Saturday, April 14, 2012

கள்ளதோணி குறும்படம் கண்ணீர் வாவழைத்தது.

இன்று அருள் எழிலன் தயாரித்த க்றும்படம் கள்ளதோணி திரையிட்டார்கள். பெரியவர் வேடத்தில் ஓவியர் வீரசந்தானம் வந்து,போய், பேசி, முகம் காட்டி, முகம் அசைத்து, குழந்தையிடம் பேசி,குழந்தைக்காக பேசி, அழ வைத்து விட்டார். இங்கே இந்தியாவில், தமிழ்நாட்டில், இலங்கை அகதிகளுக்கு அவர்களது முகாம்களில் வெளியே உள்ள ஏழை எளியவர்களுக்கு கிடைக்கும் அனைத்து அரசு சலுகைகளும் கிடைக்கும் என்று அரசு அறிவித்தும்கூட, தனகளுக்கான சட்டரீதியாக கிடைக்க வேண்டிய " ஒப்புதல் சான்றிதழை" பெற முடியாமல் ஒவ்வொரு வருவாய் அலுவலகங்களாக, காவல்துறையின் கட்டபஞ்சாயத்து நிலையங்களாக அலைந்து திரிந்து வேறு வழி இல்லாமல் "அம்மாவிடம் குழந்தையி" ஒப்படைக்க எண்ணும் பெரியவரை, உள்ளே தள்ளும் காவல்துறையும், நீதிமன்றமும் தமிழ்நாட்டில் மட்டுமே இருக்கும் என்று இந்த படம் சாட்சி கூறுகிறது.

கள்ளத்தோணியில் செல்ல கட்டாயப்படுத்தும், களவாணி காவல்துறை இந்த தமிழ்மண்ணில் மட்டும்தான், தமிழர்களால் நடத்தப்படும். தமிழனாக இருக்கும் காவல்துறையினர் கலவாநிகளாக இருக்கும் பொது, கள்ளதொனிகள் ஏன் உருவாகாது? களவாணி காவல்துறை அதிகாரிகளை கண்ட இடத்தில் சுட வாக்கு இல்லாத தமிழர்கள், குறிந்த பட்சம் அந்த கருப்பு ஆடு காவல்துறையினரை கேள்வி பட்டதும், சவுக்கு கொண்டு அடிக்க ஒன்று கூடி கிராமம், கிராமமாக திரளமாட்டார்களா?