Wednesday, April 4, 2012

மாவோவாதிகளின் கடத்தலை, கொச்சைப்படுத்த கிளம்பியிருக்கிறார்களா?

மாவோவாதிகள் ஓடிசாவில் ஆதிவாசிகளின், மற்றும் தலித் இன மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் அரசு இயந்திரத்தின் மாபெரும் போருக்கு எதிராக ஒரு ஆயுதம் தாங்கிய போரை நடத்தி வருகிறார்கள். அத்தகைய போரில் பல புரட்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்தியாவின் இதயப்பகுதியில் கனிம வளங்களை காப்பதற்கும், அதை சூறையாட வந்துள்ள கார்போரேட்களின் கயவாளித்தனத்தை எதிர்க்கவும், போராடும் போர் உள்ளபடியே ஒரு நாட்டுப்பற்றாளர்களின் போர். அத்தகைய போரில் பல யார்த்த பலிகள் நிகழும். அவ்வாறு போரில் அவர்கல்பரிகொடுத்த உயிர்களான கிஷன்ஜி, ஆசாத், போன்ற மறையாத தியாகிகளை எண்ணி மீண்டும், மீண்டும் தனகளது போரை கூர்மைப்படுத்த வேண்டியது புரட்சியாளர்களுக்கு கடமையாக இருக்கிறது. இந்த சூழலில் ஒரு இத்தாலிய பயணிகள் கடத்தல் நடக்கிறது. அரசு இயந்திரம் அதை கொச்சைப்படுத்த பல கதைகளை கட்டவிழ்த்து விடுகிறது.


அதில் ஒன்று பாண்டா என்ற சப்யசாச்சி தனது தலைமையை நிறுவிக்கொள்ள அந்த கடத்தலை செய்தார் என்பது. அதற்கு அடுத்து ஒரு எம்.எல்.ஏ.வை கடத்துகிறார்கள். சம்பந்தமில்லாமல் போரில் மாவிஒவாதிகட்கு ஒத்துழைத்தாக கருதி ஆதிவாசி மக்களை சிறையில் தள்ளியுள்ள ஓடிஸா அரசு, அந்த கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்பது ஒரு முக்கிய கோரிக்கை. அதுமட்டுமின்றி மாவோவாத இயக்கத்தின் தலைவர் சப்யசாச்சி யின் மனைவியை பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். அவரையும் விடுதலை செய்ய கோரியுள்ளனர். இவை எல்லாமே நியாயமான கோரிக்கைகள் என்பதை எந்த சனநாயக வாதியும் இந்த நாட்டில் ஒப்புக்கொள்வார்கள். ஆந்திராவின் புரட்சியாளர்கள் தலைமைக்கும், ஓடிசாவின் தலைமைக்கும் ஒரு முரண்பாடு இந்த கடத்தல் விசயத்தில் இருக்கிறது என்பது அரசு ஊடகங்கள் மூலம் கிளப்பி விடும் அடுத்த திசை திருப்பும் வேலை.

அதற்கும் மாவோவாதிகள் பதில் கூறி விட்டார்கள் .அதாவது புரட்சிகர காலப்போரில் இருக்கும்போது இரண்டு மாநில மைப்புகளுக்குள் வேறுபாடுகள் வருவதும் இயற்கையே என்றும் அதை நனகல்புரிய வைத்து கொள்வோம் என்றும் பதில் கூறி விட்டார்கள்.ஆளும்வர்க்கம் ஓடிஸா மாநிலத்தின் ஆட்சியாளர்களுடன் டில்லியில் இருந்து கொண்டு எல்லா அவிசயத்திலும் ஒரே சிந்தனையுடன் செயல்படுகிறார்களா? ஏன்? பயங்கரவாத தடுப்பு மையம் உருவாக்கும் விசயத்தில் கூட குடுமி பிடி சண்டை போட்டுக் கொள்ளவில்லையா? அபப்டிப்பட்ட ஆளும்வர்க்கத்திற்கு புரட்சியாளர்கள் மத்தில் வரும் முரண்பாடுகல்பற்றி பேச என்ன "நா" இருக்கிறது? பச்சை வேட்டை என்ற பெயரில் புரட்சியாளர்களை ஒடுக்க என்று கூறிவிட்டு, நமது நாட்டின் பூர்வ குடி மக்களை கொடூரமாக பாடுகளை செய்யும் இரத்த வெறி பிடித்த ஆளும்கூட்டமே, உனக்கு என்ன தகுதி இருக்கிஉஅர்து நீ கடத்தல் பற்றி கருத்து சொல்ல என்று சனநாயக வாதிகள் கேட்க வேண்டும்.

ஆனால் நம்மூரில் நிலைமையே வேறு. இங்கே யார் சனநாயக வாதிகள் யார் பிழைப்பு வாதிகள் என்பதை இனம் கண்டு கொள்வதே கடினம். பச்சை வேட்டை என்பதை எத்ஜிர்த்து எல்லோரும் தமிழ்நாட்டில் பேச தொடங்கிய போது, வேறுபாடு இல்லாமல் பல நீரோட்டங்களிளிருந்து வெளிவந்த பல கூறப்படும் அறிவுஜீவிகள் தாங்களும் பச்சை வேட்டியை எதிர்ப்பதாக கூறிவந்தார்கள். அந்த அளவுக்கு அது நல்ல காரியம்தான். ஆனால் சிலர் இப்போது மாவோவாதிகளின் போர் கடுமையாக அரசால் ஒடுக்கப்படும்போது, அதுவும் வனங்களில் வாழும் ஆதிவாசி பெண்களை ஆட வைத்து அதன்மூலம் அந்நிய நாட்டு சுற்றுல்லா பயணிகளை குளிர்விக்க அரசு இயந்திரம் செயல்படும்போது, அந்த அந்நியநாட்டு பயணிகளை எங்கள் அமண்ணின் மைந்தர்கள் உங்களுக்கு பண்பாட்டு காட்சிகளா? என்று கேட்டு, அதை ரசிக்க வந்த "ஆண் ஆதிக்க" சுரண்டல்கார அந்நிய நாய்களை, கடத்தி அதிலேயே தனகது மோரிககியையும் இணைத்து வைத்து, ஆதிவாசி பெண்களை ஆடவிட்டு ஆன்னிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் அரசின் கொச்சைப்படுத்தலுக்கு முற்று புள்ளி வைக்க அதே காடுகளில் சுற்றுலா வந்த இத்தாலிகாரர்களை கடத்தி இந்த உலகுக்கு புரிய வைத்துள்ளார்கள்.


அங்குள்ள நிலைமையை இதைவிட எளிதாக புரியவைக்க முடியாது. அதை ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. மக்கள் பக்கத்திலும்,புரட்சியாளர் பக்கத்திலும் , இழப்பு ஏற்பட்டால் அதையும் ஆளும் வர்க்கம் பக்கத்தில் இழப்பு ஏற்பட்டால் அடஹியும் ஒன்றென பார்க்கும் பார்வை யாரிடம் வந்தாலும் அவர்கள் ஆளும்வர்க்கத்திற்கு தெரிந்தோ, தெரியாமலோ சேவை செய்பவர்கள் என்றே பொருள். அறிவுஜீவிகள் அதை செய்தால் அவர்கள் ஆளும்வர்க்க அறிவுஜீவிகள் என்றே பொருள். ஆனால் இங்கே ஒரு காட்சி ஊடகத்தில் ஒரு அறிவுஜீவி அதேபோல மாவோவாதிகளின் கடத்தலை கொசசைப்படுத்தி பேசியிருப்பது வெளியே வந்துள்ளது. அதாவது ஒரு காவல்துரைகாரர் மகனை தேடி சென்று, கிடைக்காதபோது, அப்பனை கைது சேது வந்து விடுவது போல இந்த கடத்தலும் என்று ஒப்பிட்டு பேசியுள்ளார். இத்தகைய பேச்சுக்கள் நாக்கில் நரம்பில்ல்லாமல்
பேசுவது என்ற வகையையே சாரும். இதன்மூலம் நடுத்தர வர்க்கத்தில் நமுட்டு சிரிப்புக்கு வேண்டுமானால் தீனி போடலாம். அனால் புரட்ச்சியாளர்களின் செயலுக்கு நியாயம் செய்யாமல் ஒதுங்கி கூட நிர்கமால் நக்கல் செய்வதாகவே ஆகும். அதாவது ஆளும்வர்க்கத்தின் அறிவுஜீவிகளின் வேலையை செய்வதாகவே பொருள்.

இதுவே காட்சி ஊடகம் மூலம் பல லட்சம் மக்களை அடையும் போது பேசுவது டேஹ்ரியாமல் அல்லது தஹ்ர்செயளாக பெசுயயது என்று ஆகாது. அதுவே டேஹ்ரிந்து புரட்சியாளர்களையும், அவர்கது புரட்சிகர நடவடிககிய்டையும் கொச்சை படுத்துவது என்றே பொருள். தமிழ்நாட்டில் மட்டும்தான் எந்த சனநாயக உணர்வுகளையும் மதிக்காமல் எதிர்ப்புரட்சிகர கருத்துக்ககளை தஹிரியமாக ஒளிபரப்பும் அளவுக்கு பேசமுடியும். அதேசமயம் பேசுபவர்களை வேறு காரணங்களை கூறி சிறப்பாக விளக்குகிறார் என்பதற்காக இன்னொரு புறம் பாராட்டி உச்சி மோர்ந்துய் கொள்ள முடியும். யாரயும் என்ன பேசுகிறார்கள், என்ன எழுதுகிறார்கள் என்பதையும் தாண்டி என்ன செய்துள்ளார்கள், யாருக்கு சாதகமாக ஏயலப்ட்டுல்லார்கள் என்று கவனித்தி மதிப்பீடு செய்யும் பழக்கம் தமிழர்கள் மத்தியில் இல்லாதபோது, அல்லது எடுபடாத போது, இப்படி போகிற போக்கில் பேசிவிட்டு செல்வது நிகழத்தான் செய்யும்.