Thursday, November 3, 2011

நூல்நிலையம் போச்சு, மருத்துவமனை வந்தது டும்,டும்,டும்.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இடையே நடக்கும், பழி வாங்கும் போக்கு, பழிக்கு,பழி வாங்கும் போக்கு என்பதை "பெரிதாக" எடுத்து கொண்டு சிலர் சத்தம் எழுப்புகிறார்கள். ஏன் சத்தம் எழுப்புகிறீர்கள்? உங்கள் சத்தம் ஏதாவது செய்ய்துவிடுமா? ஒன்றும் சாதிக்காது. உள்ளதை உள்ளபடி பார்க்க கற்று கொள்ளுங்கள். யதார்த்தத்தை புரிந்து கொள்ள முயலுங்கள். 2003 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா "கோட்டுர்புரத்தில்" ஒரு அடிக்கல் நாட்டினார். அது "தலைமை செயலகத்தை" கட்டுவதற்கான அடிக்கல். அந்த முயற்சி, எத்தனை முயற்சிகளுக்கு பிறகு நடந்தது? முதலில் இருக்கும் இடத்திலிருந்து தலைமை செயலகத்தை மாற்றி, சொந்த கட்டிடத்தில் அமைக்க முயற்சித்தார். அதற்காக "ராணி மேரி கல்லூரியை" தேர்வு செய்தார்.

மாணவிகள் மத்தியில் இருந்தும் எதிர்ப்பு வந்தது. திமுக வும் அகலம் இறங்கியது. மத்திய சுற்று சூழல் அமைச்சராக இருந்த திமுக அமைச்சர் டி.ஆர்.பாலு, ஒரு அமைச்சராக உத்தரவை ஏற்படுத்தி அதை தடுத்து விட்டார்.இது உண்மையில் நல்ல எண்ணத்திலா? அல்லது ஜெயலலிதா கள்ளத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்திலா? அதன்பிறகே ஜெயலலிதா இந்த "கொட்டுர்புரம்" அடிக்கல்லை நாட்டினார். .அப்போதிலிருந்தே கருணாநிதி அதில் ஒரு கண்ணை வைத்து கொண்டிருந்தார். அதனால்ற்ற்ஹான் கருணாநிதி "அரசினர் தோட்டத்திற்குள்ளேயே" புதிய தலைமை செயலகத்தை கட்ட தொடங்கினார். அதாவது அந்த பெருமை ஜெக்கு போக கூடாது, தனக்கு வரவேண்டும் என்பதே அதற்கு பொருள். அதேநேரம் ஜெ அடிக்கல் நாட்டிய இடத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்து ஜெ தலைமை செயலகத்தை கட்டிவிடக்கூடாது எனபதில் கருணாநிதி தீவிரமாக இருந்தார். அதனால் அந்த இடத்தில் வேறு பெரிய கட்டிடம் எதையாவது கட்டிவிட துடித்தார். அதுவே "அண்ணா நூறாண்டு நினைவு நூல்நிலையம்" ஆக எழுந்தது. இந்த "மரிமுக சதி" மக்களுக்கு தெரியாது. விளங்கவும் இல்லை.

அண்ணா பெயரில் கட்டினால் எவரும் அதை மாற்ற முடியாது என்பது கருணாநிதியின் தந்திரம். அதுவும் நூல்நிலையம் என்று சொன்னால் அதையும் யாரும் மாற்ற முடியாது என்பதும் அவரது தந்திரம். அப்படி மாற்றினால் அதையே வைத்து "அய்யகோ, அண்ணா பெயரை" மாற்றுகிறார்களே என்று கூப்பாடு போடலாம். அதே போல நூல்நிலையத்தை மாற்றினாலும் பெரும் கூப்பாடு போடலாம். அதைத்தான் இப்போது போட முயல்கிறார். நோக்கம் என்னவோ ஜெ அடிக்கல் நாட்டிய இடத்தில் அவர் நினைத்த தலைமை செயலகம் வரக்கூடாது என்பதே. வரலாற்றில் ஒருவர் பெயர் வ்ருவதை, இன்னொருவர் ஏற்பத்தில்லை. இந்த "பதிலுக்கு பதில்" நாடகத்தில் அடுத்த காட்சிதான் இப்போது அரங்கேறுகிறது.ஏற்கனவே இதே போல கருணாநிதி கட்டிய "வள்ளுவர் கோட்டத்தை" எம்.ஜி.ஆர். திறந்து வைத்தாலும் அதை பராமரிக்க வில்லை. இதை ஒரு குற்றமாக் கூரிய கருணாநிதி பதின்மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த பின்பு, அதை பராமரிப்பு பணிகள் செய்தார். இது வழமையாக தமிழ்நாட்டில் அண்டப்பதுதான். புதிதல்ல.

அதேபோல கருணாநிதி கட்டிய புதிய தலைமை செயலகத்தை ஜெ இப்போது "சிறப்பு மருத்துவமனை" ஆக ஆக்கப்போகிறேன் என்று கூறினார். அதேபோல இந்த அண்ணா நூல்நிலயத்தையும், மாற்றி குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை என்று அறிவித்துள்ளார். அதாவது கல்வி இயக்கக வளாகத்திற்குள், அண்ணா நூல்நிலையம் அமைக்கப்படும். அதற்கு பிறகு அந்த கோட்டூர்புறம் இடத்தில் சிறப்பு குழந்தைகள் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தான் வைத்த அடிக்கல்லை ஏதோ காரணம் கூறி அகற்றியவர் வைத்த அடிக்கல்லை இன்னொரு காரணம் கூறி அகற்றுவது என்பதே. வினை விதைத்தவர் வினை அறுத்திருக்கிறார். நீங்கள் தலைமை செயலகத்தை கொண்டுவராமல் செய்ய "நூல்நிலயத்திற்குள்" மருந்தால், நான் நூல்நிலையத்தை விட, மக்களுக்கு உடனடி தேவையான மருத்துவமனை மூலம் வருவேன் என்கிறார் முதல்வர். எப்படியோ இவர்கள் இருவருக்குமான சண்டையில் தமிழனுக்கு "நூல்நிலையமும் கிடைத்து, மருத்துவமனையும் கிடைத்தது" என்று காண்பதே விவரமான பார்வை.


இதே போல கருணாநிதி இன்னொரு வேலை செய்தார். அதாவது கடற்கரை ஓரத்தில் உள்ள "நடைமேடையை" ஜெ காலத்தில் இருந்ததை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய "மொசைக்" நடைமேடை போட்டார். அதற்காக தனது பெயரிலும், தனது தனயன் பெயரிலும் ஒரு "கல்வெட்டை" கடற்கரை சாலையில் கலங்கரை விளக்கு அருகே வைத்துள்ளார். இது எதற்காக? ஜெ காலத்தில் போடப்பட்ட அத கடற்கரை சாலை நடைமேடை கோடுகளுடன் வழுக்காத மொசைக்காக இருந்தது. அதை மாற்றிவிட்டு கருணாநிதி போட்ட நடைமேடை "வழுக்கும் மொசைக்காக" இருக்கிறது. இப்போது மழைக் காலம். அதில் நடப்பது முடியாமல் இருக்கிறது. இதுதான் அவர் செய்த மாதரத்தின் விளைவு. அப்படியானால் மாற்றம் மக்களுக்கு நன்மை செய்கிறதா? அல்லது தீமை செய்கிறதா? என்று பார்க்கலாம் அல்லவா?

ஜெ செய்த கொட்டுர்புரம் மாற்றம் கல்வி இயக்கககத்தில் ஒரு அறிவுசார் பூங்காவையும், அதில் அதே அண்ணா நூற்றாண்டு நினைவு நூல்நிலயத்தையும், கூடுதலாக கோட்டுர்புரத்தில் ஒரு குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையையும் தருகிறது. இந்த மாதரம் மக்களுக்கு இரண்டு வைகையிலும் நல்லதை தரும். ஆனால் கடற்கரை சாலையின் நடைமேடையில் கருணாநிதி செய்த மாதரம் மக்களுக்கு வழுக்கி விழும் ஆபத்தை தரும். இவர்களுக்குள் உள்ள அடிதாடியை நாம் தஹ்டுக்க முடியாது. ஆனால் அவர்கள் செய்யும் மாற்றம் மக்களுக்கு நன்மையா? தீமையா? என ஆராய டேஹ்ரிய வேண்டும். இப்போது ஜெயகாந்தன் போன்ற கலைஞர் ஆட்சியில் நன்மை பெற்றோர் சத்தம் கொடுக்கலாம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், தமிழ்நாடு ஆகி இலக்கிய பெருமன்றமும் குரல் எழுப்பியிருக்கலாம். ஆனால் அவர்கள் இப்படித்தானே "செம்மொழி மாநாடு" கருணாநிதியால் "எழ தமிழர் இன அழிப்பை மறைக்க" நடத்தப்பட்ட போது அதன் உட்பொருள் புரியாமல் மேலோட்டமாக பார்த்து, அதை ஆடஹ்ரித்தார்கள். அவர்களது அத்தகைய மேலோட்டமான பார்வைக்கு நம்மிடம் மருந்து இல்லை.

அதனால் இந்த நிகழ்வை நாம் " நூல்நிலையமும் வருது, மருத்துவமனையும் வருது டும், டும் ,டும்" என்றே அழைக்கலாம்.