Wednesday, February 22, 2012

நாமே எல்லாம் என்பதில் யார் வழி இருக்கிறது?

தேமுதிக. என்ற தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சி தனது பொதுக் குழுவை நடத்தி முடித்தது. ஏற்கனவே கட்சியின் தலைவராக இருக்கும் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் கட்சியின் தலைவர். கட்சி தொடங்கும்போது பொது செயலாளராக இருந்த ராமு வசந்தன் மறைந்த பிறகு அந்த பொறுப்புள்ள பதவியை கேப்டன் விஜயகாந்த் தானே பொறுப்போடு எடுத்து கொண்டுள்ளார். அந்த பொறுப்புக்கும் தேர்தல் நடந்து, அதிலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களே எதிர்ப்பு இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனநாயக ரீதியாக இப்படி அவர் இரண்டு பதவிகளை வகிப்பது குறித்து சிலர் கேள்வி கேட்கிறார்கள் அவைத்தலைவராக . பண்ருட்டி ராமச்சந்திரன் இருக்கிறாரே என்று நாம் கேட்டால் அது அவர்களை சமாதனப்படுத்த வில்லை. ஆகவே நாம் வரலாற்றை எடுத்து பல முன்மாதிரிகளை காட்டவேண்டியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் தன்னை எம்.ஜி.ஆர்.இன் வாரிசு என்றுதானே அழைக்கிறார். அப்படியானால் அந்த மருதூர் கோபால ராமச்சந்திரனின் அடியொற்றி இவரும் ஏதாவது செய்யவேண்டாமா?

எம்.ஜி.ஆர். இடம் உங்கள் கொள்கை என்ன என்று கேள்வி கேட்டார்கள். எம்.ஜி.ஆர்.இடம் பொய் கேள்வி கேட்கலாமா? அவர் உடனடியாக "கேபிடலிசம், சோசலிசம், கம்யுனிசம் அனைத்தும் கலந்ததுதான் அண்ணாயிசம்" என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். அசந்து போனார்கள் ஊடகத்தார்கள். அதுபோல கருப்பு எம்.ஜி.ஆர். விஜயகாந்த் தனது கட்சியின் பெயரை கூறும்போதே அந்த "வரலாறு" படைத்து விட்டார். "தேசிய" என்று தொடங்கினார். செத்தார்கள் தேசிய கட்சிகள். "திராவிட" என்று தொடர்ந்தார். மூர்ச்சை போட்டார்கள் திராவிட கட்சிகள்.முன்னேற்ற என்று அவர் வாயை மூடும்முன்பே இங்குள்ள முன்னேற்ற கழகத்தினர் காணாமல் பொய் விட்டார்கள். அப்படி ஒரு மாபெரும் கண்டுபிடிப்புடன் கட்சி பெயரை அனைத்து உணர்வுகளையும் ஒருங்கே சேர்த்து அமைத்த ஒரு தலைவர் அந்த கட்சியின் பதவிகளை அதேபோல அனைத்து கட்சிகளின் "நடைமுறைகளையும்" இணைத்து போடா மாட்டாரா? அதுதான் அவரே தலைவர் மற்றும் போதுச்யலாளர் பொறுப்புகளை எடுத்து கொண்ட கண்டுபிடிப்பு.

உதாரணமாக தேசிய கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகியவை "தலைவர்" பொறுப்பை பெரிதாக மதிப்பார்கள். ஆகவே அவர்களை போல தலைவர் பொறுப்பும் கேப்டனுக்கு வேண்டும். சி.பி.ஐ, சி.பி.ஐ.[எம்] ஆகிய தேசிய பேசும் கட்சிகள் பொது செயலாளர்தான் முக்கியம் என வைத்துள்ளனர். அதனால் அடஹியும் எடுத்து கொண்டார். திராவிட கட்சிகள் என்று கூறும் திமுக போன்ற கட்சிகள் தலைவர் பதவி பெரிது என்கின்றனர். அதிமுக, மதிமுக போன்ற திராவிட கட்சிகள் பொது செயலாளர் தான் முக்கியம் என்று கருதுகின்றன. ஆகையால் யாருடைய மனதும் புண்படாமல், இரண்டு பொறுப்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கேப்டன் இரண்டு பதவிகளையும் எடுத்து கொண்டுள்ளார். இப்போது புரிகிறதா? கேப்டன் எந்த அளவு பொறுப்புகளையும் அளந்து கால்களை முன்வைக்கிறார்? இப்போது சொல்லுங்கள். அவர் எம்.ஜி.ஆர். வாரிசுதானே?

No comments:

Post a Comment