Tuesday, June 12, 2012

கலைஞர் அவர்களே, உங்கள் "டெசோ"வை, தமிழர்கள் நம்புவார்களா?


      கலைஞர் அன்று டெசோ கண்டார். நெடுமாறன் உடன் இருந்தார். வாஜ்பாய் இருந்தார். ஏன்.தி.ஆர். அதனுடன் இருந்தார். அன்று டில்லிக்கு "தமிழ் போராளிகள்" தேவைப்பட்டனர். அதனால் எல்லோரும் உடன் இருந்தார்கள். டில்லி ஏற்பாடு செய்த "டெலோ" புலிகளை கொள்ள "பணிக்கப்பட்டது". முந்திக்கொண்ட புலிகள் தேலோவை அன்று பதம் பார்த்தனர். கலைஞர் கோபமானார். டெசோ வை கலைத்தார். அது டில்லிக்கு பிடித்திருந்தது. எம்.ஜி.ஆர். புலிகளுக்கு உதவினார். அதனால்தானோ என்னவோ, கலைஞர் கூடுதலாக புலிகளை எதிர்த்தார்.   தான் கொடுத்த பிறந்தநாள் காசை வாங்கி கொள்ளவில்லை என்றதும், மேலும் புலிகளை வெறுத்தார் கலைஞர்.

                  வன்னி போரின் இறுதி காலத்தில், கலைஞர் ஆட்சி தமிழர்களை பாதுகாக்க எதுவும் செய்யவில்லை என்று சாமானியர்கள் கூறினார்கள். விவரம் அறிந்த தமிழர்கள் வன்னி போர் குற்றங்களில் "விசாரிக்கப்பட வேண்டியவர்" கலைஞர் என்று குற்றம் சாட்டினர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதனாலேயே அவரை வெறுத்தனர். நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில், ஜெயலலிதா "தமிழீழம்" பேசியபோதும், கலைஞர் "ஈழ ஆதரவாளர்" என்ற பெயரை முழுமையாக ஐழந்துவிடவில்லை. போருக்கு பின்னும் டில்லியும், காங்கிரசும், கலைஞரும் இலங்கை ராஜபக்சவுடன் சேர்ந்து கொண்டு தமிழர்களை "தொடர் சித்திரவதை" செய்ததை தமிழ் கூறும் நல்லுலகம் ரசிக்கவில்லை. கனக்கியர்சுடன் சேர்ந்துகொண்டு கலைஞரும் "ஈழத்தமிழருக்கு" துரோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டு  உலகெங்கும் தமிழர்கள் மத்தியில் ஒழிக்க தொடங்கியது. அதுவே சட்டமன்ற தேர்தலிலும் தமிழ்நாட்டில் எதிரொலித்தது. ஜெயலலிதா உலக தமிழர்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்றார். அதற்கு அவரது சட்டமன்ற தீர்மானமான "போர்க்குற்றவாளி" பற்றியதும், பின்னால் அமெரிக்கா தீர்மனாத்தை அய்.நா.வில் ஆடஹ்ரிக்க கூறியதும், இலங்கை மீது பொருளாதார தடை கோரியதும், இலங்கை அமைச்சர்கள் வரும்போது தமிழ்நாட்டு அரசை கலந்துகொண்டே மத்திய அரசு முடிவு செய்யவேண்டும் என்றதும், விமான நிலையத்தில் சிங்களர்களுக்கு கண்காணிப்பு செய்ததும், ஈழ அகதிகளின் நல்வாழ்விற்கு புதிய சலுகைகளை அறிவித்ததும், கூடுதலான காரணங்களாக அமைந்துவிட்டது.

             இதை தாங்க முடியாத கலைஞர் இப்போது தானும் இழந்த தமிழர் ஆதரவை பெற புது முயற்சி எடுத்துள்ளார். அதுதான் "தமிழீழம்" "டெசோ" என்று அவர் முழங்கும் புதிய முழக்கங்கள். அவற்றில் விடுதலை சிறுத்தைகளை சேர்த்து கொள்ளாமல்தான் முதலில் இறந்தார். அது காங்கிரசை குளிர் விக்க இருக்கலாம். அனால் தனது ஈழ அதரவு எடுபடவில்லையோ என்று இப்போது திருமாவையும் சேர்த்து கொள்கிறேன் என்கிறார். அதுவும் சோலை நினைவேன்தலில் திருமா உரையாற்றி கலைஞரையும், ஸ்டாலினையும்  பாராட்டிய பிறகு, ஆ.ராஜா விடுதளையான் அபிறகு கூறுகிறார். ஆனாலும் கலைஞர் மீது படிந்த "கறிகள்" இந்த முழக்கங்களால் போய்விடுமா? உலக தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்களா?  பழைய போர்குற்றங்களை மறந்து விடுவார்களா? தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இடையே உள்ள போட்டியில் உலக தம்ஜிஹர்கள் சிக்கி கொள்ள மாட்டார்கள்.