Monday, October 24, 2011

தீபாவளியை தீவாளி என விடேல்

தீபாவளியை தீவாளி என விடேல்
--- புரட்சி கவிஞர் பாரதிதாசன்.

நரகனை கொன்ற நாள்
நல்விழா நாளா?
நரகன் யார்? நல்லனா? தீயனா?
அசுரன் என்றவனை அழைக்கின்றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின்றாரே?
அசுரன் என்றால் தமிழன் என்றல்லோ பொருள்?
பழக்கம் தனில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்து போயினும் கைக்கொளல் வேண்டாம்.
அதனால் தீபாவளியை தீவாளி என விடேல்.

முத்துகுமார் பாட்டி அணு உலை எதிர்ப்பாளர்.

ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு போரை நிறுத்துங்கள் என்று தன்னுயிரை நெருப்புக்கு தந்து தியாகியான முதுதுகுமார் உயிராயுததை கொடுத்து அதை நகலாயுயதமாக எடுத்து தமிழர்களை உசுப்பிவிட பயன்படுத்த கூறி உயிர் நீத்தார். அவர் பிறந்த சொந்த கிராமம் "கொழுவை நல்லூர்". இந்த கிராமம் தொத்துகுடியிளிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் ஆத்தூர் அருகே உள்ளது. தனது கிராமத்தில் இருக்கும் போதே புரட்சிகர கருத்துக்களை பேசிவந்த முத்துகுமார் இந்த "கூடங்குளம் அணு உலையை பற்றியும் அதன் ஆபத்துகள் பற்றியும்" நிறைய பெசிவந்துள்ளார். அதை அவரது பாட்டி " லிங்க புஷ்பம்" செவி மடுத்ஹ்டு வந்துள்ளார்.நேற்று அதாவது ஞாயிறு இருபத்தி மூன்றாம் நாள் "ஆத்தூர்" கிராமத்தில் ஒரு பெரும் பட்டினி போராட்டம் கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்டது.

அந்த போராட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் அங்குள்ள "ஆத்தூர் விவசாயிகள் சங்கம்". அந்த போராட்டத்திற்கு கொழுவைநல்லூர் கிராம விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர். அந்த போராட்டத்திற்கு முத்துகுமாரின் பாட்டி "லங்காபுஷ்பம்" தலைமை தாங்கினார். அவர் பேசும்போது, "என் பேரன் மக்களுக்காக செத்தான். நானும் அணு உலையை எதிர்த்து மக்களுக்காக சாகத்தயார்" என்று தனது எழுபதாவது வயதிலும் பேசினார். அது அங்கே கூடியிருந்தவர்களுக்கு "புல்லரித்தது". இப்படியாக கூடங்குளத்தில் மீண்டும் நடக்கும் தொடர் பட்டினி போரில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊர்காரர்கள் வந்து கலந்து கொண்டு செல்வதும், அங்கங்கே அதே கோரிக்கைக்காக பல முனைகளிலும் பட்டினி போராட்டங்கள் நடப்பதும் அன்றாட நிகழ்வாக ஆகிவிட்டது.

இன்று காலை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பெரும் தொகையில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னாள் கூடி ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினர். அதில் இருபதாயிரம் மக்கள் கலந்து கண்டனர். அதில் மனோ தங்கராஜ், அன்டன் கோம்ஸ், லிட்வின்,குமாரதாஸ், உதயகுமார், உள்ளூர் பாதிரிமார்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் அதேநேரம் சென்னையில் சிதையில் பனகல் மாளிகை முன்னாள் எஸ்.யு.சீ.அய். என்ற சோசலிஸ்ட் யுனிட்டி செனட்டர் ஆப் இன்டியா கட்சியினர் கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல நேற்று அதே இடத்தில் மாலை இளைஞர் எழுச்சி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் அதில் விடுதலை ராஜேந்திரன், வழக்கறிஞர் சுந்தரராஜன், ஆகியோர் அந்த அமைப்பின் சுதீஷ், அருண்செளரி ஆகியோருடன் கலந்து கொண்டு பேசினர்.


இன்று மாலை அதே சென்னை சைதை பனகல் மாளிகையில் பெ.மணியரசன் தலைமையில் தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் அண்டத்தினர். அதில் கீத பச்சையப்பன், மருத்துவர் புகழேந்தி, வெளையன் ஆகியோர் பேசினர். அந்த நிகழ்வுக்கு ஓவியர் புகழேந்தி, அரணமுறுவல், போன்ற பலரும் வந்திருந்த்ச்னர். பெ.மணியரசன் பேசும்போது கடந்த காலத்தில் இந்த கூடங்குளம் அணு உலை வந்த நேரத்தில் ஆதாவது 1987 இல் தூத்துக்குடியிலும், இடிந்தகரையிலும், கூடங்குளத்திலும், எப்படி போராட்டங்கள் நடத்தப்பட்டபோது தான் ஆண்டன் கோம்ஸ் உடனும், டி.எஸ்.எஸ்.மணியுடனும், அவற்றில் கலந்து கொண்டேன் என்பது பற்றி பேசினார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் அப்போது தூத்துக்குடி பேரணிக்கு வந்தது பற்றியும் குறிப்பிட்டார். அந்த போராட்டம் இருபத்து நாலு ஆண்டு தொடர்ச்சியானது என்பதை அறிவித்தார். அதுவே போராட்டத்தை ஏதோ இரண்டு ஆண்டுகளாக மட்டும் நடத்துவது போல பம்மாத்து செய்பவர்களுக்கும், விமர்சனம் செய்பவர்களுக்கும் பதிலடியாக் இருந்தது.


இதற்கிடையே ராதாபுரம் நகரில் கூடங்குளம் அணு உலையை தஹ்டுத்து நிறுத்தும் குழு என்ற பெயரில் தொடர் பட்டினி போர் நடந்து அவ்ருகிறது. இவ்வாறு ஒவ்வொரு ஊரிலும் இப்போது அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் தொடர் தொடங்கி விட்டன. தமிழ்நாடே இந்த போராட்டங்களை விரும்பி ஏற்பாடு செய்யது வருகிறது.