Sunday, June 17, 2012

பிரணாப் முகர்ஜி என்ற தமிழினக் கொலைகாரர் வருகிறாராமே?

பிரணாப் முகர்ஜி என்ற தமிழினக் கொலைகாரர் வருகிறாராமே?
      ஈழத்தமிழர்களை ஒன்றரை லட்சம் பேரை கொன்று குவித்தவர்களில், டில்லிக்கு முக்கிய பங்கு என்று உலகத்தமிழினம் கூறிவந்தாலும், அதில் சிலரை முக்கியமாக சொல்வார்கள். அவர்கள் எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன், நிருபமா ராவ், மன்மோகன்சிங், ப.சிதம்பரம், என்று பட்டியலிடப்பட்டால் அதில் முக்கிய ஆளாக "பிரணாப் முகர்ஜி" இருப்பார். மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை இந்த பிரனாபிற்கு உண்டு. ஏன் என்றால் இவர் மஹிந்த ராஜபக்சேவிற்கு அண்ணன் முறை வேண்டும்.இவர்தான் கருணாநிதியை ஆவப்போது சந்தித்து , ஈழப்பிரச்சனை பற்றி பேசி, அதில் கருணாநிதியை "சமாதானம்" செய்யும் எல்லா வேலையும் "திறம்பட" செய்தவர். அதை அவ்வப்போது கருணாநிதியே கூற நாம் க்ட்டிருக்கிறோம். 

                     சிங்களவர்கள், வங்காளத்திலிருந்தும், அதன் எல்லையில் ஒரிசாவிலிருந்தும் சென்ற ஒரு இனத்தவர் என்று நம்புகிறார்கள். அதனால்தான் இந்த பிரணாப் மகிந்தாவின் அண்ணன் என்று நாம் குறிப்பட வேண்டியுள்ளது. அத்தகைய ஒரு தமிழர் ரத்தம் குடித்த கரங்களுக்கு சொந்தக்காரர் இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் நிறுத்தபடுவதே அவமானம்.  அவர் வாக்கு கேட்டு தமிழக தலைநகருக்கு வருவது அதைவிட அவமானம். நாம் என்ன செய்யப் போகிறோம்?

No comments:

Post a Comment