Saturday, January 14, 2012

பாராட்டுக்கள் எல்லாம் மாலதிக்கே

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு எப்படி நகர்மயமாதல் மற்றும் உலகமயமாதலின் விளைவாக அவமான்ப்படுத்தப்படுவதும், ஒழிக்கப்படுவதும் நடைபெறுகிறது என்று கட்டுரை எழுதினோம். "பாரம்பரிய விளையாட்டுகளை கார்பொரேட் விரும்புவதில்லை" என்ற கட்டுரையை "தமிழ்நியுஸ் " நாளேடு வெளியிட்டு, சிறப்பு செய்தது. அதை பலரும் பாராட்டினார்கள். அந்த கட்டுரையின் கடைசி பகுதியில் வெளியான குறிப்பாக, எங்கள் தமிழர்களின் வீர விளையாட்டுகளை தடை செய்யக்கோரும் கார்போறேட்களும், அவர்களது பண்பாட்டை உயர்த்தி பிடிக்கும் நகர்ப்புற நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளும், தங்களது பொழுதுபோக்கு விளையாட்டான "நாலு வாகன போட்டிகளையும், இரு சக்கர வாகன போட்டிகளையும்" முதலில் மனித உயிரை குடிக்க வரும் விளையாட்டுகள் என்று "தடை" செய்ய முன்வர்வார்களா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம்.

அந்த பகுதியை பலரும் பாராட்டினார்கள். அந்த "பாராட்டுக்கள்" எல்லாம் போய் சேர வேண்டிய இடம் இப்போது டில்லியில் அமர்ந்திருக்கும் பெண் கவிஞர் மாலதி மைத்திரி இடம்தான். ஏன் என்றால் அன்று சும்மா இருந்த என்னிடம் டில்லியிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை எதிர்க்கின்ற அறிவுஜீவிகள் பற்றி பேசினார். அப்படி பேசும்போது இவர்கள் :"கார் ரேஸ், பைக் ரேஸ்" ஆகியவற்றை தடை செய்வார்களா? என்று கேட்டார். அந்த கருத்தைதான் நான் அந்த கட்டுரையில் எழுதி இருந்தேன். அதனால் அனைத்து பாராட்டுக்களும் போய் சேர வேண்டிய இடம் கவிஞர் மாலதி மைதிரி யிடம்தான்..