Sunday, June 17, 2012

தலித் பணத்தை பிடுங்கி பார்ப்பனர்களுக்கு சேவையா?



    தமிழ்நாடு போககுவரத்து கழகம் பற்றி இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிகமாக விவரம் தெரியும் என்று நினைக்கிறீர்களா? அதிகாரிகள் சொல்வதை கேட்கும் "ஆமாம்" சாமி என்கிறீர்களா?  சென்னை போககுவரத்து கழகத்தை உதாரணமாக பார்ப்போமா? "வெள்ளை" பெயர்ப் பலகை என்பது குறைந்த காசு பயணச்சீட்டு கொண்ட பேருந்து. "தாழ்த்தலாம்", "விரைவு பேருந்து" என்பவை அதிக காசை "அடித்து பிடுங்கும்" பேருந்துகள். அதிலும் "இருக்காய்" இருக்கும் லட்சணத்தில், மனிதன் அமர முடியாது. அதாவது நீண்ட கால் கொண்ட ஆறடி உள்ள எந்த மனிதனும் இந்த டீலக்ஸ் பேருந்துகளில் முறையாக முழுமையாக அமர முடியாது. திமுக ஆட்சியில் நேரு அமைச்சராக இருக்கும்போதே இந்த "கோளாறு" ஆரம்பமானது. அந்த நேருவே அந்த இருக்கைகளில் அமர முடியாது. அப்படிப்பட்ட இருக்கைகள். ஆயிரம் முறை சென்ற ஆட்சியில் கொரிப்பார்த்தும் எந்த நிவாரணமும் கிடைக்க வில்லை. இப்போதும் அப்படியே.

                        இப்போது ஒரு கண்டுபிடிப்பு எழுந்துள்ளது. கண்ணகிநகர். இந்த நகர் ஏழை, எளிய மக்களை சென்னைக்குள் இருந்து வீட்டு வேலைகள், சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ ரிக்ஷா, ஒட்டி வந்தவர்களை, கூவம் நதி ஓரம் குடி இருக்கிறீர்கள் என்று சொல்லி, ரயில்வே பாதை வருகிறது என்ற பெயரிலும், மாநகரை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரிலும், "வேயே" தொக்கி எரிந்து, ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் வீடு தருகிறோம் என விரட்டி அடித்தார்கள். அந்த கண்ணகி நகருக்கு செல்லும் பேருந்துகளில், என் அதிகமாக "டீலக்ஸ் பேருந்துகளும், எக்ஸ்ப்ரெஸ் பேருந்துகளும்" அனுப்படுகின்றன? அந்த இருவகை பேருந்துகளும் "அதிக கட்டணம்" வசூலிக்கும் ப[இருந்துகள் என்பது செந்தில் பாலாஜிக்கு தெரியாதா? அல்லது கண்ணகி நகர் மக்கள் ஏழை எளிய மக்கள் என்பதும், அவர்கள் இன்னமும் அன்றாட கூலி வேலைக்கு, சென்னை நகருக்குள் வந்துபோக பேருந்துகளை பயபடுத்துகிரார்கள் என்பது செந்தில் பாலாஜிக்கு தெரியாதா? அவர்களுக்கு ஏன் அதிகமாக "வெள்ளை பெயர்பலகை" கொண்ட "சாதா கட்டண" பேருந்துகளை அதிகமாக அனுப்ப அவரால் முடியவில்லை? ஏழை மக்களை இப்படி "சோர்ந்டி வாழை" ஏன் அவர் நினைக்கிறார்? 


                  அதேசமயம் அதே பேருந்து கழகம், மைலாபூர், மந்தவெளி, பெசன்ட் நகர், தி நகர்,   மடிப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு அதிகமாக "சாதா கட்டணம்" கொண்ட வெள்ளை நிற பெயர் பலகை கொண்ட பேருந்துகளை அனுப்பும் ரகசியம் என்ன? அந்த அபகுதிகளில் "பார்ப்பனர்கள்" அதிகம் வாழ்கிறார்கள் என்பதுதான் காரணமா? அபப்டியானால் பார்ப்பனர்களுக்கு "குறைந்த செலவில்" சேவை செய்ய, தலித்துகள் "தலையில்" கட்டண "சுமையை" ஏற்றுவதுதான் அமைச்சரின் பணியா? அமைச்சருக்கு தெரியாமல் "அதிகாரிகள்" அப்படி ஒரு திருட்டு வேலையை செய்கிறார்களா? எபப்டியோ தலித்துகளுக்கு கடினமும், பார்ப்பணர்களுக்கு சலுகையும் நடிமுரையில் "பேருந்து தடம்" வரை நீண்டுள்ளது என்பது கவனிக்கதக்கது.அதேசமயம் மந்தவெளி, தீநகர், மடிப்பாக்கம், பெசன்ட் நகர் என்று பார்ப்பனர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள "வசதிபடைத்த பார்ப்பனர்களுக்காக" குளிர் சாதன பேருந்துகளும் கவனமாக விடப்படுகின்றன. அந்த பாதைகளில் தீலக்சுகளும், விரைவு வாகனங்களும் அடைத்து கொள்வதில்லை. இப்போது புரிகிறதா? அதிகாரிகளும் "பார்ப்பனீய" மனயொபாவத்துடன் பணியாற்றுகிறார்கள் என்பதை? 

No comments:

Post a Comment