Friday, August 24, 2012

செந்தூரனின் அத்தை சாவுக்கு கியூ பிரிவு பொறுப்பேற்குமா?


     செந்தூரன் என்ற இளைஞர் பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமில், அகஸ்ட் 6 ஆம் நாள் தொடங்கி, "சாகும்வரை பட்டினி போரை" நடத்தி, அனைத்து ஈழத்தமிழர்களையும், செங்கல்பட்டு, பூந்தமல்லி முகாம்களில் இருந்து விடுதலை செய்து, பொதுவான அகதிகள் முகாமில் கொண்டு விட வேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளார். அந்த கோரிக்கையை ஆதரித்து பூந்தமல்லிமுகாமில் உள்ள மீதம் ஏழு ஈழத்தமிழர்களும், கடந்த ஐந்து நாட்களாக  அவருடன் பட்டினி போர் நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக "தண்ணீர்" குடிப்பதைக் கூட செந்தூரன் நிறுத்தி  விட்டார். செங்கல்பட்டு முகாமில் 38  ஈழத்தமிழர்களும்,  பூந்தமல்லி முகாமில் 8 ஈழத்தமிழர்களும் இதுபோல அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு சிறிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் அனைத்து வழக்குகளிலும் அவர்கள் அனைவருமே நீதிமன்ற "பிணை" வாங்கி உள்ளனர். இத்தகைய சூழலில், வைகோ அவர்களுக்காக போராடி சிறை சென்றார். சீமான் போராட்டம் அறிவித்துள்ளார். கலைஞர் செந்தூரனை பட்டினி போரை நிறுத்துமாறு அறைகூவல் விடுத்துள்ளார். அந்த ஈழத்தமிழர்களை விடுதலை செய்யுங்கள் என்று அவர் கூறவில்லையே? என்பதே அவர்களுக்கு வருத்தம். 


           இப்படி தொடர் போராட்டத்தை தனக்காக மட்டும் இன்றி அனைவருக்குமாக நடத்தி வரும் சென்தொஓனை காண கொழும்பிலிருந்து, அவரது சித்தப்பா அருள்ராஜ், மற்றும் அத்தை கமலாதேவி ஆகியோர் சென்னை வந்தனர். அவர்கள் செந்தூரனை காண பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமிற்கு சென்றனர். சித்தப்ப்பாவை ஆதாவது அருள்ராஜை நமது கியூ பிரிவினர் மறைமுக மிரட்டலின் மூலம் அச்சுறுத்தி உள்ளனர். அத்தை கமலாதேவி, செந்தூரன் பற்றி பூந்தமல்லி முகாம் வாசல் சென்று விசாரித்திருக்கிறார். பட்டினி போரில் இருப்பதால் அவரைக் காண முடியாது என தெரிவித்துள்ளனர். தண்ணீர் கூட குடிக்காமல் செந்தூரன் இருக்கிறான் என்று கேள்விப் பட்டதும் அந்த 60 வயது அத்தை கமலாதேவி அதிர்ச்சி ஆகிவிட்டார். அதுவே அவருக்கு நெஞ்சுவலியை கொடுத்து விட்டது. அப்படியே அவர் மரணமடைந்து விட்டார். ராமச்சந்திரா மருத்துவமனைக்கு எடுத்து சென்று மானத்தை மடர்வர்கள் உறுதி செய்து உடலை பெற்று கொண்டனர். மீண்டும் அவரது உடலை கொழும்பிற்கு கொண்டு செல்லல காவல்துறை அனுமதி பெற வேண்டும் என்று கூறி, மாநகர காவல்துறை அனையர் அலுவலகத்திற்கு கமலாதேவியின் உடலை கொண்டுவந்து அனுமதி பெற்றுள்ளனர். 

          மல்லை சத்தியா உடன் இருந்து உதவிகள் செய்துள்ளார். அதற்கு உதவிய ஒரு ஈழத்தமிழரான யோகா மாஸ்டரை கியூ பிரிவினர் மிரட்டி, அவரது பாஸ்போர்ட்டை பிடிங்கி வைத்துள்ளனர். இத்தகைய கொடுமைகள் செய்யும் கியூ பிரிவினர் நேரடியாக மத்திய அரசின்  வெளிவிவகார துறையின் உளவு துறையான "ரா" அதிகாரிகளின் உத்தரவுப்படியே நடக்கின்றனர் என்பது நமக்கு தெரிந்த செய்தியே. சென்ற திமுக ஆட்சியின் போது, உளவு துறை தலைமை அதிகாரி  ஜாபர்சேட்  மூலம், கியூ பிரிவினர் மத்திய அரசின் "ரா" கட்டளைகளை  ஏற்று, இந்த ஈழத்தமிழர்களை சிறப்பு அகதிகள் முகாம்களில் அடைத்தனர் என்பது இன்னமும் தொடர்கிறது. தமிழக அரசிற்கு கட்டுப்படாமல் இந்த கியூ பிரிவினர் தன்னிச்சையாக மத்திய அரசின் "ரா" அதிகாரிகளுக்கு அடிபநிவதால் ஏற்படும் "விபரீதத்தை" தமிழக மக்கள் தாங்க மாட்டார்கள். அதன்மூலம் வரும் சட்ட ஒழுங்கு கெடுதலையும், பதட்டத்தையும் தமிழக அரசின் மீது, "பழி" போட திமுக வும், காங்கிரசும் தயாராகி வருகின்றன. கியூ பிரிவு அதிகாரிகள் கமலாதேவியின் சாவுக்கு பொறுப்பேற்பார்களா ? 

                செந்தூரன் சென்ற மாதம் செங்கல்பட்டு முகாமில் "இருப்பத்தொரு" நாட்கள் பட்டினி போரை நடத்தியதால், இப்போது உடல் மியாவும் தளர்ந்து உள்ளார். அவரது உஅடளுக்கு வரும் அனைத்து தீங்கும் த்ஜமிழ்நாட்டு அரசியலில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தப்போகிறது. அதற்கும் கியூ பிரிவு பொறுப்பேற்க வேண்டும்.

No comments:

Post a Comment