Friday, January 13, 2012

எஸ்.எம்.கிருஷ்ணா இப்போது அவசரமாக இலங்கை செல்வதன் மர்மம் என்ன?

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, இந்திய அரசை தொடர்ந்து ஏமாற்றி வருவது நாடறிந்த செய்தி..இந்திய அரசிடம் தமிழர் பகுதிகளில் ஐம்பதாயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க அனுமதி அளிப்பதாக ஒப்பந்தம் செய்துகொண்ட ராஜபக்சே அரசு, அதற்கான ஏற்பாடுகளை செய்யவிடாமல் தடைகளை ஏற்படுத்தி வந்தது,.தமிழ் மக்களை படுகொலை செய்த போர் குற்றங்களை இழைத்தவர் என்று தமிழ்நாடு அரசால் சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்சே, அதற்கு உதவியாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய நடுவண் அரசுடன் சேர்ந்து கொண்டு செயல்பட்டதாக உலக தமிழ் இனம் ஏற்கனவே கடும் கோபத்தில் இருக்கிறது. அததகைய கோபமான எதிர்ப்புகளை நீர்த்துபோக செய்யவும், இந்தியா அமைதிக்கு ஆதரவான நாடு என்பதுபோல காட்டிக்கொள்ளவும் எண்ணிய டில்லி அரசு, இலங்கையின் வடக்கு, மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு தர ஏற்பாடு செய்யும் நல்லதொரு நாடு என்று உலக சமூகம் மத்தியில் காட்டுவதற்கு இஹ்த்தகைய "வீடு கட்டிக் கொடுக்கும்" திட்டத்தை இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு செய்ய ஒப்புக்கொண்டது. அதை கூட காலம் தள்ளி நிறைவேற்ற விடாமல் தவிர்த்து வந்த ராஜபக்சே அரசு, சமீபத்தில் அததகைய இந்திய திட்டத்திற்கு ஒரு அனுமதியை கொடுத்துள்ளது.


அதைத்தான் இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில் பெருமையாக அறிவித்தார். அதன் பிறகு, உலக சமூகத்தின் நிர்பந்தத்தினால், இலங்கை அரசு ஒரு "நல்லிணக்க ஆணையத்தை" ஏற்படுத்தி, அதன்மூலம் கூறப்படும் ம்னித உரிமை மீறல்கள் நடந்தது பற்றி ஆய்வு செய்தது.நாலாவது வன்னிப் போரில் நடந்த மனித உரிமை மீறல்களை போர்குற்றங்கள் என்றும், தமிழின அழிப்பு என்றும் நாம் உலகம் முழுவதும் கூறி வரும் நேரத்தில் அதை சாதரணமாக மனிதஉரிமை மீறல்கள் என்றும், அது பற்றி ஆய்வு செய்யும் பொறுப்பு, இலங்கை அரசிடமே கொடுக்கப்படவேண்டும் என்றும் சில உலக நாடுகள் கூறியதை பயன்படுததி அவர்கள் இப்படி ஒரு நல்லிணக்க ஆய்வு செய்தனர். அதை அறிக்கையாக இலங்கை அரசு வெளிப்படுத்ஹ்டியது. அதில் சில கீழ்மட்ட அதிகாரிகளை சில மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு என்று முடிவு செய்து அறிவித்தது. அந்த அறிக்கை "திருப்தி" தருவதாக இல்லை என்ற கருத்ஹை இந்திய அரசு கூறியது. அதை ஒட்டி, இலங்கையில் உள்ள "தமிழ்தேசிய கூட்டமைப்பும்" இந்திய நிலைப்பாட்டை ஆதரித்தது. இத்தகைய சூழலில்தான் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா இலங்கை செல்கிறார்.

இலங்கை தீவில் ஏற்கனவே சீனா தனது ஆதிக்கத்தை அங்குள்ள சந்தையில் செலுத்தி வருவது கண்டு, அமெரிக்காவும், இந்தியாவும் வருத்தம் கொண்டன.அப்படி சாந்திக்காக இலங்கையை அனுகிவருவதில், இந்திய-சீன மோதல் போக்குகள் அல்லது போட்டி போக்குகள் இலங்கை தீவில் எதிரொலித்து வந்தன.கூடுதலாக அம்பாத்தோட்டை துறைமுகத்தை சீனா தனது ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் என்ற பயம் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இருந்து வருகிறது.அதனாலேயே அமெரிக்கா தனது ராணுவ தந்திர திட்டத்திற்கு இந்திய அரசை சார்ந்து, இந்தியாவின் தென் பகுதியான தமிழ்நாடு உட்பட்ட பகுதிகளில் தங்களது அஆதிக்க சதி திட்டத்தை அமுலாக சில முயற்ச்சிகளை செய்துவருகிறார்கள்.அதில் ஒன்றுதான் "கூடங்குளம் அணு உலை" திட்டமும். அதாவது மின்சாரம் தயாரிக்க என்ற பெயரில், அணுகுண்டு தாயாரிக்க தென் மாநிலத்தில் ஒரு இடத்தை டேஹ்ர்வு செய்து இந்திய அரசு செயல்பட இது அவர்களுக்கு உதவுகிறது.அதேபோல தேனீ மாவட்டத்தில் உள்ள மலர்களை குடைந்து அதில் "நியுற்றினோ" ஆராய்ச்சி என்ற பெயரில் ஏவுகணைகளை ஏவ எதுவாக சில வேலைகளை செய்ய இந்திய அரசு திட்டமிடுகிறது. இவ்வாறு தமிழ்நாட்டை ராணுவ கேந்திரமாக ஆக்குவதற்கு தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழக அரசுக்கும் தெரியாமலேயே இந்திய அரசு திட்டமிடுவதை உணர முடிகிறது.


இத்தகைய சூழலில் கிருஷ்ணா இலங்கை செல்கிறார். அப்போது ராஜபக்சேவுடன் சீன ராணுவ தந்திரத்திற்கு எதிராக அமெரிக்கா-இந்திய ராணுவ தந்திரத்தை வலியுறுத்தி பேசுவார் என்றும் எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி, இப்போது உலக அரங்கில் இலங்கை அரசு வசமாக மாட்டிக்கொண்டுள்ளது. அதாவது ஐக்கிய நாட்டு சபையின் கூட்டம் ஒன்று பிபரவரி மாதம் வர இருக்கிறது. அதாவது அய்.நா.வின் பாதுகாப்பு சபையின் பத்தொன்பதாவது கூட்டம் ஒன்று பிப்ரவரி மாதம் கடைசியில் கூட உள்ளது. அதில் ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றி மேற்கத்திய நாடுகள் பிரச்சனையை கிளப்ப உள்ளனர். அந்த கூட்டத்தில் இந்திய அரசு ஒரு முக்கியமான பங்கை வகிக்கும் என்று எத்ரிபார்க்க படுகிறது. அதில் இந்திய அரசு அனுமதித்தால் இலங்கை மீது போர்குற்ற விசாரணை உலக அளவில் நடத்தப்படும். இந்திய அரசு அந்த கூட்டத்தில் இலங்கைக்கு சார்பாக நிலை எடுக்க முடிவு செய்தால் ராஜபக்சே அரசு தப்பித்து கொள்ளும். அதாவது இந்திய அரசுக்கு இலங்கை அரசி நிர்ப்பந்திக்க ஒரு நல்ல வாய்ப்பு இதில் கிடைத்துள்ளது. அதனால் தான நினைத்ததை இலங்கை அரசின் மீது திணித்து விடலாமா என்று இந்திய அரசு நினைக்கிறது.

இதை ஒட்டியே சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன் ஒரு புத்தகத்தை இலங்கை தமிழர்கள் பற்றி எழுதுவதும, அதை காங்கிரஸ் தலைவர்களே வெளியிடுவதும், நடக்கிறது. அதில் ராஜீவ் ஏற்படுத்திய ஒப்பந்தப்படி வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு, மற்றும் மாகாணங்களுக்கு அதிக சுயாட்சி என்பது பற்றி பேசப்படுகிறது. அவற்றை ராஜபக்சே ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அதை இந்திய அரசு வலியுறுத்துவதும், பதின்மூன்றாம் சட்ட திருத்தத்தை வலியுறுத்தி இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதும் இந்திய அரசின் தந்திரமாக உள்ளது. இதன்மூலம் தமிழர்களுக்கு குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு நன்மை செய்வது போல காட்டலாம் என்பது ஒருபுறம். இன்னொருபுறம் உலக அரங்கில் இப்போது வலுப்பெற்று வரும் "தனி தமிழீழம்" என்ற முழக்கத்தையும் குழி தோண்டி புதைக்கலாம் என்று இந்திய அரசு சிந்திக்கும் என்பது சொல்லி தெரியவேண்டிய ஒன்றல்ல.


இந்த நேரத்தில் எதற்காக இலங்கை இந்திய சொல்வதை கேட்க வேண்டும்? உலக அரங்கில் இலங்கைக்கு சாதகமான சூழல் இப்போது நாளுக்கு, நாள் குறைந்து வருகிறது. அமெரிக்காவிலும், ஐர்ப்பிய நாடுகளிலும், அவர்கள் வெளியிடும் ச்டாம்புகளில் பிரபாகரன் படமும், ஈழ தேச வரைபடமும், வீரசாவு அடைந்த தமிழர்களின் படமும் வெளியிடப்படுகிறது என்பது இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. இவை எல்லாமே புலம் பெறந்த தமிழர்களின் பங்களிப்பாக நடந்து வருகிறது. ஆகவே இந்திய அரசின் உதவி என்பது இன்றைய ராஜபக்சே அரசுக்கு அவசியம் தேவை என்ற ஒரு சூழலில்தான் கிருஷ்ணாவின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்ற கருத்து வருகிறது.