Wednesday, February 22, 2012

சுடப்பட்டது கொள்ளையர்களை தானா?

எதற்காக இந்த நாட்டில் ஒரு அரசியல் சட்டம்? அதன்படிகைதுகள்? அதற்குபிறகு விசாரணை? அதன்பின் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நிறுத்துவது? அதன்பின் நீதியரசர் முன்னிலையில் விசாரணை நடத்துவது? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் வழக்கறிஞர் வைத்து வாதாட அனுமதிப்பது? அதைகூட குறுக்கு விசாரணை என்று ஒரு நியதியை ஏற்படுத்தி உண்மையை கண்டறிய முயற்சிப்பது? அதன்பிறகே நீதியரசர் தீர்ப்பு கொடுப்பது? அதற்கு பிறகும் மேல்முறையீடு என்று அனுமதிப்பது? அதில் குற்றம் சட்டப்பட்டவர்க்கு "பிணை" கொடுக்கும் வாய்ப்பு? அதன்பின்னும் மேல் நீதிமன்றத்தில்விசாரனை" அதில் ஒரு தீர்ப்பு? அதையும்கூட மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றம் கொண்டு செல்ல அனுமதிப்பது? அங்க கொடுக்கும் தீர்ப்பை இறுதி தீர்ப்பு என கூறுவது? இத்தனை வரிசை கிராமமான அனைத்து படிக்கட்டுகளையும் நமது சென்னை மாநகர் காவல்துறை கண்காணிப்பாளர் திருபாதி "தாண்டி, தாண்டி" குதித்து "கொள்ளையர்கள்" என்று வரும், அவரது படையும் கண்டுபிடித்த ஐந்து பேரை ஒரே நேரத்தில் சுட்டு கொன்று விட்டார்களே? இத்தனை படிக்கட்டுகளை தாண்டி செல்லும் அனைத்த் வேலைப்பளுவையும், ஒரே நேரத்தில் குறைத்து விட்டார்களே? அது கெட்டிக்காரத்தனம்தானே? இதைபோய் மனித உரிமையாளர்கள் குறை சொல்கிறார்களே? இது சட்டத்தின் ஆட்சியை கெடுக்கும் என்கிறார்களே?

பொதுமக்களுக்கு தொடர்ந்து கொள்ளைகள் நடக்கிறதே? என்ற கவலை. அதனால் அவர்கள் அப்பாடி, இப்போதாவது கொள்ளையர்களை கொன்று விட்டார்களே? என்று திருப்தி அடைவார்கள். ஆனால் கொல்லப்பட்டது உண்மையான கொள்ளையர்கள்தானா? கொள்ளையர்கள் எங்காவது வீடு எடுத்து தாங்குவார்களா? அவர்கள் வீட்டில் ஒரு கைத்துப்பாக்கி உட்பட நான்கு துப்பாகிகள் இருந்ததை காவல்துறை காட்டுகிறதே? காவல்துறை அதிகாரிகளை அரிவாள் வைத்து தாக்கியுள்ளனர் கொள்ளையர்கள் என்று அடிபட்ட காவலர்களை காவல்துறை காட்டுகிறதே? கையில் ஒன்றுக்கு நாலு துப்ப்பாகிகளை வைத்திருந்த கொள்ளையர்கள், என் முட்டாள்கள் மாதிரி அரிவாள் வைத்து தாகினர்கள் என்று புத்தியில்லாமல் கேட்டுவிடாதீர்கள். சொல்வது காவல்துறை. நம்புங்கள். இல்லாவிட்டால்? ஆமாம். பிடிபட்ட மன்னிக்கவ்ய்ம் கொல்லப்பட்ட கொள்ளையர்கள் தலைவர் எஸ்.ஆர்.எம். என்ற மாபெரும் சுய நிதி கல்லூரியின் முன்னாள் மாணவர் என்கிறார்கள். அதையே அந்த டி.வி.க்கு போட்டி டி.வி. திரும்ப திரும்ப கூறுகிறார்கள். அப்படியானால் அந்த கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கு அதிகமாக் கட்டாய கட்டணம் வாங்கும் இடைத்தரகர்கள் பணியை செய்து வந்தவர்கள் இவர்களா? அதனால்தான் கொல்லப்பட்டார்களா? அபப்டியானால் அந்த கல்லூரியின் முதலாளிக்கு ஆதரவாக காவல்துறை அந்த இடைத்தரகர்களை இல்லாமல் செய்து விட்டதா? இப்படி கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டே போனால் காவல்துறையின் ஈரல் கேட்டு விட்டது என்று முன்னாள் முதல்வர் பாணியில் பேச வேண்டியிருக்கும்.

எப்படியோ இப்போதிந்த நால்வரையும் கொள்ளைகாரர்கள் என்றே வைத்து கொண்டாலும், அவர்களுக்கு ஆதரவாக இங்கே இருந்தவர்களை அதிலும் அதிகாரிகள் இருந்தால் அவர்களையும், காட்டி கொடுக்க இப்போது யாருமே உயிரோடு இல்லை. எல்லா சாட்சிகளையும் கொன்று விட்டார்கள். இதற்கு பெயர் என்ன? இதுதான் சட்டத்தின் ஆட்சியா? வெளிமாநிலத்தின் ஆட்களை கட்டுமான வேலைக்கும், சுய நிதி கல்லூரிகளுக்கும், உணவு விடுதிகளுக்கும் வரவழைத்து தமிழ்நாட்டில் சட்ட-ஒழுங்கை கெடுப்பது யார்? யார்? பட்டியலிடலாமா?

No comments:

Post a Comment