Tuesday, March 13, 2012

உலக சமூகத்துடன் இந்திய அரசு சேருமா?

நேற்று நாடாளுமன்றம் அமளி, துமளி ஆனது. திமுக, அதிமுக, சி.பி.ஐ,,வி.சி.க. என தமிழக கட்சிகள் போர் பரணி பாடின. தமிழ்நாட்டில் உள்ள கனகிராஸ் மற்றும் பாஜக கூட ஈழத்தமிழர் மீது கரிசனம் கொண்டு, மகிந்தா அரசின் போற்குற்றன்களை விசாரிக்க அமெரிக்க தீர்மானத்திற்கு ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் வாக்களிக்க கேட்டுக் கொள்கின்றன. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மொத்தம் உறுப்பினர்கள் நாற்பத்தி ஏழு என்கிறார்கள். அப்படியானால் இருபத்தி நாலு பேர் வாக்களித்தால் அமெரிக்க தீர்மானம் நிறைவேறிவிடும். அமெரிக்காவும் தீர்மானத்திற்கு வாக்களிக்கும் படி ஒவ்வொரு நாட்டையும் கேட்டுக் கொள்கிறது. இலங்கையும் அந்த தீர்மானத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என ஒவ்வொரு நாட்டையும் கேட்டுக் கொள்கிறது. ரஷியா, சீனா, பாகிஸ்தான் போன்றோர் இலங்கை ராஜபக்சே அரசுக்கு அதரவாக உள்ளனர். இங்கு போற்குற்றவாளிகளை தண்டிக்க போராட்டம் நடத்தும் இடது சாரிகள் அதாவது சி.பி.ஐ, சி.பி.எம். ஆகிய கட்சிகள் தனகளது தோழமை கட்சிகள் ஆட்சி நடத்தும் ரஷியா, சீனா நாடுகளின் அரசாங்கங்களை தீர்மானத்திற்கு ஆதரவாக திருப்ப முயன்றும் தோற்று விட்டன. தார்மீகரீதியாக இந்திய அரசு ஆதரித்தால்தான் இலங்கை அரசுக்கு முகம் இருக்கும்.

இப்படி சூழலில்தான் தமிழ்நாட்டு கட்சிகள் நாடாளுமன்றத்தில்குரல் எழுப்புகின்றன. குறிப்பாகவே அமெரிக்க தீர்மானத்தை ஆதரியுங்கள் என்றே நேரடியாக இந்திய அரசை கோருகின்றன. இங்கே தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் காரர்களும் சேர்ந்து அதே குரலை எழுப்புகின்றனர். வெளிவிவகார மைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தானகளின்னமும் முடிவு எடுக்க வில்லை என்று சென்னையில் வந்தபோது கூறியுள்ளார். இதுவரை இலங்கை அரசுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இந்திய வெளிவிவகார அமைச்சகம் இப்போது இன்னமும் முடிவு எடுக்கக் வில்லை என்று கூறியது ஒரு அதிசயமே. உலக அரங்கிலுள்ள நிலைமை என்ன? இந்த தீர்மானம்தான் உலக தமிழர்கள் விரும்பியதா? இந்த தீர்மானத்தில் எல்.எல்.ஆர்.சி.என்று அழைக்கப்படும் " கற்ற படிப்பினைகளும், நல்லிணக்க ஆணைய குழுவும்" என்ற ராஜபக்சேவால் உருவாக்கப்பட்ட குழு சில வாரங்கள் மட்டுமே ஆய்வு செய்தது.போர் நடந்த காலம் பற்றி கணக்கு எடுத்தது.மனித உரிமை மீறல்கள் நடந்ததா? என ஆய்வு மேற்கொண்டது. அதில் பல விசயங்கள் உலக சமூகம் கண்டுபிடித்த போர்குற்றங்களை மறைத்தது. மனித உற்றிமை மீறல்கல்னடன்தது பற்றி சிறப்பு ஆணையர் போட்டு விசாரிக்க கோரியது. இந்த அணுகுமுறையை அமெரிக்க தீர்மானம் ஏற்றுக் கொண்டு அந்த எல்.எல்.ஆர்.சி.கொடுத்த ஆலோசனைகளை அமுலாக்க கோருகிறது.

அதைக்கூட ராஜபக்சே ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அதையாவது அமுல்படுத்து என்று போர்குற்றம் செய்த அரசையே கேட்டுக் கொள்வதுபோல அமெரிக்கக் தீர்மானம் இருக்கிறது என்பதே எழும்பியுள்ள விமர்சனம்.
அதுதவிர தீர்மானம் வடக்கு மாவட்டத்திலிருந்து ராணுவம் திரும்ப பெறப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.தமிழர் பகுதிகளுட்பட மாகாண ஆட்சிகளுக்கு உரிமைகள் கொடுக்க ப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. இத்தகைய தீர்மானத்தை கூடமஹிந்தா அரசு ஏற்கவில்லை. அதனால்தீர்மந்த்திற்கு எதிராக உலக சமூகம் மத்தியில் பரப்புரை செய்கிறது. இப்போது இந்தியா என்ன நிலை எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கை எதிர்த்து போட்டி வணிகம் நடத்த இந்திய அரசு எண்ணுகிறது. அதற்கு சீனாவின் அரசியல் செல்வாக்கை எதிர்த்து அமேரிக்கா தனது செல்வாக்கை கூட்ட இந்தியாவின் ஆதரவை வேண்டுகிறது. உலக சமூகம் மத்தியில் இருபத்தி நாலு நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்து விட்டால், இந்தியா அனைத்து நாட்டு சமூகம் முன்னாள் தலைகுனிய வேண்டி வரும்.


ஆகவே இந்திய அரசு யோசிக்கிறது. தனது அமெரிக்க அதரவு பொருளாதார சார்பு நிலையில் நின்று யோசிக்கிறது. அமெரிக்காவின் இளைய பங்காளியாக இருப்பதால் அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து நிற்க இந்திய அரசுக்கு "துணிவு" இல்லை. தேவையுமில்லை. கொழும்பு அரசை எதிர்க்க இந்தியா தாயாரையும் இல்லை. அப்படியானால் அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கும் வேளையிலேயே, ராஜபக்சே அரசை பிணைஎடுக்கவும் இந்திய அரசு நினைக்கிறது. அதற்க்கு ஏதாவது திருத்தம் கொண்டுவந்து தீர்மானத்தை மேலும் நீர்த்து போக செய்யலாம். ஆனாலும் இந்திய அரசு முன் எப்போதும் செய்தது போல அமெரிக்கக் தீர்மானத்தை இந்த முறை எதிர்க்காது என்றும் தெரிகிறது. அதற்க்கு தகுந்த ஒரு சூழலை நாட்டிளுருவாக்க மத்திய அரசு எண்ணுகிறது. அதையொட்டியே, தங்கள் கட்சி, மற்றும் தங்கள் கூட்டணி கட்சி ஆகியவற்றை உசுப்பி விட்டு அமேறிக்க தீர்மானத்தை ஆடஹ்ரிக்க கூவ சொல்கிறது. அப்படி இந்திய மத்திய உளவு நிறுவனத்தால் வழிகாட்டப்பட்டு டில்லி சார் அரசியல் நடத்தும் கட்சிகளும் இந்த குரலில் இணைந்து கொள்ளசெய்யப்பட்டுள்ளன. இப்போது புரிகிறதா? சிலரது புதிய ஈழத்தமிழர் மீதான அக்கறை?

No comments:

Post a Comment