Saturday, November 10, 2012

தமிழர் விழாவா தீபாவளி?

தமிழர் விழாவா தீபாவளி?
    
     நரகனை கொன்ற நாள் 
     நல்விழா நாளா?
     நரகன் யார்? 
     நல்லனா? தீயனா?
     அசுரன் என்றவனை 
     அழைக்கின்றாரே?
      இராக்கதன் என்றும் 
      இயம்புகின்றாரே?
      அசுரன் என்றால் 
      தமிழன் என்றல்லோ பொருள்?

      பழக்கம் தனில் 
     ஒழுக்கம் இல்லையேல் 
     கழுத்து போயினும் 
     கைக்கொளல் வேண்டாம்.
     அதனால் தீபாவளியை 
     தீவாளி என விடேல்.
     --------------------- இதை எழுதியவர் புரட்சி கவிஞர் பாரதி தாசன். இப்போப்தாவது எங்களை திட்டாமல்  சிறிது செவி மடுப்பீர்களா?  நானும்  1988 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், பகிரங்க வாழ்க்கைக்கு வருகிறோமே, இதுபோன்ற நல்ல கருத்துக்களை பரப்பலாமே என்று  இரபத்தி நாலு ஆண்டுகளாக இந்த கவிதையை ஒப்பித்து வருகிறேன்  காட்சி ஊடகங்களில், இனையதளத்தில்  நக்கீரன் உட்பட அச்சு ஊடகங்களில் இந்த இரபத்தி நான்கு  ஆண்டுகளாக சளைக்காமல் இந்த பாரதிதாசனின் கவிதையை ஒப்பித்து வருகிறேன். " தமிழன் காசை கரி ஆக்குகிறான். சிலர் "கரியை காசு ஆக்குகிறார்கள்" என்றும் கூறிவருகிறேன். ஆனால் நம்மால் சாதிக்க முடியாததை  "இணைய தளம்" சத்தித்து வருகிறது. உயர தொழில் நுட்பத்தால், இன்று தமிழ் இளைஞர்கள் "ஆபத்து இல்லாத  வெடிகளையும், புஸ வானங்களையும், கணினியில் பார்த்து மகிழத் தொடக்கி விட்டனர்." எப்படியோ வீட்டு பக்கத்தில் "வெடி சத்தம்" கொஞ்சம் குறைந்து வருகிறது.