Wednesday, May 9, 2012

சீப்பை ஒளித்து வைத்து விட்டால், கல்யாணம் நின்றுவிடுமா?



   நமது ஊரில் ஒரு கிராமப்புற பழமொழி உண்டு. சீப்பை ஒளித்து வைத்து விட்டால், கல்யாணம் நின்றுவிடுமா? என்று கிராமங்களில் கேட்பார்கள். ஆனால் கிராமப்புற பண்ணையார் பின்னணியில் வந்த சிதம்பரம், சிவகங்கை மாவட்ட பக்கா நாட்டுக்கோட்டை செட்டியார் குடும்ப கனவான் சிதம்பரம், அந்நிய நாட்டில் படித்து, டில்லியில் அதிகார கோலோச்சுவதால் அந்த பழமொழியை மறந்து விட்டார் போலும். என்.சீ.டி.சீ.என்ற புதிய மருந்தை இந்திய நாட்டு அரசியலுக்கு புகுத்த முயலும் சிதம்பரம், அனைத்து முதல்வர்களும் எதிர்க்கிறார்கள் என்பதால், பெயரளவுக்கு ஒரு முதல்வர்கள் மாநாட்டை கூட்டி, அதில் பெயரளவுக்கு விவாதித்து விட்டு, பிறகு தனது அமெரிக்கா கனவை நடைமுறை படுத்தி  விடலாம் என்று எண்ணினார்.  ஆனால் அந்த மாநாட்டில் சில முதல்வர்கள் கராராக பிடித்து விடுவார்கள் என்று அவருக்கு உளவுத்துறை அதிகாரிகள் அறிவுரை கூறிவிட்டார்கள்.அதில் முதன்மையாக தமிழக பெண் முதல்வர் விவேகமாக கேள்விகளை கேட்டு, மற்ற முதல்வர்களையும் "தட்டி" எழுப்பி விடுவார் என்றும் அதனால் தங்களது  சதித்திட்டமே அம்பலமாகி விடும் என்றும் தெரிவித்து விட்டனர். 

                   
                            அதனால் அடுத்த தந்திரம் ஓரை சிதம்பரம் செய்தார். அதுதான் அழைப்பு அனுப்பிய கையேடு, தமிழக முதல்வருக்கு மட்டும் " கூட்ட நிகழ்ச்சிக்கான நகல் அறிககையை" அதாவது "தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்" அமைக்க உருவாக்கிய நகல் அறிககையை அனுப்பாமல் தடுத்து விட்டார். பயங்கரவாத தடுப்பு பற்றிய விவாதத்திற்கான நகலையே "தடுக்கப்பு வேலை" செய்யும் கெட்டிக்கார உள்துறை மைச்சர் அவர். அந்த "சாதியையும்" புரிந்து கொண்டுவிட்ட தமிழக முதல்வர், அந்த நகல் அறிககையை "ஓடிஸா" முதல்வரிடம் கேட்டு, பெற்றுக் கொண்டு, அதன்மீது கேட்க வேண்டிய கேள்விகளையும், கொடுக்க வேண்டிய பதில்களையும் "தயார்" செய்துகொண்டே சென்றுவிட்டார்.அதனால்தான் "வசமாக" மாட்டி கொண்டார் சிதம்பரம். 

                  அதனால் முதல்வர்களின் கூட்டம் மேலும் சிதம்பர ரகசியத்தைமபலப்படுத்தி விட்டது.இதனால்தான் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் சிதம்பரம் பற்றி "சின்னப்பையன் சிதம்பரம்" என்று கூறினாரோ? 

No comments:

Post a Comment