Wednesday, December 7, 2011

அணை பாதுகாப்பாய் உள்ளது என கூறிய மலையாள நிபுணர்கள்.

ஏதோ முழு மலையாள நாட்டவர்களும், அரசியல் சந்தர்ப்பவாதம் செய்யும் சக்திகளுடன் இணைந்துகொண்டு "அணை உடையும் என்று பீதியை" கிளப்புவதாக ஒரு தவறான புரிதல் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதுவே தமிழ்நாட்டில் உள்ள மலையாள வணிகர்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நேரத்தில் தமிழக முதல்வர்தான் தெளிவாக" எந்த அளவுக்கு மலையாளிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு தமிழர்கள் கேரளாவில் இருக்கிறார்கள்" என்றும் அமைதி காக்க வேண்டும் என்றும், பீதியை ஏற்படுத்த சில அரசியல் சக்திகள் முயல்வதை கண்டித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதைகூட கேரள அரசியல்வாதிகள் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

நாம் ஏற்கனவே உச்சநீதிமன்றம் கூறியுள்ள புள்ளிவிவரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே "முல்லைபெரியார் உடையாது.அப்படியே உடைந்தாலும் இடுக்கி அணை அந்த நீரை தாங்கிக் கொள்ளும்" என்பதை கூறியிருந்தோம். இப்போது அதையே கேரள நிபுணர்கள் கொர்ரியுள்ளனர் என்பது இனிப்பான செய்திதானே? அதுவும் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்கள் என்பது மேலும் "அழுத்தமான" செய்தி.
நேற்று செவ்வாய் கிழமை கேரள உயர்நீதிமன்றம் முன்னால் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது அந்த வழக்கின் முக்கிய "கவலை"பகுதியான "தாக்குபிடிக்குமா இடுக்கி அணை?" என்ற விசயத்தில் ஆய்வு நடத்த கூறி ஏற்கனவே அங்குள்ள நீதியரசர்களால் உத்திரவிடப்பட்டு, அங்குள்ள ஒரு "மலையாள நிபுணர்களை" கொண்ட குழு தனது ஆய்வு அறிககையை முன்வைத்துள்ளது.

உயர்நீதிமன்ற பெஞ்சில், தலைமை நீதியரசர் பொறுப்பில் இப்போது உள்ள மஞ்சுஆளா செல்லூர் மற்றும் நீதியரசர் பி.கே. ராமச்சந்திர மேனன் இருவரும் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன்னால் "அணை பாதுகாப்பு நிபுணர்களான" எம்.கே.பரமேச்வரன் நாயர் உட்பட நிபுணர்கள் குழு தன்கள் ஆய்வு அறிககையை முன்வைத்துள்ளனர்.ஒரு "பேரழிவு" வருமானால் மக்களது உயிர்களை பாதுகாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை ஆய்வு செய்து வரும்படி அந்த நீதிமன்றம் ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி, அவர்கள் அந்த அறிககையை முன்வைத்தனர். அதில், முல்லைபெரியார் சிறப்பு குழுவின் நிபுணர் எம்.கே.பரமேஸ்வரன் நாயரும் இருப்பதால் அந்த அறிக்கைமேலும் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

அந்த அறிக்கை இடுக்கி அணைக்கட்டின் தண்ணீர் சேமிக்கும் கொள்ளளவு பற்றி தனது முன்வைப்பை கூறவேண்டும். அப்படியே அந்த நிபுணர் குழுவும் செய்தது. அதில் இடுக்கி அணையின் அடித்தள கட்டுமானம் ஆய்வு செய்யப்பட்டதை எடுத்து சொல்லியுள்ளார்கள். அந்த அணை எந்த ஒரு " நில அதிர்வையும்" தாங்கும் பக்குவத்தில் உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இடுக்கி நீர்தேக்கத்தின் முகப்பகுதிக்கும், முல்லைபெரியார் நீர்தேக்கத்திளிருந்து எவ்வளவு தூரம் இருக்கிறது என்றும் கேட்டிருந்தனர். அதற்கும் அந்த அறிக்கை விளக்கம் கூறியிருந்தது. அந்த அணையிலிருந்து இந்த நாய்க்கு நீரின் வேகம் எவ்வளவு என்றும் கேட்டிருந்தார்கள்.வெய்யில் காலங்களில் எவ்வளவு நீர் தேக்கப்படும், என்றும், எவ்வளவு தண்ணீர் " மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும்" என்றும் கேட்டிருந்தார்கள். இவ்வாறு கேரள மக்களின் உண்மையான டேஹ்வைகளை ஒரு உயர்நீதிமன்றம் ஆய்வு செய்து, நிபுணர்கள் மூலம் கேட்டு அறியும் போது, இந்த அரசியல்வாத சந்தற்ற்ப்பவாதிகள் கிளப்பும் "பொய்கள்" எத்தனை நாட்கள் நிற்கும்?