Monday, April 2, 2012

பார்வார்டு பிளாக் கட்சியும் நமக்காக.....

சென்ற வாரம் கொல்கத்தாவில் நடந்த அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் மத்திய குழுவில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தொழிற்சங்க தலைவர் ஆனந்த முருகன் ஒரு சிறப்பான தீர்மானத்தை முன்மொழிந்தார். தமிழீழ தசிய தலைவர் பிரபாகரனை, நேதாஜியின் வழி வந்தவர் எனபதையும், நேதாஜி மீது அளவிள்ளபற்று கொண்டவர் எனபதையும் விளக்கினார். அதை ஒட்டி போர்குற்றங்களை தமிழர்கள்மீது இழைத்த சிங்க கொடியவன் ராஜபக்சேவை அனைத்து நாட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தார். அதை ஒட்டி அந்த மத்திய குழு இலங்கைக்கு தங்கள் கட்சி சார்பாக ஒரு குழு சென்று உண்மை நிலை அறிந்து தமிழர் நிலைமை பற்றிமத்திய அரசுக்கு வேண்டுகொல்கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அகில இந்திய பொது செயலாளர் பிஸ்வாஸ் கொண்டு வந்தார்.

அந்த குழுவில் பார்வார்டு பிளாக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ்நாட்டு செயலாளர் கதிரவன் எம்.எல்.ஏ.வும், அகில இந்திய செயலாளரும், கட்சியின் வெளிவிவகார பொறுப்பாளருமான தேவராஜும், இலங்கை சென்று வார திட்டமிடப்பட்டது. அதை ஒட்டி கதிரவன் எம்.எல்.ஏ. வுடன், ஆனந்தமுருகனும் இன்று "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மைய அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதியை வந்து சந்தித்து அளவளாவினர். வழக்கறிஞர் பாண்டிமாதேவி அவ்வமயம் அவர்களிடம் இலங்கையிலுள்ள ஈழ தமிழர்கள் மீதான தாக்குதல்களின் தன்மைகளை எடுத்து விளக்கினார். இந்திய அரசு கொடுத்துள்ள உதவிகலான டிராக்டர்கள், வீடுகள் ஆகியவை யாருக்கு சென்றுள்ளன என்றும் வினவ கோரினார். அவை தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படுவதற்காக இந்திய அரசால் கொடுக்கப்பட்டாலும், சிங்கள மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன என்ற வாதத்தை இலங்கை நாடாளுமனரத்திலேயே பதிவு செய்யப்பட்டதையும் சுட்டி காட்டினார். பார்வார்டு பிளாக் கட்சியினரும் அக்கறையுடன் கேட்டு கொண்டனர்.விரைவில் அவர்களிலன்கைக்கு பயணம் ஆவார்கள்.