Wednesday, February 22, 2012

சுடப்பட்டது கொள்ளையர்களை தானா?

எதற்காக இந்த நாட்டில் ஒரு அரசியல் சட்டம்? அதன்படிகைதுகள்? அதற்குபிறகு விசாரணை? அதன்பின் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நிறுத்துவது? அதன்பின் நீதியரசர் முன்னிலையில் விசாரணை நடத்துவது? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் வழக்கறிஞர் வைத்து வாதாட அனுமதிப்பது? அதைகூட குறுக்கு விசாரணை என்று ஒரு நியதியை ஏற்படுத்தி உண்மையை கண்டறிய முயற்சிப்பது? அதன்பிறகே நீதியரசர் தீர்ப்பு கொடுப்பது? அதற்கு பிறகும் மேல்முறையீடு என்று அனுமதிப்பது? அதில் குற்றம் சட்டப்பட்டவர்க்கு "பிணை" கொடுக்கும் வாய்ப்பு? அதன்பின்னும் மேல் நீதிமன்றத்தில்விசாரனை" அதில் ஒரு தீர்ப்பு? அதையும்கூட மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றம் கொண்டு செல்ல அனுமதிப்பது? அங்க கொடுக்கும் தீர்ப்பை இறுதி தீர்ப்பு என கூறுவது? இத்தனை வரிசை கிராமமான அனைத்து படிக்கட்டுகளையும் நமது சென்னை மாநகர் காவல்துறை கண்காணிப்பாளர் திருபாதி "தாண்டி, தாண்டி" குதித்து "கொள்ளையர்கள்" என்று வரும், அவரது படையும் கண்டுபிடித்த ஐந்து பேரை ஒரே நேரத்தில் சுட்டு கொன்று விட்டார்களே? இத்தனை படிக்கட்டுகளை தாண்டி செல்லும் அனைத்த் வேலைப்பளுவையும், ஒரே நேரத்தில் குறைத்து விட்டார்களே? அது கெட்டிக்காரத்தனம்தானே? இதைபோய் மனித உரிமையாளர்கள் குறை சொல்கிறார்களே? இது சட்டத்தின் ஆட்சியை கெடுக்கும் என்கிறார்களே?

பொதுமக்களுக்கு தொடர்ந்து கொள்ளைகள் நடக்கிறதே? என்ற கவலை. அதனால் அவர்கள் அப்பாடி, இப்போதாவது கொள்ளையர்களை கொன்று விட்டார்களே? என்று திருப்தி அடைவார்கள். ஆனால் கொல்லப்பட்டது உண்மையான கொள்ளையர்கள்தானா? கொள்ளையர்கள் எங்காவது வீடு எடுத்து தாங்குவார்களா? அவர்கள் வீட்டில் ஒரு கைத்துப்பாக்கி உட்பட நான்கு துப்பாகிகள் இருந்ததை காவல்துறை காட்டுகிறதே? காவல்துறை அதிகாரிகளை அரிவாள் வைத்து தாக்கியுள்ளனர் கொள்ளையர்கள் என்று அடிபட்ட காவலர்களை காவல்துறை காட்டுகிறதே? கையில் ஒன்றுக்கு நாலு துப்ப்பாகிகளை வைத்திருந்த கொள்ளையர்கள், என் முட்டாள்கள் மாதிரி அரிவாள் வைத்து தாகினர்கள் என்று புத்தியில்லாமல் கேட்டுவிடாதீர்கள். சொல்வது காவல்துறை. நம்புங்கள். இல்லாவிட்டால்? ஆமாம். பிடிபட்ட மன்னிக்கவ்ய்ம் கொல்லப்பட்ட கொள்ளையர்கள் தலைவர் எஸ்.ஆர்.எம். என்ற மாபெரும் சுய நிதி கல்லூரியின் முன்னாள் மாணவர் என்கிறார்கள். அதையே அந்த டி.வி.க்கு போட்டி டி.வி. திரும்ப திரும்ப கூறுகிறார்கள். அப்படியானால் அந்த கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கு அதிகமாக் கட்டாய கட்டணம் வாங்கும் இடைத்தரகர்கள் பணியை செய்து வந்தவர்கள் இவர்களா? அதனால்தான் கொல்லப்பட்டார்களா? அபப்டியானால் அந்த கல்லூரியின் முதலாளிக்கு ஆதரவாக காவல்துறை அந்த இடைத்தரகர்களை இல்லாமல் செய்து விட்டதா? இப்படி கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டே போனால் காவல்துறையின் ஈரல் கேட்டு விட்டது என்று முன்னாள் முதல்வர் பாணியில் பேச வேண்டியிருக்கும்.

எப்படியோ இப்போதிந்த நால்வரையும் கொள்ளைகாரர்கள் என்றே வைத்து கொண்டாலும், அவர்களுக்கு ஆதரவாக இங்கே இருந்தவர்களை அதிலும் அதிகாரிகள் இருந்தால் அவர்களையும், காட்டி கொடுக்க இப்போது யாருமே உயிரோடு இல்லை. எல்லா சாட்சிகளையும் கொன்று விட்டார்கள். இதற்கு பெயர் என்ன? இதுதான் சட்டத்தின் ஆட்சியா? வெளிமாநிலத்தின் ஆட்களை கட்டுமான வேலைக்கும், சுய நிதி கல்லூரிகளுக்கும், உணவு விடுதிகளுக்கும் வரவழைத்து தமிழ்நாட்டில் சட்ட-ஒழுங்கை கெடுப்பது யார்? யார்? பட்டியலிடலாமா?

நாமே எல்லாம் என்பதில் யார் வழி இருக்கிறது?

தேமுதிக. என்ற தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சி தனது பொதுக் குழுவை நடத்தி முடித்தது. ஏற்கனவே கட்சியின் தலைவராக இருக்கும் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் கட்சியின் தலைவர். கட்சி தொடங்கும்போது பொது செயலாளராக இருந்த ராமு வசந்தன் மறைந்த பிறகு அந்த பொறுப்புள்ள பதவியை கேப்டன் விஜயகாந்த் தானே பொறுப்போடு எடுத்து கொண்டுள்ளார். அந்த பொறுப்புக்கும் தேர்தல் நடந்து, அதிலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களே எதிர்ப்பு இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனநாயக ரீதியாக இப்படி அவர் இரண்டு பதவிகளை வகிப்பது குறித்து சிலர் கேள்வி கேட்கிறார்கள் அவைத்தலைவராக . பண்ருட்டி ராமச்சந்திரன் இருக்கிறாரே என்று நாம் கேட்டால் அது அவர்களை சமாதனப்படுத்த வில்லை. ஆகவே நாம் வரலாற்றை எடுத்து பல முன்மாதிரிகளை காட்டவேண்டியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் தன்னை எம்.ஜி.ஆர்.இன் வாரிசு என்றுதானே அழைக்கிறார். அப்படியானால் அந்த மருதூர் கோபால ராமச்சந்திரனின் அடியொற்றி இவரும் ஏதாவது செய்யவேண்டாமா?

எம்.ஜி.ஆர். இடம் உங்கள் கொள்கை என்ன என்று கேள்வி கேட்டார்கள். எம்.ஜி.ஆர்.இடம் பொய் கேள்வி கேட்கலாமா? அவர் உடனடியாக "கேபிடலிசம், சோசலிசம், கம்யுனிசம் அனைத்தும் கலந்ததுதான் அண்ணாயிசம்" என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். அசந்து போனார்கள் ஊடகத்தார்கள். அதுபோல கருப்பு எம்.ஜி.ஆர். விஜயகாந்த் தனது கட்சியின் பெயரை கூறும்போதே அந்த "வரலாறு" படைத்து விட்டார். "தேசிய" என்று தொடங்கினார். செத்தார்கள் தேசிய கட்சிகள். "திராவிட" என்று தொடர்ந்தார். மூர்ச்சை போட்டார்கள் திராவிட கட்சிகள்.முன்னேற்ற என்று அவர் வாயை மூடும்முன்பே இங்குள்ள முன்னேற்ற கழகத்தினர் காணாமல் பொய் விட்டார்கள். அப்படி ஒரு மாபெரும் கண்டுபிடிப்புடன் கட்சி பெயரை அனைத்து உணர்வுகளையும் ஒருங்கே சேர்த்து அமைத்த ஒரு தலைவர் அந்த கட்சியின் பதவிகளை அதேபோல அனைத்து கட்சிகளின் "நடைமுறைகளையும்" இணைத்து போடா மாட்டாரா? அதுதான் அவரே தலைவர் மற்றும் போதுச்யலாளர் பொறுப்புகளை எடுத்து கொண்ட கண்டுபிடிப்பு.

உதாரணமாக தேசிய கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகியவை "தலைவர்" பொறுப்பை பெரிதாக மதிப்பார்கள். ஆகவே அவர்களை போல தலைவர் பொறுப்பும் கேப்டனுக்கு வேண்டும். சி.பி.ஐ, சி.பி.ஐ.[எம்] ஆகிய தேசிய பேசும் கட்சிகள் பொது செயலாளர்தான் முக்கியம் என வைத்துள்ளனர். அதனால் அடஹியும் எடுத்து கொண்டார். திராவிட கட்சிகள் என்று கூறும் திமுக போன்ற கட்சிகள் தலைவர் பதவி பெரிது என்கின்றனர். அதிமுக, மதிமுக போன்ற திராவிட கட்சிகள் பொது செயலாளர் தான் முக்கியம் என்று கருதுகின்றன. ஆகையால் யாருடைய மனதும் புண்படாமல், இரண்டு பொறுப்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கேப்டன் இரண்டு பதவிகளையும் எடுத்து கொண்டுள்ளார். இப்போது புரிகிறதா? கேப்டன் எந்த அளவு பொறுப்புகளையும் அளந்து கால்களை முன்வைக்கிறார்? இப்போது சொல்லுங்கள். அவர் எம்.ஜி.ஆர். வாரிசுதானே?

திமுக தலைவர் என்ன செய்வார்?

சங்கரன்கோயில் இடைத்தேர்தல். அதிலாளும்கட்சிதான் வெற்றிபெறும் என்ற புரிதல் திமுக தலைமைக்கும் உண்டு. ஆனாலும்விட்டு விட முடியாது. போட்டி போட்டு "சூடு" கிளப்பினால் மட்டுமே கட்சி அரசியல் நடத்த முடியும். அதற்கு திமுக ஒரு நல்லவேட்பாலரை நிறுத்த வேண்டும். அதற்குள் அவர் எதிர்பாராமலேயே தேமுதிக தலைவருக்கும், தமிழக முதல்வருக்கும் சண்டை சட்டமன்றத்திலேயே தொடக்கி விட்டது. அந்த சண்டையை திமுக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதற்காகவே விஜயகாந்த் வெளியேற்றத்தை எதிர்த்து கலைஞரும் பேசிவிட்டார். அதுவே கேப்டனுக்கு திருப்தி என்றார்கள் . அதையும்தாண்டி ஜனநாயக விரோதம் என்று கலைஞர் கூறிவிட்டார். அதுவே பிரச்சனை ஆனது. அதுவும் சட்டமனரத்தில் நடந்த ஒரு நிகழ்வை சட்டமன்ற உற்ப்பினராக உள்ள கலைஞர் வெளியே வந்து விமர்சித்தார். அதுவே சட்டமன்றத்தின் உரிமை மீறலேன்று கூற வாய்ப்பு உண்டு. அதிலும் சட்டமன்ற உரிமைக்குழு எடுத்து அறிவித்த ஒரு முடிவின் மீது சட்டமணர் உறுப்பினரான கலைஞர் ஜனநாயக விரோத செயலென்று வெளியே வந்து விமர்சித்திருப்பது சட்டமணர் "உரிமைக்குழு" முன்பே விசாரிக்க போதுமான தகுதி உள்ள ஒரு பிரச்சனை. இந்த வயதான காலத்தில் கலைஞரை சட்டமணர் உரிமை குழு முன்பு வரவழைத்து விசாரணை நடத்துவது தேவையா? என்று முதல்வர் எண்ணி பார்த்திருக்க வேண்டும். அதனால்தான் பேரவை தலைவர் ஜெயகுமார் ஒரு அறிக்கையை மட்டுமே கலைஞரை எதிர்த்து கொடுத்திருந்தார்.

அந்த அறிக்கை பற்றி செய்திகளும், நிஜங்களும் நிகழ்ச்சியில் பேசும்போது, நாம் அந்த உரிமை குழு முன்பு கொண்டு சென்று கலைஞரை நிறுத்தாமல் வெறும் அறிக்கையை பேரவை தலைவர் கொடுத்துள்ளாரே என்று கூறினோம். அதன்பிறகு மறுநாள் அந்த அறிக்கைக்கு கலைஞர் பதில் கொடுத்தார். பதிலில் தான் வெளியே அவ்ரும்போது சிலபத்திர்கையாளர்கள் நின்று கொண்டு விஜயகாந்த் வெளியேற்றம் பற்றி கேட்டார்கலேன்ரும், தான் பேரவை தலைவரை விமர்சித்து எந்த சொல்லும் கூறவில்லை என்ருமிறங்கி பேசி இருந்தார். அது நமது கருத்து வெளியீட்டால் இருக்கலாம் என்றுகூட நாம் நினைக்க வில்லை. கலைஞரே அந்த வில்லங்கத்தை உணர்ந்துதான் கூறி இருப்பார் என்று நினைத்தோம். இப்போது கலைஞர் ஆலோசனையையும் ஏற்று விஜயகாந்த் நீதிமன்றம் சென்றிருக்கிறார். இப்போது நீதிமன்றம் சட்டமன்றத்தில்னடந்த உரிமைகுழுவிற்குள் நடந்த னைத்து கோப்புகளையும் கேட்குமா? அதில் திமுக,இடது சாரிகள், தி.மு.தி.க. ஆகிய கட்சிகள் தங்கள்கருத்தாக ஒரு புறம் நடந்த சட்டமன்ற நிகழ்வு படங்களை மட்டுமேகாட்டுகிரீர்கள் என்றும் இருபுறம் படங்களைகட்டுங்கள் என்றும் கூறியதாகவும் அதை செய்யாமல் "விஜயகாந்த் இடைநீக்கம்" அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்து நீதிமன்ற நியாயம் கேட்பார்கள். அப்போது நீதிமன்றம் பெரியதா? சட்டமன்றம் பெரியதா? என்ற பிரச்சனை வரும். வானளவு அதிகாரம் படைத்தவர் சட்டமன்ற பேரவை தலைவர் என்ற பி.எச். பாண்டியனின் பழைய வசனம் மீண்டும் பேசப்பட வேண்டுமா?

இத்தனை சிக்கல்கள் மத்தியில் விஜயகாந்த் "நாக்கை" துருத்தி, முறைத்த பேச்சு நீதிமன்றத்தாலேபப்டி பார்க்கப்படும்? நீதியரசர்களின் கோபத்தை ஒரு எதிர்க்கட்சி தலிவர் வாங்கி கட்டிக் கொள்வாரா? கலைஞருக்கு கவலை இல்லை. விஜயகாந்த் அடிபட்டாலும், ஜெயலலிதா அரசு திட்டு வாங்கினாலும் அவருக்கு மகிழ்ச்சி தான். அவரும் எதிர்க்கட்சி தலிவர் காநிராஸ் கட்சியின் பாலகிருஷ்ணனை நெல்லைபாளயம்கோட்டை மாந்ஜொலைஓர்வலத்திந் போது, காவல்துறையிடம் அடித்து கைது செய்து போடும்படி கூறினார் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்? இத்தகைய சூழலில் திமுக வின் சங்கரன்கொவில்வேட்பாளர் வழக்கறிஞர் ஜவஹர் முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் அண்ணன் மகன் என்பதை மட்டுமே கலைஞர் பார்த்தார். ஆனால் அவர் மீது அருணாசலம் குடும்பம் நிலமொசடிக்கான ,உயில் மோசடி வழக்கு போட்டிருப்பது நிலுவையில் இருக்கிறது என்பது அவரை சிக்கலுக்கு உள்ல்லாக்கி உள்ளது. அதற்காகவாவது தி.மு.தி.க. வேட்பாளரை போது வேட்பாளராக என்று கலைஞர் ஆதரிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.