Tuesday, February 21, 2012

பலூசிச்தானுக்கு சுய நிர்ணய உரிமை என அமெரிக்கா கூறுகிறதா?

பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதும், இந்திய அரசை ஆவப்போது காஷ்மீர் பிரச்சனை, ஆப்கானிஸ்தான் பிரச்சனை போன்றவற்றில் இடிப்பதும் அமெரிக்காவிற்கு கைவந்த கலை என்பதுதான் இனாம் எல்லோரும் இதுவரை எண்ணிப்பார்த்து வரும் வரலாறு? அது மாற்றப்படுகிறதா? அமெரிக்காவின் காங்கிரஸ் சபையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அது பாகிஸ்தானிற்குள் இருக்கும் பலூசிஸ்தான் என்ற தனி இனத்தின் "சுய -நிர்ணய உரிமை" பற்றி பேசியது. மனித உரிமைகள் என்ற பிரச்சனை பற்றி தான் மிகவும் கவலை படுவதாக அமெரிக்க செனட்டர்கள் கூறினார். ஆகா? இது என்னடா புது நாடகம்? என்று கேட்டீர்கள் என்றால் நிறைய கதை பின்னால் இருக்கிறது. கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு குடியரசு கட்சியின் தானா ரோஹ்ரபாசேர் என்ற உர்ப்பினர்தான் அந்த தீர்மானத்தை கொண்டுவந்தவர். அதை இரண்டு அமெரிக்க குடியரசு கட்சியின் காங்கிரசார் வழி மொழிந்தனர். அவர்களது பெயர்கள் டெக்சாசின் லூஹி கொஹ்மேர்ட், மற்றும் ஐயோவா வின் ஸ்டீவ் கிங் என்பதே. அப்படியானால் அந்த தீர்மானம் குடியரசு கட்சியால் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. தற்செயலாக நடந்த ஒன்று அல்ல.

இத்தகைய தீர்மானத்தை காங்கிரசில் கொண்டுவரும் அளவுக்கு அமெரிக்காவிற்கு தொர்யம் இருந்தும், இதுபோல ஒன்றை பல லட்சம் தமிழர்களை கொன்றதாக அமெரிக்காவே ஒப்புக்கொள்ளும் இலங்கை அரசிடம் "தமிழீழ சுய நிர்ணய உரிமை" பற்றி பேச ஒரு தீர்மனாம் கொண்டுவர என் முடியவில்லை? அதுதான் அமெரிக்க தந்திரம். அபப்டி என்ன தந்திரம் இதில் இருக்கிறது? அந்த கலிபோர்னியாவின் காங்கிரஸ் உறுப்பினர் தானா ரோஹேற்பசேர் இதற்குமுன்பு இந்திய அரசுக்கு எதிராக "காஷ்மீர் சுய நிர்ணய உரிமை" பற்றி பேசிவந்தவர். இப்போது பலூச்சி ஒரு வரலாற்று ரீதியான சியா நிர்ணய உரிமை பெறுவதற்கான தன்மை கொண்டது என்கிறார். அது தமிழீழத்திற்கு இல்லையா? பலூச்சியில் அதிகமாக பாக் ராணுவத்தால் கொலைகளும், கொடுமைகளும், சித்திரவதைகளும் நடக்கின்றன என்கிறார். அதுவே தமிழீழத்திலும் உண்மை இல்லையா? இதே தானா ரோஹேற்பசேர் இதற்கு முன்பு காஷ்மீர் சுய நிர்ணயம் மட்டுமல்ல, காலிஸ்தான் சுய நிர்ணயம் பற்றியும் பேசி வந்தவர். அதாவது அவர் இந்திய அரசுக்கு எதிரான் அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கைகளுக்காக பேசினார். இப்போது இந்திய அரசின் வெளிவிவகார கொள்கைக்கு ஆதரவு கொடுப்பதுபோல பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார். அதைதான் பாக்சிதனைன் அதிபர் கூறுகிறார். அதற்கு அமெரிக்க ஒபமாவும் ப-அகிச்தானை உடைப்பதை அனுமதிக்காது அமெரிக்க என்று பதில் கூறுகிறார்.


இந்த மற்றம் அந்த குறிப்பிட்ட குடியரசு கட்சிகாரரிடம் ஏன் வந்தது? அமெரிக்கவிற்கும் அந்த தேவை ஏன வந்தது? அமெரிக்க இன்று பாகிஸ்தான் தலிபானுக்கு கொடுக்கும் ஆதரவை எதிர்த்தும், ஆப்கானிஸ்தானை குறிவைத்தும், இரானை எதிர்த்தும் இந்த வட்டாரத்தில் ராணுவ தந்திரங்களை வகுக்க வேண்டி உள்ளது. அதற்கு சரியான தந்திரமாக பலூச்சிச்தானை தன வசப்படுத்தும் தந்திரத்தை எடுக்கிறது. ஏன் என்றால் பலூச்சிஸ்தான் ஒருபுறம் இரான், மறுபுறம் ஆப்கானிஸ்தான், இன்னொருபுறம் பாகிஸ்தானிற்கு உள்ளே என்று இருக்கும் பகுதி. அதனால் அந்த மூன்று சக்திகளையும் அடக்க பலூச்சிச்தானில் "ராணுவ தளம் அமைக்க" அமெரிக்க முயற்சிக்கிறது. இதுதான் இந்த தந்திரத்தின் காரணம். அதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பது என்பது எரியும் விறகு கட்டையை எடுத்து சொரிந்து கொள்வதற்கு சமம். அதாவது இப்படி ஒரு தேசிய இன பிரச்சனையை வைத்து அமெரிக்க இங்கே நுழையுமானால் அது இந்த வட்டார சக்திகளுக்கு பலவீனமும், அமெரிக்க ராணுவ தந்திரத்திற்கு இந்த வட்டாரத்தில் இடம் கொடுப்பதும் எனப்டதையே செய்யும். அதற்கு நாட்டுபற்றும், தீரமும் வேண்டும்.அதுதான் இந்திய ஆளும் கும்பலிடம் இல்லையே?

கலைஞரை நேரு ஏமாற்றினாரா? கலைஞர் நம்மை ஏமாற்றினாரா?

முன்னாள் அமைச்சரும், திமுக வின் முக்கிய புள்ளியுமான கே.என்.நேரு தனது மகனின் திருமணத்தை திருச்சியில் நடத்தினார். அதில் கலைஞர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது கலைஞர் பேசிய உரை திமுக தொண்டர்களுக்கு ஒரு வரலாற்று பாடமாக அமைந்தது. பெரியார் வழி, அண்ணா வழி என்ற வழக்கமான பாடலுக்கு அங்கங்கே இசை அமைத்து அழகாகவே பாடினார். தமிழ்நாட்டில் கல்யாணம் என்ற சொல்லை இப்போதெல்லாம் திருமணம் என்று சொல்ல வைத்துள்ளது திமுக என்று அவர் கூறும்போது, மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆசீர்வாதம் என்ற சொல்லின் பழக்கத்தை மாற்றி தமிழில் வாழ்த்துக்கள் என்ற சொல்ல வைத்தது திமுக என கலைஞர் கூறும்போது புல்லரித்தது தமிழர்களின் வரலாறு, பண்பாடு என்பதை எப்படி மீட்டு எடுத்துள்ளோம் என்று அவர் வாயார புகழ்ந்து அதை பெருமைப்பட்டு கூறிய பொது நாமும் பெருமைப்பட்டோம். பெரியார், அன்னமா வழி என்று அவர் கூறும்போது மூடநம்பிக்கைகளை ஒழித்து பகுத்தறிவு வழி என நாம் பெருமைப்பட்டோம். சேர,சோழ, பாண்டிய என்று நமது மூதாதையரை கூறும்போது, தமிழர்களாக அனைவரும் நிற்கிறோம் என்று கலைஞர் கூறினார்.

அதேநேரம் கே.என். நேரு தனது சொந்தங்களுக்கும், வணிக உறவுகளுக்கும் அனுப்பிய திருமண அழைப்பிதழ் நமது கைகளில் தவழ்ந்தது. அதில் தனது மூதாதையரான காலம் சென்றவர்களை "வானிருந்து வாழ்த்தும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இது மூட நம்பிக்கை இல்லையா? பெரியார் வழியில் யாராவது வானிருந்து வாழ்த்துவார்களா? அப்படி வாழ்த்துபவர்கள் என்று அச்வரால் அந்த மணவிழா அழைப்பிதழில் குறிக்கப்பட்டவர்கள் அவரது தாத்தாக்களும், கொள்ளு தாத்தாக்களும். அவர்களை நேரு எப்படி அழைக்கிறார் தெரியுமா? சர, சோழ, பாண்டிய வம்சங்களாக தமிழர் பாரம்பரியமாக அழைக்க வில்லை. மாறாக "நாராயணன் ரெட்டியார், லட்சுமணன் ரெட்டியார்" ஆகியோரின் பெயர்த்தான் என தனது மகனையும், லட்சுமண ரெட்டியாரின் பெயர்த்தி என்று அந்த மணப்பெண்ணையும் அந்த மணவிழா அழைப்பில் அச்சிட்டுள்ளார். இப்படி ஒரு அழைப்பிதழை தாங்கள் காணவில்லையே என்று கலைஞர் வீட்டார் கேட்டனர். நேரு அச்சடித்த ஒரு அழைப்பிதழில் "முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல் தளபதி ஸ்டாலின் வழியாக கனிமொழி வரை" பெயர்களை அச்சிட்டுள்ளார். அது அந்த திமுக தலைமை குடும்பத்திற்கு காட்டும் விசுவாசம் எனலாம். அப்படியானால் ரெடியார் என விளித்து அச்சிடப்பட்டது யாருக்கு காட்டும் விசுவாசம். அவரது குழுவினரை அடிக்கடி சென்னையில் உள்ள ரெட்டியார் சங்க கூட்டங்களில் கண்டவர்கள் அதை "சாதி விசுவாசம்" என்கின்றனர்.

அப்படி ஒன்று திமுக வில் இருக்கிறதா? வானிருந்து வாழ்த்தும் என்ற நேருவின் நம்பிக்கை பெரியாரின் கருத்துகளுக்கு உள்ள விசவாசமா? மூடநம்பிக்கை கொண்ட சதிகாரர்களுக்கு மேல் உள்ள விசவாசமா? இந்த கேள்விகள் எல்லாமே எழாத வண்ணம் அவர் பெரும் பிளக்ச்களை திருச்சி எங்கும் வைத்த்சு விட்டார். அதில் கலைஞர், தளபதி, அவரது மனைவி சாந்தா, அவரது மகன் உதயநிதி, அவரது மனைவி, அவரது குழந்தை எல்லோரையும் படங்கள் போட்டு பதாகை வைத்து விசுவாசத்தை காட்டியுள்ளார். அதேபோல அழகிரி, அவரது மனைவி காந்தி அவர்களது பிள்ளைகள் என பதாகை. அதேபோல ராஜாத்தி, கனிமொழி என பதாகைகள். கலைஞர் வீட்டில் ஒரு நாய் பாசமாக கண்ணா என எல்லோராலும் அழைக்கப்படுமே அதை அவர் போடவில்லை என்று சில தொண்டர்கள் கூறினார். அவர் ஸ்டாலின் குழு என்பதால் கனிமொழியின் மகன் ஆதித்தனை படமாக போடவில்லை என்று இன்னொரு தொண்டர் சிலாகித்தார். எபப்டியோ, விச்வாசங்கள் திமுகவின் வாடிக்கை என்பதே தெரிகிறது. இந்த இரண்டு அழைப்பிதழ்களை தலிவரிடம் காட்டாமல் நேரு ஏமாற்றினாரா? அல்லது அதுவும் தெரிந்து கலைஞர் நம்மை ஏமாற்றினாரா?