Tuesday, January 10, 2012

நக்கீரன் வெற்றி பெற்றதா? இல்லையா?

நக்கீரன் சனிக்கிழமை இதழிலேயே அடுத்த இதழ் "பத்தாம் நாள் செவ்வாய் கிழமை" வெளிவரும் என்று பிரச்சனைக்குரிய கட்டுரை வெளியான பக்கத்திலேயே போட்டிருந்தார்கள். அதாவது பொங்கலை முன்னிட்டு, முன்கூட்டியே என்பது அதன் பொருள்..அதற்காக அவர்கள் அடுத்த இதழை தயார் செய்வதில் ஏற்கனவே கவனம் செலுத்தி வந்தனர். ஞாயிற்று கிழமையும் அந்த இதழை முடிப்பதில் வேகம் காட்டி முடித்து விட்டனர். சனிக்கிழமை தாக்குதலால் அடுத்தட இதழ் "தயாரிப்பு ஒரு சவாலாக" நக்கீரன் இதழுக்கு ஆகிவிட்டது. இந்த லாவுக்கு காவல்துறைக்கு அந்த இதழின் விரைவான செயல்பாட்டு சூழல் பற்றி தெரிய வாய்ப்பில்லை. அதனால் அவர்கள் தங்களுக்கு வந்த புகார்களின் அடிப்படியில், நக்கீரன் கொடுத்த புகாரையும், கணக்கில் எடுப்பதிலும், எண்ண செய்யவேண்டும் என்று அந்த புகார்கள் பற்றி முடிவு எடுப்பதிலுமே கவனமாக இருந்தனர்.

அதற்குள் நக்கீரன் குடும்பத்தினர் தங்களது அடுத்த் இதழ் தயாரிப்பில் வேகம் காட்டி , அதை அடித்து, பயிண்டு பண்ணி, பார்சல் கட்டி எல்லா ஊர்களுக்கும் அனுப்புவதில் கவனம் செலுத்தி அதிலும் வெற்றி அடைந்து விட்டனர். அதேபோல செவ்வாய் கிழமை காலையில் கடைகளில் போடுவதிலும் வெற்றி பெற்று விட்டனர். அந்த வெற்றி சென்னையில் எல்லா இடங்களிலும் கிடைக்கவில்லைதான்.அதாவது சென்னையில் உள்ள கடைகளில் அதிமுகவினர் முந்திய இதழை பிடுங்கி எரிக்கும்போதே வட சென்னை போன்ற இடங்களில் உள்ள கடைகளில் இனி நக்கீரன் விற்க கூடாது என்று மிரட்டியது இந்த இரண்டு நாட்களுக்குள் வேலை செய்யத்தானே செய்யும்? அதனால்தான் சென்னையில் போதுமான அளவில் கிடைக்க வில்லை. ஆனாலும் நாம் செவ்வாய் காலையில் கொடுத்த தொந்திரவின் பேரில், வின் தொலைக்காட்சி ஊழியர்கள் போய் கடைகளில் சண்டை போட்டு வாங்கி வந்து விட்டனர்.

அதனால்தான் நேற்று "செய்திகளும், நிஜங்களும்" நிகழ்ச்சியில் எங்களால் நக்கீரனின் "நேற்றைய செவ்வாய் கிழமை இதழ்" பற்றி பேச முடிந்தது. அந்த இதழை பார்த்த போது, அதில் முழுமையாக எப்படி அதிமுக வினர் அராஜகத்தில் ஈடுபட்டனர் என்ற புகை படங்களும், விளக்கங்களும், மட்டுமே இருந்தன. ஏற்கனவே சென்ற இதழான "சிக்கலில்" மாட்டிய இதழில் எப்படி "அதிமுக செயற்குழு, பொதுகுழுவில் பொன்னையன் பேசியதை" ஜெயலலிதா பாராட்டினார் என்று ஒரு தவறான செய்தியை வெளியிட்டிருந்தார்களோ,அதேபோல நடிகர் விஜயின் அம்மா போஎஸ் தோட்டத்தில் இருப்பதாக ஒரு தவறான செய்தியை வெளியிட்டு இருந்தார்கள். இதுபோன்ற தவறான செய்திகளை தருவதற்கு ஏற்ற மனிதர்கள் அந்த இதழுக்கு நெருக்கமாக இருப்பதும் தெரிந்தது. அதிமுக வின் செயற்குழு, பொதுக்குழுவின் படங்களை பார்த்து விட்டு, மேடையில் அமர்ந்திருக்கும் பொன்னையனும், வளர்மதியும் பேசி இருப்பார்கள் என்று எண்ணி "மேசை எழுத்தில்" அது அப்படி எழுதப்பட்டுள்ளது தெரியவருகிறது. பொன்னையன் மேடையில் உட்காரவைக்கப்பட்டிருந்தார் என்றாலும் பேசவில்லை என்று அதிமுக வட்டாரம் கூறுகிறது. வளர்மதி தீர்மானங்களை மட்டுமே வாசித்தார் என்றும் பேசவில்லை என்றும் கூறுகிறது.


அதாவது அந்த சிக்கலான் இதழில், உள்ள சிக்கல்னா கட்டுரையில், ஜானகி அணியின் பொன்னையனும் , வளர்மதியும், பழைய சேவல் அணியான ஜெயலலிதா அணியை சேர்ந்தவர்களை விட விசுவாசமாக இருப்பதாக "ஜெ" கூறியதாக இட்டு கட்டப்பட்ட கட்டுரை வெளிவந்துள்ளது. இதுபோன்ற தவறுகள் "அறை,குறையாக" சிலர் தங்களுக்கு தெரிந்த விவரங்களை பரப்பி, அதிக ரகசியம் தெரிந்தவர்களாக காட்டிக் கொள்வார்கள். அதை சோதித்து பார்க்க வேண்டியது ஏடுகளின் பணி.அத்தகைய தெரிந்தவர்கலேன்று நம்பப்படுபவர்கள் எம்.நடராசனும், திருச்சி வேலுசாமியும் என்பது அனைவருக்கும் தெரிகிறது.

அதாவது செவ்வாய் கிழமை வெளிவந்த இதழில், திருச்சி வேலுசாமி நேர்காணலும், நடராசன் பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளன. படங்களுடன் அந்த செய்தி வேலுசாமி-நடராசன் பெயர்களுடன் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி, நக்கீரனுக்கு மிகவும் வேண்டிய மூத்த ஊடகவியலாளர் எ.எஸ்.பன்னீர்செல்வம் தனது கருத்தை புதிய தலைமுரைடி.வி.யில் கூறும்போது, ஒரு ஆட்சி தனது செயல்களை பகிரங்கமாக வைக்காதபோது, ஒரு ஊடகம் அதை யூகம் செய்துதான் எழுத முடியும் என்றும், அதற்கு அந்த ஆட்சிக்கு நெருக்கமாக்கைருந்தவர்களிடம்கேட்டுதான் எழுத முடியும் என்றும் கூறி "பூனையை, பையை விட்டு வெளியே " எடுத்து போட்டு விட்டார். இப்படித்தான் அந்த தோட்டத்திலிருந்து வெளியேற்றப் பட்டவர்களின் மீது "சந்தேகம்" எழுந்துள்ளது. எப்படியோ வெளியே ஓடிவந்தவர்களுக்கும், தேர்தலில் தோற்ற முன்னாள் முஹல்வரின் கட்சிகாரர்களுக்கும் மட்டுமே இதனால் பலன். நக்கீரனுக்கு பலனா? பலவீனமா?

No comments:

Post a Comment