் எப்படி முறியடித்தான் என்று நான் நினவு கூறினேன். காவல் துரையின், உளவுத்துறையின் மிரட்டல், பாஸ்கரிடம் அன்று பலிக்கவில்லை. நான் வருவது அந்த உளவு அதிகாரிகளை தலையிட வைத்தாலும், பாஸ்கர் ஊர்தியாக  நின்றான் "எள் என்றால் எண்ணை " என்று நிற்பானே என நான் பெருமை பட்டுக் கொண்டேன். எத்தனை பிரபலங்கள், இன்று அந்த மீனவ கிராமத்திற்கு இறுதி  அஞ்சலி செலுத்த வந்தார்கள்? ஒரு கடலோர மெனிவா கிராமத்திற்கு பதினைந்து நன்கு சக்கர வாகனங்கள் வந்ததை மக்கள் பேசிக் கொண்டார்கள் பாஸ்கர் அந்த அளவுக்கு காசிமேட்டிலும் மரக்காணம் பகுதியிலும்  பிரபலமான தோழன். நானா நிறைய எழுதவேண்டும் அவனை பற்றி. ...  .

Sunday, July 14, 2013

நாடாளுமன்ற தாக்குதல், 26/11 மும்பை தாக்குதல் இரண்டையும் செய்தது இந்திய அரசு?

நாடாளுமன்ற தாக்குதல், 26/11 மும்பை தாக்குதல் இரண்டையும் செய்தது இந்திய அரசு?
    இன்று காலை "டைம்ஸ் ஆப் இந்தியா " முதல் பக்க செய்தி. முன்னாள் உள்துறை அண்டர் செகரட்ரி ஆர்.வி.எஸ்.மணி இந்த தகவலை கூறினார். அவரிடம் சமீபகாலம் வரை சோ.பி.ஐ.யின் "சிறப்பு புலனாய்வு குழு"வில் இருந்த சதீஸ் வர்மா இத்தகைய செய்தியை கூறியதாக தெரிவித்துள்ளார். 13-12-2001 இல் நாடாளுமன்ற கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நடத்தியது நடுவண் அரசுதான் என்று அதில் தெரிவித்துள்ளார். வாஜ்பாயி ஆட்சியில் அந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்கியவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் சில ராணுவத்தினரும் பலி கொடுக்கப்பட்டனர். உள்ளே "தாக்குதல்காரர்கள்" வரும்போதே, ராணுவ ஜீப்பில் எப்படி வந்தனர்? எப்படி அவர்களை உள்ளே பாதுகாவலர்கள் விட்டனர்? ஜீப்பில் "இந்திய எதிர்ப்பு வாசகங்கள்" எப்படி பகிரங்கமாக எழுதப்பட்டிருந்தன? சாட்சிகள் இல்லாமல் அனைவரும் ஏன்  கொல்லப்பட்டனர்? அவர்கள் "திட்டமிட்ட பயங்கரவாதிகள்" என்றால் எப்படி "கைபேசியை" விட்டு சென்றனர்? அதை வைத்து பிடித்தாக அறிவித்த பேராசிரியர் கிலானியை நீதிமன்றம் விடுதலை செய்ததே? அதே பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்ட "அப்சல் குருவை" மட்டும் ஏன்  விடவில்லை? அப்சல் குரூ "ஜம்மு-காஷ்மீர் விடதலை முன்னாணியை" விட்டு வெளியே வந்து, சி.ஆர்.பி.எப். முகாமின் பொறுப்பில்தானே இருந்தார்? அந்த ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியும் இப்போது, ஆயுதப் போராட்டம் செய்யவில்லையே? அரசியல் போராட்டத்திற்கு "யாசின் மாலிக்" தலைமையில் வந்துவிட்டார்களே?  அப்சல்குரு தனது நேர்காணலில், "தன்னை சி.ஆர்.பி.எப்.முகாமின் தலைவர் டில்லி போகப் பணித்தார் என்று கூறியுள்ளாரே?  அவருக்கு சம்பந்தப் படாத  ஆட்களை பார்க்க கூறினார் என்றும் கூறினாரே? அவரை அந்நியாயமாக  "மரண தண்டனை" கொடுத்து கொன்று விட்டீர்களே?  அந்நியாயமாக தேசப்பற்றுடன் ராணுவத்தில் சேர்ந்த வீரர்களையும் உங்கள் அரசியல் விளையாட்டிற்காக கொன்று விட்டீர்களே? இப்பது அதிகாரிகளுக்குள் வந்துள்ள முரண்பாட்டில், உண்மையை கூறுகிறீர்களே? அதுவும், "போடா " என்ற கொடும் சட்டம் கொண்டுவர "பயங்கரவாத சூழலை" ஏற்படுத்த இப்படி செய்தார்கள் என்று அரசின் உண்மை தோற்றத்தை கூறுகிறீர்களே?  நான்கள் இதைத்தானே ஊடகம் மூலம் "பத்து ஆண்டுகளாக" கூறிவருகிறோம்? எங்களை " இறையாண்மைக்கு"எதிரா பேசுவதாக சிலர் முனு, முனுத்தீர்களே? இப்போது "பொடா" சட்டம் கொடுவருவதர்காக செய்த "சதி" என்பது அம்பலம் ஆகிறதே?

           அடுத்து, 26/11 மும்பை தாக்குதல். 2008இல் அது நடந்தது. ஐந்து ஆண்டுகளாக அந்த தாக்குதல்  "நாடவன் அரசும், அமெரிக்க உளவு துறையும்" சேர்ந்து திட்டமிட்டு செய்தது என்று கூறிவந்தோமே? ஊடகங்களில் இப்படி கூறலாமா? என்று சிலர் கூச்சலிட்டார்களே? முழுமை பார்வை விளங்காதவர்கள் எல்லாம் எங்களை விமர்சனம் செய்தார்களே?  "கசாப்" நேபாளத்தில் காத்மாண்டில் பிடிபட்டு, இந்திய உளவு துறை பொறுப்பில் பயிற்சி கொடுக்கப்பட்டப்வன் என்ற செய்தியை கூறிவந்தோ மே ? சி.ஐ.ஏ .கூட அந்த தாக்குதலை திட்டமிட்டதிளுண்டு என்பதை, ஹெட்லீ அமெரிக்க உளவு துறையால் அனுப்பப்பட்டவர் என்று தெரியும் போதே  கூறினோமே?  அமெரிக்காவுடன் "பாதுகாப்பு ஒப்பந்தம்" செய்துகொள்ள  இந்த "தாக்குதல்" திட்டமிடப்பட்டதாகா நாங்கள் கூறிணோமே? அப்போது செவி மடுக்காததுபோல இருந்தீர்களே? ஹெட்லியை பிடிக்கவோ,விசாரிக்கவோ, கைதி பரிமாற்றம் செய்யவோ, அமெர்க்காவுடன் உங்களால் முடியவில்லையே? உங்கள் வேண்டுகோள்படி, அமெரிக்க உங்களுக்கு உதவி செய்து, மும்பை தாக்குதலை நடத்தி இருக்கும்போது, எந்த முகத்தோடு நீங்கள் அமெரிக்காவிடம் கேட்க முடியும்? அமெரிக்க ஆலோசனையை ஏற்று, "யு.ஏ பி.ஏ " என்ற "சட்ட விரோத கூட்ட தடுப்பு சட்டம்" என்பதை கொண்டுவரத்தான் அந்த மும்பை தாக்குதல் நடத்தப்பட்டது என்று இப்போது, சதீஸ் வர்மா கூறியதை, ஆர்.வி.எஸ்.மணி போட்டு உஅடித்து விட்டாரே? மும்பையில் கொலை செய்யப்பட்டவர்கள் எல்லாம்  "உங்கள் திருவிளையாடலுக்கு" பலியானவர்கள்தானே? அதில் மீதம் இருந்த சாட்சி என்பதால்தானே அவசர,அவசரமாக  "கசாப்" கொலை செய்யபட்டான்? நாங்கள் இதுபற்றிய உண்மைகளை கூறும்போது, எதோ "தேச துரோகம்" என்பது போல பார்த்தீர்களே? இப்போது தெரிகிறதா? யார் தேசத் துரோகிகள் என்பது?

                  2005 ஜூன் மாதம் இஷ்ரத் அந்நியாயமாக "போலி துப்பாக்கி சண்டையில்" கொல்லப்பட்டதை அம்பலப்படுத்திய சி.பி.ஐ., உள்துறை கொடுத்த செய்தியான "லஷ்கர் தொடர்பில் இஷ்ராத்" இருந்தார் என்ற தவறான செய்தியை கொடுத்து என்று, "சி.பி.ஐ.யை கையில் வைத்துள்ள சோனியா அணியினர், அமெரிக்க ஆதரவுடன் உள்துறையை செல்வாக்கு செலுத்திய மன்மோகன் சிங்  குழு மீது, பாய்வதற்கு போட்ட "திட்டத்தால்", அந்த நேரத்தில் உள்துறையில்  அப்படிப்பட்ட ஆவணத்தில், கையெழுத்திட்ட ஆர்.வி.எஸ்.மணி  கோப்பப்பட்டு, இந்த உண்மையை போட்டு உடைத்து விட்டார். இப்போது  நடுவன் அரசின் "நகர்ப்புற வளர்ச்சி அமைச்சக" உதவி நில வளர்ச்சி அதிகாரியாக ஆர்.வி.எஸ்.மணி பணியாற்றி வருகிறார். குஜராத் வழி அதிகாரியாக வந்த சதீஸ் வர்மா,இப்போது, சுன்னாகத் காவல் பயிற்சி கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார். ஆர்.வி.எஸ்.மணி தனது அமைச்சக "அண்டர் செக்ரட்டரிக்கு" எழுதிய கடிதத்தில், இஷ்ராத் சம்பந்தமாக இரண்டு ஆசி.பி. அதிகாரிகள்தான் எழுதினார்கள் என்று "எழுத்துபூர்வமாக" கொடுக்க சொன்னார் என்றும்,தான் மறுத்து விட்டதாகவும், குற்றம் சாட்டியுள்ளார்  இந்த அரசியல்வாதிகளின்,"சதிகள்" எத்தனை மக்களை கொல்கிறது பார்த்தீர்களா?  ஆர்களுக்குள் வரும் "மோதல்" எத்தனை உண்மைகளை போட்டு உடைக்கிறது பார்த்தீர்களா? 

குட்ரோச்சி மரணம் சோனியா தலை தப்பியது?


     அப்பாடா. அன்னை சோனியாவை இனி யாரும் "போபார்ஸ் பீரங்கி ஊழலை" காட்டி மிரட்ட முடியாது. ஒரே சாட்சியான இத்தாலி மாபியா ஆயுத வணிகர் "கொற்றோச்சியும்" காலி. இனி எந்தப் பய  "சாட்சி" சொல்ல வருவான்? 20014 தேர்தலில் இனி எதிர்கட்சிகள் போபார்ஸ் பற்றி பேச முடியாது. 2ஜி, விண்வெளி ஆராய்ச்சி, நிலக்கரி, காமன்வெல்த் ஆகிய ஊழல்களை சோனியாவின் சி.பி.ஐ. தானே பிடித்தது?. அவை எல்லாவற்றிலும் மன்மோகனுக்குதானே தொடர்பு? இப்படி "தோசையை" புரட்டி  போட சோனியா அணி  தயாராகிறது.

சூரியனும் வேண்டும், அது மேற்கே உதிக்க வேண்டும் ???


     சூரியனை தேர்தல் சின்னமாக கொண்ட தலைவர்தான் இப்படி கூறியுள்ளார் இன்று. இப்படியா கூறுவார்?  அந்த அளவுக்கா அவர் ? இப்படி நீங்கள் கேட்கலாம்  அவர் கூறியது இதுதான் "கூடங்குளம் அணு உலையும் வேண்டும். அது மக்களுக்கு ஆபத்து தராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்."  இதற்கு பொருள் அதுதானே? என்ன உடன்பிறப்பே?

வன்னியர் பெண்களும் தருமபுரி போராட்டத்தில்....

வன்னியர் பெண்களும் தருமபுரி போராட்டத்தில்....
    நேற்றைய  "நியு இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் " ஏடு  ஐந்தாவது பக்க செய்தி இது. நாம் மீண்டும், மீண்டும் கூறி வருகிறோம். இளவரசன்-திவ்யா "காதலும்", அதில் திவ்யா தந்தை, திவ்யாவின் கணவர் இளவரசன் ஆகியொரீன் "சாதலும்" "சாதி" பிரச்சனை மட்டுமல்ல. அடியாழத்தில், அது "இளைய தலைமுறையினருக்கு எதிரான போர்" என்பது புரியும். அதுவும் இளம் பெண்களுக்கு எதிரான குறிப்பான போர். அதிலும் "வன்னிய பெண்களுக்கு" எதிரான போர். "நாடக காதல்", "ஜீன்ஸ் காதல்", "கூலிங்க்ளாஸ் காதல்" ஆகியவை ஒரு குறிப்பிட்ட கட்சியை எதிர்த்து என்று கூறப்பட்டாலும், தலித் சமூகத்தை எதிர்த்து என்று புரியப்பட்டாலும், அது " வன்னியப் பெண்களை" இழிவு படுத்தும் "சொல் அம்புகள்" இல்லையா? அதை தொடுத்தவர்களை எதிர்த்து போரில், நிர்கவேண்டியவர்கள் வன்னியப் பெண்கள் இல்லையா?  அதுதான் தொடக்கி உள்ளது. அந்த செய்தியில் சில வன்னியப் பெண்களை நேர்காணல் செய்து எழுதி உள்ளார்கள் 

Friday, July 5, 2013

பூக்கள பறிக்காதீங்க, காதல முறிக்காதீங்க.....


       இளவரசன் மரணம் ஏன் ? உங்கள் சமூகத்தால்  அதன் சாதி திமிறால், உங்கள் சீரழிந்த அரசியலால் அதன் வாக்குகள் பெறுவதற்கு சாதி வெறியை தூண்டும் கேவலத்தால், சொந்த சமூகத்தின்  பெண்களை உங்களது "உடமைகளாக" எண்ணும்  அழுகிப்போன பண்பாட்டால், முற்போக்கு பேசிக் கொண்டு பிற்போக்காக செயல்படலாம் என்று தமிழ் மக்கள் பலரையும் அனுமதித்து, நடமாட விட்டுள்ள, இழிநிலையால், நீதிமன்றம் வந்தாலும் பெண்ணை ஆண்கள் அன்பாகவே மிரட்ட முடியும் என்ற அசிங்கத்தை பொதுமக்கள் கேள்வி கேட்காமல் இருக்கும் முதுகெலும்பு அற்ற சூழலால், நெருக்கடியில் உள்ள தாய்க்கும், மகளுக்கும், கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று கூட தோன்றாத "நீதிமான்களின்" அளவற்ற அக்கறையால், "நேர்மையான அன்பு " இந்த புழுத்துப் போன புவியில் இல்லாததால், சாதியின் பெயரில் "சண்டியர் தனம் " அனுமதிக்கப்பட்டுள்ளதால், இங்குள்ள இழி பிறவிகளுடன் வாழ "தகுதியற்றவனாக" ஆகிவிட்டதால், ஏற்பட்ட மரணம்தானே? 
       ஒன்று புரிந்து விட்டது. இளைய தலைமுறை மீது,"முதிய தலைமுறையின் சாதி அரசியல்" ஒரு போரை கட்டவிழ்த்து  விட்டுள்ளது.அந்த போரை சந்திக்க இளைய தலைமுறை  தயாராக வேண்டும். அதிலும், இளைய தலைமுறையின் இளம் பெண்கள் முன் நின்று சந்திக்க வேண்டும். உங்களுக்கு முதிய தலைமுறையின் பெண்கள் துணை நிற்பார்கள்  ஏன்  என்றால், அவர்கள் ஏற்கனவே இந்த ஆணாதிக்க சாதிய வெறியர்களை சந்தித்து விட்டு வந்தவர்கள்  இளம் பெண்கள் கைகளில்தான் இந்த உலகம் இருக்கிறது. மாவோ கூறியது போல , "இளைஞர்களே, நீங்கள்தான் உலகை உருவாக்க இருப்பவர்கள்.நாங்களும்தான். ஆனால் இறுதி ஆய்வில் நீங்கள்தான் " நினைவில் வையுங்கள்.