Wednesday, October 12, 2011

மெட்ராஸ் பலகலையில் "அம்பேத்கர் வாசகர் வட்டம்" கூட்டம்.

இன்று நடந்த "அம்பேத்கர் பொருளியல் மையம்" சார்பாக "அம்பேத்கரும் தொழிலாளர் சட்டங்களும்" என்ற கருத்தரங்கில் சிறப்பு பேச்சாளராக " பலராமன்" கலந்து கொண்டார். பலராமன் தமிழ்நாட்டில் "தொழிலாளர் துறையில்" பல பத்து ஆண்டுகளாக பணியாற்றி ஒய்வு பெற்றவர். அம்பேத்கர் "கருத்தியலில்" ஊறிப்போனவர். இந்த அம்பேத்கர் வாசகர் வட்டத்தை பேராசிரியர் தங்கராஜ் "விடாப்பிடியாக" தொடர்ந்து நடத்தி வருகிறார். இன்றைய கூட்டத்தில், பலராமன் எடுத்து வைத்த வாதங்களில் அவருக்கு கொடுக்கப்பட்டிருந் நேரத்திற்குள், "அம்பேத்கர் எப்படி தொழிலாளர்" நலன்களை கவனித்து அதற்கேற்ற முறையில் "முடிந்த ளவில்" பல சட்டங்களை இயற்றினார் என்பதை புட்டு, புட்டு, வைத்தார்.

அவர் கூறிய விவரப்படி, அம்பேத்கர் இயற்றிய சட்டத்தில், " 141 சட்டங்கள்" தொழிளாலருக்காக எழுதப்பட்டவை என்ற செய்தியை பலராமன் பகிர்ந்து கொண்டார். அவை தவிர சில சட்டங்கள் தான் அம்பேத்கருக்கு பிறகு, இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு இயற்றப்பட்டுள்ளன என்றார் பலராமன். அம்பேத்கரின் வாரிசுகள் இன்றுவரை அத்தகைய "தொழிலாளர் நல சட்டங்களின்" பலன்களை பெறவில்லை எனபதை நாம் பார்த்து வ்ருகிறோம்.

இம்மானுவேல் அடிகளாரை ஏன் "திருப்பி" அனுப்பினர்?

இந்தியா ஒரு "ஒற்றையாட்சி" அரசமைப்பு கொண்ட நாடு என்பதை மீண்டும் நிரூபிக்கிறார்கள். இங்கிலாந்திலிருந்து "அழக தமிழர் மன்றம்" என்ற "ஜி.தி.எப்." தலைவரான "எழுபத்தேழு" வயதுடைய அருட் திரு . இம்மானுவேல் அய்யாவை, இங்கிலாந்தில் உள்ள "இந்திய தூதரகம்" இரட்டை விசா கொடுத்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. ஆனால் அதைக்கூட, "டில்லி" மதிக்கவில்லை. அதனால் நேற்று இரவு சென்னை வந்து இறங்கிய 'அடிகளாரை" உடனேயே "டில்லியிலிருந்து மேலிடம்" உத்தரவு என்ற பெயரில், சென்னை விம்மான நிலையத்தில் உள்ள " எமிக்ரேசன்" அதிகாரிகள் அவர் பயணம் செய்து வந்த இடமான 'துபாய்" கே திருப்பி அனுப்பி விட்டார்கள். அந்த செய்தியை "வெளியே" தெரிய விடாமல் பார்த்து கொண்டார்கள். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "அவர் விடுதலை புலி ஆதரவாளர்" என்றும் இந்திய அரசை தாக்கி பேசியுள்ளார் எனவும் கூறினார்கள்.

இந்த அதிகாரிகளுக்கு "இம்மானுவேல் அடிகளாரை" திருப்பி அனுப்பியதற்கான "காரணம்" சரியாக தெரியாது எனபது நமக்கு டேஹ்ரியும். ஆனாலும் தங்களது "புத்ஹ்டிசாளித்தனத்தை" காட்டுவதாக எண்ணிக் கொண்டு இப்படி '" ஏறுக்கு மாறாக" பதில் சொல்கிறார்கள். அவர்கள் "வாதமே" உண்மையான "காரணம்" என்றால், உங்கள் இங்கிலாந்து நாட்டில் உள்ள "இந்திய ஹைகமிசனுக்கு" இது போன்ற "காரணங்கள்" தெரியாதா? அல்லது இதுபோன்ற "காரணங்களை" கூறி "யாரையும்" திருப்பி அனுப்ப எந்த "அனைத்து நாட்டு விதிகளும்" இடம் கொடுக்காது எனபது இந்திய அரசுக்கும் தெரியாதா? ஏன் இந்த விளையாட்டு? தமிழ்நாட்டில் ஒரு "ஆட்சி" ஈழத் தமிழருக்கு "ஆதரவாக" இருக்கிறதே என்ற "கோபம்" டில்லிக்கு இருக்கலாம். அதற்காக "தமிழ்நாட்டிற்குள்" வருகின்ற வெளிநாட்டுக் காரர்களை " தமிழக அரசுக்கு" தெரியாமலேயே "திருப்பி" அனுப்ப டில்லிக்கு எவ்வளவு "துணிச்சல்?".


இந்த "துணிச்சலை" தந்தது யார்? இதற்கு முன்னால் ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் இருந்தது. அது டில்லி சொன்னதெற்கெல்லாம் "தலையாட்டி" கொண்டு இருந்ததே? இப்போதுள்ள "ஆட்சியாளர்கள்" மட்டும் ஏன் அப்படி செய்வதில்லை என்ற கோபம் டில்லிக்கு இருக்கிறதா? அதற்காக "அனைத்து நாட்டு விதிகளை" மீறி, மனித உரிமைமீறளாக, இததகைய வேலையை டில்லி செய்வதை "யார்" பொறுத்து கொள்ள முடியும். உலக மாந்தர்களுக்கு "கருத்து சுதந்திரம்" கிடையாது என்று இந்திய மண்ணில் "புதிய" ஒரு சரித்திரத்தை இந்த மத்திய அரசு எழுதப் போகிறதா? இத்தகையா "இழிவான" போக்கை எத்ரித்து " தமிழர்களும், மனித உரிமையாளர்களும்" கிளர்ந்து எழவேண்டும். கிளர்ந்து எழுவோம். டில்லியின் 'சர்வாதிகார" போக்கை எதிர்ப்போம். இனிமேலாவது "இந்தியா என்பது ஒரு ஒற்றையாட்சி நாடு" என்பதை விளங்கி கொள்ளுங்கள்.