Thursday, February 16, 2012

டில்லியில் வெடித்த காந்த குண்டு ஏன்? எதற்காக?

டில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரக அதிகாரி பிள்ளைகள் படிக்கும் பள்ளி செல்லும்போது பின்னால் சிவப்பு நிற மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஒருவர் வந்தாராம். அவர் எதோ காந்தம் போன்ற பொருளை அந்த வாகனத்தின் பின்னே ஒட்டினாராம். அதுவே வாகனத்தின் முன்னே இறுகும் பேநெட்டில் வெடித்து சிதறியதாம். அதுவும் இஸ்ரேல் தூதரகம் அருகே, கனடிய தூதரகம் அருகே அதுவும் நமது இந்திய தலைமை அமைச்சர் வீட்டிற்கு அருகே. அய்யகோ, அப்படியொரு ஆபத்தா? இப்படி நாம் அலறி துடிக்கையிலே, நமது அரசாங்கமோ யாரையும் நான்கள் குற்றம் சொல்ல விரும்பவில்லை. எந்த நாட்டையும் இந்த குண்டு வெடிப்புக்கு நாங்கள் குறை சொல்ல தயாராயில்லை. இப்படி அறிவித்துள்ளதே? இந்திய மக்களாகிய நாம் நமது அரசாங்கம் சொல்வதை விடவா அதிகமாக சிந்திக்க முடியும்? ஆனாலும் ஊடகங்களும், பதிக்கப்பட்ட நாடான இஸ்ரேல் உளவு துறையும் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமல்லவா? அப்படி பார்த்தால் அவர்கள் ஈரான் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஐ.நா. பாதுகாப்பு சபையில் அமெரிக்காவும், நெஸ்ட நாடுகளும் சேர்ந்து ஈரான் மீது குற்றம் சுமத்தி, படையெடுக்க வேண்டும் என்று கூறும்போது, இந்திய அரசு ஈரான் பக்கம் நின்றதே? அப்படிப்பட்ட இந்தியாவிற்கு "தொல்லை" தர ஈரான் நாடு முயற்சி எடுக்குமா? இப்படி ஒரு சந்தேகமும் நமக்கு எழுகிறது.

சந்தேகப்படுவது இஸ்ரேலும், அமெரிக்காவும். ஆமாம். அதனால் நீங்கள் பதில் சொல்லாமால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி ஒரு விருப்பம் இந்திய தலைமை அமைச்சரின் அலுவலகத்தில் எதிரொலிப்பது உண்மைதான். ஏன் என்றால், இதே ஈரான் நாட்டுடன் "எரிவாயு" வணிகத்தில், குழாய் மூலம் கொண்டு வரும் ஒப்பந்தம் செய்யவேண்டாம் என்று நமது தலைமை அமைச்சர் கூறினாரே? அத்தகைய அமெரிக்க சார்பு பேச்சை கேட்காமல் நட்வர்சிங் ஈரானுடன் ஒப்பந்தம் செய்து குழாய் மூலம் எரிவாயு வரும் என்று அறிவித்தாரே? அதற்காக அவரே தூக்கி அடிக்க பட்டாரே? அந்த முன்னாள் பெற்றோலிய அமைச்சர் என்ற இலாகாவை வைத்திருந்த மணிசங்கர் ஐயர் அதேபோல ஈரானுடன் குழாய் மூலம் வரும் எரிவாயு கொண்டுவரப்படும் என்றாரே? அதற்காக அந்த இலாகாவிலிருந்து அவரும் தூக்கி அடிக்கப்பட்டாரே? இப்படி ஈரான் பற்றிய அமெரிக்க எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் யாராவது பேசினால் அவ்வளவுதான். இப்படி பயமுறுத்தி வைத்திருந்த இந்திய தலைநகரில் எப்படி ஈரானுடன் நல்லுறவு கொள்ள கொள்கை முடிவு எடுக்க முடியும்? அதனால்தான் இப்படி டில்லியை மிரட்டுகிறார்கள் என்று யாரும் எண்ணிப்பார்க்கவில்லை.


ஐநா பாதுகாப்பு சபைஒயில் சிரியா பற்றிய விசாரனையில் அமெரிக்காவுடன் கைகோர்த்த இந்திய அரசு ஈரான் விசயத்தில் மட்டும் எப்படி அமெரிக்காவை எதிர்த்து ஐநாவில் முடிவு எடுக்க முடியும்? அதனால்தான் சி.ஐ.ஏ, மற்றும் மொசாத், போன்ற உலக புகழ் வாய்ந்த அமைப்புகள் இப்படி ஒரு நடவடிக்கையை நடத்தினால் டில்லி ஒழுங்காக வழிக்கு வரும் என்று எண்ணலாம் அல்லவா? . சென்ற ஆண்டு ஈரான் நாட்டின் தலைசிறந்த அணு விஞ்ஞானி இதேபோல இரண்டு பேர் சேர்ந்து வைத்த காந்த குண்டில் காலியானார் என்பதால், அது மொசாத் செய்த வேலை என்று தெரிந்ததால், இந்த டில்லி குண்டும் அதே மொசாத் செய்திருக்கலாம் அல்லவா? என்பதும் ஒரு கேள்வி. ஆகவே இந்த குண்டு வெடிப்புக்கும் ஈரான் பற்றிய இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கும் உறவு உள்ளது என்பதே புரிய வேண்டிய செய்தி.இப்போது மொசாத் ஆட்டக்காரர்கள் புதிய கதை ஒன்றை கூறுகிறார்கள். அதாவது மொசாத்திற்கே இந்த குண்டுவெடிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதாம். சென்ற ஆண்டு ஈரானின் அணு விஞ்ஞானியை கொன்றற்ற்ஹற்கு ஈரான் இந்தியாவில் பழி தீர்ப்பார்கள் என்று இஸ்ரேல் எண்ணவில்லை என்பதே அந்த செய்தி. இதில் சென்ற ஆண்டு ஈரானில் விஞ்ஞானியை கொன்றது மொசாத் தான் என்பதே செய்தி.

உண்மையில் அவர்கள் அதாவது மொசாத் கூறும் ஹிஸ்புல்லா குழுவினர் இருக்கும் இடம் சிரியாதான் ஆகவே ஹிஸ்புல்ல செய்திருந்தாலும் அது சிரியா விசயத்தில் இந்திய அரசு ரஷியா, சீனா அரசுகளுக்கு எதிராக அமெரிக்க அரசுடன் கைகோர்த்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் ராணுவ நடவடிக்கையை சிரியா மீது கட்டவிழ்த்துவிட உடன்பட்டு போனது. அதுவே காரணம் என்றாலும் தேவை இல்லாமல் எதற்காக் அமெரிக்க ஆதரவை இந்தியா ஐநா சபையில் எடுக்க வேண்டும் ? எதற்காக இன்னொரு நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையை எடுக்க உதவ வேண்டும்? இத்தகைய அமெரிக்க ஆதரவுதானே உலக பயங்கரவாத சக்திகளிடம் இந்தியாவை பகை நாடாக் ஆக்குகிறது ? இந்திய வெளிநாட்டு கொள்கையில் இப்படி அமெரிக்க சார்பு தேவையா? ஹிஸ்புல்லாவும் ஷியா குழுதான். ஈரானும் ஷியா குழுதான். அதனால்தான் இரண்டையும் போட்டு குழப்ப இஸ்ரேல் அம்ற்றும் அமெரிக்காவால் எளிதாக முடிகிறது. எப்படியோ இந்தியாவிற்கு இது தேவையற்றது.