Tuesday, March 13, 2012

ராஜபக்சே தலை தப்புமா?

ஒவ்வொன்றாக ராஜபக்சே கும்பல் செய்த கொலைக்குற்றங்கள், போர் குற்றங்கள், மனித உரிமைமீறல்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை ஐ.நா.வின் மனித உரிமைகவுன்சில் முன்னால் பட்டியலிடப்பட்டு வருகின்றன. போரின் கடைசி காலத்தில் நடத்தப்பட்ட கொடுமைகளை ரத்த வெறிபிடித்த கொலைகளை ஆதாரத்துடன் எடுத்து வைத்து அம்பலப்படுத்த மேற்கத்திய நாடுகளில் பல சக்திகல்முனைப்புடன் செயல்படுகின்றன.அவற்றில் "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்" அதிக வேகத்துடன் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. அதன் தலைமை அமைச்சர் சட்ட தரணி விஸ்வநாதன் உருத்திரகுமார், ஒரு புத்தகமாக வெளியிட்டு போர்குற்றன்களை, வெளிப்படுத்தியுள்ள ஐ.நா. நிபுணர் குழு, சேனல் நாலு, டப்ளின் தீர்ப்பாயம், அமெரிக்க வெளிவிவகார துறையின் அறிக்கையை அமெரிக்க காங்கிரசில் வைத்த நகல் மற்றும் எல்.எல்.ஆர்.சி.என்ற ராஜபக்சே அமைத்த கற்ற படிப்பினைகளும், நல்லிணக்க ஆணை குழு அறிக்கை ஆகிய ஐந்து விதமான அறிக்கைகளையும் ஒப்பிட்டு எப்படி ராஜபக்சேவின் சிங்களர்கள் அறிக்கை ஒவ்வொரு விசயத்திலும் உண்மைக்கு மாறாக, நீர்த்துபோன வடிவில் விசயங்களை முன் வைக்கிறது என்பதை தெளிவாக விளக்கியுள்ளனர். இந்த ஆங்கிலப்புத்தகம் ஒவ்வொரு நாட்டு தூதரகங்களுக்கும் கொடுக்கப்பட்டு ஒரு பெரும் கவன ஈர்ப்பை ஏற்படுத்த அந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறப்பினர்கள் முயன்று வருகிறார்கள்.


இப்படி பல முறைகளில் வ்வேளிப்பட்டு வரும் உண்மைகளை எல்லாம் சேர்த்து பார்த்தால் இந்த முறை ராஜபக்சே அரசு தப்பிக்க உலக சமூகம் முன்னாள் வழியில்லை என டேஹ்ரிகிறது. ஆனாலும் அதையும் சமாளிக்க சிங்களம் முயற்சி செய்கிறது. அதேசமயம் ராஜபக்சேவை தூக்கி எரிந்து விட்டு ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அமெரிக்க ஒரு ஆட்சியை ஏற்படுத்த முயல்வதாக ஒரு பேச்ச்சும் சிங்களத்தால் பேசப்படுகிறது. அதற்கு ஆப்பு வைப்பது போல, ரணில் தலைமை தாங்கும் "ஐக்கிய டேஹ்சிய கட்சி" என்ற சிங்கள கட்சியில் பெரும் அளவு உறுப்பினர்கள் மூலம் ரணிலுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துவதில் பெரிய அளவில் ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். ஆனால் சமீப ஆண்டில் தென்னிலங்கையான சிங்களத்தில் உள்ள மக்களில் பலரும் அரசு மீது அதிருப்தியை தெரிவித்த காரணத்தால், சிங்களர் பலர் காணாமல்போவதும், அதில் பலர் கொலை செய்யப்படுவதும் அதிகரிதது வருகிறது. அந்த செய்தி நாள் தஹ்வைராமல் கடந்த ஓர் ஆண்டாக காட்சி ஊடகங்களில் சிங்களத்தில் வந்து கொண்டே இருக்கிறது. அப்படி வரும்போது அவர்களுக்கு ஆதராவாக ஆர்ப்பட்டங்கல்கொளும்பு நகரில் நடந்த வண்ணமே இருக்கிறது. அந்த ஆர்ப்பட்டங்களிலும் கூட தமிழர்கல்கழந்து கொண்டு தோழமை காட்டுகிறார்கள். ஆனால்டமழர்கள் இதேபோல காணமல போனபோதும், கொலை செய்யப்பட போதும் சிங்கலர்கல்யாரும் ஆதரவு குரல் எழுப்பவில்லை. இப்போது நிலைமை மாறி வருகிறது.

சிறையில் இருக்கும் பொன்சேகா ஆதரவு சக்திகள் அமைதியாக ஆட்சி மாற்றத்திற்கு வேலை செய்கிறார்கள். அதேசமயம் மகிந்தாவின் தம்பி பசில் ராஜபக்சே, தனது அன்னிக்கு எதிராக சதி செய்ய தொடக்கி விட்டார். அதாவது மகிந்தாவிற்கு பிறகு அவரது மகனை கொண்டுவர மகிந்தாவின் மனைவி விரும்புகிறார். ஆனால் அதை பசில் விரும்ப வில்லை. அதனால் அவர் அதற்கு எதிராக சதி செயல்களை ஊக்குவிக்கிரார்ட். இப்படி ஒரு சூழலில் சிங்களம் ட்டிஹநிமைப்பட்டு வருகிறது.உள்நாட்டிற்குள் இப்படி தனிமைப்ப்படும்போது, உலக அரங்கிலும் தனிமை பட்டு வருகிறது. இப்போது தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் இரண்டாவது மகனும் பன்னிரண்டு வயதே ஆனா பாலச்சந்தர் பிடிபட்டு படுகொலை ஆனா செய்தி, ஆதாரத்துடன் வெளிவந்து விட்டது. அதனால்சிங்கலம் மேலும் உலக அரங்கில் தனிமைப்படுகிறது. இந்த நேரத்தில் சரியான டியை தமிழர்கள் உலகெங்கும் கொடுத்து அந்த பாம்பு பாதி உயிருடன் திரும்ப கூடாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.இதுவரை செய்த வேலைகளை விட இப்போதுதான் அதிகமாக ராஜபக்செகும்பலை சூடான் மன்னர் மீது ஐ.நா.போர்குற்றன்களை சுமத்தி எப்படி கைது செய்ய முடிவு செய்ததோ, அதேபோல ஒரு சூழலை இலங்கைக்கும் ஏற்படுத்த வேண்டும்.அதையொட்டி எப்படி ஐ.நா.வும் உலக சமூகமும் கேட்டுக் கொண்ட படி, சூடானில் ஒரு வாக்கெடுப்பு நடத்தி, தெற்கு சூடான் மக்கள் தங்களது விருப்பப்படி ஒரு சுய நிர்ணய உரிமை ஒண்ட தனிநாட்டை ஏற்படுத்திக் கொண்டார்களோ அதேபோல இலங்கையிலும் த்ஜமிழினம் தனது சுதந்திரமான ஈழத்தை ஏற்படுத்தி கொள்ள உலக சமூகம் ஒத்துழைக்க வேண்டும். அதற்கான தயாரிப்புகளை இந்தியாவிற்குள் நாம் செய்யவேண்டும்.

No comments:

Post a Comment