Tuesday, November 15, 2011

சட்டவிரோத ஸ்டெரிலைட் ஆலையை ஆதரிக்கும் அரசுகள்?

சட்டவிரோத ஸ்டெரிலைட் ஆலையை ஆதரிக்கும் அரசுகள்?
ஸ்டெரிலைட் ஆலை தூத்துக்குடியில் தொடங்கப்பட இருக்கும்போதே, அது மகாராஷ்டிரா மாநிலத்தில் அல்போன்சா மாம்பழ தோட்டங்களை அழித்து விடும் என்று மாம்பழ உற்பத்தி விவசாயிகளின் மாபெரும் போராட்டத்தால் தவிர்க்கப்பட்டது. இது ஒரு தாமிர உருக்கு ஆலை. அதாவது தாமிரத்தை பூமிக்கு அடியிலிருந்து எடுத்து, தாமிர கனிம வளங்களை கொள்ளையடிக்கும் தனியார் ஏகப்க முதலாளி வேதாந்தா அகர்வால், இளிச்சவாய் மாநிலம் என்ருதமிழ்நாட்டை கணடதால்,தொத்துகுடியில் 1995 இல் இறக்குமதி ஆனது.மாறி, மாறி வரும் ஆட்சியாளர்களின் ஆதரவோடு எத்தனை தொழிலாளரை ஆலைக்கு உள்ளேயே கொன்றாலும், மீண்டும்,மீண்டும் இந்த ஸ்டெரிலைட் ஆலை அனுமதி பெற்று இயங்க வைக்கப்படுகிறது.

இதன் முதலாளி நிறுவனமான வேதாந்தா இந்தியாவில் எத்தனை முறை தடைகளை அபராதங்களை,மூடல்களை எதிர்கொண்டாலும் "கையூட்டு" கொடுத்தே ஆலையை திறந்து மாசுகளை அள்ளி தெளித்தே தனது மோசமான வாழ்க்கையை நடத்தி வருகிறது. ஒரிஸ்ஸாவில், வேடாந்தாவின் வன அழிப்பு அத்துமீறல்களும், நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது. ஆலை மூடல் அம்பலமானது. பங்குதாரர் கூட்டத்தில் லண்டனில் வேதாந்தா கேள்விகள் கேட்கப்பட்டு அம்பலமானது. நார்வே நாட்டின் "ஓய்வூதியம் பெறுவோர்" தங்கள் பங்குகளை திரும்ப பெற்றனர். இதே வேடாந்தாவின் ஸ்டெரிலைட் நிறுவனம் எந்த விதி மீறலையும் சாதரணமாக தூத்துக்குடியில் செய்துகொண்டு இருக்கிறது. இதன் மீது எத்தனை வழக்குகள் இருந்தாலும் அது பற்றி கவலைப் படாமல் பணம் கொடுத்தே தனது காரியங்களை செய்து வருகிறது.

இரண்டு நாட்கள் முன்பு ஒரு தொழிலாளி ஸ்டெரிலைட் ஆலை உள்ளேயே மரணம் அடைந்தும் இன்னமும் "சட்ட விரோத" வேலைகளை ஸ்டெரிலைட் ஆலை நிறுத்த வில்லை. இன்று "அதீனா" என்ற கப்பல் ஒன்று "தாமிர கைமன்களை" ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி துறைமுகம் வாசலில் வந்து நின்று கொண்டு இருக்கிறது. அந்த துறைமுகத்திற்குள் 36000 டன் தாமிர கனிமம் தான் கொண்டுவரலாம். ஆனால் இந்த கப்பல் 42000 டன் கணிமத்துடன் வந்துள்ளது. இதுவே சட்ட விரோத செயல். அதனால் அதிகமாக உள்ள 6000 டன் தாமிரத்தை பெரிய கப்பலில் இருந்து சிறிய படகுகளுக்கு அதாவது புர்ஜர்களுக்கு மாற்றி எடுக்க ஸ்டெரிலைட் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இன்று அதற்கான பர்ஜர்கள் தயார் ஆகிவிட்டன. ஆனால் காற்று அதிகமாக வீசியதால் நாளை இறக்கலா என இருக்கிறார்கள்.

கப்பல் மேலிருந்து கீழே உள்ள சிறிய பர்ஜர்களில் 6000 தங்களை கொட்டும்போது, கடலிலும் அவை விழா நேரிடும். ஏற்கனவே தூத்துக்குடி துறைமுகத்தில் இந்த "தாமிர கனிமம்" மலை போல குவிக்கப்பட்டிருக்கும். அந்த "பச்சை மலையை" அருகில் சென்னு கூட காண முடியாது. அத்தனை நெடி வீசும். மூக்கால் தாங்க முடியாது. இப்போது அந்த தாமிர கனிமம் கடலிலே கலப்பதால், கடல் வாழ் உயிரினங்கள் சாகும்.கடும் மாசு கிளம்பும். கடலையே களங்கப்படுத்தி விடும். அத்தகைய நடவடிக்கை நாளை நடக்கப் போகிறது. நமது மத்திய, மாநில அரசுகள் அதைகானதது போல இருக்கின்றன.தூத்துக்குடி துறைமுக நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கஸ்டம்ஸ் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் தங்கள் நலனை மட்டுமே பேணுவதால் இது நடக்க போகிறது.

உத்தபுரத்தில் போலி[ஸ்] முகமூடி கிழிகிறது ..........

உத்தபுரத்தில் போலி[ஸ்] முகமூடி கிழிகிறது ..........
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம், உத்தமபுரம் கிராமம் சென்ற ஆட்சியிலேயே பிரபலமாக பேசப்பட்டது. அங்கு இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகமான தேவேந்திர குல வேளாளர் [ பள்ளர்] சமூக மக்கள் தங்கள் சொந்த கிராமத்திலேயே இருக்கும் பிள்ளைமார் சமூக மக்களால் ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கப்பட்டு, கோவில் நுழைவு மறுக்கப்பட்டு, இரண்டு குடியிருப்புகளுக்கு மத்தியில் ஒரு "தீண்டாமை சுவர்" கட்டப்பட்டு, சட்ட விரதமாக சமத்துவம் இழந்து, ஆளும் கூட்டத்தாரும், அதிகாரவர்க்கத்தாரும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் உழவர் குடிக்கு எதிராக செயல்பட்டு வந்தார்கள் என்பதை நாடு அறியும். அங்கே தேவேன்றகுலம் மத்தியில் செல்வாக்கு பெற்று இருந்த "புதிய தமிழகம்" கட்சியையும், அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வந்த "தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு" வினரையும் கண்டுகொள்ளாமல் இருந்த காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் எழும்பிய பிரச்சனையை தீர்க்க எண்ண செய்தார்கள் என்று லாவணிக்க வேண்டும்.

சென்ற ஆட்சியில் கலைஞரின் நேரடி பார்வையில் அந்த ஊர் விவகாரத்தில் "தீண்டாமை சுவரை" இடிக்க வேண்டும் என்ற குரல் எழுந்தபோது, அங்குள்ள பிள்ளைமார் சமூக மக்களிடமும், அவர்களது தலைவர்களிடமும் புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் கிரிஷ்ணசாமி தொலைபேசியில் பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வார முயல்வதை அறிந்த முதல்வர் தனக்கு நெருக்கமாக இருந்த சீ.பி.எம். செயலாளர் என்.வரதராஜனிடம் ல்கலந்துகொண்டு, ஒரு நாடகம் அரங்கேற ஏற்பாடு செய்தார். அதில் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு தனி அரசியல் கட்சி இருக்கக் கூடாது என்று சீ.பி.எம் கட்சியே அந்த பிரச்சனையை எடுத்தால் பரவாயில்லை என்று முதல்வர் அபிப்பிராயப் பட்டார்.அதை ஒட்டி தீண்டாமை சுவரை இடிக்க சீ.பி.எம். கட்சியின் அகில இந்திய போது செயலாளர் தோழர் பிரகாஷ் கரத் கொண்டு வரப்பட்டார். இந்தியாவில் வேறு எங்குமே "தீண்டாமை" இல்லாததை அந்த கட்சி கண்டுபிடித்ததால்தான், தீண்டாமை இருக்கும் ஒரே இடமாக அந்த கட்சி கண்டுபிடித்த உத்தபுரத்திற்கு கட்சியின் அகில இந்திய போது செயலாளரே வந்தார்.

அனைத்துமே அன்றைய முதல்வரின் ஏற்பாடு என்பது வெளி உலகுக்கு தெரியாது.பிரகாஷ் கரத் வரும் முன்பே கலைஞர் என்ற பெரியார் வழி வந்தவரின் ஏற்பாட்டில் அரசே அந்த சுவரை இடித்தது. முழுமையாக இடித்ததா? என்றால் இல்லை. அப்போதுதான் அரசும், சீ.பி.எம். மும் அரசியல் செய்ய முடியும் என்று எண்ணினார்களா? என்பது தெரியவில்லை. அதன்பிறகும் அங்குள்ள கோவிலுக்குள் தேவேந்திர மக்கள் செல்வதும், அவரகளுக்கு பேருந்து நிறுத்தம் ஏற்பாடு செய்வதும், கோவில் அருகே குப்பைகளையும், கழிவு சாக்கடையையும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குடியிருப்பை நோக்கி திருப்பி விடுவதும் தொடரும் பிரச்சனைகள்.

திடீரென இப்போது சென்ற வாரம் எல்லாம் தீர்ந்து விட்டன என்றும், தீண்டாமைக்கு எதிராக வெற்றி என்றும் அதை சாதித்தவர்கள் சீ.பி.எம். என்று ஒரு புறமும், விஸ்வ ஹிந்து பரிஷத் என்று மறுபுறமும் விளம்பரம் செய்யப்பட்டது. ஊடகங்களுக்கு அது ஒரு இனிப்பான செய்தி. வெளியிட்டு கொண்டாடின. அதாவது தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ள தேவேந்திர குல மக்களை பிள்ளைமார்கள் கட்டுப்ப்பாட்டில் இருக்கும் கோவிலுக்குள் கொண்டு சென்று பூசை செய்வித்து காவல்துறை தீண்டாமையை உடைத்து விட்டது என்பது செய்தி. ஆனால் உண்மை வேறு மாதிரி இருக்கிறது.

காவல்துறையால் கோவிலுக்கு உள்ளே கொண்டு செல்லப்பட்ட தேவேந்திர குல மக்கள் "பதினோரே" பேர்தான். அந்த கிராமத்தில் மூன்னூறு குடும்பங்கள் தேவேந்திர குலம் உள்ளது. இவர்கள் உள்ளே கொண்டு செல்லப்பட்ட போது, காவல்துறையின் பலத்த பாதுகாப்பில் பிள்ளைமார் சமூகம் "தடுத்து நிறுத்தப்பட்டது". பிள்ளைமார் சமூக பெண்கள் நூற்றுக் கணக்கில் அங்கே நின்று கொண்டு, "நாங்கள் வீடு வீடாக வரி கட்டி கட்டிய கோவிலுக்குள் பள்ளர்கள் நுழைவதா?" என்று கூக்குரல் கிளப்பினார்கள்.அதனால் காவல்துறைஅச்சார, அவசரமாக அந்த பதினோரு பேரையும் பூசைசெய்யசொல்லிவிட்டு, வெளியே கட்டாயமாக அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள். இது ஒரு அவசர கேதியிலான"நாடகமாக" நடத்தப்பட்டு விட்டது.

உள்ளே சென்ற பதினோரு பெரும் சீ.பி.எம். ஆல் ஏற்பாடு செய்யப்ப்பட்ட சீ.பி.எம். கட்சியை சேர்ந்த மிலிடரி பொன்னையா குடும்பத்தினர்கள். இதை சீ.பி.எம். "வெற்றி" என்று கொண்டாடுகிறது. ஏன்? சீ.பி.எம். தலித் கட்சிகள் தோன்றிய பிறகு, அவை வாக்கு அரசியலுக்கு வந்த பிறகு, தங்கள் கட்சியின் வாக்குகள் எல்லாம் வர்களுக்கு போய்விட்டது என்று கருதுகிறது. அதனால் அதை உடைத்து மீண்டும் கொண்டுவர ஒரு பிரும்ம பிரயத்தப்னம் செய்வது அவர்களது வேலைத் திட்டம். அதற்காகத்தான் உத்தபுரத்தையும் "சோதனை களமாக" எடுத்தது. அதற்காக ஒரு "தீண்டாமை ஒழிப்பு முன்னணியை" அமைத்தது. அதில் கவனமாக பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்த சம்பத் என்பவரை தலைவராக போட்டது. அதனால்தான் பிள்ளைமார் சமூகத்திடமும் உத்திரபுரத்தில் பேசி சரி செய்ய முடியும் என்று முயற்சியை எடுத்தது.

இப்போதும் உத்திரபுரத்தில் பிள்ளைமார் சமூகத்துடன் காவல்துறையுடன் சேர்ந்து கொண்டு பேசி வருகிறது. அவர்களோ, எங்கள் கோவிலுக்கு "கும்பாபிஷேகம்" செய்யப்போகிறோம். அது முடிந்த பிறகு வேண்டுமானால் தீண்டத்தகாத சமூகத்தை உள்ளே அனுமதிக்க பார்க்கிறோம் என்று பேசி வருகிறார்கள். இவ்வாறு இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாக "எல்லோரும்" சேர்ந்து வேலை செய்கிறர்கள். இதில் காவல்துறை "மக்களையும், அரசையும்" ஒரே நேரத்தில் ஏமாற்றி விட்டோம் என்று திருப்தியடைகிறது. அந்த வட்டாரமான தென் மாவட்டங்கள் முழுமைக்கும் காவல்துரையின் தலைமை அய்.ஜி. ராஜெஷ்தாஸ் ஏற்கனவே தனது "புகழ்பெற்ற பரமக்குடி துப்பாக்கி சூட்டால்" தேவேந்திர மக்கள் மீது போர் தொடுத்தவர் என்பது நினைவில் கொள்ளத் தக்கது. .


இந்த உண்மைகளால் காவல்துறையின் "மூஞ்சி" கிழியத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே சென்ற ஆட்சியில் நடந்த பிள்ளைமார் மக்களின் "மலை ஏறும் போராட்டம்" ஆதிக்க சாதிகளை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சராலும், அந்த கூட்டணியின் இன்னொரு கட்சி தலிவராலும் அரங்கேறியது என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது. உத்தபுரம் தீண்டாமை ஒழிப்புக்கு ஒரு முன்னுதாரணம் அல்ல. மாறாக "தீண்டாமை ஒழிப்பு நாடகத்திற்கு" ஒரு நல்ல முன்னுதாரணம்