Tuesday, May 29, 2012

பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் காணமுடியாத மார்க்சிஸ்டுகள்.



     பெட்ரோல் வில்லை கூடுகிறது. டீசல் விளையும் கூடும். சமையல் வாயுவும் விலைகூடும். பெற்றோலிய அமைச்சர் ஜெயபால் ரெட்டி மறைமுகமாக உணர்த்தியுள்ளார். எண்ணெய் நிருவகள் தீர்மானிக்கின்றன என்று உணமியை சொல்வதில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அவரது கூட்டணி கட்சிகளில் ஒன்றின் தலைவரான் கலைஞரும் "சாட்சி" கூறுகின்றனர். அதை இடதுசாரிகள் வரை னைவரும் ஒப்புக்கொள்கின்றனர். 2010 ஆண்டு ஜூன் மாதம் இந்த அய்.மூ.கூ. இரண்டாம் அரசு " பெட்ரோல், டீசல், சமையல் வாயு  விலை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களின் கைகளில்" கொடுத்தது தவறு என சிலரும் தவிர்க்க முடியாதது என்று சிலரும் கூறி வருகின்றனர். இதில் இடதுசாரிகள் அதை "தவறு" என்று கூறுபவர்கள்.

             தவறு என்றால் எப்படி தவறு? ஒரு நாடாளுமன்ற ஜனநாயகம் நடக்கும் நாட்டில் முக்கிய விலை உயர்வான எரிபொருள் விலை உயர்வை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஆட்சியாளர்கள் செய்யாமல், அதை எண்ணெய் நிறுவனங்களின் கைகளில் கொடுத்து நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே "கெடு" என்று இடது சாரிகள் கூறுகின்றனரா? இல்லை. ஏன் சொல்லவில்லை?  எண்ணெய் நிறுவங்களில் பல "பொதுத்துறையை" சேர்ந்தவை என்ற "மயக்கம்" இடதுசாரிகளுக்கு  இருக்கிரது.அதாவது அவர்களது விளக்கத்தில், "ரிலையன்ஸ்" மட்டுமே எண்ணெய் நிறுவனங்களில் ஏகபோக தனியார் நிறுவனம். மற்ற நிறுவனங்களான "பாரத் பெற்றோலியம், ஹிந்துஸ்தான் பெற்றோலியம், இந்தியன் ஆயில் கம்பனி" ஆகியவை போதுத்ரை நிறுவனங்களாம். இடதுசாரிகளின் "கொள்கை முடிவுப்படி" பொதுத்துறை நிறுவனங்களை ஆதரிக்க வேண்டுமாம். ஆகவே அந்த பொதுத்துறை நிறுவனங்கள் பெட்ரோலை "பதுக்கி" வைப்பதற்கும் பதில் சொல்ல அவர்களால் முடிவதில்லை. 

          அந்த பொதுத்துறை நிறுவனங்கள்  இன்று "தனியாருடன்" சேர்ந்து கொண்டு அதே வேலையை செய்வதில்லையா? ஏன் அப்படி செய்கின்றன? இடதுகளுக்கு அதன் விளக்கம் தர முடியுமா?  பொதுத்துறை என்பது இன்று "அதிகார வர்க்க முதலாளித்துவம்" என்று சாருமசும்டார் கூறினார். அதனால் நமது வரிப்பணத்தை பொதுத்துறை மூலம் "அதிகாரவர்க்க மூலதனமாக" ஆக்கி ஆளும்வர்க்கம் கட்டுப்படுத்துகிறது. அப்படியானால் அதிகார வர்க்க முதலாளித்துவமும் இந்திய ஆளும் வர்க்கத்தில் ஒரு அங்கம். அந்த அதிகார்வர்க்க முதலாளித்துவம் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு இவள வேலை செய்வதால் அவர்கள் "தரகு முதலாளிகளாக" ஆகிறார்கள். அதனால் அவர்களை"அதிகாரவர்க்க தரகு ஏகபோக முதலாளித்துவம்" என்றே அழைக்க வேண்டும். இதுதான் அந்த அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் மத்தியில் இருக்கும் உறவு. இது கார்க்சிச்டுகளின் கொலகியில் வராததால் வர்களுக்கு பெட்ரோல் விலை ஏற்ற "கரணம்" கூட கண்டுபிடிக்க முடியவில்லை. பாவம். 

மௌனம் கணைக்கிறது?



 முல்லைபெரியார் அணையில் மத்திய நிபுணர் குழு, கடை நிலம் வரை "துளைகளை" போட்டு, அதிலிருந்து மன்னைமற்றும் கிடைக்கும் பொருள்களை எடுத்து சோதனை செய்தது. அதன் விளைவே நீதியரசர் ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, அணை பலமாக உள்ளது என உச்சநீதிமன்றத்திற்கு "சான்று" கொடுத்தது. எட்டு துளைகளை ம்ல்லைபெரியார் அணையிலும், இரண்டு துளைகளை பேபி அணையிலும் அந்த நிபுணர் குழுவினர் போட்டிருந்தனர்.அந்த துளைகள் மூடப்ப்டாமலேயே இருந்தன. மறு சோதனைக்காக என்று முதலில்  சொன்னார்கள்.தமிழக பொதுப்பணி துறையை கேரள அதிகாரிகள் முதலில் துளைகளை மூட அனுமதிக்க வில்லை. அதை மத்திய நிபுணர் குழுவிடம் இவர்கள் கூற அவர்களோ, "கேப்" செய்துவிடுங்கள் என்றார்கள். அது சரிப்படாது.

               மழைக்காலம் வரப்போகிறது. அடைக்கப்படதா துளைகள் வழியாக தண்ணீர் இறங்கினால் அணையின் பாதுகாப்புக்கு "ஆபத்து வந்து சேரும்".இதைதான் கேரள அரசு எதிர்பார்க்கிறது. இதை அந்த பகுதி மக்கள் உணர்ந்தனர். ஐந்து மாவட்டங்களில் இயங்குவதாக கூறும் "முல்லைபெரியார் மீட்பு இளைஞர் இயக்கம் " தலைவர் ரஞ்சித் சின்னமனூரில் இருக்கிறார். அவர் சென்னை வந்து நம்மை தொடர்பு கொண்டு அந்த "ஆபத்தை" கூறினார். அதை அப்படியே காட்சி ஊடகத்தில் கூறினோம். பலன் தெரியவில்லை. அடுத்து சென்ற வெள்ளிகிழமை "தினகரன்" ஏட்டில் மீண்டும் அணையில் துளைகளை அடைக்க சென்ற தமிழக அதிகாரிகளை "உத்தரவு வரவில்லை" என்று கூறி கேரள அதிகாரி டேவிட் தடுத்ததாக வெளிவந்தது. மீண்டும் அந்த விவரத்தை எடுத்து காட்சி ஊடகத்தில் விரிவாக்க பேசினோம். தமிழக அதிகாரிகள மீண்டும் விரட்டப்பட்டதை அறிந்த தமிழக முதல்வர் உடனேயே பிரதமருக்கு கடுமையான கடிதத்தை எழுதினார். அதற்கு டில்லி மட்டுமா முழித்து கொண்டது? கேரளாவும், இங்கே அறிவாலயமும் அல்லவா முழித்து கொண்டது?


            தனியார் காட்சி ஊடக செய்தி பிரிவு ஒன்று அறிவாலயத்தை தொடர்பு கொண்டது. திமுக தலைவரின் கருத்து என்ன என்று கேட்டது. முதல்வரின் கடிதத்திற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டது. கேரளா உச்சநீதிமன்ற அணையை மீறி, 136 அடிக்கு மேல் தண்ணீர் மட்டத்தை உயர்த்தாததற்க்கு உங்கள் பதில் என்ன? போடப்பட்ட துளைகளை மழைக்காலம் வரும்போது மூடாமல் தடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? தமிழக முதல்வரின் கடிதம் சரியானதா? மத்திய தொழிற்படுகாப்பு படையை நிறுத்த கோருவது பற்றி கருத்து கூறுங்கள்? நிறுத்தாவிடில் தமிழக காவல்துறையை இறக்குவேன் என்று கூறுவது சரிதானே? இத்தகைய கேள்விகளை கலைஞரிடம் கேட்க துடித்த ஊடகவியலாளர்கள் அறிவாலயத்தில் டி.கே.எஸ். இளங்கோவிடம் தலைவர் பதிலுக்காக எதிர்பார்ப்பதாக கூறினார்கள். இலநோவன் உல்லைபெரியார் பற்றி மூச்சு விடவில்லை. காவேரி தீர்ப்பாயம் பற்றி கூறி தமிழக முதல்வர் ஏற்கனவே கூட்டத்தில் கலந்து கொள்ளாதது தவறு என்று மழுப்பினார். என் கலைஞர் அப்போது பதில் கூறவில்லை?

         உண்மையை தமிழக மக்களுக்கு ஆதரவாக கூறினால், அது அதிமுக முதல்வருக்கு ஆதரவாக போய்விடும் என்பதாலா? அவரும் அலறியதாலே மத்திய ராசும், கேரள அரசும் உடனடியாக் செயல்பட்டு, துளைகளை மூட ஒப்புக்கொண்டார்களா?