Tuesday, November 20, 2012

அணு உலை எதிர்ப்பாளர்களும், மீனவர் சங்கங்களும் ஆழ்ந்த அஞ்சலி


       மருத்துவர் சி.என்.தெய்வநாயகம் அவர்களின் மரணம் எல்லோரையும் போல அணு உலை எதிர்ப்பாளர்களையும், மீனவர் சங்கங்களையும்  உலுக்கி விட்டது. நாளை அதாவது புதன்கிழமைதான் மருத்துவரின் இறுதி ஊர்வலம் அவரது மூன்று மகள்களும் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த பிறகு காலை பதினோரு மணிக்கு அவரது இல்லமான தெற்கு உஸ்மான் சாலை அருகே உள்ள கீதாஞ்சலி உணவு விடுதி அருகே உள்ள தெருவிலிருந்து புறப்பட்டு, அருகே உள்ள கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் அடக்கம் செய்ய இருப்பதால், அந்த வட்டாரத்திலும் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற இருபத்தைந்து ஆண்டுகளாக மருத்துவரின் அறிவியல் அறிவின் வழிகாட்டலில் இயங்கும்  ஆர்வலர்கள், அனைத்து மீனவர் சங்கங்களுடன் இணைந்து, ஒரு சுவரொட்டியை ஒட்டி உள்ளனர்.அதில் " கூடங்குளம், கல்ப்பாக்கம் அணு உலைகளின் ஆபத்தை, அறிவியல் ரீதியாக விளக்கிய, மருத்துவர் சி.என்.தெய்வநாயகம்  அவர்களின் மறைவுக்கு அஞ்சலி" என்பதாக நீல வண்ண சுவரொட்டி ஒன்றை ஒட்டி உள்ளனர். இதுதான் வரலாற்றில் சி.என்.டி. இன் "இடத்தை" காட்டுகிறது.

                             இன்று "தி ஹிந்து" ஆங்கில நாளேட்டிலும், செயற்பாட்டாளர்கள் கூறுவதாக மருத்துவரின் முக்கிய பங்கு  கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போர் தொடங்கிய பொது, அதாவது 1988, 89 ஆண்டுகளில் அவர் அறிவியல் ரீதியாக ஆற்றிய பங்கு  குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல அன்றைய டி.ஜி.பி. ராஜசேகரன் நாயர் தனது மனைவியின் மருத்துவத்திற்கு சி.என்.டி.யின் உதவியை நாடியநேரம், அக்கறை என்ற அடிப்படையில், மருத்துவரிடம்  " தாங்கள் அணு சங்கதியை எதிர்ப்பது, மத்திய அரசின் கொள்கைக்கு எதிரானது, அகவே  அந்த எதிர்ப்பை கைவிடுங்கள்" என்று கூறிய போது, " ஒரு மருத்துவரின் கடமை, உண்மைகளை மக்களிடம் கூறுவதுதான். அணு சங்கதியின் கதிர் வீச்சு ஆபத்தை நானா மக்களிடம் கூறுவது எனது அடிப்படை கடமை. அதற்காக நேநேகள் கைது செய்வதானாலும் இப்போதே கைது செய்யுங்கள்" என்று கூறினார்.அதேபோல "போக்ரான் இரண்டு" என்ற அணு குண்டை இந்திய அரசு சோதனை செய்தபோது அதை எதிர்த்த கருத்து கூட்டங்களை  எங்களிடம் போடச்சொல்லி அதில் முக்கிய உரைகளை நிகழ்த்தி எங்களுக்கு அறிவு தந்தவர்  என்பதை எப்படி நாங்கள் அவரது நினைவில் இன்று மறக்க முடியும்?   

                                               
      

Monday, November 19, 2012

மகத்தான மருத்துவர் மரணம்


    மருத்துவர் சி.என்.தெய்வநாயகம் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி "ஒரு வரலாறு நம்மை விட்டு சென்றுவிட்டது" என்று நம்மை கூறவைக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன்பு நான் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், அன்றைய ஊடகவியலாளர் யு.என்.ஐ. ரமேஷ்,  மருத்துவர் சி.என்.தெய்வநாயகத்தின் இல்லத்திற்கு "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கலந்தாலோசனைக்காக" கூட்டி சென்றார். தொடர்ந்து அதுப்ன்ர கலந்தாலோசனைகளுகாகவும், அணுக கதிர்வீச்சின் ஆபத்துக்களை கற்றுக் கொள்ளவும் அவரை சந்தித்துவந்தோம். கல்பாக்கம் அணு உலையில் பணியாற்றும் ஊழியர்களை எப்படி கதிர் வீச்சு பாதித்துள்ளது என்று ஒவ்வொரு ஊழியரின் பாதிப்பு வரலாடரியும் மருத்துவர் பட்டியலிட்டு வைத்திருந்தார். அதையே "காணொளியாக" ஆக்கி காண்பித்தார். பரப்புரைக்கு பயன்படுத்தினோம். போர் எதிர்ப்பு கூட்டங்களில் எண்கள் அழைப்பை ஏற்று கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுவார். கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகே லட்சுமணன்,காசி, கணேசன் மூலம் ஏற்பாடு செய்த கூட்டத்தி எங்கள் அழைப்பை ஏற்று அவர் வந்து கலந்துகொண்டது இன்றளவும் நினைவில் நிற்கிறது.

                    தொடர்ந்து அணு உலை எதிர்ப்பு ஆலோசனைகளில் அவர் வீட்டில்னடக்கும்போது, நித்தியானந்த் ஜெயராமனை ஒரு முறை கூட்டி சென்றது இன்றுவரை நினைவில் இருக்கிறது. இன்று நித்தி ஒரு பிரபல சுற்று சூழல் ஆர்வலார்க்க இருக்கிறார். ஆண்டன் கோமஸ் தலைமையில் அன்று நாங்கள் கட்டிய "கூடங்குளம் அணு உஅய் எதிர்ப்பு கூட்டமைப்பு" உருவாக அறிவியல் சரக்கு மருத்துவர் சி.என்.டி. மூலம் எங்களுக்கு கிடைத்தது.அவர் கூடங்குளம் அருகே உள்ள "செட்டிகுளம்" ஊரை சேர்ந்தவர் என்பது பின்னால் தெரிந்தது. பிறகு தனியாரிடமிருந்து அரசு எடுத்த  ராமச்சந்திர மருத்துவமனையை மீண்டும் தனியாரிடம் கொடுத்தபோது, அந்த மருத்துவமனையின் டீனாக இருந்த சி.என்.டி. அதை எதிர்த்தார் எனபதும் வரலாறு. அரசு பொறுப்பில் அந்த ராமச்சந்திரா மருத்துவமனை இருக்கும்போது, அதில் எல்லாமே இலவசமாக இருக்க கூடாது என்றும், ஏழை மக்களுக்கும் பொறுப்பு வருவதற்கு சிறிய அளவில் பணம் வாங்க வேண்டும் என்றும் முதல்வர் கலைஞரிடம் பேசியது நினைவில் வருகிறது. மருத்துவர் அமுலோற்பவனாதன் உடன் சேர்ந்து, "அமைக்கான மருத்துவர்கள்" என்ற ஒரு வடிவத்தை ஏற்படுத்தி அதன்மூலம் அவர் செய்திகளை வெளியிட்டு வந்தார். அப்போதும் அவர் அரசுப் பணிதான் செய்துவந்தார். தாம்பரம் சித்தா மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரத்துடன் இருக்கும்போது, தமிழ் சித்த மருத்துவத்தின் மூலம் "எய்ட்ஸ் " என்ற ஆட்கொல்லி நோய்க்கு சித்தா மருந்து ஆராய்ச்சி நடத்தி கண்டுபிடித்து, பல இளம் மருத்துவர்குக்கு பயிற்சி கொடுத்தார். 

                    பிற்காலத்தில் சி.என்.டி. தமிழ் தேசிய உணர்வாளராக ஆகி, பழ.நெடுமாறன் உடன் செயல்பட்டார். அவரது சி.என்.டி. பள்ளி மைதானம் திமுக ஆட்சி காலத்தில் கூட்டம் நடத்த அரங்கு கிடைக்காத "ஈழ உணர்வாளர்களுக்கும், புரட்சிகர உணர்வாளர்களுக்கும்" கூட்ட மைதானமாக மாறியதும் அவரது அனுமதியால்தான். அந்த மகத்தான மனிதர் மறைவு மாபெரும் இழப்புதான். 

Saturday, November 10, 2012

தமிழர் விழாவா தீபாவளி?

தமிழர் விழாவா தீபாவளி?
    
     நரகனை கொன்ற நாள் 
     நல்விழா நாளா?
     நரகன் யார்? 
     நல்லனா? தீயனா?
     அசுரன் என்றவனை 
     அழைக்கின்றாரே?
      இராக்கதன் என்றும் 
      இயம்புகின்றாரே?
      அசுரன் என்றால் 
      தமிழன் என்றல்லோ பொருள்?

      பழக்கம் தனில் 
     ஒழுக்கம் இல்லையேல் 
     கழுத்து போயினும் 
     கைக்கொளல் வேண்டாம்.
     அதனால் தீபாவளியை 
     தீவாளி என விடேல்.
     --------------------- இதை எழுதியவர் புரட்சி கவிஞர் பாரதி தாசன். இப்போப்தாவது எங்களை திட்டாமல்  சிறிது செவி மடுப்பீர்களா?  நானும்  1988 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், பகிரங்க வாழ்க்கைக்கு வருகிறோமே, இதுபோன்ற நல்ல கருத்துக்களை பரப்பலாமே என்று  இரபத்தி நாலு ஆண்டுகளாக இந்த கவிதையை ஒப்பித்து வருகிறேன்  காட்சி ஊடகங்களில், இனையதளத்தில்  நக்கீரன் உட்பட அச்சு ஊடகங்களில் இந்த இரபத்தி நான்கு  ஆண்டுகளாக சளைக்காமல் இந்த பாரதிதாசனின் கவிதையை ஒப்பித்து வருகிறேன். " தமிழன் காசை கரி ஆக்குகிறான். சிலர் "கரியை காசு ஆக்குகிறார்கள்" என்றும் கூறிவருகிறேன். ஆனால் நம்மால் சாதிக்க முடியாததை  "இணைய தளம்" சத்தித்து வருகிறது. உயர தொழில் நுட்பத்தால், இன்று தமிழ் இளைஞர்கள் "ஆபத்து இல்லாத  வெடிகளையும், புஸ வானங்களையும், கணினியில் பார்த்து மகிழத் தொடக்கி விட்டனர்." எப்படியோ வீட்டு பக்கத்தில் "வெடி சத்தம்" கொஞ்சம் குறைந்து வருகிறது.

Thursday, November 8, 2012

ஸ்டாலினை மறித்த தமிழ்ப் பெண்கள்?


     லண்டன்  சென்றார் ஸ்டாலின். ஜெனிவா சென்று ஐ.நா பொறுப்பாளரை சந்தித்து "தனத்தை" தந்த மடலை கொடுத்துவிட்டு, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் "நவீன் பிள்ளையையும்" சந்தித்து பேசிவிட்டு, லண்டன் ஸ்டாலின். அடேயப்பா, எவ்வளவு  கடின வேலைகள்? உடன் சென்ற டி .ஆர்பாலு அந்த பிரமுகர்களிடம் விவரமாக பேசியதையும் காட்சி ஊடகங்களில் கண்டோம். அதன் பிறகு லண்டன் சென்றார் ஸ்டாலின். உடன் சென்ற டி கே.எஸ்.இளங்கோவன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஆகியோர் என்ன செய்தார்களோ, யாருக்கும் தெரியாது, ஸ்டாலின் சென்றார், ஸ்டாலின் பெச்டினார், ஸ்டாலின் மனு கொடுத்தார், ஸ்டாலின் நேர்காணல் கொடுத்தார், ஸ்டாலின் ஸ்கார்ப் போட்டிருந்தார், ஸ்டாலின் கோட்டு ,சூட்டு போட்டிருந்தார். ஸ்டாலின் லண்டன் சென்றார். லண்டனில் "பிரிட்டிஷ் தமிழ் பேரவை" ஏற்பாடு செய்த மாநாட்டில் ஸ்டாலின் கலந்து கொண்டார். ஸ்டாலினுக்கு அந்த பேரவை காரர்களை ஏற்கனவே தெரி யுமா? ஸ்டாலின் தங்கச்சிக்கு அவர்களை தெரியும் ஸ்டாலின் தங்கை கனிமொழிக்கு தான் அந்த aழைப்பு, கழகத்திற்கான அழைப்பு வந்தது. தலைவர் அதை டி .ஆர்.பாலு, டிகே.எஸ்.இளங்கோவன் ஆகியோரை அழைத்து கொடுக்கப்போகும் செய்தியை அறிந்த ஸ்டாலின் தலைவரிடம் முந்திக் கொண்டார். தானே போவதாக அறிவித்தார்.

                       லண்டன் மாநாட்டில் ஸ்டாலின் பேசினார். ஈழச் சூழல் ப[ஆற்றி பேசினார். ஒன்றரை லட்சம் பேர் கொலை செய்யப்பட்டதை  பேசினார்.  தொண்ணூறு ஆயிரம் பேர் தமிழ் பெண்கள் விதவைகளாக இருப்பதை பேசினார். போர் குற்றங்கள் பற்றி பேசினார். இவையெல்லாம் ஸ்டாலினுக்கு ஏற்கனவே தெரியுமா? தெரிய வேண்டிய அவசியமில்லை. இப்போது பேசினார். பேசிவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினார். மூன்று தமிழ் பெண்கள் மறித்துக் கொண்டார்கள். நீக்க பேசியது எல்லாம் சரி. இவையெல்லாம் நாங்கள் போர் nஅடைக்கும்போதே கூறினோமே? நீங்கள்தானே ஆட்சியில் இருந்தீவ்ர்கள்? அப்போது உங்கள் தனத்தை முதல்வராக இருந்தாரே? நீங்கள் துணை முதல்வராக இருந்தீர்களே? அப்போது பேசி இருந்தால் பலன் கிடைத்திருக்குமே? போர் குற்றங்கள் நின்று போயிருக்குமே? அப்போது பேசாமல் இப்போது பேசி என்ன பயன்? இவ்வாறு  கேட்டார்கள்.பதில் சொல்ல முடியாமல் "எப்போ பேசறது? எப்ப பேசறது? " என்று திணறினார் ஸ்டாலின். டி .ஆர்.பாலுவும், கே.எஸ்.ராதாகிருஷ்ணனும், அந்த பெண்களுக்கு சமாதானம் கூறி அனுப்பி விட்டனர். அருகே இருந்த திருமாவளவன் ஒன்றும்  குறுக்கிட்டு பேசவில்லையே? என்று ஸ்டாலினுக்கு வருத்தமாம். அருகே கோ.க.மணியும் தான் இருந்தார். அவர்களுக்கு  அந்த பெண்கள் கேட்பது நியாயம்தான்  என்று தெரியுமே?  

புரட்சியை அழிக்கிறதே "சாதி"

புரட்சியை அழிக்கிறதே "சாதி"
     தென் மாவட்டங்களில் வழமையே இப்படி சாதி சண்டையை மூட்டி விடுவதுதான். ஆனால் வாடா மாவட்டங்களில் உள்ள சாதிகள் தங்களுக்குள் முரண்பட்டு இருந்தாலும் அவை டேஹ்ருவில் இறங்கி சண்டை போட்டுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறி வந்தார்கள் ஆனால் அதை இன்று பொய்யாக்கி விட்டது "தர்மபுரி" மாவட்டம்  தருமபுரி மாவட்டத்தில் உள்ள "நாயகன்கொட்டை" பிரபலமான் ஊர். எதற்கு?' நக்சல்பாரி கொள்கைகளில்   
முழு ஆதரவு கொடுத்து வந்த ஊர். அங்குதான் நக்சல்பாரி புரட்சியாளர் களான தோழர் அப்புவின் சிலையும், தோழர் பாலனின் சிலையும்  வைக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு நகசல்பாரி கருத்துக்களை உள்வாங்கிய ஒரு இடம் அது. அங்கெ சாதிகளை தாண்டி தோழர்கள் வலம் வந்தனர் நாயக்கன்கொட்டை கிராம வன்னியர்கள் அருகே உள்ள தலித் கிராமங்களில் வாழும் மக்களுடன் "தோழமையாக" பழகி வாழ்ந்ததால், அந்த தலித் கிராமங்களான "நத்தம், அண்ணா நகர்" ஆகியவை நகசல்பாரி கருத்துகளுக்கு, தோழர்களுக்கு முழு ஆதரவு கொடுற்ற்ஹ்து வந்த வரலாறு உண்டு. இப்போது அங்கே நேற்று "சாதி மோதலா?" என்பதே இப்போது கேள்வி.

                                  நாயக்கன்கொட்டையை சேர்ந்த நாகராஜ் என்ற வன்னியர் தோழருக்கு ஒரு மகள். மகள் படித்து நர்சாக ஆனபின்பு, "சாதி தாண்டிய மானுடப்பார்வையை" பெறக்கூடாதா? அந்த பெண் ஒரு தலித் இளைஞரை "காதலித்து திருமணம் " செய்துகொண்டார் இதை "வன்னிய சாதிவெறி" ஒப்புக் கொள்ளவில்லை அந்த பெண்ணை நிர்ப்பந்தம் செய்தது. பெண் தைரியமாக "சாதி மறுக்கும் மனுஷியாக" தன்னை அறிவித்து கொண்டார் தான் காதலித்து திருமணம் செய்து கொண்டதை உறுதியாக அறிவித்தார். பொறுக்குமா சாதி வெறிக்கு? சாதி தாண்டி "காதலித்தால்" சாதி தாண்டி மனம் ஒற்றி மணம் முடித்தால்  "சாதியை" வைத்து எப்படி அரசியல் செய்வது என்று சிந்தித்தார்களா? ஆயிரம் பேருக்கு மேல் திரண்டு "நத்தம், அண்ணா நகர்" என்ற தலித் கிராமங்களுக்கு "தீ" வைத்தனர். வநீயராக இறாமல் "தோழராக" எப்படி நாகராஜன் இருக்கலாம் என்று அவரை மிரட்டினர். நாகராஜன் "நேற்று தற்கொலை" செய்துகொண்டார். சாதி வெறியர்கள் தெருவில் இறங்கினர் காவல்துறை நுழைந்தது. இன்று நாகராஜனின் "மச்சினி"யும் தற்கொலை செய்து கொண்டார் என்று செயுதிகள் வருகின்றன மீண்டும் சாதி வெறியர்கள் "ஆட்டம் போட" முயல்கின்றனர். அப்படியானால் சாதி தாண்டிய மண்ணையும், இந்த சாதி வெறியர்கள் நெற்றி கொண்டு விட்டார்களே? 

ஜாலியை கொலை செய்த சாதி

ஜாலியை கொலை செய்த சாதி 
    தேவர் ஜெயந்தி இந்த முறை வந்தபோது பல வன்முறைகள் நடந்த்தது முதலில் முதுகளுத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர்களும் வேன் வாகனத்தில் . சென்றவர்களும் "கற்களால்" தாக்கப்பட்டதும் அதில் மூவர் மரணம் அடைந்ததும் நம்மை "பதற" வைத்து. அதற்க்கு முன்பே மறுத்து பாண்டியர் பிறந்த நாளில் திருப்புவனம் அருகே 'நிராயுதபாணியான" துணை ஆய்வாளரை, ஆயுதம் தாங்கிய "கத்தி" இளைஞர்கள் கொலை செய்தது கண்டு நாடே அதிர்ச்சி அடைந்தது. அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் "திருச்ஹ்கிழி" வட்டாரத்தில் அந்த மாவட்டம் முழுக்க அதிகமாக இருக்கும் "சாதி" அந்த இடத்தில் மட்டும் சிறிய அளவே இருப்பதால் "இருவர்" கொலை செய்யப்பட்டது "பழிக்கு பழி" வாங்கும் " காட்டுமிராண்டி" தனத்தை காட்டியது. அதற்கும் "பழிக்கு பழி" வாங்க மதுரை அருகே சிந்தாமணி வட்டாரம் வந்த "சுமோ" வாகனத்தில் இருந்த "இருபது" பேர மீது "பெட்ரோல் குண்டு" எரிந்ததை பார்த்து "தாங்கமுடியாத" துயரம் நம்மை பற்றிக் கொண்டது. 

                    ஆனால் அந்த சுமோ வில் வந்த இளைஞர்களை இரவில் மருத்துவமனையில் 'சிகிச்சை" கொடுக்க முடியாத அளவில் "குடி" செல்வாக்கு செலுத்தியது  என தெரிய வரும்போது, "அய்யகோ" இது என்ன வேதனை என்று எண்ணத் தொடங்கினோம் ஆனால் அதில் பதிக்கப்பட்ட இளைஞர்கள் அனைவரும் "இருபது" வயதிற்குள் என்று தெரியும்போது "இளைய சமுதாயத்தை" பார்த்து அதிர்ச்சி வந்தது. அடுத்து "மறவர்" இளைஞர்களுடன் அந்த இருபது பேர் கும்பலில், இஅரண்டு பிள்ளைமார், ஒரு கோனார், ஒரு தேவேந்தரர் இளைஞர்களும் பாதிக்கப்பட்டனர் என்று தெரியம் பொது, "அவர்கள் தேவர் ஜெயந்திக்கு"  "சாதி" உணர்வுடன் செல்லவில்லை என்பதும், இன்றைய இ;ளைஞர்கள் "ஜாலி" உணர்வுடன் சென்றிருக்கிறார்கள் என்பதும் "ஆதாரபூர்வமாக" வெளிப்பட்டுவிட்டது. அப்படியானால் ஜாலி உணர்வுடன் சென்றவர்களை "சாதி" உணர்வுடன் தாக்கி கொலை செய்திருக்கிறார்களே? என்று வேதனைப்பட வேண்டி வருகிறது. இன்றைய இளைஞர்கள் சாதியை தாண்டி "ஜாலி"யை கையில் எடுத்தாலும் பழைய தலைவர்கள் "மதுக்கடை" மூடப்பட்ட நாளிலும் மது கொடுத்து கூட்டம் சேர்த்து, தனது "ஆள்பலம்" காட்ட செத்தான் விளைவு இதுவா? என்று எண்ணத் தோன்றுகிறது. அதற்காக சுமோவில் "தொங்கி" கொண்டு செல்வோரை "பெட்ரோல் குண்டு" எரியும் போக்கு "காட்டுமிராண்டி" தானம்தானே? 

Monday, November 5, 2012

"கூடங்குளம் அணு உலை சட்ட விரோதமாக"

அன்புடையீர்,
    இன்று "தி ஹிந்து" ஆங்கில நாளேட்டில் 15 ஆம் பக்கத்தில், ஒரு ஆணித்தரமான கட்டுரை வெளிவந்துள்ளது. இந்த கட்டுரை "கூடங்குளம் அணு உலை சட்ட விரோதமாக" அமைக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரத்தை விரவாக கூறுகிறது. கட்டுரையை எழுதியவர்கள் "வழக்கறிஞர் நாகசைலா,மற்றும் பி.யு.சி.எல். அமைப்பின் ஆகில இந்திய பொது செயலாளரான வி.சுரேஷ் " ஆகியோர். பி.யு.சி.எல். தமிழ்நாடு கிளை வழமையாக கூறிவரும் குற்றச்சாட்டான "கூடங்குளம் அணு உலை வெறும் விதி மீறலில் கட்டப்படவில்லை, மாறாக "சட்டமீறலில் " கட்டப்பட்டுள்ளது"என்பதற்கான  ஆதாரங்களை இந்த கட்டுரை முன்வைக்கிறது. "கடலோர ஒழுங்குபடுத்தல் மண்டலம்" அறிவிப்பாணை, " சுற்று சூழல் தாக்கம் பற்றிய மதிப்பீடு" அறிவிப்பனை ஆகியவற்றை எப்படி "அணு சக்தி துறை" தொடங்கியுள்ள "இந்திய அணு சக்தி கார்பொரேசன் லிமிடட் " என்ற "வணிக" தேவைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்  மீறியுள்ளது என்பதை இந்த கட்டுரை தெளிவாக சுட்டி காட்டுகிறது. ஆனால் சிலர் கூறுவது போல "என்.பி.சி.எல்." என்ற "அணு சக்தி கார்பொரேசன் லிமிடட் " ஏதோ சாதாரணமாக  அணுசக்தி துறையின்  கிளைதான்"   என்பது "தவறு" எனபதையும்  இந்த கட்டுரையின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். என்.பி.சி.எல். என்ற நிறுவனம் "வணிக தேவைகளுக்காக" நிறுவப்பட்டுள்ளதால், எல்லா "அரசு அறிவிப்பனைகையும்"  அரசாங்க தேவை என்ற அடிப்படையில் "நிராகரித்து செல்ல முடியாது" என்பதையும் இந்த கட்டுரை வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.