Monday, December 12, 2011

இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டோடு இணைத்துவிடு

ஏன் இந்த கூச்சல்? எதற்காக முல்லைபெய்யார் அணை உடையுமா? என்று இல்லாத ஆராய்ச்சியைஎல்லாம் மலாயளிகள் கிள்ளப்பவேண்டும்? மின்சாரம் தங்கள் தேவைக்கு தகுந்தாற்போல இடுக்கி அணையிலிருந்து கிடைக்க வில்லை என்ற வருத்தம் மட்டுமே காரணமா? பிரவம் தொகுதியில் எர்ணாகுளத்தில் இடைத்தேர்தல் வரப்போகிறதே என்று "தயாரிப்பு ஏற்பாடு" மட்டுமே காரணமா? அணை 999 என்ற சினிமா படத்தை எடுத்த ஷோகன் ராய், இந்த பீதியை அதிகமாக கிளப்பிவிடும் " ஆசியா நெட்" என்ற டி.வி.யின் சென்னை தலைமையான "விமல் ராய்" இன் சகோதரர் என்பதனால் மட்டுமா காரணம்? கடலுக்கு வீணாக போகும் நீரை தமிழ்நாட்டிற்கு கொடுக்க மாட்டோமென அடம்பிடிக்க என்ன காரணம்?

அந்த அணையின் அடியில் ஐந்தாயிரம் ஏக்கரில் "உள்ளாச்விடுதிகள், சுற்றுலா வாசங்கள்" வைத்துள்ளவர்களை சார்ந்து வாழும் அரசியல்வாதிகள் மட்டமா காரணம்? இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம் தமிழ்நாட்டை சேர்ந்த "தேவிகுளம், பீர்மேடு" பகுதிகளை காமராசர் காலத்திலேயே தமிழர்கள் கேட்ட போது, அப்போதுள்ள காங்கிரஸ் கட்சிகாரர்கள், "குளமாவது, மேடாவது,போ" என்று பூகோள அறிவு, நில உரிமை அறிவு சிறிதும் இல்லாமல் கூறியது தானே அடிப்படை காரணம்? அந்த வட்டாரம் தமிழ்நாட்டிற்கு சொந்தம் என்று இப்போது "முரசொலியில்" எழுதும் ரஹ்மான்கான் கட்டுரையை வெளியிடும் கலைஞர் அந்த செய்தியை "தான் ஆட்சியில்" இருக்கும் போது கூறாதது ஏன்?

இப்போது அடுத்தவர் ஆட்சிக்கு சிக்கல் வரட்டும் என்று எண்ணியாவது தமிழர் நலனுக்கான இந்த உண்மையை முரசொலியில் வெளியிட்டாரே? அதற்காக பாராட்டலாம். தனக்கு ஏக இந்தியா அடுத்தவருக்கு தமிழ்நாடு என்ற அவரது கொள்கை வாழ்க. இப்போது பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஜெ.எம். ஹாரூன் ஒரு புதிய "கோரிக்கையை" முன்வைக்கிறார். அது "இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டிற்கு"கொடுத்துவிடு.என்பதே. அறுபது விழுக்காடு மக்கள்தொகை தமிழர்களாக இருக்கும் இடுக்கி நமக்கே. எழுபது விழுக்காடு சபரிமலை பக்தர்கள் தமிழர்களே எனபதும் அந்த கோரிக்கையை வலுப்படுத்தும்.

வளமான தமிழ்நாட்டோடு சேரவேண்டுமா? அல்லது வரட்சியான கேரளாவில் இருக்க வேண்டுமா? என்ற முழக்கத்தை இடுக்கி மாவட்ட மக்கள் மத்தியில் வைக்கலாம் என்கிறார் ஹாரூன்.இது நல்லாதானே இருக்கு?