Monday, November 19, 2012

மகத்தான மருத்துவர் மரணம்


    மருத்துவர் சி.என்.தெய்வநாயகம் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி "ஒரு வரலாறு நம்மை விட்டு சென்றுவிட்டது" என்று நம்மை கூறவைக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன்பு நான் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், அன்றைய ஊடகவியலாளர் யு.என்.ஐ. ரமேஷ்,  மருத்துவர் சி.என்.தெய்வநாயகத்தின் இல்லத்திற்கு "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கலந்தாலோசனைக்காக" கூட்டி சென்றார். தொடர்ந்து அதுப்ன்ர கலந்தாலோசனைகளுகாகவும், அணுக கதிர்வீச்சின் ஆபத்துக்களை கற்றுக் கொள்ளவும் அவரை சந்தித்துவந்தோம். கல்பாக்கம் அணு உலையில் பணியாற்றும் ஊழியர்களை எப்படி கதிர் வீச்சு பாதித்துள்ளது என்று ஒவ்வொரு ஊழியரின் பாதிப்பு வரலாடரியும் மருத்துவர் பட்டியலிட்டு வைத்திருந்தார். அதையே "காணொளியாக" ஆக்கி காண்பித்தார். பரப்புரைக்கு பயன்படுத்தினோம். போர் எதிர்ப்பு கூட்டங்களில் எண்கள் அழைப்பை ஏற்று கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுவார். கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகே லட்சுமணன்,காசி, கணேசன் மூலம் ஏற்பாடு செய்த கூட்டத்தி எங்கள் அழைப்பை ஏற்று அவர் வந்து கலந்துகொண்டது இன்றளவும் நினைவில் நிற்கிறது.

                    தொடர்ந்து அணு உலை எதிர்ப்பு ஆலோசனைகளில் அவர் வீட்டில்னடக்கும்போது, நித்தியானந்த் ஜெயராமனை ஒரு முறை கூட்டி சென்றது இன்றுவரை நினைவில் இருக்கிறது. இன்று நித்தி ஒரு பிரபல சுற்று சூழல் ஆர்வலார்க்க இருக்கிறார். ஆண்டன் கோமஸ் தலைமையில் அன்று நாங்கள் கட்டிய "கூடங்குளம் அணு உஅய் எதிர்ப்பு கூட்டமைப்பு" உருவாக அறிவியல் சரக்கு மருத்துவர் சி.என்.டி. மூலம் எங்களுக்கு கிடைத்தது.அவர் கூடங்குளம் அருகே உள்ள "செட்டிகுளம்" ஊரை சேர்ந்தவர் என்பது பின்னால் தெரிந்தது. பிறகு தனியாரிடமிருந்து அரசு எடுத்த  ராமச்சந்திர மருத்துவமனையை மீண்டும் தனியாரிடம் கொடுத்தபோது, அந்த மருத்துவமனையின் டீனாக இருந்த சி.என்.டி. அதை எதிர்த்தார் எனபதும் வரலாறு. அரசு பொறுப்பில் அந்த ராமச்சந்திரா மருத்துவமனை இருக்கும்போது, அதில் எல்லாமே இலவசமாக இருக்க கூடாது என்றும், ஏழை மக்களுக்கும் பொறுப்பு வருவதற்கு சிறிய அளவில் பணம் வாங்க வேண்டும் என்றும் முதல்வர் கலைஞரிடம் பேசியது நினைவில் வருகிறது. மருத்துவர் அமுலோற்பவனாதன் உடன் சேர்ந்து, "அமைக்கான மருத்துவர்கள்" என்ற ஒரு வடிவத்தை ஏற்படுத்தி அதன்மூலம் அவர் செய்திகளை வெளியிட்டு வந்தார். அப்போதும் அவர் அரசுப் பணிதான் செய்துவந்தார். தாம்பரம் சித்தா மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரத்துடன் இருக்கும்போது, தமிழ் சித்த மருத்துவத்தின் மூலம் "எய்ட்ஸ் " என்ற ஆட்கொல்லி நோய்க்கு சித்தா மருந்து ஆராய்ச்சி நடத்தி கண்டுபிடித்து, பல இளம் மருத்துவர்குக்கு பயிற்சி கொடுத்தார். 

                    பிற்காலத்தில் சி.என்.டி. தமிழ் தேசிய உணர்வாளராக ஆகி, பழ.நெடுமாறன் உடன் செயல்பட்டார். அவரது சி.என்.டி. பள்ளி மைதானம் திமுக ஆட்சி காலத்தில் கூட்டம் நடத்த அரங்கு கிடைக்காத "ஈழ உணர்வாளர்களுக்கும், புரட்சிகர உணர்வாளர்களுக்கும்" கூட்ட மைதானமாக மாறியதும் அவரது அனுமதியால்தான். அந்த மகத்தான மனிதர் மறைவு மாபெரும் இழப்புதான்.