Friday, May 25, 2012

தப்பி ஓடவுமில்லை, சிக்கி தவிக்க்கவுமில்லை....



    தமிழ்நாட்டில் மாவோயிஸ்டுகள். இது ஊடகங்களுக்கு ஒரு பரபரப்பு செய்தி. காவல்துறைக்கு கேளிக்கை செய்தி. மக்களுக்கோ அதிர்ச்சி செய்தி. தமிழ்நாட்டின் மாவைச்டுகளின் ஒரு தலைவர் விவேக் கைது என்று ஊடகங்கள் ஒரு வாரம் முன்பு பரபரப்பு ஊட்டின. விவேக் "கரம் உயர்த்தி" முழக்கமிட்டு வரும் படங்களை போட்டு நல்ல வேலையாக ஊடகங்கள் நியாயம் செய்தன. யார் இந்த விவேக் என்று சில ஊடகங்கள் எழுதின. வாலிப வயது கொண்ட விவேக் வருகிற வழியில் நின்று படம் பிடித்த ஊடகங்கள் அதையே வெளியிட்டு பெருமை தேடின. சென்னையில் சீ.பி.டி. என்ற பாலிடெக்னிக் இல் படித்தவர் என்பதையும் சில ஊடகங்கள் வெளியிட்டன. திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் என்பதையும் சில ஊடகங்கள் வெளியிட்டன. காவல்துறை அதிகாரிகளது கூற்றை ஒட்டி,  ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் என்றும் சிலர் கூறினர். யாருக்கு விவேக் தலைமறைவாக இருந்தார் என்று நமக்கு புரியவில்லை. 

                  விவேக் உள்ளபடியே கண்டவர் நேசிக்கும் அளவு சிறந்த அறிவாற்றலும், போர்க்குணமும் கொண்ட ஒரு இளைஞர். அவர் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எளிதாகவும், சாகசமாகவும் பவனி வந்தவர். அபப்டியானால் யாருக்கு அது "தலைமறைவு?". காவல்துறை தனக்கு தானே ஒரு திரையை போட்டுக் கொண்டு அவர் தலைமறைவு, இவர் தலைமறைவு என்று கூறினால் சம்பந்தப்பட்ட தோழர்கள் அதற்கு எப்படி பொறுப்பாவர்கள்? தோழர் விவேக் நம்மை போலவே பல தோழர்களுக்கும் அறிமுகமானவர்தான். அவர் "முற்போக்கு மணாவ்ர் சங்கத்தில்" பணியாற்றி  வந்தவர் என்று ஊடகங்களே வெளியிட்டன. காவல்துறை அதிகாரிகளே கூறுகின்றனர். அப்படியானால் பலருக்கும் அவர் அறிமுகமானவ்ர்தானே? அப்புறம் என்ன தலைமறைவு என்று ஒரு குற்றம் போல காவலர் கூறுவதும் அதையே ஊடகங்கள் ஒப்பிப்பதும்? அவர் "தப்பி ஓடியவர்" என்பது போன்ற ஒரு தோற்றத்தை அவர்கள் கொடுக்கிறார்கள். இவர் ஏதோ இந்த நாட்டில் முழுமையாக ஆள்வது போலவும் மடர்வர்வர்கள் இந்த நாட்டில் தப்பி ஓடிக்கொண்டு இருப்பவர்கள் என்பது போலவும் ஒரு மாய தோற்றத்தை உண்டு பண்ண முயல்கிறார்கள்.


                           ஒரு புரட்சிகர  சிந்தனையாளன் அதாவது மாவோ வழியை ஏற்றுக் கொண்டவன், உங்கள் நாட்டு சட்டத்தையோ, நீதிமன்றங்களையோ, அரசான்க்ஜத்தையோ, காவல்துறையையோ, இராணுவத்தையோ, மனத்தளவில் ஏற்றுக் கொல்ல இயலாது. அவர்கள் தனகளுக்கான அரசையும், சட்டங்களையும், நீதிமன்றங்களையும், காவல்துறையையும், ராணுவத்தையும் கட்டி உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகையால் அததகைய மாற்று புரட்சிகர நிறுவனங்களை கட்டி எழுப்ப மக்கள் மத்தியில் பணியாற்றுவதே அவர்களது கடமையாக அமைகிறது. அதற்கு போறில் உங்கள் நாட்டு, அதாவது தாங்கள் இந்திய நாட்டை ஆள்வதாக கருதும் இந்த ஆளும் வர்க்கம், தனக்குதானே ஏற்படுத்தி கொண்ட நிறுவனங்களையும், சிந்தனைகளையும் மட்டுமேர் சார்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறது. அதனால்தான் அவர்களது காவல்துறை புரட்சிகாரர்களை "தப்பி ஓடிவிட்டவர்கள்" என்று முத்திரை குத்தி அழைக்கிறது. அதை புரட்சியாளர்கள் கண்டு கொள்வதில்லை. கவலை படுவதில்லை. நீயும் உன் அரசாங்கமும் என்ற மனோபாவமே புரட்சியாளர்களிடம் இருக்கிறது. அவர்கள் அவர்கள் போக்குக்கு மக்கள் மத்தியில் அவர்களது குறிக்கோள்களுக்காக உழைத்து கொண்டு இருக்கிறார்கள். நீ ஒரு அரசாங்கம். உன்னை கண்டுகொள்ள வேண்டுமா? என்பதே அதன் பொருள்.அநேகமாக் அந்த பொருள் இன்று அணித்து மக்கள் மத்தியிலும் இந்த அரசாங்கம் பற்றி இருக்கத்தான் செய்கிறது.

                             அடுத்து இந்த காவல்துறையும், ஊடகங்களும் புரட்சிகர சினதனையாளர் பத்மா பற்றியும் இதே போல கூறுகிறார்கள். விவேக் கைது. பத்மா தப்பி ஓட்டம் என்பது இவர்களது விவரிப்பு. தாங்கள் ஏற்றுக் கொள்ளாத காவல்துறையையும், நீதிமன்றத்தையும் ஏற்றுக் கொண்டு அவர்களிடம் வந்து கைகட்டி நிற்க வேண்டும் புரட்சியாளர்கள் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அவர்கள் தப்பி ஓடவுமில்லை. உங்களிடம் சிக்கி தவிக்க்கவுமில்லை. அதாவது தாங்கள் ஏற்றுக் கொள்ளாத இந்த நிலவும் அரசாங்கத்தின் காவல்துறையையும், நீதித்துறையும், கண்டுகொள்ளாதவர்கள், அத்தகைய பிற்போக்கு நிறுவங்களிடமிருந்து, தப்பி ஒடுவதுமில்லை. அந்த பிற்போக்கு நிறுவனங்களிடம் சிக்கி தவிக்க்கவுமில்லை. எப்போது அத்தகைய நிறுவனங்கள் பிற்போக்கானவை என்று அடையாளம் காண்கிறார்களோ, அப்போதே அத்தகைய நிறுவனங்களை நீக்கி விட்டு, மக்களுக்கான நிறுவனங்களை ஏற்படுத்த புரட்ச்சியாளர்கள் பாடுபடுகிறார்கள். ஆகாவே அவர்கள் உங்களது உலகத்தில், "தப்பி ஓடவுமில்லை, சிக்கி தவிக்க்கவுமில்லை" மாறாக உருப்படியான மாற்று நிருவனகளை மக்கள் மத்தியில் கட்டி எழுப்ப உழைக்கிறார்கள். ஆகவே உங்கள் மஞ்சள் காமாலை கண்களோடு புரட்ச்சியாலர்க்சலை கண்டால், உங்களுக்கு உண்மை விளங்காது. 

பத்து நாட்கள் முன்பே பிறந்த நாள் கொண்டாடிய தலைவரின் ரகசியம்?



     வருகிற ஜூன் 3 ஆம் நாள் திமுக தலைவர் கலைஞரின் ஆங்கில பிறந்த நாள். தமிழ்நாட்டில் பழக்கத்தில் உள்ள பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஒன்று ஆங்கில பிறந்த நாளாக இருக்க வேண்டும் அல்லது தமிழ் நட்ச்சத்திர பிறந்த நாள்ளாக இருக்க வேண்டும்.என்னதான் தமிழ் புத்தாண்டுக்கு தமிழர்கல்போட்டி போட்டுக் கொண்டு வரிந்து கட்டி கொண்டு சண்டை போட்டாலும், தனகளது பிறந்த நாளென்று வரும்போது, ஆன்மிகவாதிகள் தனகளது நட்ச்சத்திர பிறந்த நாளையும், பகுத்தறிவுவாதிகள் தனகளது ஆங்கில பிறந்த நாளையும் க்ன்டாடுவதுதான் வழக்கம்.சமீபத்தில் இளைஞர்கள் மேற்கத்திய பொருளாதரத்தில் தனகளது வாழ்க்கையை ஈடுபடுத்தி கொண்டு, மேற்கத்திய நாடுகள் கட்டவிழ்ழ்த்து விட்ட தொழிற்கூடங்களில், வேலை பார்க்க தொடங்கியதாலும், அதையொட்டி மேற்கத்திய பண்பாடுகளை பின்பற்ற விரைந்து செல்வதாலும், ஆண்கிலபிறந்த நாள் தவிர எதையும் டேஹ்ரிந்து வைத்திருப்பது கூட இல்லை.


          இப்படி ஒரு சூழலில் திமுக தலைவர் கலைஞரும் மற்றவர்களைப்போலவே பகுத்தறிவு பாதையில், ஆங்கில பிறந்த நாளையே கொண்டாடுவது என்பதை ஆண்டு பலவாக பழக்கமாகவும், வழக்கமாகவும் வைத்து கொண்டுள்ளார். ஆனால் இந்த ஆண்டு எந்த ஆண்டும் போல இல்லாமல், அந்த அனகிலபிறந்த நால்வருவதற்கு "பத்து நாட்கள்" முன்பே தனது முரசொலி இதழில், உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் முதல் பக்கத்திலேயே, அதாவது மே 23 ஆம் நாளே,  "பிறந்த நாள் வாழ்த்து கடிதம்" எழுது விட்டார். என் அப்படி எழுதினார் என்பது திமுக வில் உள்ள அறிவுஜீவிகளுக்கு பெரும் கேள்வியாக அமைந்து விட்டது.அந்த கடிதத்தில் நிறைவு பகுதியில் " பிறந்த நாள் வாழ்த்தை, ஒரு சுய மரியாதைகாரனின் சூளுரையாக" உடன்பிறப்புகளுக்கு அளித்து வணங்குகிறேன் என்று எழுதியுள்ளார். அந்த ளவுக்கு அந்த கடிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதாவது ஏதோ போகிற போக்கில் எழுதிய கடிதம் அல்ல. தனது பிறந்த நாள்வாழ்த்துக்களை உடன்பிறப்புகளுக்கு அளிப்பதில் "கவனம்" செலுத்தி எழுதிய கடிதம் அது. என் அந்த அ;அவுக்கு "பத்து நாள்" முன்பே இப்படி ஒரு கடிதம் எழுத வேண்டும்? 


              அந்த உடன்பிரபுகளுக்கான கடிதத்தின் தலைப்பாக " ஒரு சுய மரியாதைகாரனின் சூளுரை" என்றும் எழியுள்ளார். ஏன்? ஏன் அப்படி எழுத வேண்டும்? தன்னை சுயமரியாதைகாரன் என்று "வலிய" அழைத்து கொல்ல வேண்டிய தேவை இப்போது ஏன் எழுந்தது? பகுத்தறிவு என்பதை சுய மரியாதை என்பதை " ஆன்மிக பார்வை அற்ற" என்பதாக "நாத்திக பார்வை" என்பதாக நமக்கு கற்றுக் கொண்டுத்தவர் கலைஞர். அபப்டி கற்று கொடுத்தவர் ஏன் இப்போது "ஆங்கில பிறந்த நாளுக்கு பத்து நாள்"முன்பே தனது பிறந்த நாள் வாழ்த்துகளை கொடுத்து விட்டு, அதற்கு சுயமரியாதைகாரனின் என்ற "அடை மொழி" கொடுக்க வேண்டும்? நட்ச்சத்திர பிறந்த  நாளை, கொண்டாடுவதை "மூட நம்பிக்கை" என்றும், ஆன்மீக உணர்வு என்றும் எங்களுக்கு கற்று கொண்டுத்த கலைஞர் அவர்களே, இன்று ஏன் இந்த மே 23 ஆம் நாளை. பிறந்த நாள் வாழ்த்து கூறும் நாள்ளக தேர்வு செய்தார்? அன்றுதான் கலைஞரது நட்ச்சத்திரமான "மிருக சீரிடம்" நட்ச்சத்திர பிறந்த நாள். அப்படியானால் "ஊருக்குதான் உபதேசம்.உனக்கு இல்லையடா"   என்று பொருளா? அதற்கு ஒரு சுய மரியாதைகாரனின் சூளுரை என்று பெயரிடலாமா? அய்யா, என்ன ஏமாற்றையா இது?

கலைஞர் ஏன் தினசரி தடுமாறுகிறார்?



     மே மாதம் 23  ஆம் நாள் காலை ஏடுகளில் திமுக தலைவர் கலைஞர் ஒரு செய்தியை கூறியுள்ளார். குடியரசு தலைவர் தேர்தலில் திமுக யாரை ஆதரிக்க போகிறது என்று கேள்வி கேட்பவர்கள் ஆர்வமாக அந்த பதிலை படிக்கிறோம். அதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி யாரை குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஆதரிக்கிறதோ, அவரையே திமுக வும் ஆதரிக்கும் என்று கூறினார். பலரும் ஓகோ காங்கிரசின் வேட்பாளரை பற்றி அப்படி கூறுகிறார் போலிருக்கிறதே என்று எண்ணிவிட்டார்கள். நமக்கு மட்டும் அந்த பதில் புரியவே இல்லை. திமுக என்ற கட்சி கனகிராஸ் என்ற கட்சியுடன் சேர்ந்து அய்.மு.கூ. என்ற கூட்டணியில் இருப்பதாகத்தானே புரிந்து வைத்துள்ளோம்? என்று நமுக்கு குழப்பம். அப்படியானால் எப்படி அந்த அய்.மு.கூ. என்ற கூட்டணி திமுக விற்கு சம்பந்தம் இல்லாமல்  ஒரு வேட்பாளரை ஆதரிக்க முடிவு எடுக்க முடியும்? என்பதே நமது சந்தேகம். சரி. அதையும் காட்சி ஊடகத்தில் கேட்டு வைத்தோம். எப்படி தலைவரே அய்.மு.கூ. யில் இருக்கும் திமுக அந்த அய்.மு.கூ. ஆதரிக்கும் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை ஆதரிக்கும் என்று கூறுகிறீர்கள்? அப்படியானால் திமுக அந்த அய்.மு.கூ. விற்கு "உள்ளே இருக்கிறதா? வெளியே இருக்கிறதா?" என்று கேட்டு வைத்தோம். திமுக வும் சேர்ந்து தானே அய்.மு.கூ தேர்வு செய்யும் வேட்பாளரை டேஹ்ர்வு செய்ய வேண்டும்? என்றும்  கேட்டோம்.

      மறுநாள் அதாவது மே 24 ஆம் நாள். முரசொலியில் கலைஞரே எழுதுகிறார். கேள்வி பதிலில் கூறுகிறார். பெட்ரோல் வில்லை ஏற்றத்தை மம்தா," கூட்டணி கட்சிகளை கலந்துகொள்ளாமல் முடிவு செய்துள்ளார்கள்" என்று கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு, " ஒரு முடிவை எடுக்கும்போது அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் கூட்டி முடிவு செய்தல் இயலாத காரியம்" என்று கலைஞர் பதில் கூறியுள்ளார். எப்படி தலைவரே நேநேகளும் இருக்கும் அய்.மு.கூ. ஆட்சியில் முடிவு எடுக்கும் போது உங்கள் கட்சி மைச்சர்களின் பங்களிப்பு இல்லாமல் முடிவு செய்தால் தவறு இல்லையா? என்று வினவினோம்.  மம்தா என்ற கூட்டணி கட்சி அந்த கலந்தாலோசித்தல் இல்லை என்பதை விமர்சிக்கும்போது நீங்கள் மட்டும் ஆதரிக்கிர்டீர்களே ? என்றும் கேட்டோம். அதற்கும் கலிஞர் பதிலில் "ஜெயலலிதா பால் விலை, பச கட்டணம்" ஆகியவற்றை உயர்த்தும் போது, கூட்டணி கட்சி தலிவர்களை கலந்து கொண்டா உயர்த்த்கினார்? என்று கலைஞர் பதில் கூறியிருந்தார். அதையும் பலர் "ஆமாம்" என்றனர். மீண்டும் நமக்கு புரியவில்லை. ஜெயலலிதா தனிக்கட்சி ஆட்சி நடத்துகிறார். அதனால் கூட்டணி கட்சி தலைவர்களிடம் கலந்துகொள்ள வேண்டியது தேவையில்லை. நேநேகள் மத்தியில் அய்.மு.கூ. என்ற கூட்டணி ஆட்சி நடத்துகிறீர்கள். அதில் கலந்துகொள்ள வேண்டியது தேவையாயிற்றே? என்று கேட்டோம். இந்த இரண்டிற்கும் வேறுபாடு டேஹ்ரிந்த கலைஞருக்கு "என்ன வந்துவிட்டது? என்றும் கேட்டோம்.


                  இன்று மே 25 ஆம் நாள். முரசொலியில் கலைஞர் முதல் பக்கத்தில் எழுதுகிறார். நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பற்றி எழுதுகிறார். அதில் கடைச்டி வரிகளை "அடிக்கோடு" இட்டு எழுதியுள்ளார். மத்தியில் ஆளும் அய்.மு.கூ. ஆட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான திமுக வின் தலைவர் என்ற முறையில் நான் கேட்கிறேன் என்றும், உடனடியாக பேசி தொழிலாளார் பிரச்சனையை மத்திய அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் எழுதுகிறார். ஏன் தலைவரே இத்தனை நாள் கழித்துதான் இந்த "உண்மை" உங்களுக்கு நினைவுக்கு வந்ததா? என்ன குழப்பம் தலைவரே?