Wednesday, May 30, 2012

சோலை--ஒரு ஊடகவியலாளரின் வரலாறு நின்றுவிட்டது.



    அவர் திண்டுக்கல் அருகே உள்ள ஐயம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். இடது சாரி கருத்துக்களின் மேலுள்ள தாக்கத்தினால் தோழர் ஜீவானந்ததுடன் நெருக்கமானார். ஜீவா சோலை என்ற அந்த சோமசுந்தரத்தை, "ஜனசக்தி" ஏட்டில் இறக்கிவிட்டார். ஜனசக்தியும், சோலையும் சேர்ந்தே வளர்ந்தனர். அதன்பின் எம்.கல்யானசுன்தரன் நண்பர்களை உர்ச்சாகப்படுத்தியத்தில் தொடங்கியது, "மக்கள் குரல்". அங்கும் சோலையே முதன்மை பணி செய்தார். "அலை ஓசை" சிம்சன் போராட்டத்தில் தமிழ்நாடெங்கும் புகழ் பெற்றது. வேலூர் நாராயணன் நடத்தினார். அங்கும் சோலைதான் சிறப்பு செய்தார். இடதுசாரிகளின் செயல்பாட்டில் ஈடுபடும் "எழுத்தாளர்கள்" ஊடகவியலாளர்கள்" அதிகமாகவும், ஆர்வமாகவும், ஆழமாகவும், விரைவாகவும் "விடை" தேடுவதால், அவர்களுக்கு அன்றைய "நக்சல்பாரி இயக்கம்" ஈர்ப்பு மையமாக ஆகியது. சொலிக்கும் அதே நிலை. 

                சென்னை தொழிலாளர் வர்க்கம் தேர்தலில் பங்குகொள்ளும் இடதுசாரி கட்சிகாரர்களை தாண்டி சிந்தித்தது. நக்சல்பாரி எழுச்சி சென்னை தொழிலாளர் வர்க்கத்தை செழுமையாக தாக்கம் செலுத்தியது. ஏ.எம்.கே. என்ற மூன்றெழுத்து பெயர் எல்லோர் உள்ளத்திலும் எதிரொலித்தது. மோகன் குமாரமங்கலம் வழக்கறிஞராக இருந்தபோது, ஏ.எம்.கோதண்டராமன் அவருக்கு இளம் வழக்கறிஞராக இருந்தாராம். நக்சல்பாரி எழுச்சி, மார்க்சிசிட் கட்சியின் சீ.அய்.டி.யு.தொழிற்சங்கத்தை விட்டு தோழர் ஏ.எம்.கே. வை வெளியே கொண்டுவந்தது. அவருடன் வழக்கறிஞர் குசேலரும் வெளியேறினார். குசேலர் உருவாக்கியது "உழைக்கும் மக்கள் மாமன்றம்" என்ற தொழிற்சங்கம்.தலைமறைவாக இருந்த ஏ.எம்.கே. பெயரிலேயே  அந்த தொழிற்சங்கம் போர்க்குனமிக்கதாக வளர்ந்தது. அந்த புரட்சிகர எழுச்சி சென்னையை ஆயயொரங்களில் அல்ல, பத்தாயிரங்களில் ஆல், லட்சங்களில் தொழிலாளர் வர்க்கத்தை தெருவுக்கு இழுத்து வந்தது. அத்தகைய தொழிற்சங்கத்திற்கு ஒரு "நாளேடு" தேவைப்பட்டது. அதுதான் "மக்கள் செய்தி" ஏடு. அங்கும் சோலையே ஒளிர்விட்டார். சோலை தலைமறைவாக இருந்த ஏ.எம்.கே.வை அடிக்கடி சந்தித்து வந்தார்.

                    புரட்சிகர இயக்கத்தின் ஒரு முக்கியகூட்டம்.. இரவில் கிராமத்தில் நடந்துசெல்லும் தோழர்களுடன் சோலை "லாந்தர் விளக்கு" ஏந்தி சென்றார் என்று அவரது இறுதி நிகழ்வில் தோஹ்ர்கள் பேசிக்கொண்டனர். நேற்று செவ்வாய் அன்று சோலை தாம்பரம் தனியற மருத்துவமனையில் மரணமடைந்தார். அதற்குமுன் இடதுசாரிகளில் கல்யாணசுந்தரம் போன்றோர் எல்லாம் எம்.ஜி.ஆர். இன் கழகத்திற்கு துணை சென்ற போது, சொல்லையு உடன் சென்றார். அதன்மூலம் எம்.ஜி.ஆர். தனது முக்கிய ஆலோசகராக சோலையை உடன் வைத்து கொண்டர. அது திமுக வை எதிர்த்து தமிழக மக்களின் "ஊழல் எதிர்ப்பு" போர். அதன் வடிவமாக எம்.ஜி.ஆர். அன்று இருந்ததால் சோலை உடன் இருந்தார். பிரபல "சத்துணவு திட்டம்" சோலை கூறிய ஆலோசனை என்கிறார்கள். அதன்பின் சோலை செல்வி.ஜெயலலிதாவின் அரசியல் நுழைவின் களத்தில், எம்.ஜி.ஆர். ஆலோசனைப்படி உடன் இருந்து உதவினார். 

                   சோலை ஒரு பிரபல எழுத்தாளர். கலைஞரின் கவனத்தில் சோலை ஈர்க்கப்பட்டார். அங்கும் தனது கருத்துக்களை வைக்க சோலை தயங்குவதில்லை. கலைஞரின் உதவியாளராக இருந்துவரும் உறவுக்காரர் அய்.ஏ.எஸ். ராஜமாணிக்கம் சோலையை முழுமையாக கலைஞர் குடும்ப அரசியலுக்கு பயன்படுத்த முனைந்தார். சோலை அங்கும் பயன்பட்டார். பல வார இதழ்களில், பிறகு வார இருமுறை தழ்களில் சோலை தொடர்ந்து எழுதிவந்தார். நக்கீரன் வார இருமுரைய் இதழில் அவர் எழுதிவந்த தொடர் கட்டுரைகள் அரசியல் அரங்கில் முக்கியமானவை. சசிகலா  குழுவினர் தோட்டத்தை விட்டு விரட்டப்பட்ட போது, அதற்காக ஜெயலலிதாவை பாராட்டி எழுதினார்.கடந்த மூன்று வாரங்களாக அவரால் எழுத முடியாமல் மருத்துவமனையில்   இருந்துவிட்டதை கடைசி நேரம் மனம் நொந்து கூறியுள்ளார்.  

                கடைசி நாளுக்கு முந்திய இரவில் சில நண்பர்களுடன் பேச முற்பட்டு மருத்துவர்களால் தடுக்கப்பட்டாராம். கடைசியாக் மருந்து சீட்டின் பின்புறத்தில் அவர் எழுதச்சொல்லி எழுதியவை குறிப்பாக கூறப்படுகின்றது. வருகிற தேர்தலில் காங்கிரஸ்  செல்வாக்கு இழந்துவிடும். ப.ஜ.க.வும் செல்வாக்கு இழக்கும். இடதுசாரிகள் செல்வாக்கு பெறமாட்டார்கள் என்பது வருந்ததக்கது. ஆயினும்.... என எழுதி நிறுத்தப்பட்ட வரிகளை நண்பர்கள் எடுத்து  கூறுகின்றனர். .அதனால்தானோ என்னவோ இன்று கலைஞர் தனது ஆர்ப்பாட்ட பேச்சில், காங்கிரசுடன் கூட்டணி தொடரலாமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். எபப்டியோ, செல்வி.ஜெயலலிதா மும்ன்முயர்ச்சி எடுக்கும் "மூன்றாவது அணியான" மாநில கட்சிகளின் கூட்டணிதான் சோலை கூறவந்ததா?

          மறக்கமுடியாத நிலையில் சோலையின் உடல் மேல் நான் ஒரு சந்தன மாலையை அணிவித்தேன். பல தோழர்களை அங்கே சந்தித்தேன். நிருபர் ஸ்ரீனிவாசனை சந்தித்து குறிப்பிடத்தக்கது. தாம்பரம் நண்பர்கள் பட்டாளமே ஆணை.பன்னீசெல்வம், வேணுகோபால், இடதுசாரி தோழர்கள் என்று கூடியதை நேரில் கண்டேன்.நேற்றும், இன்றும்   பல,பல தலைவர்கள் மு.க.ஸ்டாலின், இடதுசாரி தலைவர்கள், பீட்டர்  அல்போன்ஸ், திருநாவுக்கரசர், நக்கீரன் கோபால், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., எஸ்.எம்.பாக்கர், பலப்பல ஊடகவியலாளர்கள் பெருங்குலத்தூர் இல்லத்திலும், குரோம்பேட்டை மின்சார மயானத்திலும் கூடினர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்தும் இறுதி பயண வாகனத்தில் அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது. 

Tuesday, May 29, 2012

பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் காணமுடியாத மார்க்சிஸ்டுகள்.



     பெட்ரோல் வில்லை கூடுகிறது. டீசல் விளையும் கூடும். சமையல் வாயுவும் விலைகூடும். பெற்றோலிய அமைச்சர் ஜெயபால் ரெட்டி மறைமுகமாக உணர்த்தியுள்ளார். எண்ணெய் நிருவகள் தீர்மானிக்கின்றன என்று உணமியை சொல்வதில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அவரது கூட்டணி கட்சிகளில் ஒன்றின் தலைவரான் கலைஞரும் "சாட்சி" கூறுகின்றனர். அதை இடதுசாரிகள் வரை னைவரும் ஒப்புக்கொள்கின்றனர். 2010 ஆண்டு ஜூன் மாதம் இந்த அய்.மூ.கூ. இரண்டாம் அரசு " பெட்ரோல், டீசல், சமையல் வாயு  விலை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களின் கைகளில்" கொடுத்தது தவறு என சிலரும் தவிர்க்க முடியாதது என்று சிலரும் கூறி வருகின்றனர். இதில் இடதுசாரிகள் அதை "தவறு" என்று கூறுபவர்கள்.

             தவறு என்றால் எப்படி தவறு? ஒரு நாடாளுமன்ற ஜனநாயகம் நடக்கும் நாட்டில் முக்கிய விலை உயர்வான எரிபொருள் விலை உயர்வை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஆட்சியாளர்கள் செய்யாமல், அதை எண்ணெய் நிறுவனங்களின் கைகளில் கொடுத்து நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே "கெடு" என்று இடது சாரிகள் கூறுகின்றனரா? இல்லை. ஏன் சொல்லவில்லை?  எண்ணெய் நிறுவங்களில் பல "பொதுத்துறையை" சேர்ந்தவை என்ற "மயக்கம்" இடதுசாரிகளுக்கு  இருக்கிரது.அதாவது அவர்களது விளக்கத்தில், "ரிலையன்ஸ்" மட்டுமே எண்ணெய் நிறுவனங்களில் ஏகபோக தனியார் நிறுவனம். மற்ற நிறுவனங்களான "பாரத் பெற்றோலியம், ஹிந்துஸ்தான் பெற்றோலியம், இந்தியன் ஆயில் கம்பனி" ஆகியவை போதுத்ரை நிறுவனங்களாம். இடதுசாரிகளின் "கொள்கை முடிவுப்படி" பொதுத்துறை நிறுவனங்களை ஆதரிக்க வேண்டுமாம். ஆகவே அந்த பொதுத்துறை நிறுவனங்கள் பெட்ரோலை "பதுக்கி" வைப்பதற்கும் பதில் சொல்ல அவர்களால் முடிவதில்லை. 

          அந்த பொதுத்துறை நிறுவனங்கள்  இன்று "தனியாருடன்" சேர்ந்து கொண்டு அதே வேலையை செய்வதில்லையா? ஏன் அப்படி செய்கின்றன? இடதுகளுக்கு அதன் விளக்கம் தர முடியுமா?  பொதுத்துறை என்பது இன்று "அதிகார வர்க்க முதலாளித்துவம்" என்று சாருமசும்டார் கூறினார். அதனால் நமது வரிப்பணத்தை பொதுத்துறை மூலம் "அதிகாரவர்க்க மூலதனமாக" ஆக்கி ஆளும்வர்க்கம் கட்டுப்படுத்துகிறது. அப்படியானால் அதிகார வர்க்க முதலாளித்துவமும் இந்திய ஆளும் வர்க்கத்தில் ஒரு அங்கம். அந்த அதிகார்வர்க்க முதலாளித்துவம் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு இவள வேலை செய்வதால் அவர்கள் "தரகு முதலாளிகளாக" ஆகிறார்கள். அதனால் அவர்களை"அதிகாரவர்க்க தரகு ஏகபோக முதலாளித்துவம்" என்றே அழைக்க வேண்டும். இதுதான் அந்த அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் மத்தியில் இருக்கும் உறவு. இது கார்க்சிச்டுகளின் கொலகியில் வராததால் வர்களுக்கு பெட்ரோல் விலை ஏற்ற "கரணம்" கூட கண்டுபிடிக்க முடியவில்லை. பாவம். 

மௌனம் கணைக்கிறது?



 முல்லைபெரியார் அணையில் மத்திய நிபுணர் குழு, கடை நிலம் வரை "துளைகளை" போட்டு, அதிலிருந்து மன்னைமற்றும் கிடைக்கும் பொருள்களை எடுத்து சோதனை செய்தது. அதன் விளைவே நீதியரசர் ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, அணை பலமாக உள்ளது என உச்சநீதிமன்றத்திற்கு "சான்று" கொடுத்தது. எட்டு துளைகளை ம்ல்லைபெரியார் அணையிலும், இரண்டு துளைகளை பேபி அணையிலும் அந்த நிபுணர் குழுவினர் போட்டிருந்தனர்.அந்த துளைகள் மூடப்ப்டாமலேயே இருந்தன. மறு சோதனைக்காக என்று முதலில்  சொன்னார்கள்.தமிழக பொதுப்பணி துறையை கேரள அதிகாரிகள் முதலில் துளைகளை மூட அனுமதிக்க வில்லை. அதை மத்திய நிபுணர் குழுவிடம் இவர்கள் கூற அவர்களோ, "கேப்" செய்துவிடுங்கள் என்றார்கள். அது சரிப்படாது.

               மழைக்காலம் வரப்போகிறது. அடைக்கப்படதா துளைகள் வழியாக தண்ணீர் இறங்கினால் அணையின் பாதுகாப்புக்கு "ஆபத்து வந்து சேரும்".இதைதான் கேரள அரசு எதிர்பார்க்கிறது. இதை அந்த பகுதி மக்கள் உணர்ந்தனர். ஐந்து மாவட்டங்களில் இயங்குவதாக கூறும் "முல்லைபெரியார் மீட்பு இளைஞர் இயக்கம் " தலைவர் ரஞ்சித் சின்னமனூரில் இருக்கிறார். அவர் சென்னை வந்து நம்மை தொடர்பு கொண்டு அந்த "ஆபத்தை" கூறினார். அதை அப்படியே காட்சி ஊடகத்தில் கூறினோம். பலன் தெரியவில்லை. அடுத்து சென்ற வெள்ளிகிழமை "தினகரன்" ஏட்டில் மீண்டும் அணையில் துளைகளை அடைக்க சென்ற தமிழக அதிகாரிகளை "உத்தரவு வரவில்லை" என்று கூறி கேரள அதிகாரி டேவிட் தடுத்ததாக வெளிவந்தது. மீண்டும் அந்த விவரத்தை எடுத்து காட்சி ஊடகத்தில் விரிவாக்க பேசினோம். தமிழக அதிகாரிகள மீண்டும் விரட்டப்பட்டதை அறிந்த தமிழக முதல்வர் உடனேயே பிரதமருக்கு கடுமையான கடிதத்தை எழுதினார். அதற்கு டில்லி மட்டுமா முழித்து கொண்டது? கேரளாவும், இங்கே அறிவாலயமும் அல்லவா முழித்து கொண்டது?


            தனியார் காட்சி ஊடக செய்தி பிரிவு ஒன்று அறிவாலயத்தை தொடர்பு கொண்டது. திமுக தலைவரின் கருத்து என்ன என்று கேட்டது. முதல்வரின் கடிதத்திற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டது. கேரளா உச்சநீதிமன்ற அணையை மீறி, 136 அடிக்கு மேல் தண்ணீர் மட்டத்தை உயர்த்தாததற்க்கு உங்கள் பதில் என்ன? போடப்பட்ட துளைகளை மழைக்காலம் வரும்போது மூடாமல் தடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? தமிழக முதல்வரின் கடிதம் சரியானதா? மத்திய தொழிற்படுகாப்பு படையை நிறுத்த கோருவது பற்றி கருத்து கூறுங்கள்? நிறுத்தாவிடில் தமிழக காவல்துறையை இறக்குவேன் என்று கூறுவது சரிதானே? இத்தகைய கேள்விகளை கலைஞரிடம் கேட்க துடித்த ஊடகவியலாளர்கள் அறிவாலயத்தில் டி.கே.எஸ். இளங்கோவிடம் தலைவர் பதிலுக்காக எதிர்பார்ப்பதாக கூறினார்கள். இலநோவன் உல்லைபெரியார் பற்றி மூச்சு விடவில்லை. காவேரி தீர்ப்பாயம் பற்றி கூறி தமிழக முதல்வர் ஏற்கனவே கூட்டத்தில் கலந்து கொள்ளாதது தவறு என்று மழுப்பினார். என் கலைஞர் அப்போது பதில் கூறவில்லை?

         உண்மையை தமிழக மக்களுக்கு ஆதரவாக கூறினால், அது அதிமுக முதல்வருக்கு ஆதரவாக போய்விடும் என்பதாலா? அவரும் அலறியதாலே மத்திய ராசும், கேரள அரசும் உடனடியாக் செயல்பட்டு, துளைகளை மூட ஒப்புக்கொண்டார்களா? 

Friday, May 25, 2012

தப்பி ஓடவுமில்லை, சிக்கி தவிக்க்கவுமில்லை....



    தமிழ்நாட்டில் மாவோயிஸ்டுகள். இது ஊடகங்களுக்கு ஒரு பரபரப்பு செய்தி. காவல்துறைக்கு கேளிக்கை செய்தி. மக்களுக்கோ அதிர்ச்சி செய்தி. தமிழ்நாட்டின் மாவைச்டுகளின் ஒரு தலைவர் விவேக் கைது என்று ஊடகங்கள் ஒரு வாரம் முன்பு பரபரப்பு ஊட்டின. விவேக் "கரம் உயர்த்தி" முழக்கமிட்டு வரும் படங்களை போட்டு நல்ல வேலையாக ஊடகங்கள் நியாயம் செய்தன. யார் இந்த விவேக் என்று சில ஊடகங்கள் எழுதின. வாலிப வயது கொண்ட விவேக் வருகிற வழியில் நின்று படம் பிடித்த ஊடகங்கள் அதையே வெளியிட்டு பெருமை தேடின. சென்னையில் சீ.பி.டி. என்ற பாலிடெக்னிக் இல் படித்தவர் என்பதையும் சில ஊடகங்கள் வெளியிட்டன. திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் என்பதையும் சில ஊடகங்கள் வெளியிட்டன. காவல்துறை அதிகாரிகளது கூற்றை ஒட்டி,  ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் என்றும் சிலர் கூறினர். யாருக்கு விவேக் தலைமறைவாக இருந்தார் என்று நமக்கு புரியவில்லை. 

                  விவேக் உள்ளபடியே கண்டவர் நேசிக்கும் அளவு சிறந்த அறிவாற்றலும், போர்க்குணமும் கொண்ட ஒரு இளைஞர். அவர் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எளிதாகவும், சாகசமாகவும் பவனி வந்தவர். அபப்டியானால் யாருக்கு அது "தலைமறைவு?". காவல்துறை தனக்கு தானே ஒரு திரையை போட்டுக் கொண்டு அவர் தலைமறைவு, இவர் தலைமறைவு என்று கூறினால் சம்பந்தப்பட்ட தோழர்கள் அதற்கு எப்படி பொறுப்பாவர்கள்? தோழர் விவேக் நம்மை போலவே பல தோழர்களுக்கும் அறிமுகமானவர்தான். அவர் "முற்போக்கு மணாவ்ர் சங்கத்தில்" பணியாற்றி  வந்தவர் என்று ஊடகங்களே வெளியிட்டன. காவல்துறை அதிகாரிகளே கூறுகின்றனர். அப்படியானால் பலருக்கும் அவர் அறிமுகமானவ்ர்தானே? அப்புறம் என்ன தலைமறைவு என்று ஒரு குற்றம் போல காவலர் கூறுவதும் அதையே ஊடகங்கள் ஒப்பிப்பதும்? அவர் "தப்பி ஓடியவர்" என்பது போன்ற ஒரு தோற்றத்தை அவர்கள் கொடுக்கிறார்கள். இவர் ஏதோ இந்த நாட்டில் முழுமையாக ஆள்வது போலவும் மடர்வர்வர்கள் இந்த நாட்டில் தப்பி ஓடிக்கொண்டு இருப்பவர்கள் என்பது போலவும் ஒரு மாய தோற்றத்தை உண்டு பண்ண முயல்கிறார்கள்.


                           ஒரு புரட்சிகர  சிந்தனையாளன் அதாவது மாவோ வழியை ஏற்றுக் கொண்டவன், உங்கள் நாட்டு சட்டத்தையோ, நீதிமன்றங்களையோ, அரசான்க்ஜத்தையோ, காவல்துறையையோ, இராணுவத்தையோ, மனத்தளவில் ஏற்றுக் கொல்ல இயலாது. அவர்கள் தனகளுக்கான அரசையும், சட்டங்களையும், நீதிமன்றங்களையும், காவல்துறையையும், ராணுவத்தையும் கட்டி உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகையால் அததகைய மாற்று புரட்சிகர நிறுவனங்களை கட்டி எழுப்ப மக்கள் மத்தியில் பணியாற்றுவதே அவர்களது கடமையாக அமைகிறது. அதற்கு போறில் உங்கள் நாட்டு, அதாவது தாங்கள் இந்திய நாட்டை ஆள்வதாக கருதும் இந்த ஆளும் வர்க்கம், தனக்குதானே ஏற்படுத்தி கொண்ட நிறுவனங்களையும், சிந்தனைகளையும் மட்டுமேர் சார்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறது. அதனால்தான் அவர்களது காவல்துறை புரட்சிகாரர்களை "தப்பி ஓடிவிட்டவர்கள்" என்று முத்திரை குத்தி அழைக்கிறது. அதை புரட்சியாளர்கள் கண்டு கொள்வதில்லை. கவலை படுவதில்லை. நீயும் உன் அரசாங்கமும் என்ற மனோபாவமே புரட்சியாளர்களிடம் இருக்கிறது. அவர்கள் அவர்கள் போக்குக்கு மக்கள் மத்தியில் அவர்களது குறிக்கோள்களுக்காக உழைத்து கொண்டு இருக்கிறார்கள். நீ ஒரு அரசாங்கம். உன்னை கண்டுகொள்ள வேண்டுமா? என்பதே அதன் பொருள்.அநேகமாக் அந்த பொருள் இன்று அணித்து மக்கள் மத்தியிலும் இந்த அரசாங்கம் பற்றி இருக்கத்தான் செய்கிறது.

                             அடுத்து இந்த காவல்துறையும், ஊடகங்களும் புரட்சிகர சினதனையாளர் பத்மா பற்றியும் இதே போல கூறுகிறார்கள். விவேக் கைது. பத்மா தப்பி ஓட்டம் என்பது இவர்களது விவரிப்பு. தாங்கள் ஏற்றுக் கொள்ளாத காவல்துறையையும், நீதிமன்றத்தையும் ஏற்றுக் கொண்டு அவர்களிடம் வந்து கைகட்டி நிற்க வேண்டும் புரட்சியாளர்கள் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அவர்கள் தப்பி ஓடவுமில்லை. உங்களிடம் சிக்கி தவிக்க்கவுமில்லை. அதாவது தாங்கள் ஏற்றுக் கொள்ளாத இந்த நிலவும் அரசாங்கத்தின் காவல்துறையையும், நீதித்துறையும், கண்டுகொள்ளாதவர்கள், அத்தகைய பிற்போக்கு நிறுவங்களிடமிருந்து, தப்பி ஒடுவதுமில்லை. அந்த பிற்போக்கு நிறுவனங்களிடம் சிக்கி தவிக்க்கவுமில்லை. எப்போது அத்தகைய நிறுவனங்கள் பிற்போக்கானவை என்று அடையாளம் காண்கிறார்களோ, அப்போதே அத்தகைய நிறுவனங்களை நீக்கி விட்டு, மக்களுக்கான நிறுவனங்களை ஏற்படுத்த புரட்ச்சியாளர்கள் பாடுபடுகிறார்கள். ஆகாவே அவர்கள் உங்களது உலகத்தில், "தப்பி ஓடவுமில்லை, சிக்கி தவிக்க்கவுமில்லை" மாறாக உருப்படியான மாற்று நிருவனகளை மக்கள் மத்தியில் கட்டி எழுப்ப உழைக்கிறார்கள். ஆகவே உங்கள் மஞ்சள் காமாலை கண்களோடு புரட்ச்சியாலர்க்சலை கண்டால், உங்களுக்கு உண்மை விளங்காது. 

பத்து நாட்கள் முன்பே பிறந்த நாள் கொண்டாடிய தலைவரின் ரகசியம்?



     வருகிற ஜூன் 3 ஆம் நாள் திமுக தலைவர் கலைஞரின் ஆங்கில பிறந்த நாள். தமிழ்நாட்டில் பழக்கத்தில் உள்ள பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஒன்று ஆங்கில பிறந்த நாளாக இருக்க வேண்டும் அல்லது தமிழ் நட்ச்சத்திர பிறந்த நாள்ளாக இருக்க வேண்டும்.என்னதான் தமிழ் புத்தாண்டுக்கு தமிழர்கல்போட்டி போட்டுக் கொண்டு வரிந்து கட்டி கொண்டு சண்டை போட்டாலும், தனகளது பிறந்த நாளென்று வரும்போது, ஆன்மிகவாதிகள் தனகளது நட்ச்சத்திர பிறந்த நாளையும், பகுத்தறிவுவாதிகள் தனகளது ஆங்கில பிறந்த நாளையும் க்ன்டாடுவதுதான் வழக்கம்.சமீபத்தில் இளைஞர்கள் மேற்கத்திய பொருளாதரத்தில் தனகளது வாழ்க்கையை ஈடுபடுத்தி கொண்டு, மேற்கத்திய நாடுகள் கட்டவிழ்ழ்த்து விட்ட தொழிற்கூடங்களில், வேலை பார்க்க தொடங்கியதாலும், அதையொட்டி மேற்கத்திய பண்பாடுகளை பின்பற்ற விரைந்து செல்வதாலும், ஆண்கிலபிறந்த நாள் தவிர எதையும் டேஹ்ரிந்து வைத்திருப்பது கூட இல்லை.


          இப்படி ஒரு சூழலில் திமுக தலைவர் கலைஞரும் மற்றவர்களைப்போலவே பகுத்தறிவு பாதையில், ஆங்கில பிறந்த நாளையே கொண்டாடுவது என்பதை ஆண்டு பலவாக பழக்கமாகவும், வழக்கமாகவும் வைத்து கொண்டுள்ளார். ஆனால் இந்த ஆண்டு எந்த ஆண்டும் போல இல்லாமல், அந்த அனகிலபிறந்த நால்வருவதற்கு "பத்து நாட்கள்" முன்பே தனது முரசொலி இதழில், உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் முதல் பக்கத்திலேயே, அதாவது மே 23 ஆம் நாளே,  "பிறந்த நாள் வாழ்த்து கடிதம்" எழுது விட்டார். என் அப்படி எழுதினார் என்பது திமுக வில் உள்ள அறிவுஜீவிகளுக்கு பெரும் கேள்வியாக அமைந்து விட்டது.அந்த கடிதத்தில் நிறைவு பகுதியில் " பிறந்த நாள் வாழ்த்தை, ஒரு சுய மரியாதைகாரனின் சூளுரையாக" உடன்பிறப்புகளுக்கு அளித்து வணங்குகிறேன் என்று எழுதியுள்ளார். அந்த ளவுக்கு அந்த கடிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதாவது ஏதோ போகிற போக்கில் எழுதிய கடிதம் அல்ல. தனது பிறந்த நாள்வாழ்த்துக்களை உடன்பிறப்புகளுக்கு அளிப்பதில் "கவனம்" செலுத்தி எழுதிய கடிதம் அது. என் அந்த அ;அவுக்கு "பத்து நாள்" முன்பே இப்படி ஒரு கடிதம் எழுத வேண்டும்? 


              அந்த உடன்பிரபுகளுக்கான கடிதத்தின் தலைப்பாக " ஒரு சுய மரியாதைகாரனின் சூளுரை" என்றும் எழியுள்ளார். ஏன்? ஏன் அப்படி எழுத வேண்டும்? தன்னை சுயமரியாதைகாரன் என்று "வலிய" அழைத்து கொல்ல வேண்டிய தேவை இப்போது ஏன் எழுந்தது? பகுத்தறிவு என்பதை சுய மரியாதை என்பதை " ஆன்மிக பார்வை அற்ற" என்பதாக "நாத்திக பார்வை" என்பதாக நமக்கு கற்றுக் கொண்டுத்தவர் கலைஞர். அபப்டி கற்று கொடுத்தவர் ஏன் இப்போது "ஆங்கில பிறந்த நாளுக்கு பத்து நாள்"முன்பே தனது பிறந்த நாள் வாழ்த்துகளை கொடுத்து விட்டு, அதற்கு சுயமரியாதைகாரனின் என்ற "அடை மொழி" கொடுக்க வேண்டும்? நட்ச்சத்திர பிறந்த  நாளை, கொண்டாடுவதை "மூட நம்பிக்கை" என்றும், ஆன்மீக உணர்வு என்றும் எங்களுக்கு கற்று கொண்டுத்த கலைஞர் அவர்களே, இன்று ஏன் இந்த மே 23 ஆம் நாளை. பிறந்த நாள் வாழ்த்து கூறும் நாள்ளக தேர்வு செய்தார்? அன்றுதான் கலைஞரது நட்ச்சத்திரமான "மிருக சீரிடம்" நட்ச்சத்திர பிறந்த நாள். அப்படியானால் "ஊருக்குதான் உபதேசம்.உனக்கு இல்லையடா"   என்று பொருளா? அதற்கு ஒரு சுய மரியாதைகாரனின் சூளுரை என்று பெயரிடலாமா? அய்யா, என்ன ஏமாற்றையா இது?

கலைஞர் ஏன் தினசரி தடுமாறுகிறார்?



     மே மாதம் 23  ஆம் நாள் காலை ஏடுகளில் திமுக தலைவர் கலைஞர் ஒரு செய்தியை கூறியுள்ளார். குடியரசு தலைவர் தேர்தலில் திமுக யாரை ஆதரிக்க போகிறது என்று கேள்வி கேட்பவர்கள் ஆர்வமாக அந்த பதிலை படிக்கிறோம். அதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி யாரை குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஆதரிக்கிறதோ, அவரையே திமுக வும் ஆதரிக்கும் என்று கூறினார். பலரும் ஓகோ காங்கிரசின் வேட்பாளரை பற்றி அப்படி கூறுகிறார் போலிருக்கிறதே என்று எண்ணிவிட்டார்கள். நமக்கு மட்டும் அந்த பதில் புரியவே இல்லை. திமுக என்ற கட்சி கனகிராஸ் என்ற கட்சியுடன் சேர்ந்து அய்.மு.கூ. என்ற கூட்டணியில் இருப்பதாகத்தானே புரிந்து வைத்துள்ளோம்? என்று நமுக்கு குழப்பம். அப்படியானால் எப்படி அந்த அய்.மு.கூ. என்ற கூட்டணி திமுக விற்கு சம்பந்தம் இல்லாமல்  ஒரு வேட்பாளரை ஆதரிக்க முடிவு எடுக்க முடியும்? என்பதே நமது சந்தேகம். சரி. அதையும் காட்சி ஊடகத்தில் கேட்டு வைத்தோம். எப்படி தலைவரே அய்.மு.கூ. யில் இருக்கும் திமுக அந்த அய்.மு.கூ. ஆதரிக்கும் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை ஆதரிக்கும் என்று கூறுகிறீர்கள்? அப்படியானால் திமுக அந்த அய்.மு.கூ. விற்கு "உள்ளே இருக்கிறதா? வெளியே இருக்கிறதா?" என்று கேட்டு வைத்தோம். திமுக வும் சேர்ந்து தானே அய்.மு.கூ தேர்வு செய்யும் வேட்பாளரை டேஹ்ர்வு செய்ய வேண்டும்? என்றும்  கேட்டோம்.

      மறுநாள் அதாவது மே 24 ஆம் நாள். முரசொலியில் கலைஞரே எழுதுகிறார். கேள்வி பதிலில் கூறுகிறார். பெட்ரோல் வில்லை ஏற்றத்தை மம்தா," கூட்டணி கட்சிகளை கலந்துகொள்ளாமல் முடிவு செய்துள்ளார்கள்" என்று கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு, " ஒரு முடிவை எடுக்கும்போது அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் கூட்டி முடிவு செய்தல் இயலாத காரியம்" என்று கலைஞர் பதில் கூறியுள்ளார். எப்படி தலைவரே நேநேகளும் இருக்கும் அய்.மு.கூ. ஆட்சியில் முடிவு எடுக்கும் போது உங்கள் கட்சி மைச்சர்களின் பங்களிப்பு இல்லாமல் முடிவு செய்தால் தவறு இல்லையா? என்று வினவினோம்.  மம்தா என்ற கூட்டணி கட்சி அந்த கலந்தாலோசித்தல் இல்லை என்பதை விமர்சிக்கும்போது நீங்கள் மட்டும் ஆதரிக்கிர்டீர்களே ? என்றும் கேட்டோம். அதற்கும் கலிஞர் பதிலில் "ஜெயலலிதா பால் விலை, பச கட்டணம்" ஆகியவற்றை உயர்த்தும் போது, கூட்டணி கட்சி தலிவர்களை கலந்து கொண்டா உயர்த்த்கினார்? என்று கலைஞர் பதில் கூறியிருந்தார். அதையும் பலர் "ஆமாம்" என்றனர். மீண்டும் நமக்கு புரியவில்லை. ஜெயலலிதா தனிக்கட்சி ஆட்சி நடத்துகிறார். அதனால் கூட்டணி கட்சி தலைவர்களிடம் கலந்துகொள்ள வேண்டியது தேவையில்லை. நேநேகள் மத்தியில் அய்.மு.கூ. என்ற கூட்டணி ஆட்சி நடத்துகிறீர்கள். அதில் கலந்துகொள்ள வேண்டியது தேவையாயிற்றே? என்று கேட்டோம். இந்த இரண்டிற்கும் வேறுபாடு டேஹ்ரிந்த கலைஞருக்கு "என்ன வந்துவிட்டது? என்றும் கேட்டோம்.


                  இன்று மே 25 ஆம் நாள். முரசொலியில் கலைஞர் முதல் பக்கத்தில் எழுதுகிறார். நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பற்றி எழுதுகிறார். அதில் கடைச்டி வரிகளை "அடிக்கோடு" இட்டு எழுதியுள்ளார். மத்தியில் ஆளும் அய்.மு.கூ. ஆட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான திமுக வின் தலைவர் என்ற முறையில் நான் கேட்கிறேன் என்றும், உடனடியாக பேசி தொழிலாளார் பிரச்சனையை மத்திய அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் எழுதுகிறார். ஏன் தலைவரே இத்தனை நாள் கழித்துதான் இந்த "உண்மை" உங்களுக்கு நினைவுக்கு வந்ததா? என்ன குழப்பம் தலைவரே?

Thursday, May 10, 2012

ஜெ.க்கு மிரட்டல்--டில்லி சதியா?



டில்லிகார்கள் கெட்டிக்காரர்கள்.தங்கள் எதிரிகளை முதலில் அடையாளம் காண்பார்கள். பிறகு அவர்களை அவர்களது வீட்டிற்குள்ளேயே முடக்குவது எப்படி என்று சிந்திப்பார்கள். அதற்கென்றே தனி திட்டமிடுவார்கள். இது ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கலின் காலகட்டம். அதனால் ஊடகங்களுக்கே அதிக செல்வாக்கு உண்டு. ஊடகங்களின் பணி என்ன? கருத்துகளை உருவாக்குவது. அப்படி கருத்துகளை உருவாக்கி தாங்கள் அடையாளம் கண்ட தங்கள் எதிர்களை "முடங்க" வைப்பது இன்றைய  உலக ஆதிக்கத்தை செயல்படுத்தும் சக்திகளுக்கு கைவந்த கலை. அதில் ஒன்று நமது முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் இணைய அஞ்சல் என்று எப்படி கூறுவது? பொறுப்புள்ள டில்லிகாரர்கள் அப்படி செய்வார்களா? 

எல்லாவற்றிற்கும் வரலாற்று சான்றுகள் இருந்தால்தானே ஏற்றுக்கொள்ள வேண்டும்? .  அப்படி வரலாற்று சான்றுகள் டில்லியின் சதி பற்றி இருக்கிறதா? என் ஜெக்கு டில்லி மிரட்டல் விட என்ன வேண்டும்? இதற்கும் அரசியல் ரீதியில் காரணம் கண்டுபிடித்தாக வேண்டும். இன்று டில்லியின் முக்கிய பிரச்சணையே என்.சீ.டி.சீ. என்ற " தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்"பற்றியதுதான். அதை எதிர்ப்பதில் தமிழக முதல்வர்தான் முக்கியமாக நிற்கிறார் என்பது டில்லியின் புரிதல். அதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. டில்லியை ஆளும் "அய்.மு.கூ." ஆட்சியாளர்களுக்கு யாரால் மாற்று கொடுத்து டில்லியில் ஆள முடியுமோ, அல்லது ஆளமுடியும் என்ற நம்பிக்கை யாருக்கு இருக்கிறதோ அவர்தானே டில்லியின் அந்த திணித்தல் நடவடிக்கையை எதிர்த்து ஊர்தியாக நிற்க முடியும்? அது செல்வி ஜெயலலிதா மட்டும்தான் என்பது கண்கூடு. அதனால தங்களுக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிரியாக நின்று அனைவரையும் ஐக்கியப்படுத்தும் சக்தி செல்வி.. ஜெயலலிதா தான் என்பது இன்றைய டில்லியின் ஆரூடம்.


அதற்காக ஜெக்கு எதிராக மிரட்டல் என்று ஒரு கப்சாவை அவிழ்த்துவிட டில்லி துணியுமா? துணியும். அதற்கான சான்றுகள் வரலாற்றில் இருக்கிறதா? இருக்கிறது. அதாவது 2005 ஆம் ஆண்டு. செல்வி.ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருந்தது. ஆனால் நாடாளுமனறத்தை காங்கிரசும், திமுகவும் கொண்ட கூட்டணி கைப்பற்றி விட்டது. அதுவரை பாஜக ஆட்சி நடந்துவந்தது. அப்போது உள்துறை அமைச்சர்க்க பாஜக ஆட்சியில் அத்வானி இருந்தார். ஒவ்வொரு ஆண்டும் உள்துறை அமைச்சகம் ஒரு சட்ட-ஒழுங்கு நிலைமை பற்றியா நாடு தழுவிய அறிககையை முன்வைக்கும். அவ்வாறு அத்வானி முன்வைத்த கடைசி ஆண்டி அறிக்கையில் தமிழ்நாட்டின் சட்ட-ஒழுங்கு பற்றி எந்த குறைபாடும் கூறவில்லை. ஆனால் அய்.மு.கூ. முதல் கட்ட ஆட்சியில், சிவராஜ் பட்டீல் உள்துறையை கையில் எடுத்தவுடன் ஒரு சட்ட-ஒழுங்கு பற்றிய அறிககையை முன்வைத்தார். அதில் தமிழ்நாட்டில் "விடுதலை புலிகளின் நடமாட்டம் " இருப்பதாக எழுதி அறிவித்தார். இது அதிமுக ஆட்சிக்கு எதிரான மறைமுக குற்றச்சாட்டு. உடனடியாக ஒரு ஆங்கில ஏட்டில் ஓராண்டு முன்பு உள்துறை காணாத ஒரு கண்டுபிடிப்பை இவர் கண்டுவிட்டாரா? என கேட்டு எழுதியது.

அன்றே செல்வி.ஜெயலலிதா முதல்வர் பொறுப்பில் இருந்துகொண்டே இந்த குற்றச்சாட்டு ஒரு பொய் எனபதை அறிக்கையாக வெளியிட்டார்.  அதற்கு பிறகு இரண்டு மாதங்கள் கழித்து, மீண்டும் உள்துறை இது போன்ற ஒரு பூதத்தை கிளப்பியது. அதுதான் பெண்புலிகள் இரண்டு பேர் மணப்பாக்கம் வந்திருகிரறாக்கள் என்றும் அவர்கள் செல்வி.ஜெயலலிதாவை கொல்ல வந்திருக்கிறார்கள் என்றும் ஒரு கடிதத்தை அதே உள்துறையின் அமைச்சர் சிவார்ஜ் பட்டீல் முதல்வர் ஜெக்கு எழுதினார். அதுவும் அடுத்த பொய் என்பதை அதிமுக ஆட்சி அம்பலப்படுத்தியது. அது பற்றி ஜெயா தொலைக்காட்சியும் நிகழ்ச்சி நடத்தி புலி எனும் கிலியை டில்லி கிளப்புகிறது என்று அம்பலப்படுத்தியது. 

அதேபோன்ற கதை இப்போதும் தொடர்கிறது. டில்லிக்கு இப்போது செல்வி.ஜெயலலிதாவின் அழுத்தமான அறிவிப்புகள் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளன. அதற்கு இதுபோன்ற குறுக்கு வழிகள்தான் அவர்களுக்கு தெரிந்த பாதை. இப்போது புலிகளை காரணம் கட்ட முடியாது. ஆகவே அவர்கள் மாவோவாதிகளை கார்ணமாக்குகிரார்கள்.மாவோவாதிகளுக்கு தமிழக முதல்வர் மீது எந்த கோபமும் இப்போது இருக்க வாய்ப்பில்லை. அதுமட்டுமின்றி ஜெயலலிதா எதிர்க்கும் அதே என்.சீ.டி.சீ.யை மாவோவாதிகளும் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆகவே இந்த மிரட்டல் ஒரு சதிதான். அதற்காக் முதலில் தென் இந்தியாவில் மாவோவாதிகள் விரிவாக்கம் செய்ய திட்டம் என்ற பொய்யை முதலில் அவிழ்த்து விட்டார்கள். அடுத்த நாளே இந்த புருடா கதையை கக்குகிறார்கள்.ஒரு நாட்டின் ஆட்சியாளர்கள் இப்படி நடந்துகொள்வது கேவலமாக இருக்கிறது.

Wednesday, May 9, 2012

வணிகர் சங்கம் இந்திய வானில் களப்பணியோடு கலந்தது.



     அன்று மே ஐந்தாம் நாள். வணிகர் சங்கங்களின் பேரவை என்ற பெயரில் இருபது ஆண்டுகளாக த.வெள்ளையன் நடத்திவரும் கூட்டமைப்பு ஒரு பெரும் மாநாட்டை சென்னை தீவு திடலில் நடத்தியது. வெறுமனே வணிகர்களை கூட்டி, வீர வசனம் பெசோதும், கடைகளை அடைத்து விட்டு திருவிழா போல ஆக்குவதும் போதாது என்று வெள்ளையன் எண்ணினார் போலும். அதனால் இந்த முறை பெரும் வணிகர் கூட்டம்முன்பு, பல்வேறு துறைகளிலும்"களப்பணி" செய்யும் தோழர்களை மாநாத்ட் மேடையில் உரை நிகழ்த்த வைத்து, அதன்மூஓலம் அவர்களது அனுபவங்களை, கருத்துக்களை வணிகர்களுக்கு எடுத்து சொல்லவும், வந்திருக்கும் தோழமை இயக்கத்தினருக்கு "தோழமை" காட்டவும் அந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார்.

              அதற்காக காலையில் "கருத்தரங்கு" என்று ஒரு அமர்வு. அதில் உணவு வணிகர் சங்க தலைவர் சந்திரேசன், நகரின் ஒடுக்கப்பட்ட குடிசைவாழ் மக்களை விரட்டியடிப்பதை பற்றி பேச தமிழர் எழுச்சி இயக்க தோழர் வேலுமணி, கடல்வாழ் பழங்குடியான மீனவ மக்களை பற்றி பேச இயற்கையுடன் இணைந்த இலங்கையரால் கொள்ளப்படும் கொடோயை வெளிப்படுத்த பேராசிரியர் பாத்திமாப்பு, உடல் சுகாதாரம் பற்றி பேச மருத்துவர், உழவர் பெருங்குடி பற்றி பேச பேச்சாளர், வங்கிகள்,வருமான வரித்துறை ஊழியர் சங்கத்து பேச்சாளர்கள் என்று அனைத்து தரப்பினரையும் அழைத்து உரையாற்ற வைத்தார். அந்த கரஐத்தரன்கிற்கு துவக்கவுரை என்ற பெயரில் என்னை, அந்த "அன்னியர் எதிர்ப்பு மாநாட்டிற்கு, உரையாற்ற வைத்தார். அதில் கிடைத்த வாய்ப்பில், ஆணிய ஏகாதிபத்தியவாதிகளின் "உலக வர்த்தக அமைப்பு" செய்யம் சதிகளையும், அதை ஒட்டி, அந்நிய நேரடி மொலதனம் இந்தியாவிற்குள் நுழைந்து, சில்லறை வணிகர்களை இல்லாம செய்ய முயலும் "போர்" பற்றியும் என்னால் கூறமுடிந்தது. 

               அத்தகைய போரை எதிர்கொள்ள தமிழ்நாட்டிலிருந்து, தமிழர் நலன் காக்க போராடி வரும் வெள்ளையன், ஒரு கருத்து போரை, ஒரு மக்கள் திரளை திரட்டும் போரை "உஅகமயமாக்களுக்கு" எதிராக் நடத்திவருவதை சுட்டி காட்ட முடிந்தது. அத்தகைய ஏகாதிபத்திய எதிர்ப்பு போரை நடத்த உலகில் உள்ள முதன்மை தேசிய இனம் தமிழினம்தான் என்று என்று நிரூபித்த "தமிழீழ தேசிய  தலைவர்" மேதகு வே.பிரபாகரன் வழியில் சமரசமற்ற போரை அந்நிய ஆதிக்கவாதிகளை எதிர்த்து நடத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்த முடிந்தது. அப்படியோரு போரை உலக சமூகத்தின் முன்னாள் நடத்தி காட்டி தமிழீழ மண்ணை ஆதிக்கவதிகளிடமிருந்து மேட்டு, விடுதலை நிலமாக ஆக்கி, அரசாண்ட தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன், தரைப்படை மட்டுமின்றி, கொரில்லாபடை  மட்டுமின்றி, கரும்புலி தற்கொலைப்படை மட்டுமின்றி, கடல்புலிகள் படை மட்டுமின்றி, வான்புலி படையையும் கட்டி வரலாறு படித்ததை சுட்டும்போது, எழுச்சிமிகு தமிழ் வணிகர்களை காண முடிந்தது.வட இந்திய வணிக சமூகத்தினரின் ஆதிக்கம் தமிழ்நாட்டில்பெருகி வரும் ஆபத்தையும், அதை அடையாளம் காண வேண்டிய தேவையையும் எடுத்துரைக்க முடிந்தது.


            இதோடு விடாமல், வெள்ளையன் வடக்கிருந்து வந்த "களப்பணியாளர்களையும்" மேடையேற்றி மதியத்திற்கு மேல் நாட்டையே திகைக்க செய்தார். இந்திய அளவில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்தும், குழுவினரில், கிறேன்பெடி, வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், ஆகியோரையும், பேசவைத்து, எங்கள் ஐக்கியம் நாடு தழுவிய போர் முரசு என்பதையும், ஊழல் எதிர்ப்பு என்பதையும், கருப்பு பண எத்ரிப்பு என்பதையும் தனது மாநாட்டு தீர்மானங்கள் மூலம் நிரூபித்தார். ஆக்ற்றோய் என்ற நுழைவு வரியை எதிர்த்து போராடியதில் இந்த வணிகர் சங்க நாள் உருதிப்பட்டதை எடுத்து கூறினார். அவ்வாறு "வாட்" என்ற "மதிப்பு கூடுதல் வரியை" ரத்து செய்த மாநில ஆட்சியாளர்களுக்கு கை கொடுக்கும் வகையில் அமைச்சர் செல்ல பாண்டியனும், மேயர்  சைதை துரைசாமியும் மேடையில் அலங்கரித்தனர். மத்ததில் வணிகர்களை சொந்த கால்களில் நிற்க வைக்கும் அரசியலுக்கு அங்கே எழுச்சி குறளை எழுப்பி விட்டார். 

மரணங்கள் மனிதர்களை கூடவைக்கும்



    மே மாதம் ஐந்தாம் நாள். அன்று காரல் மார்க்ஸ் பிறந்தநாள் என்ற நினைவில் இருந்த தோழர்களை அந்த செய்தி அதிர்ச்சி அடைய செய்தது. மக்கள் கலை இலக்கிய கழகம் மாநில பொருளாளர் தோழர் சீனிவாசன் யார்ந்து விட்டார் என்ற செய்தியே அது.அந்த ம.க.இ.க. அமைப்புடன் பெரிய அளவுக்கு உடன்பாடு இல்லாதவன் நான். அவர்களும் மார்க்சிசம், லெனினிசம், மாசேதுங் சிந்தனை தானே பேசுகிறார்கள். ஆனாலும் செயல் மட்டும்தானே உடன்பாடு, உடன்ப்பாடு இன்மை ஆகியவற்றை தீர்மானிக்கிறது. அந்த வகையில் எனக்கு நல்லதொரு "தூரம் தள்ளல்" அந்த தோழர்களுடன் உண்டு. பரவாயில்லை.நானும் பிற தோழர்கள் போலவே சீனிவாசன் மரணத்திற்காக அதிர்ந்து போனேன். அன்று மாலையே சேத்பெட் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்கு சென்று விட்டோம். 

                சேத்துபெட்இல் உள்ள தலித் தோழர்களை சந்தித்து, சீனிவாசன் உடலை அம்பேத்கர் திடலுக்கு எடுத்துவரும் முன்பே தலித் இயக்க பழம்பெரும் தோழர் சத்திதாசன் அவர்களை சந்தித்தோம். அவர் அந்த பகுதியில் வாழ்பவர். அவருடன் சேர்ந்து நானும் பல தோழர்களுக்கு செய்தி அனுப்பி, வரவழைத்து ஆர்களுடன் இணைந்து  சீனிவாசன் மறைவுக்கு நேரிலேயே அஞ்சலி செலுத்தி பதிவு செய்தோம். மறுநாள்தான் எடுப்பார்கள் என்பதால், மறுநாள் காலையிலும் சென்று அதேபோல பல தோழர்கள், வெவ்வேறு இயக்க தோழர்களுடன் சேர்ந்து கொண்டு, இறுதி பயணத்திலு முழுமையாக் கலந்து கொண்டு எங்கள் வருத்தத்தை பதிவு செய்தோம். ஆறாம் நாள் காலையில், விடுதலை ராசெந்திரனையும் அழைத்து வந்து இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பேராசிரியர் சரஸ்வதி, அதற்கு மறுநாளே தனது "தாயார்" மறைவை காலையில் சந்தித்தார் என்ற செய்தி அடுத்த அதிர்ச்சியை தந்தது. 

                             மே ஏழாம் நாள் காலை திருவான்மியூர் ஊடகவியலாளர் குடியிருப்பில், உள்ள பேராசிரியர் சரஸ்வதியின் வீட்டில், அவரது தாயார் சீநிவாசம்மாள்  மறைவு இதேபோல பல இயக்க  தோழர்களை ஒன்று கூட்டி விட்டது.  இரண்டு மரணங்களையும் ஊடகங்களில் அறிவிக்க நாமும் முயற்சி எடுத்து கொண்டதில், முதலில் நான் இருக்கும் காட்சி ஊடகத்தில் வெளியிடமுடிந்தது. இரண்டு இடங்களுக்கும், பெரியார்வாதி, மார்க்சிசவாதி, அம்பேத்கர்வாதி, தமிழ்த்தேசியவாதி, சிறுபான்மை உரிமைவாதி,மக்கள்  மன்றத்தினர்,நேதாஜிவாதிகள்,இடதுசாரிகள், ஊடகவியலாளர்கள்,வழக்கறிஞர்கள், பெண்கள் இயக்கத்தினர்,இலக்கியவாதிகள், என்று பல நீரோட்டங்களில் உள்ள தோழர்கள் வந்து குவிந்தார்கள். இது மரணங்கள் ஏற்படுத்தும் மனித தன்மையை  பறை சாற்றுவதாக இருந்தது..   

சீப்பை ஒளித்து வைத்து விட்டால், கல்யாணம் நின்றுவிடுமா?



   நமது ஊரில் ஒரு கிராமப்புற பழமொழி உண்டு. சீப்பை ஒளித்து வைத்து விட்டால், கல்யாணம் நின்றுவிடுமா? என்று கிராமங்களில் கேட்பார்கள். ஆனால் கிராமப்புற பண்ணையார் பின்னணியில் வந்த சிதம்பரம், சிவகங்கை மாவட்ட பக்கா நாட்டுக்கோட்டை செட்டியார் குடும்ப கனவான் சிதம்பரம், அந்நிய நாட்டில் படித்து, டில்லியில் அதிகார கோலோச்சுவதால் அந்த பழமொழியை மறந்து விட்டார் போலும். என்.சீ.டி.சீ.என்ற புதிய மருந்தை இந்திய நாட்டு அரசியலுக்கு புகுத்த முயலும் சிதம்பரம், அனைத்து முதல்வர்களும் எதிர்க்கிறார்கள் என்பதால், பெயரளவுக்கு ஒரு முதல்வர்கள் மாநாட்டை கூட்டி, அதில் பெயரளவுக்கு விவாதித்து விட்டு, பிறகு தனது அமெரிக்கா கனவை நடைமுறை படுத்தி  விடலாம் என்று எண்ணினார்.  ஆனால் அந்த மாநாட்டில் சில முதல்வர்கள் கராராக பிடித்து விடுவார்கள் என்று அவருக்கு உளவுத்துறை அதிகாரிகள் அறிவுரை கூறிவிட்டார்கள்.அதில் முதன்மையாக தமிழக பெண் முதல்வர் விவேகமாக கேள்விகளை கேட்டு, மற்ற முதல்வர்களையும் "தட்டி" எழுப்பி விடுவார் என்றும் அதனால் தங்களது  சதித்திட்டமே அம்பலமாகி விடும் என்றும் தெரிவித்து விட்டனர். 

                   
                            அதனால் அடுத்த தந்திரம் ஓரை சிதம்பரம் செய்தார். அதுதான் அழைப்பு அனுப்பிய கையேடு, தமிழக முதல்வருக்கு மட்டும் " கூட்ட நிகழ்ச்சிக்கான நகல் அறிககையை" அதாவது "தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்" அமைக்க உருவாக்கிய நகல் அறிககையை அனுப்பாமல் தடுத்து விட்டார். பயங்கரவாத தடுப்பு பற்றிய விவாதத்திற்கான நகலையே "தடுக்கப்பு வேலை" செய்யும் கெட்டிக்கார உள்துறை மைச்சர் அவர். அந்த "சாதியையும்" புரிந்து கொண்டுவிட்ட தமிழக முதல்வர், அந்த நகல் அறிககையை "ஓடிஸா" முதல்வரிடம் கேட்டு, பெற்றுக் கொண்டு, அதன்மீது கேட்க வேண்டிய கேள்விகளையும், கொடுக்க வேண்டிய பதில்களையும் "தயார்" செய்துகொண்டே சென்றுவிட்டார்.அதனால்தான் "வசமாக" மாட்டி கொண்டார் சிதம்பரம். 

                  அதனால் முதல்வர்களின் கூட்டம் மேலும் சிதம்பர ரகசியத்தைமபலப்படுத்தி விட்டது.இதனால்தான் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் சிதம்பரம் பற்றி "சின்னப்பையன் சிதம்பரம்" என்று கூறினாரோ? 

Tuesday, May 8, 2012

மீசையில்லாத பயங்கரவாதம், ஓசையில்லா பயங்கரவாதம்.

மீசையில்லாத பயங்கரவாதம், ஓசையில்லா பயங்கரவாதம்.
         பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும், தடுப்பதற்கும் இந்தியாவின் மத்திய அரசு பெரும் முயற்ச்சி எடுப்பதாக அறிவிக்கிறது. அப்படியானால் நல்லதுதான். ஆனால் அதற்காக ஒரு மையத்தை ஏற்படுத்த முயல்வாதாக அறிவித்தபோதுதான் முரண்பாடு எழுந்துள்ளது. "உள்துறை முன்வைத்துள்ள "பயங்கரவாத தடுப்பு மையம்" என்பது மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடுவதாக முதலில் மாநில முதல்வர்கள் பத்து பேர் போர்க்கொடி தூக்கினர். அதற்கு பிறகு இப்போது, அந்த தடுப்பு மையம் மாநில அரசுகைன் உரிமைகளை பறிக்கிறது  என்று குரல் எழுப்பியுள்ளனர். இது தமிழக முதல்வரால் எழுப்பப்பட்டுள்ளது. இது மிகவும் பெரியதொரு குற்றச்சாட்டு. அதனால் தீவிரமாக ஆராய வேண்டிய ஒன்று.

                       இந்தியா ஒரு குடியரசு என்று அரசியல் சட்டத்தின் முகப்பில் சொல்லப்பட்டுள்ளது.  சோஷலிச நாடு என்றும்தான் சொல்லப்பட்டுள்ளது. தனியாருக்கு தாரை  வார்க்கப்படவில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். அதுபோல இந்த நாடு ஒரு கூட்டாட்சி தத்துவத்தை கொண்டது என்று இன்றும் நம்புகிறவர்கள்  அதிகம். அப்படியிருக்க மத்திய அரசின் ஒரு திட்டம் மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கிறது என்றால் அதை யார்தான் பொறுத்து கொள்வார்கள்.பல மொழிவாரி மனைலன்களை கொண்ட இந்தியா பல மாலில கட்சிகளால் அந்தந்த மாநிலங்களில் ஆளப்படுகிறது. அப்படிப்பட்ட வேளையில் மாநில கட்சிகளின் தலைமைகளை அல்லது முதல்வர்களை கலந்து ஆலோசிக்காமல் ஒரு திட்டத்தை மாநிலங்களின் மேல் திணித்தால் யார் ஏற்றுக்கொள்வார்கள்.?


                     என்.சீ.டி.சீ. என்ற அந்த பயங்கரவாத தடுப்பு மையம் என்பது அமெரிக்காவிலிருந்து சிதம்பரம் இறக்குமதி செய்த பெயர்.அங்கே சென்று பயங்கரவாத்  தடுப்பை  எப்படி செய்வது என்று கற்றுவர நமது உள்துறை மைச்சர் சிதம்பரம் அதிகாரிகளுடன் சென்ற போது, அமெரிக்காவில் ஒரு என்.அய்.ஏ. என்ற உளவுத்துறைகளின் ஒருங்கிணைப்பை கண்டாராம். அதை அப்படியே இங்கும் "உளவுத்துறைகளின் ஒருங்கிணைப்பு" நேரு அதேபெயரில் என்.அய்.ஏ. என்றி தொடங்கினார். அதேபோல அங்கு ஒரு என்.சீ.டி.சீ. இருப்பதை பார்த்து விட்டு, இங்கும் ஒரு என்.சீ.டி.சீ. அவசியம் என்று கருத்து கொண்டுள்ளார். ஆனால் அமெரிக்காவில் உள்ள என்.சீ.டி.சீ. என்பது அந்த நாட்டின் ஐம்பது மாநிலங்களையும் சுஎட்ச்சையாக் அசெயல்பட அனுமதிக்கும் ஒரு மையம். அதாவது அந்த நாட்டின் ஐம்பது மாநிலங்களும் "கூட்டமைப்பு" தன்மையுடன் இயங்கி வருகின்றன. ஆனால் இந்தியாவில் அப்படி ஒரு ஏற்பாடு எப்போதுமே இல்லை. மாநிலங்களின் மீஎது மத்திய அரசு "ஆதிக்கம்" செலுத்தும் தன்மைதான் இங்கே உள்ளது. ஆதலால் அதே பெயருடன் சிதம்பரம் இங்கே மைக்குய்ம் மையம் "மாநில அதிகாரங்களை " மதிக்கவில்லை. அதுவே பிரச்னையை கிளப்பி விட்டுள்ளது.

                       
                     இந்த பயங்கரவாத் தடுப்பு மையம் அறிவிக்கப்படும் அதேநேரத்தில் "எல்லை பாதுகாப்பு படையின்" சட்ட திருத்தங்கள் வந்துள்ளது. அதுவும் மாநில உரிமைகளை பறிக்கிறது என்று ர்தமிழக்க முதல்வர் உட்பட அனைத்து முதல்வர்களும் தெரிவித்து உள்ளனர். அதேபோல அதேநேரத்தில் "ரயில்வே பாதுகாப்பு படையின்" சட்ட திருத்தங்களும் வந்துள்ளது. அதுவும்கூட, மாநில உரிமைகளை ஒடுக்குகிறது என்று தமிழக முதல்வர் உட்பட அனைத்து முதல்வர்களும் தெரிவித்துள்ளனர். இது தீவிரமாக் ஆராயப்பட வேண்டிய விஷயம். இந்த மூன்று விதமான மத்திய திட்டங்களும் ஒரே நேரத்தில் மாநில உரிமைகளை பறிக்கும் தன்மையில் வார காரணம் என்ன? இதற்க்கு பின்னணி இல்லாமல் இருக்குமா? இந்திய அரசை அதன் நாடாளுமன்ற பாதையை "தடம்புரள" வைக்க ஒரு சதியாக இந்த திட்டங்கள்  வருகின்றனவா? 

                  மத்திய அய்.மு.கூ. அரசு இனி தான் தனது ஊழல் முகத்துடன் தொடர உடியாது என முடிவு செய்து, மாநில கட்சிகளையும், மாநில அரசுகளையும் ஒடுக்கி ஒரு  ?ஒற்றையாட்சி தன்மை" கொண்ட அரசை கட்டி எழுப்ப இதன்மூலம் முயர்ச்சிக்கிறதா? அப்பசியானால் அதற்கு பயங்கரவாத எதிர்ப்பு முகத்தை காட்டி என் வெளிவருகிறது? அவர்கள் காட்டும் பயங்கரவாத நிகழ்ச்சி "மும்பை தாக்குதலை" மையமாக வைத்து புனையப்பட்டுள்ளது. அந்த மும்பை தாக்குதலில் ஒரு "கசாப்" என்ற சிறுவன் மாட்டியுள்ளான். அவன் மீசை முளைக்காத சிறுவன். அவனுக்கு அனுபவம் அதிகம் உள்ள அமெரிக்காவின் குடியுரிமை பெற்ற "ஹேட்லி, ரானா" என்ற இருவர் மூளையாக இருந்தது தெரிந்துள்ளது. அவர்கள் இருவரையும் இந்தியாவிற்கு அனுப்ப அமெரிக்கா தயார் இல்லை. அவர்கள் இருவரையும் போய் கொண்டுவர முயன்ற இந்திய தைகாரிகளும் வெறும் கையேடு திரும்பி வந்தனர். அதன்பிறகு சிதம்பரம் அமெரிக்கா செல்லும்போது உடன் சென்ற அதிகாரிகள் அந்த இரு பயங்கரவாதிகளையும் அமெரிக்கா உளவுத்துறை விசாரித்த விவரங்களை மட்டுமே பெற்று திரும்பினர். என் இந்த நிலை? அமெரிக்கா என் மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளிகளை இந்தியாவிடம் வெளிப்படையாக ஒப்படைக்கவில்லை? அப்படியானால் அமெரிக்காவிற்கு அந்த தாக்குதலில் பங்கு இருந்ததா? அதை வெளியே வந்துவிட கூடாது என அமெரிக்கா மறைகிறதா?

               இத்தனை விவகாரங்களை வைத்து கொண்டு  சிதம்பரம் அமெரிக்கா பாணியில் ஒரு தடுப்பு மையம் உருவாக்க முயல்வது சந்தேகத்தை கிளப்பிகிறது.