Saturday, March 31, 2012

பிரஷாந்த் பூஷன் இடிந்தகரை வந்ததால் எழும் கேள்விகள்.

இன்று பிரஷாந்த் பூஷன் இடிந்தகரை வருகிறார். சரி. இதே உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் மூன்று மாதங்கள் முன்னாள் ஒரு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். யாருக்காக? எதற்காக? இந்திய தேர்தல் ஆணையத்தின் இரண்டு முன்னாள் தலைவர்களான நெல்லை மாவட்ட கடையம் கோபாலசாமி ஐயங்கார், நெல்லை மாவட்ட திம்மராஜபுரம் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, மற்றும் முன்னாள் கப்பல்படை தளபதி அட்மிரல் ராமதாஸ்,மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரவை செயலாளரும்,பிரதமர் அலுவலக செயலாளருமான ஒருவர், மற்றும் அணு சக்தி ஒழுங்குமுறை ஆணிய முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து போட்ட வழக்கு அது. அதில் நாடாளுமனறத்தில் நிறைவேற்றப்பட்ட "அணு சக்தி ஆபத்து இழப்பீடு சட்டத்தை" ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. உடனடி தடையை உச்சநீதிமன்றம் கொடுக்க வில்லை.ஆனால் வழக்கு நிலுவையில் இருக்கிறது.


இந்த கோபாலகிருஷ்ணன் ஏற்கனவே அமெரிக்க-இந்திய அணு சக்தி ஒப்பந்தமான 123 ஒப்பந்தம் கைஎஷுத்தாகும் வேளையிலேயே அதுபற்றி எழுதும்போது, அது இந்திய இறையாண்மையை உடைத்துவிடுமேன்ரும், அமெரிக்க உளவாளிகளை இந்தியாவிற்குல் நுழைத்து, அணு சக்தி மற்றும் அணு அயுதம் பற்றி அனைத்து ரகசியங்களையும் எடுத்து சென்றுவிடும் ஆபத்து உள்ளது என்றும் அந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு அம்சம் பற்றியும் எழுதியுள்ளார். அதற்கு மாற்றாக இந்தியா எந்த நாட்டிலிருந்தும் யுரேனியும் வாங்காமல், இந்தியாவிலேயே கிடைக்கும் "தொரிய்ஜ்ம்" மூலம் அனுகுயண்டு தயாரிக்க உதவாத யுரேனியும் எரிபொருளை மின்சாரம் தயாரிக்க ஆக்கத்திற்கான அணு சக்தியாக பயன்படுத்தலாம் என்று எழுதியவர். இவர் போன்ற நாட்டுப்பற்று கொண்ட அறிவுஜீவிகள், முன்னாள் அதிகாரிகள், ஒய்வு பெற்ற தேசபகதர்கலான இந்திய மூத்த அறிவுஜீவிகளினைந்து போட்ட வழக்கு தான் அது.


இதே கொபாலகிருஷ்ணந்தான் இடதுசாரிகளால் ஜைதாபூர் அணு உலைக்கு எதிராக அமைக்கப்பட்ட அதாவது பிரான்ஸ் நாட்டு அணு உலைக்கு எதிராக போடப்பட்ட குழுவில் இடம் பெற்றுள்ளார். ஆகவே இந்திய அறிவுஜீவிகளினைந்து இந்திய அரசின் அணு சக்தி கொள்கைக்கு எதிராக திரண்டு வருகின்றனர். அதாவது இந்திய அரசின் அணு சக்தி கொள்கையே கேள்விக்கு உள்ளாகி உள்ளது.இத்தகைய சூழலில் கூடங்குளம் அணு உலையை இந்த அரசு எப்படி செயல்படுத்த முடியும்? தொடர்ந்து போராடுவதன் மூலம் மக்கள் போராட்டம்தான் வெல்லுமென்று வரலாறு நிரூபிக்கும்.