Wednesday, March 14, 2012

வந்தே மாதரம்?.வந்து ஏமாத்தறோம்?

டில்லிகாரர்கள் அதாவது வட இந்தியர்கள் அதாவது இந்தியா என்ற மாபெரும் துணை கண்டத்தின் பூகோள அகலத்தை, நீளத்தை ஆளக்கூடிய தேசிய இனங்களின் எதிரிகள், அதாவது இந்திய சிறையில் அனைத்து சிறுபான்மை தேசிய இனங்களையும் ஆண்டு வரும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள், அதாவது காலனி நாடாக இந்த நாட்டை ஆண்டு வந்தவர்களின் கைகளில் அதிகாரத்தை மட்டுமே கை மாற்றி வாங்கி கொனடவர்கள், திடீரென தமிழ் தேசியத்தின் மீது, ஈழ தமிழர்கள் மீது பற்றும், பாசமும் கொள்வார்களா? அல்லது அந்த தேசிய இன விரோதிகள் திடீரென தமிழ்நாட்டு தமிழர்களின் நியாயமான குரல்களுக்கு நல்ல செவி சாய்ப்பார்களா? அல்லது அவர்கள் தாங்கள்தான் ஈழத்தமிழர் மீது போர் நடத்த தூண்டியவர்கள் என்ற உணர்வே இல்லாமல் இலங்கை சிங்கள ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில்முன் உள்ள அமெரிக்க தீர்மானத்தை தாங்களாகவே ஆதரிப்பார்களா?

நாள் தவறாமல் இரண்டு நாட்களாக மக்களவையிலும், மாநிலங்களவையிலும், பெரும் கூச்சலை எல்லா தமிழ்நாட்டு கட்சிகளும் கிளப்பிய பிறகு, தமிழ்நாட்டு வாக்களர்களை திருப்தி படுத்த வேறு வழியில்லை என்று தமிழ்நாட்டு நாடாளுமன்ற கட்சிகள் அனைத்தும் முடிவு செய்து உண்மையாகவே அதற்காக ஐ.நா. வில் உள்ள தீர்மானத்தை ஆதரிக்க குரல் எழுப்பும் போது முதலில் குறிப்பிட்ட நாட்டில் உள்ளபிரச்ச்னை மீது தீர்மானம் கூடாது என்று கூறிய இந்திய அரசு, அத்தகைய தீர்மானத்தை தென்னாப்பிரிக்க நிறவெறிக்கு எதிராக நேரு காலத்தில் இந்தியா மேற்கத்திய நாடுகளை எதிர்த்து கூட கொண்டுவந்தது என்பதை மறந்த அல்லது எதிர்க்கும் இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் இப்போது வேறு கோணத்தில் பேசுவது எதனால்? பிரதமர் தான் எல்லா சம்பந்தப்பட்ட சக்திகளுடனும் பேசி வருவதாக கூறுவது ஏன்? இன்னமும் முடிவு செய்ய காலம் இருக்கிறது என்று பிரணாப் முகர்ஜி நீட்டுவது ஏன்? நாடாளுமன்ற விவகார மைச்சர் பன்சிலால் தனைகளுக்கு ஐ.நா. என்றால் என்ன என்றே தெரியாது என்ம்பது போல, வெளிவிவகார் அமைச்சர் கிருஷ்ணா வந்துதான் பதில் கூற வேண்டும் என்று தள்ளி போடுவது ஏன்? தமிழ்நாட்டு எம்.பி.கலை பார்த்து, ப.சிதம்பரம் தமழிலேயே பேசி, நாளை நல்ல முடிவு அவரும் என்று கூறுவது ஏன்? நாம் குரிப்புயட்டது போல அது அமெரிக்க சார்பு இந்திய அரசின் நிலை. சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கும் ராஜபக்சே க்கு எதிரான ஒரு சிறிய முன்வைப்பு. அதேசமயம் அதற்குள் ராஜபக்சேவை காப்பாற்ற எடுக்கும் புதிய வியூகம்.

அப்படி எதை இந்திய அரசு எடுத்தாளுமுல்க சமூகம் முன்னாள் தான் அதனிமைப்படாமல் இருக்க எடுக்கும் முயற்சிதான் எடஹ்விற மனப்போர்வமான தமிழர் நலனை பாதுகாக்கும் முயற்சி அல்ல. இந்த நிர்ப்பந்தம் நாட்டிற்குள் மட்டுமின்றி உலக சூழலிலும் இந்திய அரசுக்கு வந்திருப்பதை அணங்கு டேஹ்ரிந்துதான் அவர்கள் தங்கள் கூட்டாளி கலைஞரையும், தன்கள் கட்சி ஆள் ஞானதேசிகனையும் பேச வைதிருக்கிரறாக்கள்.ஆகவே வருகின்ற இந்திய அரசின் ஆதரவு பெரும் மாதரத்தை ஏற்படுத்தாது. ஆனால் அதுவே உலக சமூகம் மத்தியில் போர் குற்றவாளி ராஜபக்சேவிற்கு எதிரான ஒரு செய்தியை வலுப்படுத்தும். அது தொடக்கம் என்று காண்போம்.ஆகவே இந்த தீர்மானம் சரிதான். ஆனால் அதற்கும் மேலாக ஒரு சுயாதீனமான அனைத்து நாட்டு விசாரணையை ஐ.நா. தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை உயர்த்தி பிடிப்போம். ஆகவே இந்த கிய நகர்த்தல்கள் டில்லியின் வந்து ஏமாற்றுகிறோம் என்ற முழக்கம்தான்.,

No comments:

Post a Comment