Tuesday, May 29, 2012

பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் காணமுடியாத மார்க்சிஸ்டுகள்.



     பெட்ரோல் வில்லை கூடுகிறது. டீசல் விளையும் கூடும். சமையல் வாயுவும் விலைகூடும். பெற்றோலிய அமைச்சர் ஜெயபால் ரெட்டி மறைமுகமாக உணர்த்தியுள்ளார். எண்ணெய் நிருவகள் தீர்மானிக்கின்றன என்று உணமியை சொல்வதில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அவரது கூட்டணி கட்சிகளில் ஒன்றின் தலைவரான் கலைஞரும் "சாட்சி" கூறுகின்றனர். அதை இடதுசாரிகள் வரை னைவரும் ஒப்புக்கொள்கின்றனர். 2010 ஆண்டு ஜூன் மாதம் இந்த அய்.மூ.கூ. இரண்டாம் அரசு " பெட்ரோல், டீசல், சமையல் வாயு  விலை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களின் கைகளில்" கொடுத்தது தவறு என சிலரும் தவிர்க்க முடியாதது என்று சிலரும் கூறி வருகின்றனர். இதில் இடதுசாரிகள் அதை "தவறு" என்று கூறுபவர்கள்.

             தவறு என்றால் எப்படி தவறு? ஒரு நாடாளுமன்ற ஜனநாயகம் நடக்கும் நாட்டில் முக்கிய விலை உயர்வான எரிபொருள் விலை உயர்வை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஆட்சியாளர்கள் செய்யாமல், அதை எண்ணெய் நிறுவனங்களின் கைகளில் கொடுத்து நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே "கெடு" என்று இடது சாரிகள் கூறுகின்றனரா? இல்லை. ஏன் சொல்லவில்லை?  எண்ணெய் நிறுவங்களில் பல "பொதுத்துறையை" சேர்ந்தவை என்ற "மயக்கம்" இடதுசாரிகளுக்கு  இருக்கிரது.அதாவது அவர்களது விளக்கத்தில், "ரிலையன்ஸ்" மட்டுமே எண்ணெய் நிறுவனங்களில் ஏகபோக தனியார் நிறுவனம். மற்ற நிறுவனங்களான "பாரத் பெற்றோலியம், ஹிந்துஸ்தான் பெற்றோலியம், இந்தியன் ஆயில் கம்பனி" ஆகியவை போதுத்ரை நிறுவனங்களாம். இடதுசாரிகளின் "கொள்கை முடிவுப்படி" பொதுத்துறை நிறுவனங்களை ஆதரிக்க வேண்டுமாம். ஆகவே அந்த பொதுத்துறை நிறுவனங்கள் பெட்ரோலை "பதுக்கி" வைப்பதற்கும் பதில் சொல்ல அவர்களால் முடிவதில்லை. 

          அந்த பொதுத்துறை நிறுவனங்கள்  இன்று "தனியாருடன்" சேர்ந்து கொண்டு அதே வேலையை செய்வதில்லையா? ஏன் அப்படி செய்கின்றன? இடதுகளுக்கு அதன் விளக்கம் தர முடியுமா?  பொதுத்துறை என்பது இன்று "அதிகார வர்க்க முதலாளித்துவம்" என்று சாருமசும்டார் கூறினார். அதனால் நமது வரிப்பணத்தை பொதுத்துறை மூலம் "அதிகாரவர்க்க மூலதனமாக" ஆக்கி ஆளும்வர்க்கம் கட்டுப்படுத்துகிறது. அப்படியானால் அதிகார வர்க்க முதலாளித்துவமும் இந்திய ஆளும் வர்க்கத்தில் ஒரு அங்கம். அந்த அதிகார்வர்க்க முதலாளித்துவம் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு இவள வேலை செய்வதால் அவர்கள் "தரகு முதலாளிகளாக" ஆகிறார்கள். அதனால் அவர்களை"அதிகாரவர்க்க தரகு ஏகபோக முதலாளித்துவம்" என்றே அழைக்க வேண்டும். இதுதான் அந்த அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் மத்தியில் இருக்கும் உறவு. இது கார்க்சிச்டுகளின் கொலகியில் வராததால் வர்களுக்கு பெட்ரோல் விலை ஏற்ற "கரணம்" கூட கண்டுபிடிக்க முடியவில்லை. பாவம். 

No comments:

Post a Comment