Tuesday, July 24, 2012

யாருக்காக டெசோ மாநாடு?


    திமுக தலைவர் கருணாநிதி திடீரென டெசோ மாநாடு என்று அறிவித்து யாருக்காக? சட்டமன்ற போது தேர்தலில் தன்னை விட்டு எதிர்ப்புறம் சென்ற "வாக்குகளை" திரும்ப தன்னுடைய காங்கிரஸ் கூட்டணிக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலாவது கொண்டு வருவதற்கு என்பதாக பொதுவாக பர்ர்க்கிரார்கள். அதிலும் உண்மை இருக்கிறது. ஏன் என்றால் சென்ற நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற நெடுமாறன் தலைமையிலான வைகோ முழங்கி வந்த இயக்கம் தங்கள் கூட்டணிக்கு "பாதிப்பை" ஏற்படுத்தும் என்று உணர்ந்த தலைவர் கருணாநிதி மருத்துவமனியில் இருந்தபடியே ஒரு யோசனை செய்தார். அதுதான் தன் தலைமையில் ஒரு இலங்கை தமிழர் பாதுகாப்பு அமைப்பு என்று கூறி, காங்கிரஸ் கட்சியையும் அதில் சேர்த்து  கொண்டார். அப்போது மருத்துவமையிலேயே சுப.வீரபாண்டியன் காங்கிரசை சேர்த்து அப்படி ஒயரு அமைப்பு உருவாக்குவதால் தான் கலந்துகொள்ள முடியாது என்று விலகி நின்றார். அந்த அமைப்பிற்காக மாவட்டம் தொரும்திமுக திரட்டிய கூட்டத்தை அன்று கலைஞர் டி.வி.யும், சன் டி.வி.யும் மக்கள் மத்தியில்கொண்டு சென்றனர்.மானாட மயிலாட, மற்றும் தொடர் நாடகங்கள் காணும் மக்களும் அந்த செய்திகளை தவறாமல் கண்டனர். 

                   அதனாலேயே செல்வி.ஜெயலலிதா தனது பரப்புரையில்னங்கள் ஆதரிக்கும் ஆட்சி மத்தியில் வந்தால், "தமிழீழம்" மலர பாடுபடுவோம் என்று கூறியதை கூட முழுமையாக ஏற்று மக்கள் கனகிராஸ் கூட்டணியை எதிர்த்து நிற்கவில்லை. மாறாக திமுக, அதிமுக இரண்டுமே ஈழத்தமிழர் பிரச்சனையில் அக்கறை கொண்டவர்கலேன்ர புரிதலை தமிழ்நாட்டு வாக்களர் பெருமக்கள் நம்பினார்கள். அதன்விளைவே "ஈழம்"தமிழ் வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஒரு நிபந்தனையாக அப்போது ஆகவில்லை. அதனால் திமுக உடன் சேர்ந்த கணக்ராஸ் சரியாக வெற்றி பெறவில்லை என்றாலும்,  அவர்கள் கூட்டணி பல இடங்களில் வென்றது. அந்த நிலை தமிழ் வாக்காளர்கள் மத்தியில் சட்டமன்ற போது தேர்தலில் இல்லை. ஏன் என்றால் உலகம் முழுவதும் அந்த நாடாளுமன்ற  தேர்தலுக்கு பின்னர்தான் ஈழத்தில் நடந்த கொடுமைகள் தீவிரமாக அம்பலமாகின. உலக சமூகம் விழித்து கொண்டது. அதையொட்டி உள்ளூர் தமிழ் வாக்காளர்களும் விழித்து கொண்டனர். அதன் விளைவே திமுக-காங்கிரஸ் கூட்டணி மண்ணை கவ்வியது. இப்போது மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் வார இருக்கிறது. கலைஞர் ஏதாவது "தந்திரம்" செய்ய வேண்டாமா?

                      அதனால்தான் அவர் டெசோ பேச்சை தொடங்குகிறார் என்பது உண்மைதான். ஆனாலும் அதற்கு மத்திய அரசின் "மறைமுக ஆதரவு" இருக்கிறதா? நிச்சயமாக தமிழ் வாக்குகளை பெறுவதற்கு அப்படி ஒரு "தந்திர முழக்கத்திர்கான ஆதரவு" இருக்கும். ஆனாலும் அதைவிட அந்த டெசோ முழக்கத்தால் "தென்னிலங்கையில்" சிங்களர் மத்தியில் என்ன நிலை என்று ஆய்வு செய்யும்போது, மகிந்தாவிற்கு  இருந்த "சிங்கள எதிர்ப்பை" மாற்றி "தமிழீழ எதிர்ப்பு" என்ற ஒரு முழக்கத்தில் மகிந்தாவின் சிங்கள எதிர்ப்பாளர்கள், தற்போதைக்கு மகிந்தாவை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர் என்ற  செய்தி வருகிறது. அதற்காக தமிழ்நாட்டிலிருந்து நாம் ஈழ ஆதரவு முழக்கத்தை எழுப்பாமளிர்டுக்க முடியுமா? அது எழுப்பப்பட்டே ஆகவேண்டும். ஆனால் நாம் புரிந்து கொள்வதற்காக சிலசெய்திகளை பார்க்க வேண்டி உள்ளது. ஈழ மக்கள் மீது அடக்குமுறைகள் கூடும என்று கூறியோ, சிங்களர் ஒன்றுபட்டுவிடுவர் என்று கூறியோ,   நாம் ஈழ ஆதரவு முழக்கங்களை கைவிட முடியாது. போரில் இவையெல்லாம் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் எதிரிகள் இந்த போர் சூழலை எபப்டிஎல்லாம் கையாள பார்க்கிறார்கள் என்று நாம் டேஹ்ரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் காணும்போது சில செய்திகள் கிடைத்துள்ளன. 

                    லண்டன் செல்ல மகிந்தா சமீபத்தில் புறப்பட்டபோதே, அவருக்கு அங்கே எதிர்ப்பு கடுமையாக இருக்கும் என்ற செய்தி உண்டு. ஆனாலும் தென்னிலங்கையில் சமீபத்தில் தனக்கு எதிராக் கிளம்பியுள்ள எதிர்ப்பை, அதிருப்தியை குறைக்க, வேண்டும் என்றே லண்டன் சென்று ஈழத்தமிழர் எதிர்ப்பை உலகம் அறிய த்ஜாவது சிங்கள உலகம் அறிய செய்தார் என்ற ஒரு ஆய்வு இருக்கிறது. அதன்மூலம் தனக்கு உள்நாட்டில் எழுந்த எதிர்ப்பை அவரால் மட்டுப்படுத்த முடிந்திருக்கிறது. அமெரிக்காவின் வலியுறுத்தலால், பொன்சேகாவை விடுதலை செய்த மகிந்தா அந்த பொன்சேகா மூலம் தனக்கு எதிராக கிளம்பும் சக்திகள் ஒன்று சேரக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் என்கிறது அந்த ஆய்வு. அந்த நேரத்தில் கொழும்பை டில்லி மூலம் இதுவரை கையாண்டுவாத அமெரிக்கா, டில்லியை கைகழுவி விட்டு நேரடியாக கொழும்பை கையாள தொடங்கி விட்டது என்பதை உறுதி செய்த செயல்தான், ஹிலாரி வலியுறுத்தலில் மகிந்தா பொன்சேகாவை விடுதலை செய்தது. இந்த சூழல் டில்லிகாரர்களை கோபம் கொள்ள வைத்து மீண்டும் மகிந்தாவிற்கு எதிராக சில காய் நகர்த்தல்களை செய்ய வேண்டிய கட்டாயம் வந்தது. அப்போது எழுப்பட்ட டெசொவிற்கு டில்லி உளவு துறையின் ஆசீர்வாதம் இருந்தது என்கிறார்கள். 


               அய்.நா. சபையில் மனித உரிமை கவுன்சிலில் மீண்டும் அடுத்த மாதம் வரும் இலங்கை போர்குற்ற விசாரணை கூட்டம் இந்தியாவின் தலைமையில் நடக்க போகிறது. அதயு காரணம் காட்டி   டீல்லிகாரர்கள் சிவசங்கர மேனனை அனுப்பி மீண்டும்  மகிந்தாவிடம் பேரம் பேசினர்.  அப்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறத்தான் சிற்ற்ஹம்பரம் கருணாநிதியிடம் வந்து மிரட்டி, டெசொவில், தமிழீழ தீர்மானம் இருக்காது என்ற பதிலை பெற்றார் என்கிறது அந்த ஆய்வு. இப்போது டெசோ பேசும் கருணாநிதி ஏன் சிங்களர்களுக்கு பயிற்சி கொடுக்கும் மத்திய இசை தட்டி கேட்காமல், அதற்காக போராட்டம் நடத்தாமல், அய்.சீ.எப். ஆலையிலிருந்து ரயில் வண்டிகள் செல்வதை எதிர்க்காமல், எஸ்.ஆர்.எம். பலகலை கழகம் ஒன்று கொழும்பில் வணிக உறவுடன் தமழக ஊடகத்தார் கொண்ட உறவை எதிர்க்காமல், அங்குள்ள தம்ழிஹ் மக்களது வாழ்வை பாதுகாக்க மாநாடு என்று கூற முடியும்? ஒருபுறம் காங்கிரசின் தமிழின படுகொலையை எதிர்க்காமல், அவர்களுடன் கூட்டணி, இரத்த கறைகொண்ட பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு,இன்னொரு புறம் டெசோ என்றால் யாரை ஏமாற்ற? அதனால் அந்த மாநாடு தமிழர் வாக்குகளை ஏமாற்றி அல்ல மட்டுமல்ல, டில்லிக்கு பகடை காய்களாக மீண்டும் ஈழத்தமிழரை ஆக்குவதற்காக, என்பதையும் தாண்டி, மஹிந்தாவிர்கான சிங்கள எதிர்ப்பையும் நீர் ஊற்றி வடிய வைக்கும் என்பது தெரியவருகிறது. அதனால்தான் வீராங்கனை சுப்புலட்சுமி ஜெகதீசன் கூட டெசொவை புறக்கணித்தாரோ ?