Sunday, April 1, 2012

நாளை போஸ்கோ வரலாறு கேட்கலாம் வாங்க.

ஏப்ரல் 2 ஆம் நாள், திங்கள் கிழமை காலை 11 மணிக்கு சென்னையில் போஸ்கோ ஆலைரகசியங்களை கேட்கலாம். சனிக்கிழமை காலை ஊடகங்கள் ஒரு அதிர்ச்சி செய்தியை தந்தன. கொரியா நாட்டு மூலதனத்தில் ஓடிஸா மாநிலத்தில் ஒரு பெரும் எக்கு ஆலை திட்டமிடப்பட்டுள்ளது. அது ரூ.52000 கோடி மூலதனத்துடன் இறங்குகிறது. நமது காடுகளையும், கனிம வளங்களையும், மண் வளத்தையும் அதை வைத்து பிழைக்கும் ஆதிவாசி, தலித் மக்களையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் அழித்து அந்த ஆலை கொண்டுவரப்படுகிறது. அதை எதிர்த்து அந்த பாரம்பரிய மக்கள் போராடுகின்றனர். இப்போது இந்திய மத்திய அரசின் "சுற்று சூழல் மற்றும் வன இலாகா" அமைச்சகம் கொடுத்த அனுமதியை, "பசுமை தீர்ப்பாயம்" இடைக்கால ரத்து செய்துள்ளது. அவ்வாறு ரத்து செய்வதற்கான அடிப்படை காரணங்களை இந்திய அரசு நியமித்த "நிபுணர் குழு" அறிககையை கொண்டே முடிவு செய்துள்ளனர். அந்த நிபுணர் குழு மத்திய அரசின் சுற்று சூழல் இலாக்கா கொடுத்த அனுமதியையும், அதற்கான ஆதரங்களையும் கடுமையாக எதிர்த்தது.

அந்த நிபுணர் குழுவில் சென்னையை சேர்ந்த தமிழ்நாடு பி.யு.சீ.எள். தலைவராக இருந்த வழக்கறிஞர் சுரேஷ் செயல்பட்டார். அவர் தனது ஆதாரங்களை நம் முன்பு விரிவாக்க விளக்க ஒப்புக்கொண்டுள்ளார். திங்கள் கிழமை காலை பதினோரு மணிக்கு, உயர்நீதிமன்ரம் எதிரே உள்ள "லிங்கி செட்டி தெருவின் முதல் குறுக்கில் உள்ள எரரபாலா தெரு முக்கில் உள்ள வி.ஏன்.கே. கட்டிடத்தில், இரண்டாவது மாடியில், நடைபெறும். அனைவரும் வரலாம். தங்களால் வருகை உவகை டஹ்ரும். ---டி.எஸ்.எஸ்.மணி .9444905151

1 comment:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி.

Post a Comment