Sunday, June 17, 2012

பள்ளி கல்வித்துறையில் அதிகாரிகளின் ஊழல்



     அமைச்சர் சீ.வி.சண்முகம் பள்ளி கல்வி துறைக்கு அமைச்சராக போடப்பட்டார். அவரது தம்பி கே.கே.நகரில் உட்கார்ந்துகொண்டு, ஒரு லட்சம், இரண்டு லட்சம் ஏன் ஆகாசு பெற்றுக்கொண்டு, ஆசிரியர்களின் "மாற்றல்  உத்தரவுகளை" பைசல் செய்தார். அதை நாம் ஊடக வாயிலாக பல முறை அம்பலப்படுத்தினோம். அதன்பிறகு அந்த இலாக்க மாற்றப்பட்டது. உண்மையில் அமைச்ஹ்ச்சர் சீ.வி.சண்முகத்திற்கு டேஹ்ரியாமல் அல்லது அவரது ஒப்புதல் இல்லாமல் அவரது அதம்பி இந்த ஊழல் வெளியாயி செய்துவந்தார் என்றும் அவர்தான் இவரை விழுப்புரத்தில் வெற்றிபெற வேலை செய்தார் என்பதால் அமைச்சரால் எதுவும் கேட்கமுடியாமல் போய்விட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் அதன்பிறகு அமைச்சர்கள் ஊழல் செய்வதை அரசு கவனிக்கிறது என்ற நிலையில், அதிகாரிகள் தங்கள் கைவரிசையை காட்ட தொடங்கிவிட்டார்கள்.

                 இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி மார்ச் மாதம் வரை "நிர்வாக" காரணங்களுக்காக என்ற பெயரில் "பலப்பல" மாற்றல் உத்தருவுகளை அதிகாரிகள் போட்டுள்ளனர். கல்வி இயக்கக ஆணையர் "சபீதா"விற்கு டேஹ்ரியாமலேயே இது நடக்கிறது. அதாவது "துணை ஆணையர்" தான் இத்தகைய வேளைகளில் அசகாய சூரராக இருக்கிறார். துணை ஆணையர் தொடங்கி, " தலைமை கல்வி அதிகாரி" வரை னைவரும் ஊழலில் பங்கு வாங்குகிறார்கள் என்கிறது நேரடி செய்தி. அவர்கள் ஒவ்வொரு ஆசிரியரின் மாற்றல் உத்தரவுக்கும்,குறைந்தது  "ஒரு  லட்சம்" அல்லது பெண் ஆசிரியர்களை தங்களது இச்சைக்கு அழைப்பது என்ற கேவலத்தை செய்து வருகிறார்கள்.திமுக ஆட்சியில்,  அமைச்சர் தங்கம் தென்னரசு கைகளுக்கு செல்லாமல், உதவியாளர்கள் காசு அடித்து "ஆசிரியர் பணி"யை விலைக்கு  விற்று வந்தார்கள். நாம் ஊடகத்தில் அமபல்ப்படுத்தி வந்தோம்.கருணாநிதி கூப்பிட்டு அமைச்சர் மூலம் ஒரு "ஏழாயிரம் " ஆசிரியர்களுக்கு மூப்பு அடிப்படையில் வேலை என்பதை "இலஞ்சக்காசு" வாங்காமல் நிறைவேற்றினார். 

             அப்போதும் இந்த ஊழல் அதிகாரிகள், வேண்டும் என்றே "எங்களுக்கு காசுதராமலே வேலை பெற்று விட்டீர்களா? உங்களை தள்ளி, தள்ளி பணியில் அமர்த்திவிடுகிறோம். மாற்றல் உத்தரவு வேண்டும் என்றால் ஒரு லட்சம் கொடுங்கள்" என்று கேட்க தொடங்கினார்கள். இப்போதும் அந்த வேலையைத்தான் அதிகாரிகள் பார்க்கிறார்கள். இப்போது "மாற்றல் உத்தரவுகளை" உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள், மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருக்கு போட்டுவருகிறார்கள். இதுவரை பி.டி. ஆசிரியர்களுக்கு மாற்றல் உத்தரவுகளை போடவில்லை. இப்போது கபில்சிபல் போட்ட உத்தரவுபடி, "தகுதி தேர்வு" கட்டாயம் நடத்த வேண்டும் என்பதை, தமிழக கல்வித்துறை அதிகாரிகள் வசமாக பயன்படுத்தி கொள்கிறார்கள். தகுதி தேர்வுகளுக்கு வெற்றிபெற "மூன்று லட்சம்" என்பது அவர்களது கணக்கு. அதில்குளிர் காய்கிறார்கள்.அதில்தங்களுக்கு ஒரு லட்சம்தான் வரும் என்றும் மீதிப்பணம், "மேலே" போய்விடுகிறது என்றும் அவர்கள் பகிரங்கமாக ஆட்சியாளர்கள் மீதே பழியை போட்டுவருகிறார்கள். இதை உடனேயே ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்தினால் அவர்களுக்கு நல்ல பெயர். இல்லாவிட்டால், அவர்களது இஷ்டம்/ 

                       . 

No comments:

Post a Comment