Sunday, February 19, 2012

சிதம்பரத்திற்கு பதில் கொடுத்த ஆண்டன் கோம்ஸ் ?

நேற்று சென்னையில் நடந்த ஊடகவியலாளர் கூட்டத்தில் டில்லியிலிருந்து ஒரு விஞ்ஞானி அதுவும் தமிழர் வந்திருந்தார். அவர் பெயர் ஸ்ரீதர். அவர்தான் வைகோ வுடனும், நீதியரசர் ராஜேந்திர சச்சார் உடனும் , பெண் கவிஞர் மாலதி மயிதிரி ஏற்பாட்டில் சென்ற மாதம் டில்லி ஊடகங்களை சந்தித்து கூடங்குளம் அணு உலை ஏன் கூடாது என்று எடுத்து சொன்னவர். அவரும் நெல்லையை சேர்ந்தவர் என்பதால் அதிக அக்கறை போலும். இந்த ஸ்ரீதர் "அணு சக்தி துறை" என்ற டி.ஏ. ஈ.எனும் சுயாட்சியுடன் யாருக்கும் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படும் மத்திய அரசின் நிறுவனத்தில் பணியாற்றியவர். அந்த அணு சக்தி துறை தான் இன்று அணு உலை ஆதரவாளர்கள் "துள்ளுவதற்கு" ஒரே காரணம். அந்த அணு சக்தி துறையின் விஞ்ஞானிகள் தான் .அணு உலைக்கு ஆதரவாக பொய்களையும், புரட்டுகளையும் அள்ளி வீசுபவர்கள். அந்த அணு சக்தி துறையில் "புவியியல் நிபுணராக" பணியாற்றி மனதுக்கு பிடிக்காமல் வெளியே வந்தவர்தான் இந்த ஸ்ரீதர் என்ற தமிழர். நேற்று அவர் கூறிய பல செய்திகளும் அணு சக்தி துறையால் மறுக்க முடியாத கூற்றுகளாக இருந்தது. அவர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு " தேர்தெடுத்த மறதி வியாதி" என்று கூறியது நியு இந்தியன் எக்ஸ்பிரசுக்கு செய்தியாக போய்விட்டது. இந்தியாவிற்கு மேற்கத்திய நாடுகளில் காலாவதியான அணு உலை கருவிகளை அவர்கள் தள்ளி விட்டு விடுகிறார்கள் என்று ஸ்ரீதர் கூறினார்.அதை இன்று டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டு இருந்தது. ஐ.எஸ்.ஆர்.ஒ. ஊழல் இப்போது இரண்டு லட்சம் கோடி நட்டம் என்று வெளியே வந்தது போல சீக்கிரத்தில் அணு சக்தி துறையின் ஊழலும் வெளியே வரும் என்று அவர் கூறியவுடன் ஊடகத்தாருக்கு பெரும் அதிர்ச்சி.

அந்த கூட்டத்தில் ஆண்டன் கோம்ஸ் உரையை நான்கு பக்கங்களில் அடித்து கொண்டு வந்து கொடுத்தார். அததனையும் வரலாற்று நிகழ்ச்சிகள் பற்றிய புள்ளி விவரங்கள். அதை சிதம்பரத்திற்கு பதிலடி என்றும், இருபத்தைந்து ஆண்டுகாலமாக நடிபரும் போராட்டம் என்றும் தினத்தந்தி இன்று வெளியிட்டது. சிதம்பரம் எண்பத்து எட்டாம் ஆண்டு என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்று பாளையம்கோட்டை பொது கூட்டத்தில் கேட்டார். அதற்கு ஆண்டனின் பதில் நெத்தியடியாக இருந்தது. 1986 முதலே ஆண்டன் கோம்ஸ் எடுத்த முயற்சிகள் மீனவ கிராமங்களிலும், மற்றும் மற்றைய பகுதிகளிலும் எப்படி ஆலோசனை கூட்டங்களை நடத்தினோம் என்று கூறியிருந்தார். பிறகு "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டபைப்பு" என்ற பெயரில் அடுத்த ஆண்டிலேயே இடிந்தகரையில் பொதுக்கூட்டம் போட்டதையும் அதில் கலந்து கொண்டவர்களையும் வரிசைபடுத்தி இருந்தார். அடுத்த ஆண்டில் தூத்துக்குடி பொதுகூட்டத்தில் திரண்ட மக்கள் கூட்டத்தையும், ஜார்ஜ் பெர்ணனட்ஸ் உட்பட, தி.க, பா.ஜ.க., சி.பி.ஐ.[எம்.எல்.} இந்திய மக்கள் முன்னணி மற்றும் பல அமைப்புகளையும் குறிப்பிடுகிறார். டாக்டர் குமாரதாஸ், அய்யாவழி அடிகளார், மனோ தங்கராஜ் உட்பட பேச்சிபாறை விவாசயிகள் சங்கம் மூலமும், எல்லைகள் எடுப்பு போராட்டத்தையும் நடத்தியதை குறிப்பிடுகிறார். இந்திய மக்கள் முன்னணி நடத்திய சைக்கிள் ஊர்வலம் சந்தித்த இடையூறுகளை குறிப்பிடுகிறார்.

அகில இந்திய கத்தோலிக்க பல்கலைகழக சங்கமான "அய்கப் "மாணவர் அமைப்பு ஆலோசகர் சாமியை குறிப்பிடுகிறார். தினமணியில் டி.என.கோபாலன் எழுதிய கட்டுரை அணு உலையின் ஆபத்தை தனக்கு முதலில் தட்டிவிட்டது என்கிறார். யு.என.ஐ. செய்தி அமைப்பின் நிருபர் ரமேஷ் இன்று ஆம்நெஸ்டி இண்டர்நேசணலில் இருப்பவர் எப்படி தங்களுக்கு அடி எடுத்து கொடுத்தார் என்பதை கூறுகிறார். ஊடகவியலாளர் ஞானி இடிந்தகரை வந்து கூட்டத்தில் கலந்து கொண்டதை கூறுகிறார். நெல்லை ஊர்வலம், மற்றும் பொது கூட்டத்திற்கு தங்கள் அழைப்பின் பேரில் எஸ்.எஸ்.ஐ. என்ற சமுத்துவ சமுதாய அமைப்பை நடத்திவந்த ஓய டேவிட் பெரும் அளவில் பனை மாற தொழிலாளர்களை அழைத்து வந்து கலந்து கொண்டதையும் அதன்பின் அவரும் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தில் தொடர்ந்து கலந்து கொண்டதையும் குறிப்பிடுகிறார். கூடப்ன்குலத்தில் இன்றைய ஊராட்சி தலைவர் சாண்டல் முத்துராஜ், மற்றும் ரவி போன்ற போராளிகள் கடந்த "ஆறு ஆண்டுகளாக " தினசரி போராட்டம் நடத்துவதை குறிப்பிடுகிறார். கடந்த சில ஆண்டுகளாக இந்த போராட்டத்தில் உதயகுமாரும் இணைத்து கொண்டு இன்று ஒருகினைப்பாலராக பணியாற்றுவதை குறிப்பிடுகிறார். இவற்றையெல்லாம் ராஜ், பாலிமார், தமிழன், வின், போன்ற பல காட்சி ஊடகங்களும் வெளியிட்டன. கலைஞர் டி.வி. குறிப்பாக் ஆண்டன் கோம்ஸ் கூறிய செய்தியான அரசு எந்த முடிவை .எடுத்தாலும் போராட்டம் நிற்காது என்றும், அணு உலையையும் அணு கூண்டையும் நாங்கள் எப்போதும் எதிர்ப்போம் என்றும் அதில் "சமரசமில்லை " என்றும் கூறியதை ஒளிபரப்பியது.

அதேபோல தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பெரும் அளவு நிலத்தில் விவசாயம் செய்யும் பண்ணையாரும், தொழில் அதிபருமான, சென்னையில் வணிக சங்கத்தில், உணவு பொருள் விற்பனையாளருமான, உலக தமிழர் பேரமைப்பின் பொருளாளரான சந்திரேசன் அந்த ஊடகவியலாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் பேசும்போது, நெய்வேலி அனல் நிலைய உற்பத்தியில் முப்பது விழுக்காடு மட்டுமே தமிழகத்திற்கு கொடுப்பதை, ஐம்பது விழுக்காடு தமிழகத்திற்கு என்று கொடுத்தாலே தமிழகத்தின் மின் தேவை தீர்ந்திடும் என்றார். மொத்தத்தில் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற இருபத்தைந்தாண்டு வரலாறு கொண்ட அமைப்பின் பெயரை முதலிலேயே டேஹ்ரியப்படுத்தி இருந்தால் சிதம்பரங்கள் குட்டையை குழப்பாமல் இருக்க உதவியிருக்குமே? என்று தோன்றியது. எப்படியோ இந்த போராட்ட வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்ல சிதம்பரம் வந்து தூண்டி விடவேண்டுமா?

No comments:

Post a Comment