Wednesday, January 4, 2012

ஆங்கில ஏடுகளின் பாலின இம்சை.

இன்று காலை ஏடுகளில் வந்துள்ள செய்திகளில் டில்லி பாடியாலா ஹவுசில் இருக்கும் சீ.பி.அய். நீதிமன்றத்தில் நடக்கும் இரண்டாவது அலைவரிசை ஊழல் வழக்கில் சிறைக்குள் உள்ள ஆ.ராஜாவை பற்றி அவரது முன்னாள் உதவியாளர் ஆசிர்வாதம் ஆசாரி கூறிவரும் செய்திகளையும், அவற்றை ராஜா மறுப்பதையும், சீ.பி.அய். மீது ராஜா குற்றம் சாட்டுவதையும், அதற்கு ஆசீர்வாதம் மறுப்பு கொடுப்பதையும் ஒட்டி, எழுந்துள்ள வாத, பிரதிவாதங்களை "சூடாக" போடுவதில், தொடர்ச்சிகாட்டியுள்ளன. சரி. அவர்களுக்கு அந்த ஊழல் சம்பந்தப்பட்ட வழக்கும், அதன் விசாரணையும் "சுவை" யானதாக இருக்கும் அதனால் அவற்றை வெளியிடுகிறார்கள். அதுபோன்ற சுவைகளை வாசகர்களும் ஆர்வமாக படிப்பார்கள், அதனால அவற்றை வெளியிடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்பது நமக்கும் புரிகிறது.

அந்த விவாதத்தில் இன்று ராஜா, அந்த ஆசீவாததிடம் கூறியதாகவும், அல்லது ராஜா சென்ற இடமெல்லாம் தனக்கு தெரியும் என்ற ரீதியில் ஆசீர்வாதம் எடுத்த "வாந்தியையும்" எழுதியிருக்கிறார்கள். சரி. அதுவும்கூட, ராஜா மீது குற்றம் சாட்டும் கூட்டத்திற்கு தேவைதான் என்பதால் எழுதுகிறார்கள் என்று வைத்து கொள்வோம். இந்த ஆசீர்வாதம் பற்றி ஏற்கனவே சென்ற ஆண்டே அதாவது 2009 இலேயே நாம் எழுதி இருந்தோம்.அதாவது இந்த ஆசீர்வாதம் உண்மையில் ராஜாவின் உதவியாளராக இருந்த போது, ரயில்வே துறையில் அதிகாரியாக இருந்தவர் என்பதும், ஏதோ தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் ராஜா அவரை நம்பி தனது உதவியாளராக போட்டார் எனபதும், அவர் திருச்சி மாவட்ட லால்குடி ஊரை சேர்ந்த உடையார் சமூக பின்னணி கொண்டவர் எனபதும், அவரை "தயா" அழைத்தார் எனபதும், அவரும் ராஜா வீட்டில் உள்ள போடோ படங்கள் உட்பட வெளிநாட்டு காரர்கள் உடன் ராஜா எடுத்து கொண்ட படங்களுடன் "தயா தயவு" நாடி சென்று விட்டார் எனபதும் நாம் ஏற்கனவே அப்போதே எழுதி இருந்தோம். அவரைத்தான் இப்போது சீ.பி.அய்.கொண்டுவந்து ராஜாவிற்கு எதிராக நிறுத்துகிறது என்பதிலிருந்து நீங்களே புரிந்து கொள்ளவேண்டியது ஏராளம்.


ஆனால் அதற்காக இன்று ஏடுகளில் நேற்று நீதிமன்றத்தில் ஆசீர்வாதம் கூறியதாக, ஆ.ராஜா யாரையெல்லாம் நேரில்போய் அவ்வப்போது சந்திப்பார் என்ற விவரங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் பல திமுக எம்.பி.களையும் அவ்வப்போது சந்திப்பார் என்றும், கோயங்கா உட்பட, கார்பொரேட் முதலாளிகளையு, அதிகாரிகளையும் சந்திப்பார் என்றும் கூறியுள்ளார். அப்பை கூறும்போது, கனிமொழியையும் அவரது வீட்டில் போய் சந்திப்பார் என்றும்கூறியுள்ளார். இதில் ராஜா சந்தித்த திமுக எம்.பி.கள் பட்டியலில் கனிமொழியும் வருகிறார். இதில் ஒன்றும் புதிய செய்தி இல்லை. ஆனால் கனிமொழி திமுக தலிவரின், மற்றும் தமிழக முதல்வரின் மகள் என்ற காரணத்தால் அந்த சந்திப்பில் "ஆரசியல் சதி" இருக்கலாம் என்று கூற எத்தனிப்பதும் கூட நடக்கும். ஆனால் அந்த ஆச்செர்வாதம் என்ற ஒய்வு பெற்ற ரயில்வே அதிகாரி கூறும்போது, கனிமொழியை வீட்டில் சந்திக்க போகிறேன் என்று ராஜா சொல்லி சென்றுள்ளார் என்றும் கூறுகிறார். அது ராஜாவின் "தந்திரம்" என்று யாரும் எண்ணிப்பார்க்கவில்லை.


தான் செய்யும் காரியங்களுக்கு ஒரு அமைச்சர் அதனது தலைவரின் "ஒப்புதல்" இருக்கிறது என்று காட்ட விரும்பி இருக்கிறார். அது இந்த " மூட கிழவனுக்கு" புரிந்ததா என்பது நமக்கு தெரியாது. ஆனாலும் ஏன் ஒரு அரசியல் முக்கியத்துவ பிரமுகரை சந்திக்க செல்வதை ராஜா என்ற மனிதர் சொல்லி செல்கிறார் என்று எண்ணினால் புரிந்து விடும். அதையும் தாண்டி, ராஜா கனிமொழியை சந்திக்க செல்லும்போது, "தொந்திரவு" செய்யவேண்டாம் என்று கூறியதாக இந்த ஆசீர்வதாம் கூறியுள்ளார். இந்த கூற்றில்தான் "பாலின இழிவுபடுத்தல்" இருக்கிறது. ஒரு ஆண், ஒரு பெண்ணை சந்திக்க சென்றால் இந்த "ஆணாதிக்க" உலகத்திற்கு அது "வக்கிரபுத்தியுடன் தான்" தெரியும். அதிலும் ஒன்று ஆசீர்வாததினுடைய புத்தியோ, அல்லது அவர் சொல்வது உண்மையானால் ராஜாவினுடைய புத்தியோ "வக்கிர" சிந்தனைக்கு வழி வகுக்க வேண்டும் என்றே கூறப்பட்டதாக இருக்க வேண்டும். திமுக கட்சிக்குள்ளும், ஆட்சியிலுள்ள அய்.மு.கூ. ஆட்சிக்குள்ளும் தான் முக்கிய பிரமுகர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாக காட்டிக் கொல்வது ராஜாவிற்கு "தேவைப்ப்பட்டிருக்கலாம்".

அதாவது தான் செய்யும் "கள்ள" காரியத்தை மறைக்க ராஜாவிற்கு முக்கிய இடத்தில் தான் இருக்கிறேன் என்று கூறவேண்டிய "கட்டாயம்" இருந்தது என்பது நமக்கு புரிகிறது. ஏன் அப்படி? முதலில் "தான்தான்" அந்த அய்.டி.அமைச்சராக வந்து "கால்வாங்க" போகிறோம் என்றால் அபப்டி ஒரு "தேவை" வந்திருக்காது. ஆனால் ஏற்கனவே இந்த "தொழிலில்" கேட்டிகார்ராக செயல்பட்ட "தொழிலில் வெற்றி பெற்ற" ஒரு அமைச்சர்னா தாயாவிடம் இருந்து தலைவர் கலைஞர் "தன்னிடம்" இந்த களவாணி இலாகாவை "பிடிங்கி" கொடுத்துள்ள நிலையில் அதில் களவான்கும் போது, தான் பெரிய இடத்து "ஆள்" என்று காட்டவேண்டிய புத்தி ராஜாவிற்கு இருக்கும் என்பதை நாம் புரிந்துய் கொள்ள வேண்டும்.அதனாலேயே ராஜா, கனிமொழி வீட்டிற்கு செல்லும்போது அப்படிகூற முற்பட்டுள்ளார். ஆனால் அதை இந்த ஏடுகள் எப்படி புரிந்து கொள்ளவேண்டும்?

ஆணாதிக்க வெறி பிடித்த ஆங்கில ஏடுகளும், அதில் சில குறிப்பிட்ட ஏடுகளில் உள்ள அரசியல் சக்திகளின் எடுபிடிகளும் அந்த செய்தியை படு அசிங்கமாக் போட திர்ஹயர எனபதை காட்டியுள்ளன. உதாரணமாக டெக்கான் கிரோனிகள் என்ற ஆங்கில ஏடு இன்று காலையில், அந்த செய்தியை முதல் பக்கத்தில், " தொந்திரவு செய்யாதீர்கள், அவர்கள் ஒன்றாக இருக்கும்போது" என்பதாக வெளியிட்டுள்ளது. இது கேவலமான ஒரு "ஆணாதிக்க வெறி பிடித்த" அரசியல் சதிகாரர்களின் செயல்பாடு எனபது எத்தனை பேருக்கு தெரியும்? இத்தகைய வெளிப்பாடு. வரும்போது, அதை இந்த சமூகம் எதிர்க்க வேண்டும். தளபதி ஸ்டாலினுக்கு வேண்டியவர்கள் அந்த குறிப்பிட்ட ஏட்டில் இருக்கலாம். அது வேறு. அந்த ஏட்டின் முக்கிய ஆள், கனிமொழியுடன் ஒரு காலத்தில் நண்பராக இருந்தவர் இல்லையா? என்றும் மக்கள் கேட்கிறார்கள். அப்படி இருந்தும் ஏன் இப்படி எழுதுகிறார்கள்?


ஒரு பெண் பிரபல அதிகாரம் படைத்த குடும்பத்தில் இருந்து வரும்போது, அவர் எளிதில் சாதரணமாக மக்களுடன் பழகும் நற்குணத்தை கொண்டிருக்கும் போது, அவருடன் "இலக்கியம்" பேசிக்கொண்டும், "பெண்ணுரிமை" பேசிக் கொண்டும் ஒரு ஆண் தன்னையும் பிரபலமாக ஆக்குவதற்கு பழக முடியும். அது "அறிவுஜீவிகளின்" நட்பு என்று இந்த ஆணாதிக்க உலகம் சொல்லிவிடும். அதே பெண் அதிகாரம் இழந்ததாக் கருதப்படும் சூழலில், "திஹார் சிறையில்" மாட்டும் போது, அவரை பற்றி இழிவாக எழுத,பேச இந்த உலகம் தயார் என்றால் இது எப்படிப்பட்ட உலகம்? ஒரு எழுத்தாளன் அந்த பெண் பெயரை சொல்லி தன்னை பிரபலப்படுத்தி கொள்வான், அதேசமயம் அந்த பெண் சிறையில் வாடினால் நக்கல் செய்து எழுதுவான். அவன் எந்த வகை? இப்போது இப்படி ஆங்கில ஏட்டில் எழியுல்லவர் எந்த வகை? அத்தகைய சூழலை ஏற்படுத்தி தான் செய்யும், அல்லது செய்த தவறுகளுக்கு "பிரபல பிரமுகர்களுடன் நெருக்கம்" என்ர்பதுபோல சித்தரிக்கும் அரசியல்வாதி எந்த வகை? இவர்களை கேள்வி கேட்டு "திணறடித்து" அதன்மூலம் அம்பலப்படுத்தும் வேலையை செய்தால் மட்டும்தான் "பெண்ணியம்" பேசும் பெரியார் மண் நிம்மதி பெறும்.