Tuesday, February 28, 2012

யாரை குறிவைக்கிறார் கலைஞர்?

திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கவிழா என்பதாக கலைஞர் தலைமையில் அன்பழகன், கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் ஆகியோர் முழங்க இன்று முரசொலி முக்கியமாக வெளியிட, நமக்கெல்லாம் எதோ வரலாற்று செய்திகளை அளிக்க இருக்கிறார் என்று எண்ணினால், இது வேறு எங்கோ செல்வதுபோல தெரிகிறது. .திராவிடமே தமிழ் என்றும் தமிழே திராவிடம் என்று அப்போது கலைஞர் அறிவித்தார். 1942 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் நாள் "திராவிட நாடு" நாளிதழை தொடக்கி வைத்து அண்ணா அதில் எழுதிய ஐந்து நாள் தொடர் தலையங்கத்தில், "தமிழ்நாடு என்றால் திராவிடநாடு என்றும், திராவிடநாடு என்றால் தமிழ்நாடு என்றும்" நாம் எடுத்து காட்டவேண்டிய அவசியம் சிறிதும் இல்லாமல் எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன, என்பதாக ஆன்னாவை மேற்கோள் காட்டுகிறார் கலைஞர். ஜெம் டிக்சனரி யில் 440 தாவது பக்கம், ஐந்தாவது வரியில் திராவிட என்பதற்கு தமிழ்நாடுஎன்று போடப்பட்டுள்ளது என்றார் கலைஞர். இப்படி பல உதாரணங்களை காட்டி அவர் என் இன்று இந்த அளவு அன்று கூறிய கருத்துகளை கூறி வாதாட தேவை எழுந்துள்ளது?


அதற்கு கலைஞர் வழக்கம்போல பல உதாரணங்களை காட்டுகிறார். அதில் முரசொலி மாறன் எழுதிய திராவிட இயக்க வரலாறு, ராதா மணாளன் எழுதிய திராவிட இயக்க வரலாறு, திருநாவுக்கரசு எழுதிய நீதிக்கட்சி வரலாறு, வரதராஜுலு நாயுடு எழுதிய நீதிக்கட்சி இயக்கம், என்று தொடக்கி பல ஆதாரங்களை காட்டுகிறார். டி.எம்.பார்த்தசாரதி எழுதிய "திமுக வரலாறு" என்ற புத்தகத்தை கலைஞர் கவனமாக மறந்துவிட்டார். அதில் கருணாநிதி பெயர் முக்கிய பெயர்களில் இல்லை என்பதால் அதை கூறமாட்டார் என்று நாம் கூறத்தயாராயில்லை. ஆனால் இன்று தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் ஒரு தமிழின அடையாளம் "சரியாகவோ, தவறாகவோ" பறப்பட்டு வருகிறது அதில் "திராவிடர்" என்பது கர்நாடகம், கேரளா, ஆந்திரா ஆகியவற்றை குறிப்பது என்றும் அந்த மாநிலங்கள இப்போது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கின்றன என்றும் ஆகவே தமிழனை தமிழன் என்றே விளியுங்கள் என்று கூறுவது ஒரு பரிமாணப் போக்கு என்று அவரால் கூறமுடியவில்லை. ஒருபுறம் நூற்று ஆண்டுகளுக்கு முன்பு இங்கே தமிழ்நாட்டில் வந்து தமிழர் ஆண்களையோ, தமிழ் பெண்களையோ மணமுடித்தவர்கள் ஆந்திராவில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வந்திருந்தாலும் அவர்கள் "தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும்" பயன்படும் அளவிலும், அதற்கான வேலை திட்டத்திலும் பங்கு கொள்ளும்போது தமிழர்கல்லா காணப்பட வேண்டும் என்ற நமது அடையாளப்படுத்தலில் இருக்கும் அறிவியல் கண்ணோட்டத்தை எடுத்து கொண்டு பேச கலைஞர் தயாராக இல்லை. மாறாக அந்த காலத்தில் திராவிடர் என்றால் தமிழர் என்ற புரிதல் இருந்தது என்பதை இந்த காலத்தில் அண்டை மாநிலங்களான திராவிடர் மாநிலங்கள் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பொது அதை விளக்க முடியாமல் பேசுவது, கீறல் விழுந்த இசைத்தட்டாகவும், பழைய கள்ளை கொடுத்து அதில் வெற்றி பெற முடியாமையையும் காட்டும்.

அதேநேரம் டைம்ஸ் ஆப் இந்தியா எட்டில் இன்று ஒரு கட்டுரை கலைஞரது கூற்று பற்றி வெளிவந்துள்ளது. அதில் சாதியை மீண்டும் கையிலெடுத்து கலைஞர் திராவிடம் பேசுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது "பார்ப்பனர், பார்பனர் அல்லாதோர்" என்ற பழைய கால தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த சரியான, முற்போக்கான முழக்கத்தை மீண்டும் நினைவு படுத்துகிறார் என்கிறது அந்த கட்டுரை. இன்று கலைஞர் குடும்பத்தில் உள்ள பேரங்கள் ஒவ்வொருவரும் பார்ப்பன குடும்பத்தில் பெண் எடுத்திருப்பதை மாட்டும் வில்லாகி பார்க்கிறதா? என்ற கேள்வி எழாத தமிழ் உள்ளங்கள் இல்லை. இது ஜெயலலிதாவை தாக்கிதான் என்று கூறுவாரும் உண்டு,. இல்லை. இது காஷ்மீர் பண்டிட் குடும்பமான நேரு குடும்ப சந்ததிகளை சுட்டி காட்டுகிறது என்று விள்ளக்குவோரும் உண்டு. அப்பப்பா. கலைஞரின் திராவிட யக்க வராலற்றுக்கு இத்தனை விளக்கங்களா?