Sunday, November 13, 2011

அண்ணா நூலகம் கட்ட பயன்பட்ட நிதி கிராம நூலகங்களுடையதா?

தமிழ்நாட்டில் ஆயிரம் ஊரக நூல்நிலயகள் இருக்கலாம். அவைகளுக்கு தனியாக அவற்றின் வளர்ச்சிக்காக ஏற்கனவே ஒரு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை முறையாக "ஊரக நூல்நிலயங்களுக்கு" செலவழித்தால் ஒவ்வொரு கிராமத்திலும் படித்த மற்றும் தொடர்ந்து படிக்க முடியாத மாணவர்களுக்கு "நூல்களை"படிக்க அது உதவும். அப்படி உதவ அனுமதித்தால் கிராமப்புற தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வாழ்வில் ஒளியேற்றி வைத்ததாக அரசை பாராட்டுவார்கள். ஆனால் அந்த செயல்பாடு நடக்க விடாமல் அரசு தடுத்து விட்டது என்று இப்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இந்த செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்று நாமும் விரும்பலாம்.

ஆனால் மூன்று நாட்கள் முன்பு தினமணி ஏட்டில் வந்திருந்த ஒரு "தகவல் பெறும் உரிமையால் கிடைத்த விவரம்" நம்மை உலுக்கி விட்டது. தமிழ்நாட்டின் கிராமப்புற நூல்நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சங்க தலைவர் அந்த செய்தியை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலமாக பெற்று இருந்தார். அதில் "ஊரக நூல் நிலையங்களுக்கு" ஒதுக்கப்பட்ட நிதிதான் இந்த பிரபலமான "கோட்டுர்புரம் அண்ணா நூல் நிலையம்" கட்ட செலவழிக்கப்பட்ட 168 கோடி ரூபாய் என்ற அதிர்ச்சி செய்தி தகவல் பெறும் உரிமை மூலம் கிடைக்கப்பட்டிருந்தது.அப்படியானால் எங்களை எல்லாம் அண்ணா நூலகம் கட்டப்பட்டது ஒரு மாபெரும கொடை என்று நம்ப வைத்து கழுத்தறுத்து எங்கள் கிராமப்புற இளைஞர்களின் படிப்பை கெடுத்துதானா?

நகரங்களில் ஒன்று இல்லாவிட்டாலும் இன்னொன்று என்று நூலகம் தேட மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தெரியும். ஆனால் கிராமங்களில் எங்கள் பிள்ளைகளுக்கு இருக்கும் ஒரே அறிவு பெட்டகம் நூலகம்தானே? அதற்காக அரசு ஒதுக்கும் நிதி மிகவும் குறைவுதானே? அந்த குறைந்த நிதியையும் ஒட்டுமொத்தமாக திரட்டி எடுத்து இத்தனை கோடி பணம் சேர்த்து அதை கொண்டுவந்து அண்ணா நூல்நிலையத்திற்கு கொட்டுர்போர்த்தில் கொட்டிவிட்டீரே? கலைஞர் அவர்களே, இது முறைதானா? உங்கள் நுகம் நூலகம் கட்டுவதா? அல்லது செல்வி.ஜெயலலிதா கட்ட திட்டமிட்டிருந்த தலைமை செயலகம் அந்த கோட்டுர்புரத்தில் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியத்தால் வரக்கூடாது என்ற எண்ணத்திலானதா?

அதுதவிர அந்த அண்ணா நூலகத்திற்காக வாங்கிய நூல்களின் பட்டியலில் "நூலின் விலையை விட அதிக விலையாக ஐம்பதாயிரம்" கொடுத்து வாங்கப்பட்ட நூல்களின் பட்டியலும் உள்ளதே? அது ஊழல்தானே? அப்படியானால் ஒரு ஏடு கட்டிடம் கட்ட ஊழல் செய்தவர்கள் என்று எழுதியதற்கு கொப்பப்பட்டு வழக்கு போட துடிப்பது எந்த வகை கலைஞர் அவர்களே? ஐயோ. ஐயோ. தொட்டதெல்லாம் ஊழலாக இருக்கிறதே? இதில் எண்ண நேர்மை இருக்கிறது? இதற்கெல்லாம் முற்று புள்ளி வைப்பது எப்படி? சரி. இந்த மாற்றத்தால் நூலகம் டி.பி.அய். வளாகம் என்ற "கல்வி இயக்கக"வளாகத்தில் "ஒருங்கிணைக்கப்பட்ட அறிவுசார் பூங்கா" என்ற பெயரில் கன்னிமாரா நூல்நிலயத்தையும் சேர்த்து, அண்ணா நூலகத்தையும் சேர்த்து வரப்போகிறதே? அது நல்லதுதானே? இன்னொரு உழன்தைகள் சிறப்பு மருத்துவமனையும் கிடைக்கிறதே? இந்த மாற்றத்தால் இரண்டு நல்ல விசயங்கள் தமிழர்களுக்கு கிடைக்குமே?